அழகான பெண்களைக் கண்டால் நான் நன்றாக ரசிப்பதுண்டு. அவர்களின் அழகை நண்பர்களிடம் விமர்சிப்பதும் உண்டு. இதெல்லாம் கல்யாணத்திற்கு முன்னால். இப்போதும் அப்படித்தான். ஆனால், என்ன ஒரு வித்தியாசம் அனைத்தும் மனதிற்குள்ளேயே. அப்படி நான் அடிக்கடி சலனப்படுவது சமீபகாலமாக இந்தப் பாடல்களைப் பார்க்கும் போதுதான். முதல் பாடல் "வெண்மேகம் பெண்ணாக உருவானதோ " ( இந்தப் பாடலை நான் தனுஷுக்காகத் தான் பார்க்கிறேன் என்றால் வீட்டில் நம்ப மாட்டேன் என்கிறார்கள்).
இரெண்டாவது பாடல் 'ஜி' படத்தில் வரும் 'டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் பார்த்தேன்' . வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். அப்படி ஒரு அழகு அஜித்தும், திரிஷாவும். மனசெல்லாம் சந்தோசமாக்கும் பாடல். கவிதை கலந்த காதலுடன் அவர்கள் இருவரும் நடிப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். கொஞ்சம் கூட விரசம் கிடையாது.அஜித்- திரிஷாவின் 'அக்கம் பக்கம்' பாடலுக்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்த பாடல். இந்த இரண்டு பாடல்களையும் நேற்று இரவு சன் டிவியில் பார்த்தேன். கவலைகளை மறந்து ரசித்த நிமிடங்கள் அவை.
கல்யாணத்திற்கு முன்பு நான் அதிகம் பார்த்த பாடல்கள் 'ஜீன்ஸ்' படப் பாடல்களும். 'இந்தியன்' படப் பாடல்களும். யாரிடமாவது இந்தியன் பட 'டெலிபோன் மணி போல்' பாடல் இருந்தால், அந்த பாடல்களின் ஆரம்ப வரிகளை மிக ஸ்லோவாக ஓட விட்டுப் பாருங்கள். ஒரு விசயத்தை காண்பீர்கள். அதை நான் இங்கே எழுதுவது நாகரிகம் இல்லை. தனி மெயிலில் தொடர்பு கொண்டால் சொல்கிறேன்.
****************************************************
வேட்டைக்காரன் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பாடல்கள் நன்றாகத்தான் உள்ளது. நிச்சயம் 'ஒரு சின்னத்தாமரை', 'என் உச்சி மண்டையிலே', 'கரிகாலன்' பாடல்கள் ஹிட் ஆவது உறுதி. சங்கர் மகாதேவன் பாடியிருக்கும் 'நான் அடிச்சா தாங்க மாட்ட' கேட்க கேட்க ஹிட் ஆகும் என நினைக்கிறேன். இந்த பாடல் ஒரு டிபிக்கல் விஜய் பாடல். அவர் எப்படி ஆடியிருப்பார் என்று இப்போதே ஓரளவு யூகிக்க முடிகிறது.
****************************************************
நேற்று ஒருத்தர் மேல் பயங்கர வெறுப்பு. போன் செய்து திட்ட வேண்டும் என நினைத்தேன். ஆனால், கந்தசாமி பயங்கர ஹிட் படம் என சிலர் சொன்ன ஜோக்கை கேட்டதால் கோபமே வரவில்லை. ஆனால் அவரை திட்டியே ஆக வேண்டிய சூழ்நிலை. தள்ளிப்போட மனசில்லை. என்ன செய்வது? யோசித்துக் கொண்டிருக்கும்போது தான் அந்த ஐடியா தோன்றியது. சன் மியூஸிக்கை ஆன் செய்தேன். காதலர்களுக்கான நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சி நடத்தும் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். உடனே சல்ல்ல்ல்ல் என்று கோபம் தலைக்கு ஏறியது. ஒரு வழியாக போன் செய்து அவரை திட்டி விட்டேன். சன் மியூஸிக்கிற்கு என் நன்றி.
****************************************************
சில தினங்களுக்கு முன்னால் லயன்ஸ் கிளப் நண்பர்கள் ஒரு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். எங்கள் ஊரிலிருந்து இரண்டரை மணி நேரம் கார் பயணம் செய்து பிறகு ஒரு லேக்கை அடைந்து, அங்கே இருந்து பெரியில் ஒரு மணி நேரம் பயணம் செய்து பிறகு அங்கே இருந்து ஸ்பீட் போட்டில் ஒரு தீவுக்கு பயணம் செய்து, அங்கே இரவு தங்கி பிறகு அடுத்த நாள் வருவதாக ஏற்பாடு. நாங்கள் செல்ல வில்லை. மொத்தம் 60 பேர் பயணம் செய்தார்கள். எல்லோரும் திட்டமிட்டபடி பெரியில் சென்று ஸ்பீட் போட் போகும் இடத்தை அடைந்தார்கள். மொத்தம் நான்கு ஸ்பீட் போட். முதலில் இரண்டு போட் சென்று விட்டது. முதலில் சென்ற போட்களில் என் நண்பர் குடும்பம் இருந்தது. இவர்கள் போய் சேர்ந்து பல மணி நேரம் ஆகியும் அடுத்த இரண்டு போட்களும் வரவில்லையாம். இவர்களும் அங்கே இருந்து கிளம்பி வந்து விட்டார்கள். இவர்கள் வந்தவுடன் தான் தெரிந்திருக்கிறது. அடுத்த படகுகள் கடலுக்குள் மூழ்கி அனைவரும் தண்ணிரில் உயிருக்கு போராடி, மீட்பு குழுவினர் போராடி அனைவரையும் காப்பாற்றி இருக்கிறார்கள். அதில் நிறைய குழந்தைகள் வேறு. நல்ல வேலை நான் போகவில்லை என நினைத்துக் கொண்டேன். ஏறக்குறைய அதே நேரத்தில் மூணாறு படகு விபத்து ஏற்பட்டு, நிறைய பேர் பலி. வேதனையான விசயம்.
****************************************************
இந்த வார தமிழ்மணம் நட்சத்திரம் அண்ணாகண்ணன் அவர்கள் எழுதிய சில கவிதைகள் 30 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறதாம். வாழ்த்துக்கள் சார். ஆனால், கொங்கணி மொழியிலும் மொழிபெயர்க்கபட்டு இருப்பதாக எழுதியிருக்கிறது. எனக்குத் தெரிந்து கொங்கணி கோவாவில் வசிப்பவர்களால் பேசப்படும் ஒரு மொழி. அதற்கு ஆல்பாபேட்ஸ் இல்லையென்று நாங்கள் கோவா சென்று இருக்கும்போது சொன்னார்கள். ஆல்பாபேட்ஸ் இல்லாத மொழியில் எப்படி மொழி பெயர்த்து இருக்க முடியும்? நான் சொல்வது தவறாக கூட இருக்கலாம். யாராவது விசயம் தெரிந்தவர்கள் விளக்கினால் தேவலை.
****************************************************
நான் ஒரு பாட்டு சொல்றேன். அந்த பாட்டோட இரண்டாவது வரியை யாராவது சொல்ல முடியுமா? ஏனென்றால், அந்த பாடகி அந்த வரியை அப்படி கொலை செய்து இருப்பார். இதோ,
" பூவுக்கு பிறந்த நாளு
......................................
கலர்கலரா மெழுகுவத்தி ஏத்துவேன்"
என்னன்னு கண்டு பிடிங்க பார்க்கலாம்!!!
****************************************************
சமீபத்தில் ரசித்த ஜோக்:
வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் தன் நண்பரிடம்,
" ஏம்பா என்னை ஒரு நல்ல முதியோர் இல்லத்துக்கு கூட்டிட்டு போ"
உடனே நண்பர் அவரை நம் பார்லிமெண்டுக்கு கூட்டிச் சென்றாராம்.
****************************************************
10 comments:
அருமையான பதிவு உலக்ஸ்..
// ஆல்பாபேட்ஸ் இல்லாத மொழியில் எப்படி மொழி பெயர்த்து இருக்க முடியும்? //
துளு, கொங்கனி போன்ற மொழிகள் கன்னடம் , மராட்டி/ ஹிந்தி போன்ற மொழிகளிடமிருந்து எழுத்து தானம் பெறுகின்றது , என நினைக்கிறேன் வல்லுனர்கள் யாரேனும் இருப்பின் பின்னூட்டத்தில் கூறவும்..
ஓஹோ சன் மியுசிக்கை இப்படியும் பயன்படுத்தலாமா?
நல்ல மிக்ஸர்.
//டிங்க் டாங்
சூப்பர் பாட்டு
//வெண்மேகம் பெண்ணாக
ம்.ம்ம்... :(
தீபாவளி படத்துல வர்ற பாட்டு நான் ஜெயம் ரவிக்காக பார்ப்பேன் :)
//அருமையான பதிவு உலக்ஸ்.. //
நன்றி நண்பா!
//ஓஹோ சன் மியுசிக்கை இப்படியும் பயன்படுத்தலாமா?
நல்ல மிக்ஸர்.//
உங்கள் வருகைக்கு நன்றி செல்வக்குமார்.
//தீபாவளி படத்துல வர்ற பாட்டு நான் ஜெயம் ரவிக்காக பார்ப்பேன் :)//
ஓஒ அப்படியா? இதுக்கூட நல்லா இருக்கே!!!!
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
//நல்ல பதிவு வாழ்த்துக்கள்//
உங்கள் வருகைக்கு நன்றி ஆரூரன் விசுவநாதன் சார்.
//Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'மிக்ஸர் - 06.10.09' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 7th October 2009 01:12:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/121581
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team//
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
நல்லா இருக்கு அண்ணே..
Post a Comment