என் நண்பன் ஒருவன். பெயர் அருண் என்று வைத்துக்கொள்வோம். அருண் பார்க்க அழகாக இருப்பதாக மற்றவர்கள் சொல்வார்கள். அவன் அழகா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் பெண்களுக்கு அவனை ரொம்ப பிடிக்கும். பெண்கள் என்றால் நல்ல பெண்களுக்கு அல்ல. அப்படிப்பட்ட பெண்களுக்கு. அதிகமாக அந்த மாதிரி இடங்களுக்கு செல்வான். எப்போதும் போல அவன் சொல்வதை கதை கதையாக கேட்டு எங்கள் மனதை கெடுத்துக் கொள்வோம். அவனை நான் விலகி விலகி போனாலும், என்னுடன் பழக்கம் வைத்துக் கொள்வதை அருண் ரொம்ப விரும்புவான்.
அப்படிப்பட்ட அருணுக்கும் ஒரு நாள் காதல் வந்தது. ஒரு நாள் என்னிடம் தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவளை உயிருக்கு உயிராய் காதலிப்பதாகவும் சொன்னான். நாம் நம்புவதாக இல்லை எனக் கூறினேன். மற்ற பெண்களைப்போல இந்த பெண்ணையும் அவன் தேத்தி கெடுத்துவிட்டால் என்ன செய்வது என்று எனக்கு பயம். ஆனால் அந்த பெண்ணும் அவனை உயிருக்கு உயிராய் காதலிப்பதாக கூறினான். " நீ வேண்டுமானால் ஒரு நாள் வா. உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்" என்று ஒரு நாள் மாலை வேலையில் அந்த பள்ளிக்கு அருகில் உள்ள டீக் கடைக்கு கூட்டிச் சென்றான்.
அந்த பெண்ணை பார்த்த நான் உண்மையிலேயே ஆச்சர்யப்பட்டேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. இந்த பெண் எப்படி இவளுக்கு மாட்டியது? என்று எனக்கு ஒரே குழப்பம். 'அதனால் தான் காதலுக்கு கண் இல்லை என்கிறார்களோ?' என நினைத்து என்னை சமாதானப் படுத்திகொண்டேன். என்னதான் என் மனதை நான் கட்டுபடுத்த முயன்றாலும், முடியாமல் அந்த பெண்ணை ரசித்தேன். இப்போது தவறு என்று தெரியும் இந்த விசயம் அப்போது தெரியவில்லை. அந்த பெண்ணை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவுடன், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நான் கிளம்பி விட்டேன்.
இப்படியாக அவன் காதல், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்தது. அந்த பெண் பக்கத்து டவுனில் இருந்து வந்து டீச்சர் ட்ரெயினிங் படித்து கொண்டு இருந்தாள். ஒரு நாள் சாயந்திரம் திடீரேன என்னைத் தேடி வந்தான் அருண்.
" உலக்ஸ், நான் ஒரு சிக்கல மாட்டிகிட்டேன். நீதான் என்னை காப்பாத்தனும்"
" என்ன சிக்கல்?"
" நான் உடனே அவளை திருமணம் செய்யணும்"
" ஏண்டா, என்னாச்சு?"
" மாப்பிள்ளை, சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத"
" பரவாயில்ல. சொல்லு"
" எல்லாம் முடிச்சிட்டேன் மாப்பிள்ளை. நான் இப்போ அவளை கழட்டி விட முடியாது. அதனால நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்"
" அடப்பாவி, நினைச்சா மாதிரியே பண்ணிட்டியேடா? இதை ஏண்டா என் கிட்ட சொல்லுற?"
" மாப்பிள்ளை, நீதாண்டா உதவி பண்ணனும்" சொல்லி "ஓஓஓ" என அழ ஆரம்பித்தான்.
பிறகு மற்ற நண்பர்களை கூப்பிட்டு, எப்படி அவன் கல்யாணத்தை நடத்துவது என ஆலோசித்தோம். நண்பர்கள் ஒரு ஐந்து பேர் (என்னைத் தவிர) ஒரு காரில் அந்த பெண் வீட்டுக்கு அதிகாலையில் சென்று, அவள் கோலம் போட வருகையில், அந்த பெண்ணை காரில் கடத்தி வந்து என் வக்கில் நண்பர் உதவியோடு போய், ரெஜிஸ்டர் ஆபிஸ் சென்று கல்யாணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தோம்.
திட்டம் என்னுடையது. பணமும் என்னுடையது. ஆனால், நான் எதிலும் தலையிட்டதாக வெளி உலகத்துக்குத் தெரியாது (நான் அப்படித்தான் நினைத்து இருந்தேன்). திட்டப்படி எல்லாம் நன்றாக நடந்தது. அவர்களும் சில நாட்களுக்குப் பிறகு ஊருக்கு வந்து வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். நான் அவனுக்கு நிறைய புத்திமதி சொல்லி. இனிமேல் 'அந்த' மாதிரி இடங்களுக்கு எல்லாம் செல்லக்கூடாது எனக் கூறினேன். அவனும் சம்மதித்தான்.
ஒரு நாள் மாலை. என்னுடைய நண்பன் ஒருவன் எங்கள் வீட்டுக்கு ஓடி வந்தான். அந்த பெண்ணின் ஊரிலிருந்து இருவர் என்னைத்தேடி வந்திருப்பதாகவும், மிகவும் கோபமாக அவர்கள் இருப்பதாகவும், அதனால் அவன் மற்ற நண்பர்களையும் அங்கே வரச் சொல்லி விட்டதாகவும், என்னை உடனே வரும்படியும் கூறினான். நான் உடனே அங்கு சென்றேன்.
என்னை அவர்களுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது. வந்தவர்களின் ஒருவன் என்னிடம் ரொம்ப கோபமாக பேச, நண்பர்கள் அவனை சமாதானபடுத்தி வைத்தனர். பிறகு நான் பொறுமையாக என்ன நடந்தது என்றும், ஏன் உடனே கல்யாணம் நடத்தி வைக்கும்படி ஆனது என்றும் விலக்கினேன்.
ஒருவர் பொறுமையாகவும், ஒருவர் கோபமாகவும் நான் சொல்வதை கேட்டனர். திடீரேன பொறுமையாக இருந்தவர் 'ஓ' என அழ ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
பதட்டத்துடன் அவரை பார்த்துக் கேட்டேன்,
"நீங்க ஏன் அழறீங்க?"
அழுது கொண்டே கூறினார்,
" நான் தாங்க அவளைத் தொட்டு தாலி கட்டின புருசன்"
12 comments:
என்னை கொத்திய திருநாள் இது.
//அழுது கொண்டே கூறினார்,
" நான் தாங்க அவளைத் தொட்டு தாலி கட்டின புருசன்"//
ங்கொய்யால...
---
உண்மையிலேயே உண்மையான அனுபவம்தானா?
அண்ணே, எனக்கொரு பிரச்சனை.
நீங்க தான் கெல்ப் பண்ணனும்...
//என்னை கொத்திய திருநாள் இது//
என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை.
//உண்மையிலேயே உண்மையான அனுபவம்தானா?//
ஆமாம் எ.வ.ஓ
//அண்ணே, எனக்கொரு பிரச்சனை.
நீங்க தான் கெல்ப் பண்ணனும்...//
பண்ணிட்டப் போச்சு.
//Tamilish Support to me
show details 5:54 AM (17 hours ago)
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'என்னை செதுக்கிய ஒரு நாள்!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 2nd October 2009 12:54:01 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/120174
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team//
தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.
can we believe this..
//can we believe this..//
Its up to you.
ஹி ஹி ஹி .. உலக்ஸ்... சாரி நான் இன்னிக்கி தான் இந்த பதிவ படிச்சேன்... அப்பறம் நீங்க எப்டி ரி ஆக்ட் பண்ணினீங்க ?
//ஹி ஹி ஹி .. உலக்ஸ்... சாரி நான் இன்னிக்கி தான் இந்த பதிவ படிச்சேன்... அப்பறம் நீங்க எப்டி ரி ஆக்ட் பண்ணினீங்க ?//
வருகைக்கு நன்றி நண்பரே!
நீங்க ரொம்ப பாவம்.
உங்க பிரண்டை நல்லவன்னு நினைச்சு ரொம்ப கஷ்டபட்டு உதவி பண்ணி கடைசியில சிக்கல்ல மாட்டீங்களே?
நெக்ஸ்ட் டைம் பார்த்து விசாரிச்சு ஹெல்ப் பண்ணுங்க ஸார்!!!
Post a Comment