Oct 4, 2009

சே! நான் ஏன் இப்படி???

போன சனிக்கிழமை சனிப்பெயற்சி நடந்தது. அப்போது எங்கள் ஊர் கோவிலில் நவராத்திரி திருவிழா நடைப்பெற்றுக் கொண்டிருந்ததால் சனீஸ்வர பகவானுக்கு எந்த வித விசேச பூஜையும் செய்யவில்லை. அதனால், நேற்று சனீஸ்வரருக்கு ஸ்தபன கலச பூசை, நவக்கிரக ஹோமம், சனீஸ்வர பகனானுக்கு மகா அபிசேகம் நடைப் பெற்றது. இதைத் தவிர நேற்று பிள்ளைகளின் பள்ளியின் பிரின்ஸ்பால் வீட்டில் ரம்ஜான் திறந்த இல்ல உபசரிப்பு. அதே நேரத்தில் நேற்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை. ஏழுமலையானுக்கு விரதம் இருந்து வடமாலை சாத்தி சாமி கும்பிட வேண்டும். ஒரே நேரத்தில் மூன்று இடத்தில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை. இதைத் தவிர நேற்று இரவு 7 மணியிலிருந்து மலேசிய இந்துக்கள் கலந்து கொள்ளும் தீபாவளி கலை இரவு நிகழ்ச்சி வேறு. இதை நான் ஏன் இங்கு கூறுகிறேன். காரணம் இருக்கிறது.

நானும் பிள்ளைகளும் கோவிலுக்கு போவதாகவும், மனைவி வீட்டில் பூஜைக்குறிய அனைத்து வேலைகளும் செய்வதாகவும், பிரின்ஸிபால் வீட்டுக்கு போக வேண்டாம் என்றும், இரவு கலை நிகழ்ச்சிக்கு போவதாகவும் ஒரு மனதாக முடிவெடுத்தோம். அதன்படியே கோவிலுக்கு சென்றோம். காலை 9 மணிக்கு சென்றொம். ஹோமம் முடிந்து, அபிசேகம் முடிந்து, பூஜை மற்றும் அன்னதானம் முடிந்து வீட்டிற்கு வர மதியம் 1 மணி ஆகிவிட்டது. வீட்டில் 'கோவிந்தனுக்கு' சாமிக் கும்பிட ரெடியாகும் சமயத்தில் ஆபிஸிலிருந்து போன். நான் இந்தப் பதிவில் "இதுபோல் வேறு யாருக்கும் நேரக்கூடாது." குறிப்பிட்டிருந்த 'தோழியின் கணவர் ஆஸ்பத்திரியில் சீரியஸாக இருப்பதாகவும், ஆக்ஸிஜன் மட்டுமே போய்க் கொண்டிருப்பதாகவும், எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்றும்' கூறினார்கள்.

எனக்கு என்ன செய்வது எனத்தெரியவில்லை. சரி, இப்போது வீட்டில் எதுவும் சொல்ல வேண்டாம், முதலில் சாமி கும்பிடுவோம் என நினைத்து சாமி கும்பிட முயன்றேன். முழுமையாக என்னால் மனதை ஒரு நிலைப் படுத்தி சாமிக் கும்பிட முடியவில்லை. வீட்டில் யாரும் காலையில் சாப்பிடவில்லை என்பதால், அவர்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும் என நினைத்து ஒரு வழியாய் சாமி கும்பிட்டு முடித்து அனைவரையும் சாப்பிட சொன்னேன்.

பிறகு அலுவலகத்தை விசயத்தை உறுதிபடுத்திக்கொள்ள தொடர்பு கொண்டு பேசினேன்:

" சார் விசயம் தெரியும் இல்லையா?"

" தெரியும்"

" போலாமா?"

" இப்போ போய் என்ன பண்ணப் போறோம். எல்லாம் முடியட்டும் போலாம்"

" ஏன் சார்?"

" உயிர் போவதைப் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை"

எனக்கும் அவர் கூறியது மனதுக்கு சரியெனப் பட்டது. பிறகு எதற்காக இந்தப் பதிவு?

ஒரு உயிர் ஆஸ்பத்திரியில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. உடனே போய் பார்க்க விருப்பம் இல்லை. ஆனால், அடுத்த போன் வருவதற்காக காத்திருத்தல். "அவர் எப்போது இறப்பார்" என்று அடுத்த போனிற்காக காத்திருப்பது எத்தனை பெரிய தவறு? அந்த தவறைத்தான் நான் நேற்று செய்தேன். வீட்டில் அனைவரும் மதியம் தூங்குகின்றார்கள். எனக்கு தூக்கம் வரவில்லை. போன் எப்போது வரும்? என்பதிலேயே மனம் இருந்ததால் தூக்கம் வரவில்லை. பிறகு ஒரு வழியாக 4.45 மணிக்கு போன வந்தது. எல்லாம் முடிந்து விட்டதாக. உடனே கிளம்பினேன். "அவரை காப்பற்ற முடியாது, அவர் சாவு உறுதி" என முன்பே தெரிந்தாலும், அந்த நேரம் வரும்போது அடையும் மன வேதனையை எப்படி சொல்வது?

ஆஸ்பத்திரி போய் பார்த்தால், "என்ன வாழ்க்கை இது? காலையில் இந்த உடலில் ஓடிக் கொண்டிருந்த உயிர் இப்போது இல்லை. எங்கே சென்றது? யார் எடுத்து சென்றது? ஏன்? ஏன் நம் உடலில் மட்டும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது? நமக்கு எப்போ? என்ன காரணம்? யார் காரணம்? அந்த நிகழ்வை நடத்துபவர் பெயர்தான் கடவுளா?" இப்படி ஆயிரம் கேள்விகள்.

நாம் எவ்வளவோ பேசுகிறோம், என்னென்னவோ செய்கிறோம். சம்பாதிப்பதற்கு ஆளாய் பறக்கிறோம். அடுத்தவர்கள் வயிற்றில் அடித்து பிழைப்பவர்கள், துரோகம் செய்பவர்கள், அடுத்தவர்களை ஏமாற்றுபவர்கள் எல்லோரையும் ஒரு நாள் ஒரு ஆஸ்பத்திரியில் தங்க வைத்து மற்ற நோயாளிகள் படும் வேதனையை பார்க்கச் சொல்ல வேண்டும். எவ்வளவு வலிமையான ஆட்களும் கொஞ்சம் மனதளவில் கலங்குவது ஆஸ்பத்திரியில்தான்.

அதே நினைப்புடனும், வேதனையுடனும் வீட்டிற்கு வந்தால், அனைவரும் தீபாவளி பார்ட்டிக்கு செல்ல ரெடியாக உள்ளனர். போக மனம் இல்லை. ஆனால் என்ன செயவது? நம் மன கஷ்டத்தினை ஏன் அவர்களும் அனுபவிக்க வேண்டும்? வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் நிகழ்ச்சி. நம்மால் ஏன் அவர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பை தவற விட வேண்டும்?

கடைசியில் தீபாவளி நிகழ்ச்சி போய்விட்டு வீட்டுக்கு வந்த போது இரவு 11.30. ஆனால், உடல்தான் பார்ட்டியில் இருந்ததே தவிர மனம் இல்லை. இரவு முழுவதும் சரியாக தூங்க முடியவில்லை. நம்முடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் கணவர் இறந்து வீட்டில் இருக்கிறார். நான் தீபாவளி பார்ட்டியில்...?

சே! நான் ஏன் இப்படி???

7 comments:

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'சே! நான் ஏன் இப்படி???' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 4th October 2009 10:30:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/120841

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

Anonymous said...

This is totally contrived. Then why did you go to the part? You are not a kid right..

Pradeep said...

/**
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி
***/

எனக்கு தெரிஞ்சு இந்த பதிவ நீங்க போட்டது கூட கவலைய பகிர்வதற்காக இல்லை என்று நினைக்கிறன்......

தமிழ்ஸ்ல வரவேண்டும் என்பதற்காகத்தான் என்று நினைக்கிறன்

Really sorry if this comments hurt u.....
sollanum pola thonuchu.....

iniyavan said...

//This is totally contrived. Then why did you go to the part? You are not a kid right..//

நீங்கள் சொல்வது சரிதான். உங்கள் கருத்தோடு நான் முழுமையாக ஒத்துப்போகிறேன். ஆனாலும், நான் ஏன் போனேன் என்பதற்கான காரணத்தை இந்த பத்தியில் எழுதியிருக்கிறேன்:

''அதே நினைப்புடனும், வேதனையுடனும் வீட்டிற்கு வந்தால், அனைவரும் தீபாவளி பார்ட்டிக்கு செல்ல ரெடியாக உள்ளனர். போக மனம் இல்லை. ஆனால் என்ன செயவது? நம் மன கஷ்டத்தினை ஏன் அவர்களும் அனுபவிக்க வேண்டும்? வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் நிகழ்ச்சி. நம்மால் ஏன் அவர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பை தவற விட வேண்டும்?//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

iniyavan said...

//எனக்கு தெரிஞ்சு இந்த பதிவ நீங்க போட்டது கூட கவலைய பகிர்வதற்காக இல்லை என்று நினைக்கிறன்......

தமிழ்ஸ்ல வரவேண்டும் என்பதற்காகத்தான் என்று நினைக்கிறன்//

அன்பு நண்பர் பிரதீபுக்கு,

என்னுடைய எந்த பதிவு தமிழிஷில் பிரபலம் ஆனாலும் நான் நன்றி சொல்லி பின்னூட்டமிடுவது வழக்கம். இதை என் அனைத்து பதிவுகளிலும் பார்க்கலாம். இதை ஏற்கனவே எழுதியும் உள்ளேன். அதனால், நான் தமிழிஷில் பிரபலமாவதற்காக எழுதவில்லை. நேற்று நான் இருந்த மனநிலையை ஒரு பதிவாக எழுதினேன். இது நம்முடைய மனச்சுமையை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகவே.

//Really sorry if this comments hurt u.....
sollanum pola thonuchu.....//

சே! சே!! என்னங்க இதுக்கு போய் சாரியெல்லாம் கேட்டுக்கிட்டு. உங்களுக்கு கருத்து சொல்ல அனைத்து உரிமையும் உள்ளது.

உங்கள் வருகைக்கு நன்றி.

Anonymous said...

உங்க பீலிங்க்ஸ் புரியுது.. கடைசியில் அந்த தோழிக்கி நாங்கள் பிராத்தித்து போல அவர் கணவருக்கு மேலும் மேலும் துன்பம் இல்லாமல் அமைதியான மரணம் சம்பவித்து இருக்கிறது.. நான் கடவுள் படத்தில் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது " வாழ முடியாமல் துன்ப படுபவருக்கு நான் அளிக்கும் வரம் மரணம்"

iniyavan said...

//உங்க பீலிங்க்ஸ் புரியுது.. கடைசியில் அந்த தோழிக்கி நாங்கள் பிராத்தித்து போல அவர் கணவருக்கு மேலும் மேலும் துன்பம் இல்லாமல் அமைதியான மரணம் சம்பவித்து இருக்கிறது.. நான் கடவுள் படத்தில் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது " வாழ முடியாமல் துன்ப படுபவருக்கு நான் அளிக்கும் வரம் மரணம்"//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்ற்றி நண்பா!