
ஒரு வீட்டுக்கு குடி போறோம். அந்த வீட்டுனால ஏதாவது பிரச்சனை வருது. நம்மால தாங்கிக் கொள்ள முடியாத அளவு பிரச்சனை. என்ன செய்வோம்? கொஞ்ச நாள் பொறுத்து பார்த்து விட்டு வேறு வீட்டிற்கு போய் விடுவோம்.
நம் வீடு இருக்கும் தெருவில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனை. நம்மால் சமாளிக்க முடியவில்லை அல்லது தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்ன செய்வோம்? கொஞ்ச நாள் பொறுத்து பார்த்து விட்டு வேறு தெருவில் உள்ள வீட்டிற்கு குடி போய் விடுவோம்.
அதே போல் ஊரே பிரச்சனை அல்லது அந்த ஊரினால் நம் நிம்மதி கெடுகிறது என்றால் கூட, தூரத்தில் இருந்தால் பரவாயில்லை என்று வேறு ஊருக்கு போய் அங்கே ஏதாவது வாடகை வீட்டில் குடி போவோம்.
இங்கே ஒரு நாட்டில் எப்போதுமே பிரச்சனை. நிம்மதி இல்லை. அடிக்கடி நில நடுக்கம். என்ன செய்வார்கள் மக்கள்? உலகிலேயே அதிகமாக நில நடுக்கம் ஏற்படும் நாடாக ஜப்பான் இருந்தது. இன்று அந்த லிஸ்டில் இந்தோனேசியாவும் சேர்ந்து விட்டது. அதுவும் 2004ல் பூகம்பமும், சுனாமியும் வந்த பிறகு அந்த நாட்டின் பொருளாதாரமே வீழ்ச்சியடைந்து விட்டது எனலாம். அங்கு இருக்கும் மக்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. மேலே சொன்னது போல் வேறு நாட்டுக்கு சென்று குடி போக முடியுமா என்ன?
அங்கே வாழும் மக்களின் மன நிலை எப்படி இருக்கும்? எப்போதும் ஒருவித மன இறுக்கத்துடனேயே இருக்க வேண்டி வருமே? அங்கு வெறும் பூகம்பமும், சுனாமி மட்டும் மக்களை கொல்வதில்லை. அடிக்கடி படகு விபத்து, ஹெலிகாப்டர் விபத்து, நிலச்சரிவு என்று ஏதாவது ஒரு வகையில் மக்கள் தினமும் அங்கே உயிர் விட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறை இந்தோனேசியாவில் பூகம்பம் வரும்போதும் அதன் அதிர்வுகளை லேசாக மலேசியாவில் உணர முடியும். உடனே சில சமயம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்பு வாபஸ் பெறப்படும். உடனே நாங்கள் டிவியைப் பார்ப்போம். ' அப்பாடா, மலேசியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை' என்ற செய்தி கேட்டவுடன் வேறு வேலையை பார்க்க சென்றுவிடுவோம். அடுத்த நாள் டிவியில் அங்கே அவர்கள் படும் வேதனையை பார்க்கும்போது ரொம்ப மனது கஷ்டமாக இருக்கும். இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மக்களை காப்பாற்ற அவர்கள் படும் பாடு இருக்கிறதே? அதை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது.
இந்தோனேசியாவின் கடலுக்கு அடியில் உள்ள தகடுகள் ரொம்ப வீக்காக இருப்பதாகவும், அதனால் அவைகள் மோதிக்கொள்ளும்போது அங்கே அடிக்கடி பூகம்பம் ஏற்படுவதாகவும் காரணங்கள் சொல்லப்பட்டாலும், அங்கே இருக்கும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? எப்போதாவது பூகம்பம் வந்தால் சரி, எப்போதுமே வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்?
கடவுளே கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா???
9 comments:
நல்லதொரு பதிவு நண்பரே..
ஜப்பானியர்கள் விழித்து கொண்டனர்.. மரத்தினால் வீடு கட்டுகின்றனர்.. அடுத்தது இந்தோனேசிய மக்களும் மர வீடுகள் கட்டிக்கொள்ளவேண்டும்.. இந்தியாவிற்கும் இந்த அபாயம் நிச்சியம் உண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நானும் இந்தோனேஷியா சென்றிருக்கும்போது அந்த மக்களின் ஏழ்மையும் பணவீக்கத்தையும் பார்த்தேன், தப்பித்தவறிதான் மற்ற நாடுகளின் பெயர் அடிபடுகிறது பூகம்பத்தின்போது
நானும் அதையே கேக்குறேன், பாவம் அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள், இறைவா கொஞ்சம் கருணைக்காட்டேன்..
அனானி சொல்வது போல , மரத்தினால் கட்டுவதோடு மட்டும் அல்லாமல் அவர்களுடைய கட்டிடங்களின் கட்டமைப்பும் அதற்கு ஏற்றார் போல உள்ளது.அதானல் அவர்கள் பெரும்பாலும் தப்பித்து கொள்கிறார்கள்.
//நல்லதொரு பதிவு நண்பரே.. //
நன்றி நண்பரே!
//ஜப்பானியர்கள் விழித்து கொண்டனர்.. மரத்தினால் வீடு கட்டுகின்றனர்.. அடுத்தது இந்தோனேசிய மக்களும் மர வீடுகள் கட்டிக்கொள்ளவேண்டும்.. இந்தியாவிற்கும் இந்த அபாயம் நிச்சியம் உண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.//
எதிர்காலத்தில் நாம் எல்லாம் மரவீட்டில் வாழ வேண்டிய நிலை வரும் என நினைக்கிறேன்.
//நானும் இந்தோனேஷியா சென்றிருக்கும்போது அந்த மக்களின் ஏழ்மையும் பணவீக்கத்தையும் பார்த்தேன், தப்பித்தவறிதான் மற்ற நாடுகளின் பெயர் அடிபடுகிறது பூகம்பத்தின்போது//
சரியாக சொன்னீர்கள் நண்பா!. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா!!!.
//அனானி சொல்வது போல , மரத்தினால் கட்டுவதோடு மட்டும் அல்லாமல் அவர்களுடைய கட்டிடங்களின் கட்டமைப்பும் அதற்கு ஏற்றார் போல உள்ளது.அதானல் அவர்கள் பெரும்பாலும் தப்பித்து கொள்கிறார்கள்//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பிரதீப்.
//அங்கே வாழும் மக்களின் மன நிலை எப்படி இருக்கும்? எப்போதும் ஒருவித மன இறுக்கத்துடனேயே இருக்க வேண்டி வருமே? அங்கு வெறும் பூகம்பமும், சுனாமி மட்டும் மக்களை கொல்வதில்லை. அடிக்கடி படகு விபத்து, ஹெலிகாப்டர் விபத்து, நிலச்சரிவு என்று ஏதாவது ஒரு வகையில் மக்கள் தினமும் அங்கே உயிர் விட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.//
இதுபோல் தான் அப்பாவி தமிழீனம் இலங்கையில் அகதிகள் முகமில் அளிந்துகொண்டிருக்கின்றது... இதில் மிகப்பெரியகொடுமை குழந்தைகள் மரித்துப்போவதுதான்...
பிரத்தனைகளை விட நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பது வருத்தமான விசயம்...
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தமிழ் சரவணன்.
//Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'கடவுளே கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா???' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 6th October 2009 02:06:01 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/121271
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team//
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
Post a Comment