சமீபத்தில் என் உறவினர் ஒருவர் என்னிடம் கீழ் கண்ட கேள்வியைக் கேட்டார்,
" எனக்கு இன்கம்டேக்ஸ் ஆபிஸில் Refund வர வேண்டி உள்ளது. அதை எப்படி வாங்குவது? எத்தனை நாள் கழித்து கிடைக்கும்? நான் விசாரித்த வரையில் Refund கிடைக்க சில மாதங்கள் ஆகும் என்று சொல்கின்றார்களே? உண்மையா?
அப்போது அருகிலிருந்த என் நெருங்கிய நண்பர் ஒருவர் "நான் சொல்லும்படி நீங்கள் செய்தால் மூன்றே நாட்களில் வருமான வரி அலுவலகத்திலிருந்து Refund வாங்கிவிடலாம்" என்று என் உறவினரிடம் கூறினார். அது எப்படி சாத்தியம்?
இதோ அவர் வாயினாலே அவர் விளக்குகின்றார், கேளுங்கள்:
எனக்கு ஒரு பெரியத் தொகை வருமானவரி அலுவலகத்திலிருந்து வர வேண்டியிருந்தது. நானும் உங்களைப்போல கவலையுடன் அந்த குறிப்பிட்ட அலுவலகத்தை அணுகினேன். அவர்கள், " கொடுத்துட்டு போங்க, அனுப்புறோம்" எனச்சொல்லி என்னை அனுப்பினார்கள். நானும் தயக்கத்துடன் வெளியே வந்தேன். அப்போது என் அருகில் வந்த அந்த அலுவல ப்யூன்,
" சார், என்ன சார் பணம் வர வேண்டி இருக்கா?"
" ஆமாம்"
" நான் சொன்னபடி செஞ்சீங்கன்னா உங்களுக்கு இரண்டே நாள்ல பணம் கிடைக்கும்"
" என்ன செய்யணும், சொல்லுங்க?"
" முதல்ல எனக்கு ஒரு 100 ரூபாய் கொடுங்க"
கொடுத்தேன். பணத்தை வாங்கிய பிறகு,
" உள்ளே மஞ்சள் கலர்ல சட்டை போட்டுட்டு ஒருத்தர் உட்கார்ந்து இருக்காருல்ல. அவர்தான் உங்கள் பைலை எடுத்து, எல்லாவற்றையும் சரி பார்த்து, கம்ப்யூட்டரில் எண்டர் பண்ணி, பிறகு கமிஷ்னர் கிட்ட அனுப்பனும். அதனால அவரைப் போய் பார்த்து, நான் அனுப்பிச்சேனு சொல்லி ஒரு 1000 ரூபாய் கொடுத்துடுங்க. பைல் ஒரு 30 நிமிசத்துல ரெடி ஆயிடும்"
அவர் சொன்ன படியே அவரை போய் பார்த்து 1000 ரூபாய் கொடுத்தேன். நான் கொடுக்கும்போது கொஞ்சம் கீழே யாருக்கும் தெரியாமல் கொடுக்க முயற்சித்தேன். ஆனால் அவரோ, " பரவாயில்லை, சாதாரணமாவே கொடுங்க" என்றார்.
30 நிமிடத்தில் பைலை ரெடி செய்து, என் முன்னாடியே கமிஷ்னர் ரூமுக்கு அனுப்பினார். பின்,
" கமிஷ்னருக்கு ஒரு 2000 ரூபாய் கொடுத்துடுங்க"
நான் உள்ளே போனேன்.
"சார், என் பைல் இப்போதான் உங்க கிட்ட வந்துச்சு"
" எவ்வளவு பணம் வரனும்"
சொன்னேன்.
" என்ன தொழில் பார்க்கறீங்க" - சொன்னேன்.
" ஓஓஓஓஒ இந்த தொழில்ல இவ்வளவு வருமானம் வருமா? சரி சரி போங்க, பார்த்து அனுப்புறோம். ஒரு மாசம் கழிச்சு வந்து பாருங்க"
" இல்லை சார் வந்து...." சொல்லிட்டு 2000 ரூபாய் பணத்தை நீட்டினேன்.
" முதல்லயே சொல்லறது இல்லையா நீங்க. சரியா இரண்டு நாள் கழிச்சு வாங்க. செக் ரெடியா இருக்கும்"
" ரொம்ப நன்றி சார். இரண்டு நாள் கழிச்சு வரேன்"
இரண்டு நாட்கள் சென்று போனேன். முதலில் பார்த்த ஆபிசரை பார்த்தேன். சொன்னபடி என் செக் ரெடியாக இருந்தது. ஆனால் அவர்,
" சார், உங்க செக் ரெடி. ஆனா உள்ளே அட்மின் ஆபிஸர் ஒருத்தர் இருப்பார். அவரும் செக்ல கையெழுத்து போடணும். அதனால அவரை போய் பாருங்க"
" அவருக்கு ஒரு 500 ரூபாய் கொடுக்கவா, சார்?" - இது நான்.
" கஷ்டப்பட்டு இவ்வளவு வேலை செஞ்சது நான். எனக்கே 1000 ரூபாய் தான். அவருக்கு எதுக்கு 500 ரூபாய். எல்லாம் ஒரு 300 ரூபாய் போதும் போங்க"
பிறகு அட்மின் ஆபிஸரிடம் சென்றேன். ஒரு 300 ரூபாய் கொடுத்தேன்.
" சார், 300 ரூபாய் கம்மி சார். ப்ளீஸ் ஒரு 500 ரூபாயா கொடுங்க" - கொடுத்தேன்.
செக்கில் கையெழுத்து போட்டார். எல்லாம் ரெடி. அந்த செக்கை அவர்கள் டெஸ்பேட்ச் பிரிவிற்கு அனுப்பி போஸ்ட் செய்யணும்.
மீண்டும் ப்யூன் வந்தார்.
" சார், எல்லாம் முடிஞ்சுது. ஒரு 100 ரூபாய் கொடுங்க. டெஸ்பாட்ச் பிரிவுல கொடுக்கறேன்"
கொடுத்தவுடன் செக் அங்கே போனது. டெஸ்பேட்ச் பிரிவில் உள்ள நபர்,
" சார், ஒரு 100 ரூபாய் கொடுங்க. உடனே ரெடி பண்ணிடுறேன்"
பணம் வாங்கியவுடன் இன்னொரு ப்யூனை கூப்பிட்டு, " ஸ்டாம் எடுத்து அதுல ஒட்டி, உடனே சார் முகவரிக்கு போஸ்ட் பண்ணு"
அவன் என்னை பல்லை இழித்துக்கொண்டு பார்த்தான்.
" உனக்கு எவ்வளவு வேணும்?"
" ஒரு 50 ரூபாய் கொடுங்க"
பணம் கொடுத்தவுடன், " சார், நாளைக்கு வீட்டுக்கு வந்துடும் போங்க"
வெளியே வந்தேன். முதலில் சந்தித்து இரு முறை 100 ரூபாய் வாங்கிய ப்யூன்.
" சார், எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. நான் தான் உங்களுக்கு வழிகாட்டினேன். சந்தோசமா இன்னொரு 100 ரூபாய் கொடுத்துட்டு போங்க சார்"
தலையெழுத்தே என்று கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். சொன்ன மாதிரி அடுத்த நாளே செக் வீடு தேடி வந்தது.
நண்பர் சொல்லி முடித்தவுடன், எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. என்ன மாதிரி ஒரு நெட் வொர்க் பாருங்க. அந்த கமிஷ்னர் ஒரு நாளைக்கு குறைந்தது 20,000 ரூபாய் இல்லாமல் வீட்டுக்கு போக மாட்டாறாம். நம்ம பணத்தை திருப்பி வாங்க நம்ம கிட்டேயே பணம் வாங்கறாங்க. என்ன கொடுமை இது??
நம்ம நாடு எங்கே போயிட்டு இருக்கு?
இந்தியன் படத்துல ஒரு வசனம் வரும்,
" வெளிநாட்டுல அடுத்தவன் வேலையை செய்ய லஞ்சம் வாங்கறான். இங்க ஏண்டா உங்க வேலையை செய்யறதுக்கே லஞ்சம் வாங்கறீங்க?"
சரியான வசனம் இல்ல???
12 comments:
உலக்ஸ்..ரொம்ப நாளாச்சு..நீங்கள் கையூட்டு கொடுத்தாலும் அது வருவது போல்தான் வரும்.என்னிடம் 10% கேட்டார்கள்.உடனே கிடைக்குமா? என்று கேட்டேன்.இல்லை..2 மாதம் ஆகும் என்று சொன்னார்கள்.நான் வரும்போது வரட்டும் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.ஆச்சர்யம்..அடுத்த 15 ஆம் நாளில் வந்துவிட்டது
If you don't bother to show your anxiety of getting the refund & leave the refund to come as it is, it is likely to come much faster including with interest for the delayed month(s).
Though the bribe-receiver is to be blamed why are you sparing the bribe-giver? Don't you think he is also responsible for the bribe-culture to flourish in our country?
//உலக்ஸ்..ரொம்ப நாளாச்சு..நீங்கள் கையூட்டு கொடுத்தாலும் அது வருவது போல்தான் வரும்.என்னிடம் 10% கேட்டார்கள்.உடனே கிடைக்குமா? என்று கேட்டேன்.இல்லை..2 மாதம் ஆகும் என்று சொன்னார்கள்.நான் வரும்போது வரட்டும் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.ஆச்சர்யம்..அடுத்த 15 ஆம் நாளில் வந்துவிட்டது//
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் தண்டோரா சார்.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தண்டோரா சார்.
// Though the bribe-receiver is to be blamed why are you sparing the bribe-giver? Don't you think he is also responsible for the bribe-culture to flourish in our country?//
Dear Mr Arunachalam,
Kindly read the article again.
I have not given any bribe to anybody. I have written about my friend's experince only.
I will convey your feelings to my friend.
Anyway, thanks for your visit and your comments.
எல்லாம் சந்தர்ப்பவாதக் கொள்ளைகள்தான்.
இதுக்கெல்லாம் root cause analysis செய்தால், ஒரு விதத்தில் நாம் தான் காரணம் என்பது புரிய வரும். அதே நண்பர் லஞ்ச ஒழிப்பு துறைக்கி தகவல் தெரிவித்து இருந்திருக்கலாம்!
நான் சொல்லுவது ஏதேனும் தவறா உலக்ஸ்?
லஞ்சம் கொடுக்கிறதும் தப்பு.
யாரும் பிச்சை இடவில்லை என்றால் பிச்சைக்காரர்கள் உருவாக மாட்டார்கள்
www.iniyavan.com is very informative. The article is very professionally written. I enjoy reading www.iniyavan.com every day.
payday cash
payday advance
Things won't change as long as we the common people think it is alright to bribe to get OUR things done.
Giving bribe is as criminal as accepting it.
I congratulate, this excellent idea is necessary just by the way
I congratulate, you were visited with an excellent idea
this is the way a blog should be! thanks!
Post a Comment