பதிவுலக நாட்டாமை பரிசல் என்னை இந்த தொடர்விளையாட்டுக்கு கூப்பிட்டிருக்கிறார். பொதுவாக எனக்கு "எல்லோரையும் பிடிக்கும்" என பொய் சொல்லலாம்தான். ஆனால் அப்படிச்சொன்னால் அது என்னையே நான் ஏமாற்றிக்கொண்டது போல் ஆகும்.
ஆட்டோவெல்லாம் மலேசியாவிற்கு வராது என்ற தைரியத்தில் நான் இந்த விளையாட்டில் பங்கு கொள்கிறேன்.
இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஆறு பேராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
இனி....
1.அரசியல் தலைவர்
பிடித்தவர் : தலைவர் எம்.ஜி.ஆருக்கு அப்புறம் யாருமில்லை பிடிக்காதவர்: ராமதாஸ்
2.எழுத்தாளர்
பிடித்தவர் : பாலகுமாரன் பிடிக்காதவர் : ஞானி (எப்போதும் எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டே இருப்பதால்)
3.கவிஞர்
பிடித்தவர் : வைரமுத்து பிடிக்காதவர் : குத்துப்பாட்டு எழுதும் அனைவரும்
4.இயக்குனர்
பிடித்தவர் : கே.பாக்யராஜ் பிடிக்காதவர் : விசு
5.நடிகர்
பிடித்தவர் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிடிக்காதவர் : அலட்டல் சிம்பு
6.நடிகை
பிடித்தவர் : சினேகா பிடிக்காதவர் : ஜோதிகா
7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா பிடிக்காதவர் : தீனா
8. சிறந்த பதிவர்
பிடித்தவர் : பரிசல் பிடிக்காதவர் : என்.உலகநாதன்
9. சிறந்த நகைச்சுவை நடிகர்
பிடித்தவர் : வடிவேல் பிடிக்காதவர் : விவேக்
10. சிறந்த பாடகர்
பிடித்தவர் : உதித் நாராயணன் பிடிக்காதவர் : சிம்பு
இதைத் தொடர நான் அழைப்பது:
1. எவனோ ஒருவன் என்கிற அதிபிரதாபன்
2. இராகவன் நைஜிரியா
3. கோவி கண்ணன்
4. ஸ்டார் ராஜன்
5. கேபிள் சங்கர்
6. டாக்டர் சுரேஷ்
13 comments:
ஓட்டுப் போட்டுவிட்டேன்..,
இடுகை?
நன்றி டாக்டர் சுரேஷ்
இந்தத் தொடர் நல்லா இருக்கே!
அழைப்புக்கு நன்றி.
//8. சிறந்த பதிவர்
பிடித்தவர் : பரிசல் பிடிக்காதவர் : என்.உலகநாதன்//
இதுல பல உள்குத்து இருக்கும்போல இருக்கே!
//10. சிறந்த பாடகர்
பிடித்தவர் : உதித் நாராயணன் பிடிக்காதவர் : சிம்பு//
என்ன கொடுமை சார் இது?
//10. சிறந்த பாடகர்
பிடித்தவர் : உதித் நாராயணன் பிடிக்காதவர் : சிம்பு//
என்ன கொடுமை சார் இது?//
யாரடி நீ மோகினி - எங்கேயோ பார்த்த மயக்கம் பாட்டிற்காகவும்
சிவாஜி - சஹானா பாட்டிற்காகவும்
உதித் நாராயணனைப் பிடிக்கும்
எவ்வளவு நாளைக்குத்தான் எஸ் பி பியையே சொல்வது.
சிம்புவைப் பிடிக்காதற்கு காரணம் " வைச்சுக்கவா உன்னை மட்டும் பாடலை" ரீமிக்ஸில் கொலை பண்ணியதற்காக!!!
என்னது பாலகுமாரன் எழுத்தாளரா ? சொல்லவே இல்ல -:)
//சிறந்த பாடகர்
பிடித்தவர் : உதித் நாராயணன்//
தமிழ்ல உள்ள பாடல்கள டமில் பாடல்கள் மாதரி பாடுவதாலா -:)
****
-:)
//என்னது பாலகுமாரன் எழுத்தாளரா ? சொல்லவே இல்ல -:)//
பித்தன்,
எனக்கு சுஜாதா தான் ரொம்ப பிடிக்கும். ஆனா உயிரோடு இருக்கவங்கள சொல்லச் சொன்னதால பாலகுமாரன்.
//சிறந்த பாடகர்
பிடித்தவர் : உதித் நாராயணன்//
தமிழ்ல உள்ள பாடல்கள டமில் பாடல்கள் மாதரி பாடுவதாலா -:)//
சிறந்த பாடகர் உதித் நாராயணன் அப்படினு சொல்லியிருக்கேன்.
சிறந்த தமிழ் பாடகர்னு சொல்லலியே???
என்னைப் பதிவர்னு சொன்னதெல்லாம் சரி.. சிறந்த பதிவர்லாம் ஏன்?? :-)))
பதில்கள் நச் நச்னு சொன்னது நல்லாயிருந்தது. நாங்க சிலதுக்கு விளக்கமெல்லாம் போட்டிருந்தோம்.. அப்படியில்லாம பிடிச்சது, பிடிக்கலைன்னு சொன்னது சூப்பர்!
வருகைக்கு நன்றி பரிசல்!!!!
//என்னைப் பதிவர்னு சொன்னதெல்லாம் சரி.. சிறந்த பதிவர்லாம் ஏன்?? :-)))//
பாட்சா படத்துல தலைவர் சொல்றது மாதிரி சொல்லனும்னா,
உண்மையைச் சொன்னேன்.
உலக நாதன் சார் , நீங்க அழைத்தது எனக்கு தெரியாது , மன்னிக்கவும் .
மிக அருமையான பதில்கள்
அழைப்புக்கு நன்றி !
பதிவை தவறவிட்டுவிட்டேன். கவனிக்கவில்லை.
நானும் எழுதிட்டேன்...
பிடிக்கும்... ஆனா பிடிக்காது
//நானும் எழுதிட்டேன்...
பிடிக்கும்... ஆனா பிடிக்காது//
படித்துவிட்டு சொல்கிறேன்
அண்ணே நீங்க கொஞ்சம் லேட்டா கூப்பிட்டு இருக்கீங்க..
நானும் நேத்திதான் இடுகை போட்டேன்...
உங்கள மாதிரி நச்.. நச்னு சொல்ல வரலை...
எதோ என் புத்திக்கு எட்டின வரையில் சொல்லியிருக்கேன்.
அழைப்புக்கு நன்றிகள் பல.
Post a Comment