Nov 18, 2009

கொஞ்சம் ரிலாக்ஸா....!!!

இதை எழுத வேண்டும், இதை எழுதக்கூடாது என்றோ அல்லது இவரைப் போல அல்லது அவரைப் போல எழுத வேண்டும் என்றோ எந்த வரைமுறையும் நான் வைத்துக்கொள்வது கிடையாது. மனதில் பட்டதை எழுதுகிறேன். கூடுமானவரை நல்ல பதிவுகளாக எழுத வேண்டும் என நினைக்கிறேன். திடீரேன தினமும் எழுதத் தோன்றுகிறது. திடீரென சில நாட்கள் படிக்க மட்டுமே பிடிக்கிறது. எதுவுமே அளவோடு இருப்பதும் நல்லதுதானே!. அப்படி என்னை ரிலேக்ஸ் செய்து கொள்ள நினைத்த வேளையில் எனக்கு வந்த சில சுவாரஸ்யமான (ஒரு மூன்று) மெயில்களை தமிழாக்கம் செய்து வெளியிட்டேன். உடனே சில நண்பர்கள், " என்ன வரவர சொந்த சரக்கே இல்லை" என்கிறார்கள்.

அப்படி இல்லை. சும்மா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவதற்காக அப்படி வெளியிட்டேன். காலேஜ் படித்துக்கொண்டிருக்கும் போது, தினமும் படிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. தினமும் வகுப்பில் கவனிப்பதோடு சரி. படிப்பதற்காக விடும் விடுமுறையில் மட்டுமே அப்படி படிப்பேன். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் எல்லாம் படித்திருக்கிறேன். நான் ப்ரோபஷனல் கோர்ஸ் படித்த போதும் அப்படித்தான். நான் அவ்வப்போது டீக்கடைக்கு சென்று பேப்பர் படித்து வந்து மீண்டும் படிக்க ஆரம்பிப்பேன். வீட்டில் டீ இருக்கும். இருந்தாலும் பேப்பர் படித்துக்கொண்டே ஒரு டீ சாப்பிட்டு விட்டு, ஒரு திரிவேணி பாக்கு போட்டு விட்டு, அந்த பக்கமாக போகும் பெண்களை சைட் அடித்து விட்டு, பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்து சின்சியராக படிப்பது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்..

என் நண்பன் ஒருவன். அவன் தினமுமே நிறைய நேரம் படிப்பவன். மதிய 12 மணி வெயிலில் கூட படிப்பான். ஆனால் அவன் தான் பின்னாளில் எம் காமில் ஒரு செமஸ்டர் பெயில் ஆனான். அவன் ரிலாக்ஸ் செய்யும் முறையே வேறு மாதிரி இருக்கும். இரண்டு மணி நேரம் படித்தால் ஒரு அரை மணி நேரம் செக்ஸ் புக் படிப்பான்.

" அது எப்படிடா? படிக்கிற நேரத்துல போய் செக்ஸ் புக்?" அப்படினு கேட்டா,

" மாப்பிள்ளை, உனக்குத் தெரியாது. அதுல இருக்கும் சுகமே தனி. மனசு அப்படியே இதமா இருக்கும். அப்புறம் படிச்சா நல்லா மனசுல பதியும். ஒரு தடவை முயற்சித்துப் பார்" அப்படின்னு அடிக்கடி சொல்லுவான்.

சரி, இவ்வளவு தூரம் சொல்லுறான், அதையும் முயற்சிக்கலாம்னு, நான் ஒரு நாள் அவன் கிட்ட ஒரு புக் வாங்கி இடைப்பட்ட நேரத்துல படிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் எங்க நான் பாடப் புத்தகம் படிக்கிறது? அடுத்த மூன்று நாட்கள் வெறும் செக்ஸ் புக் மட்டும் தான் படிக்க முடிஞ்சது. அதனால மனசும், உடம்பும் வீணானதுதான் மிச்சம். மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு, ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொருவிதமான முறைகள். அவனுக்கு அப்படி. செக்ஸ் புக் பற்றி எழுதியதால் யாரும் தவறாக நினைக்க வேண்டாம். ஏனென்றால், பள்ளி கல்லூரி வாழ்க்கையில் செக்ஸ் புக் என்பது ஒரு அத்தியாவசியமான தேவையாக இருந்தது, இப்போதும், எப்போதும் அது இருக்கும். அதையெல்லாம் ஊறுகாய் போல் தொட்டு விட்டு முன்னேறி வரவேண்டும். நான் படித்ததே இல்லை என்று என்னை உத்தமனாக காட்டிக்கொள்ள விரும்ப வில்லை. இப்போது எத்தனையோ விசயங்கள் நெட்டில் உள்ளது. இருந்தாலும் அன்று படித்த அந்த முதல் கதை மட்டுமே என் நினைவில். அது என்ன கதைனு யாரும் கேட்க வேண்டாம்... ப்ளீஸ்!!!

நானும் என்னுடைய இன்னும் இரண்டு நண்பர்களும் இப்படித்தான் மணிக்கணக்காக பரிட்சைக்குப் படிப்போம். அந்த இருவரும் என்னை விட ஒரு வருடம் சீனியர்ஸ். நான் படிதத்து திருச்சி பிஷ்ப் ஹீபர் தெப்பக்குளம் மேல் நிலைப்பள்ளி. அவர்கள் படித்தது செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி. அவர்கள் + 2 படித்தபோது நடந்த சம்பவம். இருவரும் போட்டி போட்டு படித்தார்கள். யார் அதிகம் மார்க் வாங்குவார்கள் என்று மற்ற நண்பர்கள் முதற்கொண்டு ஆசிரியர்கள் வரை பந்தயம் கட்டிக்கொண்டிருந்தார்கள். பரிட்சை ஆரம்பித்தது. கணக்கு பரிட்சை அன்று இருவருமே அதிக நேரம் கண் விழித்துப் படித்தார்கள். காலையில் இருவருமே ஒரே பஸ்ஸில் லால்குடியிலிருந்து திருச்சிக்கு பஸ் ஏறினார்கள். இறங்கும் போது ஒரு நண்பனைக் காணோம். சரி அவன் எக்ஸாம் ஹாலுக்கு வந்து விடுவான் என நினைத்து அனைவரும் சென்று விட்டோம்.

பரிட்சை ஆரம்பித்தது. ஆனால் அவன் வரவே இல்லை. நண்பன் மட்டுமே பரிட்சை எழுதினான். அன்று பரிட்சை முடிந்து ஊரே அவனைத்தேடியது. ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த நாள் வேறு பரிட்சை எங்களுக்கு இருந்தது. நானாவது +1. அவர்கள் +2. இரவு 10 மணிக்கு வந்தான். என்ன நடந்தது? என்று அவனுக்குத் தெரியவே இல்லை. அவன் எங்கு போனான்? என்றும் யாருக்கும் தெரியாது. முடிவு ரேங்க்கில் பாஸ் பண்ண வேண்டியவன் அதிகம் படித்ததால் மூளைக்குள் ஏதோ ஏற்பட்டு பரிட்சை எழுத முடியாமல் போனது.

அன்று பரிட்சை எழுதிய என் இன்னொரு நண்பன் கணக்கில் 200க்கு 200 வாங்கி, பிறகு இன்ஜினியரிங் முடித்து எங்கெங்கோ வேலைப் பார்த்து இன்று துபாயில் மாதம் 500000 சம்பளம் வாங்குகிறான். ஆனால் அந்த நண்பனோ பின்பு டிப்ளமோ படித்து, ஒரு சாதாரண வேலையில் இருக்கிறான்.

அடுத்த வருடம் நான் +2 எழுதியபோது எனக்கு ஒரே பயம். நானும் அது போல எங்கேயோ போய்விட்டால்????? நானும் இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தேன். புக்கை பிரித்தாலே தூக்கம் தூக்கமாக வரும். அந்த நண்பன் வேறு வந்து அடிக்கடி நினைவில் வந்து பயமுறுத்துவான். நல்ல வேளை எங்கும் போக வில்லை. பரிட்சை நன்றாக எழுதி முடித்தேன்.

அதற்கு பின்தான் எனக்கு பிரச்சனை ஆரம்பம் ஆனது. பரிட்சை முடிந்து அடுத்த இரண்டு வாரங்கள் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. எனக்கும் ஏதோ ஆகிவிட்டதாக நினைத்தேன். கிரிக்கட் விளையாடிப்பார்த்தேன், ஜிம் போனேன், செக்ஸ் புக் படித்துப் பார்த்தேன். ஆனாலும், என்னால் தூங்க முடியவில்லை. எப்போதும் முழு விழிப்பு நிலையிலேயெ இருந்தேன். பிறகு அப்பாவிடம் சொன்னேன். அப்பா என்னை டாக்டரிடம் போகச் சொன்னார்..

டாக்டர் பரிசோதித்து விட்டு, " நீ ரொம்ப படிச்ச சப்ஜெக்ட் என்ன என்று?" கேட்டார்.

" எக்னாமிக்ஸ்" என்றேன். ஏனென்றால், அதுதான் ஒரு வீணாப்போன சப்ஜக்ட், அப்போது.

பிறகு மருந்து சீட்டில் எதையோ எழுதிக்கொடுத்து, வீட்டிற்கு சென்று அப்பாவிடம் காண்பித்து விட்டு, பிறகு வாங்கச் சொன்னார். நானும் பயத்தில் பிரிக்காமல் வந்து விட்டேன்.

வீட்டிற்கு வந்து பிரித்தால், மருந்து சீட்டில் இப்படி எழுதியிருந்தது,

" தினமும் இரவு +2 எக்னாமிக்ஸ் புக்கை மீண்டும் படித்துப் பார்க்கவும்"

என்ன ஆச்சரியம்! புக்கை பிரித்து முதல் பாடத்தைப் பார்த்த இரண்டாவது நிமிடமே அருமையாக தூக்கம் வந்தது.

இந்தப் பதிவை எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடிச்சுட்டேன்ல. பரவாயில்லை. இந்த முறை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.

5 comments:

மேவி... said...

raittu......

நாங்க சின்ன வயசிலிருந்தே கதை கேட்டு கேட்டு தான் எல்லா எக்ஸாம் எழுதினோம்.... எல்லாம் விடுதில் இருந்தால் அப்படி தான் படித்தோம். DAY SCHOLAR வாழ்க்கை வித்தியாசமாக இருக்கும் போல் இருக்கே. எக்ஸாம் டென்ஷன் என்பது துளி கூட இருந்தது இல்லை. ஏனென்றால் எல்லா நாளும் படித்து கொண்டே தானே இருப்போம் .

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி டம்பி மேவீ

அப்துல்மாலிக் said...

என்னா தல மறுபடியும் படிப்பை சொல்ல்லி வயத்துலே புளிய கரைக்குறீங்க... இப்போ கொஞ்சம் ரிலாக்ஸா வேலைப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. ஆனால் பாருங்க ஏதாவது படிக்கனும்னு மனது துடிக்குது மறுபடியும் புக்கை திறந்தால் அடுத்த நிமிடம் படித்தது மறந்துபோகிறது......

படிப்பது முக்கியமில்லை, அதை எப்படி படிக்கனும் என்பதுதான் முக்கியம்

iniyavan said...

//படிப்பது முக்கியமில்லை, அதை எப்படி படிக்கனும் என்பதுதான் முக்கியம்//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அபுஅப்ஸர்!

விக்னேஷ்வரி said...

Different way of relaxing. Good.