வெள்ளி மற்றும் சனி இரண்டு நாட்கள் விடுமுறை. சரியாக வியாழக்கிழமை மாலை வீட்டிலிருந்து போன்.
" ஏங்க ஆஸ்ட்ரோ (மலேசிய டிவி சேனல்) திடீருனு வேலை செய்யலை"
" சரி, வீட்டுக்கு நான் வந்து பார்க்கிறேன்"
வீட்டிற்கு வந்து பார்த்தால் சுத்தமாக வேலை செய்யவில்லை. பிறகு ஒரு வழியாக எலக்ட்ரிசியன் வர இரவு 9 மணி. வந்தவர் சரி பார்த்துவிட்டு "நீங்கள் ஆஸ்ட்ரோ டீலரைத்தான் பார்க்க வேண்டும். அநேகமாக நீங்கள் புதிது வாங்க வேண்டி இருக்கும்" என்றார். கடுப்பாகி விட்டது. முதல் காரணம் அனாவசிய செலவு. இரண்டாவது காரணம், கடைகள் இரண்டு நாட்கள் விடுமுறை. ஆயிரம் திட்டிக்கொண்டே 'கோலங்கள் எப்படி முடியப் போகிறது?' என்று பார்த்துக்கொண்டிருகிறோம். இதனால் கடந்த இரண்டு நாட்களாக கோலங்கள் பார்க்க முடியவில்லை. ஆதிக்கு எப்படித் தண்டனை கொடுக்க வேண்டும், எப்படி அந்த தொடரை முடிக்க வேண்டும் எனற யோசனை என்னிடம் உள்ளது. திருச்செல்வம் இது வரை கிளைமாக்ஸ் எடுக்கவில்லை என்றால் என்னை அணுகலாம். பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். காசு இல்லாமலே நான் உதவ ரெடி.
ஒரு வழியாக வியாழன் இரவு தூங்கி விட்டேன். நேற்றுத்தான் பிரச்சனையே ஆரம்பம் ஆனது. கடைகள் எதுவும் இல்லை. எங்கும் போகப் பிடிக்கவில்லை. எவ்வளவு நேரம்தான் நெட்டில் இருப்பது? அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது. டிவி நம் வாழ்க்கையில் எந்த அளவிற்கு ஒரு முக்கியமானதாக இருக்கிறது? என்று.
டிவியும், கம்ப்யூட்டரும் இல்லையென்றால் என்னால் வாழவே முடியாதோ? என்ற பயம் வந்துவிட்டது. பிறகு எப்படி பொழுதைக்கழிக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, ஐந்தாவது படிக்கும் என் பெண், "அப்பா இந்த கணக்கு சொல்லி தாங்க" என்றாள். வீட்டில் நான் கணக்கில் எப்போதும் 100 க்கு 100 என்று அடிக்கடி சொன்னதற்கு, நேற்று தண்டனை. 5 வது வகுப்பிற்கு fractionல் word problem. நமது ஊர் சிலபஸ்ஸில் எட்டாவது வகுப்பு வரை fraction problem உள்ளது ஆனால் word problem இல்லை. அதை சால்வ் செய்வதற்கு இரண்டு மணி நேரம் செலவழித்து, பிறகு பின்மண்டை வலி வந்து........, " ஏதோ கணக்குல சென்டம்னு பீத்திக்கிட்டீங்க" தேவையா எனக்கு???
சாயந்தர நேரம் பலவாறு யோசிக்கையில் அஸ்ட்ரோத்தானே வேலை செய்யவில்லை. டிவிடியும், டிவியும் நன்றாகத்தானே வேலை செய்கிறது எனத் தோன்ற, ஏதாவது படம் பார்க்கலாம் என்றால், ஒரு கேசட்டும் இல்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு கல்யாண கேசட் பார்க்கலாம் என முடிவானது. சரியாக பத்து வருடம் முன் நடந்த நிகழ்வு அது. இப்போது மனைவியுடனும், பிள்ளைகளுடனும் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வுகளை விளக்க வார்த்தைகள் இல்லை.
பிள்ளைகள் கேட்டார்கள், " அப்பா, நாங்க எங்கே?". சுஜாதா ஒரு முறை எழுதிய ஜோக் நினைவுக்கு வந்து போனது.
தேனிலவு போய்வந்த கேசட்டை பல வருடங்களுக்கு பிறகு கணவன், மனைவி இருவரும் பார்த்துக் கொண்டிருந்த போது, பையன் கேட்டானாம் அப்பாவிடம்,
" அப்பா, இதில் நான் எங்கே?"
அப்பா, இப்படி பதில் சொன்னாறாம்,
" போகும் (தேனிலவு) போது என் கூட வந்த, வரும்போது உங்கம்மாக் கூட வந்த"
இப்படி எந்த பதிலையும் என்னால் சொல்ல முடியாததால், ஏதோ சொல்லி ஒரு வகையில் சமாளித்தேன். ஆனால், மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அனைத்து நண்பர்களையும், உறவினர்களையும் மீண்டும் நேரில் பார்த்த உணர்வு. முழுக் கவனமும் டிவி மீதே இருந்தது. ஆனால், தாலிக் கட்டியபோது ஏற்பட்ட அந்த நேரத்து டென்ஷன், பிறகு ஏற்பட்ட சந்தோசம் ஆகிய உணர்ச்சிகள் நேற்றும் வந்து போனது. 10 வருடம் பின்னோக்கி அந்த நாளுக்கே சென்று வந்தது போல் இருந்தது.
வழக்கம் போல் 'என் வாழ்வின் சந்தோசம் இழந்த நாள் இது' என்று மனைவியை கிண்டலடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாலும், இருவரிடமும் அன்று இருந்த அந்த லவ், இன்றும் நிலைத்திருப்பதை நினைக்கையில் மனம் இன்னும் சந்தோசம் அடைந்தது.
கடந்த 13 வருடங்களாக பல செலவுகள் செய்தபோதும், நான் ஏன் இன்னும் வீடியோ கேமரா வாங்கவில்லை என்று எனக்கே புரியவில்லை. நேற்று அந்த கேசட்டைப் பார்த்தப் பிறகு உடனே வாங்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். இனி ஒவ்வொரு நிகழ்வையும் படம் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த ஒரு கணத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பது முடியாது அல்லவா?
ரிப்பேராய் போன ஆஸ்ட்ரோ டி கோடருக்கு நன்றி. இல்லையென்றால் இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்குமா??
ஆனால் என்ன ஒரு வருத்தம், என்னை இந்த நல்வாழ்விற்கு உட்படுத்திய, அன்று உயிருடன் இருந்த என் அன்புத்தந்தை இன்று என்னோடு இல்லை. தந்தையை டிவிடியில் பார்க்கும்போதெல்லாம் கண்கள் குளமாயின.
10 வருடங்களில்தான் எத்தனை மாற்றம். அன்று உயிருடன் இருந்த சித்தி, மாமா, மனைவியின் தாத்தா இன்னும் சிலர் இன்று இந்த உலகில் இல்லை. பல நண்பர்களின் உடல் நிலை இன்று நன்றாக இல்லை. ஒரு நண்பர் உயிருடன் இல்லை. இதையெல்லாம் காணும்போது மனம் சஞ்சலம் அடைந்ததென்னவோ உண்மைதான்.
அந்த வகையில் நம்மை நன்றாக வைத்திருக்கும் ஆண்டவனுக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.
படிக்கும் நீங்களும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள். எத்தனை கோபதாபங்கள் மனதிற்குள் இருந்தாலும், அனைத்தும் உங்கள் திருமண கேசட்டைப் பார்த்தவுடன் பஞ்சாய் பறந்துவிடும்.
18 comments:
// அந்த வகையில் நம்மை நன்றாக வைத்திருக்கும் ஆண்டவனுக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். //
ஆம் ஆண்டவனுக்கு நாம் மனதார நன்றிச் சொல்லவேண்டும்.
விடியோகாம் வாங்கும் போது, நல்லதா லேட்டஸ்ட் மாடலா பார்த்து வாங்குங்க. இப்போதெல்லாம் ஹார்ட் டிஸ்கியுடன் கூடிய விடியோகாம் வந்துவிட்டது. ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு எப்போது சோனிதான் முதல் சாய்ஸ்.
//விடியோகாம் வாங்கும் போது, நல்லதா லேட்டஸ்ட் மாடலா பார்த்து வாங்குங்க. இப்போதெல்லாம் ஹார்ட் டிஸ்கியுடன் கூடிய விடியோகாம் வந்துவிட்டது. ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு எப்போது சோனிதான் முதல் சாய்ஸ்.//
எனக்கும் சோனிதான் முதல் சாய்ஸ் சார். வாங்கியவுடன் சொல்கிறேன்.
உங்கள் வருகைக்கு நன்றி சார்.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'மலரும் நினைவுகள்!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 28th November 2009 11:24:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/145277
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
//10 வருடங்களில்தான் எத்தனை மாற்றம். அன்று உயிருடன் இருந்த சித்தி, மாமா, மனைவியின் தாத்தா இன்னும் சிலர் இன்று இந்த உலகில் இல்லை. பல நண்பர்களின் உடல் நிலை இன்று நன்றாக இல்லை. ஒரு நண்பர் உயிருடன் இல்லை. இதையெல்லாம் காணும்போது மனம் சஞ்சலம் அடைந்ததென்னவோ உண்மைதான்.//
varuththaththin varikalil vali therinthathu. valikalthan vazhkkai. ninaivugal thodarattum
நல்ல மலரும் நினைவுகள்! பூங்கொத்து!
Ulaks,
Just saw ur blog and surprised. Really very nice.
Expecting more. Keep continue..
anbudan,
SN.Rajesh
நேர்த்தியான எழுத்து நடை தங்களுடையது
வாழ்க்கையை அனுபவித்த அனுபவமும் எழுத்துக்களில் தொனிக்கிறது...
தொடர்ந்து எழுதுங்கள்.... பகிர்ந்து கொள்ளுங்கள் .....
உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கிறது
என்னோட கல்யாணத்துக்கு முன்பே கேமரா வாங்கிவிட்டேன். அந்த வகையில் நான் உங்கள விட சீனியர் ஹா ஹா .
கேமராவின் அருமையை என்னோட மகன் பிறந்த சில மணித்துளிகளில் அவனை படம் பிடித்த போது தான் தெரிந்தது. எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
என்மகன் பெரியவன் ஆகிய பிறகு அந்த புகைப்படத்தை பார்க்கும் போது கண்டிப்பாக சந்தோஷ படுவான்.
என்னோட சாய்ஸ் kodak camera. சோனி கேமரா தான் நான் யூஸ் பண்றேன் ஆனால் வாங்கிய சில நாட்களிலே கொஞ்சம் கோளறு குடுத்தது. எனது நண்பன் வாங்கிய kodak camera முன்று வருடங்கள் அருமையாக வேலை செய்கிறது.
என்னோட கல்யாணத்துக்கு முன்பே கேமரா வாங்கிவிட்டேன். அந்த வகையில் நான் உங்கள விட சீனியர் ஹா ஹா .
கேமராவின் அருமையை என்னோட மகன் பிறந்த சில மணித்துளிகளில் அவனை படம் பிடித்த போது தான் தெரிந்தது. எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
என்மகன் பெரியவன் ஆகிய பிறகு அந்த புகைப்படத்தை பார்க்கும் போது கண்டிப்பாக சந்தோஷ படுவான்.
என்னோட சாய்ஸ் kodak camera. சோனி கேமரா தான் நான் யூஸ் பண்றேன் ஆனால் வாங்கிய சில நாட்களிலே கொஞ்சம் கோளறு குடுத்தது. எனது நண்பன் வாங்கிய kodak camera முன்று வருடங்கள் அருமையாக வேலை செய்கிறது.
கோலங்கள் பார்க்க வேண்டுமானால் techsatish.net தளத்திற்கு செல்லவும். அங்கு பார்க்கலாம். ஒவ்வொரு எபிசோடிற்கும் இரண்டு அல்லது மூன்று வீடியோக்கள் இருக்கும். விளம்பரம் சுத்தமாக இல்லை.
blog.isaitamil.net டிலும் பார்க்கலாம். ஆனால் அதற்கு ஃபைர்ஃபாக்ஸ் உலாவியை உபயோகிக்கவும். கூகள் குரோமில் பாதி ஸ்க்ரீன் மட்டுமே தெரியும். மேலும் ஒரே ஒரு வீடியோ, விளம்பரங்களுடன்.
அன்புடன்,
டோண்டு ராகவான்
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சே.குமார்
//நல்ல மலரும் நினைவுகள்! பூங்கொத்து!//
பூங்கொத்துக்கு நன்றி மேடம்.
//என்னோட கல்யாணத்துக்கு முன்பே கேமரா வாங்கிவிட்டேன். அந்த வகையில் நான் உங்கள விட சீனியர் ஹா ஹா //
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரோமியோ பாய்
//நேர்த்தியான எழுத்து நடை தங்களுடையது
வாழ்க்கையை அனுபவித்த அனுபவமும் எழுத்துக்களில் தொனிக்கிறது...
தொடர்ந்து எழுதுங்கள்.... பகிர்ந்து கொள்ளுங்கள் .....
உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கிறது//
உங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும் ரொம்ப நன்றி நண்பா.
//Ulaks,
Just saw ur blog and surprised. Really very nice.
Expecting more. Keep continue..
anbudan,
SN.Rajesh//
ஹலோ ராஜேஷ்,
எப்படி இருக்கீங்க? ரொம்ப ஆச்சர்யமாகவும், அதே சயம் சந்தோசமாகவும் உள்ளது.
வீட்டில் அனைவரும் நலம் தானே?
//கோலங்கள் பார்க்க வேண்டுமானால் techsatish.net தளத்திற்கு செல்லவும். அங்கு பார்க்கலாம். ஒவ்வொரு எபிசோடிற்கும் இரண்டு அல்லது மூன்று வீடியோக்கள் இருக்கும். விளம்பரம் சுத்தமாக இல்லை.
blog.isaitamil.net டிலும் பார்க்கலாம். ஆனால் அதற்கு ஃபைர்ஃபாக்ஸ் உலாவியை உபயோகிக்கவும். கூகள் குரோமில் பாதி ஸ்க்ரீன் மட்டுமே தெரியும். மேலும் ஒரே ஒரு வீடியோ, விளம்பரங்களுடன்.
அன்புடன்,
டோண்டு ராகவான்//
தகவல்களுக்கு ரொம்ப நன்றி டோண்டு சார்.
கனிவு கூர்ந்து அந்த fraction word problem ஐ சொல்லுங்க.
பின்னூட்டப் பதிலில் சொன்னாலும் சரி.
அல்லது
lathananthpakkam.blogspot.com க்கு அனுப்பி வைத்தாலும் சரி.
உங்கள் வருகைக்கு நன்றி லதானந்த் சார்.
மெயில் அனுப்பியுள்ளேன்.
Post a Comment