அழகை ரசிப்பவன் நான். அதிலும் அழகான பெண்களை பார்க்கும்போது ரொம்பவே ரசிப்பதுண்டு. இதை பலமுறை நான் சொல்லி வந்திருக்கிறேன். நான் ரொம்ப வெளிப்படையான ஒரு மனிதன். ஆனால், எதற்கும் ஒரு அளவு வேண்டாமா? அதற்காக யாரைப் பார்த்தாலும் ஜொல்லு விடுவதா? இது நியாயமா?
ஒருத்தனுக்கு சாப்பாடே கிடைக்கவில்லை என்றால் அவன் மனம் சாப்பாட்டையே நினைத்துக்கொண்டிருந்தால் அதில் எந்த தவறும் இல்லை. ஒருவனுக்கு ஆறுமாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு முறையோதான் சாப்பாடு கிடைக்கிறது என்றால் அவனும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் தவறேதும் இல்லை. ஆனால், சாப்பாடு எப்பொழுதும் அருகே இருக்கிறது, எப்போது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற நிலையில் இருக்கும் ஒருவன் சாப்பாட்டைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், அது நியாயமா?
ஏன், என் மனது இவ்வளவு கேவலமாகிப் போனது? என் மனதில் ஏற்படும் அழுக்கை ஒங்கி ஒரு கத்தியால் குத்தி, கீறி சுத்தப்படுத்திக்கொள்ளவே இந்தப் பதிவு. மன அழுக்கு என்றவுடன் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. என் நண்பன் லீவிற்கு ஊருக்கு வரும்போதெல்லாம் என்னை பாண்டிச்சேரிக்கு கூப்பிடுவான். அரவிந்தர் ஆசிரமத்திற்கு தியானம் செய்ய கூப்பிடுகிறான் என நீங்கள் நினைத்தால் உங்கள் யூகம் மிகத் தவறு. அவன் என்னைக் கூப்பிடுவது பாண்டிச்சேரியில் ஒரு ஹோட்டலில் நடக்கும் கேபரே டான்ஸை பார்ப்பதற்காக. "ஏண்டா, இதுக்கா என்னைக் கூப்பிடுற? இதெல்லாம் தேவையா? என்றால், " மாப்பிள்ளை, வருசம் முழுவதும் கடுமையா உழைக்கிறேன். எந்த தப்பும் செய்யறது இல்லை. ஆனாலும், மனசு முழுவதும் அழுக்கா இருக்கு. ஒரு தடவை போய் பார்த்துட்டு வந்துட்டேன்னா, மனசுல உள்ள அழுக்கெல்லாம் போயிடும்" என்பான். ஆனால், அதைத் தவிர வேற எந்த கெட்ட செயலிலும் ஈடுபட மாட்டான். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
சரி, விசயத்திற்கு வருகிறேன். நேற்று சன் டிவியில் " கண்டேன் காதலை" படத்தின் சில காட்சிகளில் தமன்னாவை பார்க்கும்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது. தாவணியில் பார்க்கும் போது தமன்னா கொள்ளை அழகு. ஜொல்லு விட்டு ரசித்துக் கொண்டிருந்தவன், திடீரென அருகில் உள்ள என் பெண்ணைப் பார்க்கும் போது, சடாரென மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. சரியாக இன்னும் ஆறு வருடத்தில், என் பெண்ணும் அதே உடைக்கு வரப் போகிறாள். பளாரென யாரோ கன்னத்தில் ஓங்கி அறைந்தால் போல் ஆனது. ஆனால், எல்லாம் சில விநாடிகள்தான். பிறகு, ' அச்சமுண்டு, அச்சமுண்டு' சினேகாவை ஜீன்ஸ் டாப்ஸில், அப்புறம் இன்னும் சில நடிகைகள்........ என்ன தியானம், யோகா செய்து என்ன பயன்?
ஏன் அடுத்த நடிகையை/ அழகான பெண்களைப் பார்க்கும்போது இப்படி ஜொல்லு விட்டுப் பார்க்கிறேன். வயதானாலும் மனம் மட்டும் இன்னும் 16ஐ விட்டு வர மாட்டேன், என்கிறதே ஏன்?. வேறு எந்த தவறும் செய்வதில்லை. சும்மா பார்த்துத் தானே ரசிக்கிறோம் என்று நானே சமாதானம் செய்து கொண்டாலும், இது சரியா?. இந்தப் பழக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது?
கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தானா என்ன? ஆண்களுக்கும் உண்டுதான் இல்லையா?
திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார்? மனைவியைத் தவிர வேறு பெண்களை மனதால் கூட நினைக்கக் கூடாது என்கிறார்? அவ்வாறு வாழ்வது சாத்தியமா? அந்த அளவுக்கு ஒருவன் ஞானி போல் வாழ முடியுமா என்ன?
அழகை ரசிப்பது தவறில்லை என நினைக்கிறேன். அந்த அழகை அடைய நினைத்தால்தானே தவறு? அதற்காக டிவியோ, சினிமாவோ பார்க்காமல் இருக்க முடியுமா? மனித உடலே ரத்தமும், சதையும், நரம்பும் அடங்கிய பிணடம் என்று தெரிந்தும், பெண்கள் மேல் நாம் வைக்கும் ஆசை மட்டும் மாறுவதில்லையே ஏன்?
கெட்ட பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான் கெட்டவர்கள், மற்றவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்ற கூற்றை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்படி மனதில் சஞ்சலத்துடன் வாழ்வதற்கு கெட்ட பெண்களின் சகவாசம் எவ்வளவோ பரவாயில்லை தானே? ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு பெண் எப்போதும் கடவுளையே தரிசனம் செய்து கொண்டிருப்பவள். அவள் வீட்டின் எதிரே உள்ளவள், 'அந்த' தொழில் செய்பவள். சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மரணம் அடைந்து விடுகிறார்கள். மேல் உலகத்தில், கடவுள் பக்தி உள்ள பெண் நரகத்திற்கு போகிறாள். 'அந்த' பெண் சொர்க்கத்திற்கு போகிறாள். இது தெரிந்த கடவுள் பக்தி உள்ள பெண், கடவுளைப் பார்த்துக் கேட்கிறாள்:
" நான் நாள் முழுவதும் உங்களை பூஜித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் இருப்பதோ நரகம். அவள் எப்போதும் அந்த தொழிலை செய்து கொண்டிருந்தாள், ஆனால் அவள் இருப்பது சொர்க்கம். ஏன் இந்த வேறுபாடு?"
கடவுள் இப்படி பதில் கூறினாராம்:
" நீ நாள் முழுவதும் என்னை பூஜித்தது மட்டுமல்லாமல், அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாய். அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள். யார் கூட இருப்பாள், என்று. ஆனால் அவளோ செய்யும் தொழில் தவறாக இருந்தாலும், தான் இந்த தொழில் செய்கிறோமே? இது தவறு இல்லையா? என் வருந்தி நாள் முழுவதும் என்னையே நினைத்துக் கொண்டிருந்தாள். இதுதான் காரணம்"
ஒரு வேளை எனக்கும் நரகம் தான் கிடைக்குமோ????
36 comments:
இப்படியான கேள்விகள் என் மனதிலும் அடிக்கடி எழும். ஆனாலும் அழகை ரசிப்பது தப்பில்லை என்கின்றார்கள்.
விடுங்க பாஸ் இதெல்லாம் சகஜம் தானே....ரசனை இல்லாம வாழ்கை இருந்தா நல்ல இருக்குமா...?ஏதோ ஒன்றை பார்த்தவுடன் நாம் ரசிக்க தோன்றுவது இயல்பு தான்...ஆனால், அதை அடைந்துவிட வேண்டும் என்றோ...எப்போதும் அதைப் பற்றி நினைத்துக் கொண்டோ இருப்பதுதான் தவறு என்பது என் கருத்து...
என்ன நம்ம இப்படி வெளிய சொல்லிட்டோம்..சொல்லாம மனசுக்குள்ள புழுங்குரவங்க நிறைய பேறு தான்...இதுல உங்க கதையில வருகிற "அந்த" தொழில் செய்யிரவ மாதிரி...நீங்க செய்கிற காரியத்துல அந்த நேரம் மட்டும் முழு ஈடுபாடோட இருங்க...அப்புறம் என்ன சொர்க்கம் தான்...இதுக்கு உதாரணத்துக்கு ஒரு குரு, சீடன் கதை இருக்கு...கவலைப் படாதீங்க...:-)
கேள்விகள் கேட்பது, எழுவது சுலபம் ஆனால் அதற்கு பதில் தான் தெரியாது. இது சரியான முடிவு என்று நம் மனம் நினைக்கும் பலவற்றை அழிக்கும் படியும் அதை தாண்டி செல்ல வேண்டும் என்றே இதே மனம் எண்ண தோன்றும். .
விடைகள் என்பது அடுத்த கேள்வியாக நம் முன் எழும்.
really super post sir.....
நல்லதா கெட்டதா ? தெரியலைங்க.
edharthanama pativu.. nice one . Please keep writing
good post!!! I have the same questions...but haven't found the answers yet.
But I think, as long as these thoughts are limited/controlled, it's OK and there is no problem. The next form of thoughts are actions and mostly these thoughts will not get materialize into actions.
Good to see a candid post and keep the good work!!!
good post!!! I have the same questions...but haven't found the answers yet.
But I think, as long as these thoughts are limited/controlled, it's OK and there is no problem. The next form of thoughts are actions and mostly these thoughts will not get materialize into actions.
Good to see a candid post and keep the good work!!!
manitharugaluku asai thondruvathu iyarkai
anal alavuku meeramal iruka vendum avalave
//இப்படியான கேள்விகள் என் மனதிலும் அடிக்கடி எழும். ஆனாலும் அழகை ரசிப்பது தப்பில்லை என்கின்றார்கள்.//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வந்தியத்தேவன்.
//விடுங்க பாஸ் இதெல்லாம் சகஜம் தானே....ரசனை இல்லாம வாழ்கை இருந்தா நல்ல இருக்குமா...?ஏதோ ஒன்றை பார்த்தவுடன் நாம் ரசிக்க தோன்றுவது இயல்பு தான்...ஆனால், அதை அடைந்துவிட வேண்டும் என்றோ...எப்போதும் அதைப் பற்றி நினைத்துக் கொண்டோ இருப்பதுதான் தவறு என்பது என் கருத்து...//
வருகைக்கு நன்றி ரோஸ்விக்.
//இதுக்கு உதாரணத்துக்கு ஒரு குரு, சீடன் கதை இருக்கு...கவலைப் படாதீங்க...:-)//
அப்படியா, அது என்ன கதை?
//விடைகள் என்பது அடுத்த கேள்வியாக நம் முன் எழும்.//
சரியாகச் சொன்னீர்கள் ரோமியோபாய்.
//really super post sir.....//
வருகைக்கு நன்றி கிருஷ்ணா.
//நல்லதா கெட்டதா ? தெரியலைங்க.//
வருஐக்கு நன்றி நண்பர் பின்னோக்கி அவர்களே!
//edharthanama pativu.. nice one . Please keep writing//
வருகைக்கு நன்றி Nan.
//Good to see a candid post and keep the good work!!!//
நன்றி நண்பரே!
//manitharugaluku asai thondruvathu iyarkai
anal alavuku meeramal iruka vendum avalave//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'அழகானப் பெண்களை பார்க்கும் போது!!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 30th November 2009 08:32:05 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/145859
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
nice one...
"பிறன் மனை நோக்காத பேராண்மை"
என்று தான் சொன்னார்.
"பிறன் மனை பார்க்காத பேராண்மை" என்ற் சொல்ல வில்லை.
பர்ர்ப்பதற்குத் தான் அழகு.
ஆனால் அதை அடையத் துடிப்பது காமம்.
ஒரு நண்பர் சொன்னார்.பணத்திற்காக இப்படி அழகில்லாத பெண்ணைத் திருமணம் செய்துள்ளாயே என்று நண்பர்கள் கிண்டல் செய்தனர்.
உடனே அவர் சொன்னார். அப்பாடி, கவலையில்லை.ஒரு பயலும் சைட் அடிக்க மாட்டான் என்று !!!!
ஒரு குருவும், அவருடைய சீடரும் நடந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு அழகான இளம் பெண் தன்னால் நடக்க முடியவில்லை. தயவுசெய்து என்னை இந்த பாலத்தின் வழியில் தூக்கி கொண்டுபோய் ஆற்றின் அக்கரையில் விட்டு விடும்படி கேட்டாளாம். சீடனோ, அவளைத் தூக்கினால் நமது குரு நம்மை தவறாக நினைத்து விடுவார். நமது துறவற சிந்தனையும் மாறிப்போகும் என அஞ்சி "No No" சொன்னாராம். ஆனால், குருவோ அந்தப் பெண்ணை அலேக்காகத் தூக்கி....ஆற்றின் அக்கரையில் விட்டாராம். சீடனுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. குருவுடன் சரியாகப் பேசாமல் இரண்டு மூன்று நாள் அமைதியாகவும், சற்று கோபத்துடனும் இருந்தானாம்....ஏன் என்று குரு கேட்டதற்கு, நீங்கள் ஒரு துறவி..எப்படி அந்த அழகிய இளம் பெண்ணை தொட்டு தூக்கலாம்? என்றானாம். அதற்கு குருவோ, நான் அந்த பெண்ணை ஆற்றின் அக்கரையிலே இறக்கி விட்டுவிட்டேன். ஆனால், நீயோ இன்னும் அவளை உன் மனதில் சுமந்து கொண்டுதான் இருக்கிறாய் என்றாராம்.
இதுல நீங்க குரு-வா இருக்க விரும்புகிறீர்களா? இல்ல சீடனா இருக்க விரும்புகிறீர்களா?
நான் எல்லாம் குரு பக்கம்...
இதற்க்கு காரணம் மனிதனின் பரிமாண வளர்ச்சி என்ற பார்வையில் பார்க்கலாம். என்ன தான் கலாச்சார அளவில் மனிதன் மிருகத்திடம் இருந்து வேறு பட்டாலும், முழுமையாக விடுபட முடியாது.
வலைபதிவு அழகாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழை சரியாக உணர்ந்து எழுதியதுபோல் எனக்குத் தோன்றவைல்லை.
’அழகை இரசிப்பது’என்பதைத்தான் சொல்கிறேன்.
பெண்ணின் அழகு, ஆணின் அழகு இவை இயற்கையோடு சேர்ந்தவை. எப்படி ஒரு அழகான இயற்கைப்பொருட்களைப்பார்க்கும் முறுகவிழ் இன்பம் (sense of beauty) வருகிறதோ, அனுபவிக்கிறோமோ, அப்படியே மனித உடலின் அங்கமைப்புகளை இரசிக்கிறோம். அங்கு வருவது கலையுணர்வு.
எனவேதான், ஓவியக்கல்லூரிகளில், Drawing of Human body என்பது ஒரு பாடம். அப்போது ஒரு பெண் நிர்வாணமாக அவர்கள்முன் நிற்க மாணவர்கள் அவளின் அங்கமைப்புகளை வரைவர். மேலை நாடுகளின் ஆணின் உடம்பு இப்படியாக வரைய்ப்படும்.
சிற்பிகளும் இதைச்செய்வர். David ன் நிர்வாணச்சிலையை டாவின்சி வடித்திருக்கிறார். உரோமில் உள்ளது.
இந்திய ஓவியரின் Jatin Das' Nudes வெகுவாகப்புகழப்படுகிறது.
நீங்கள் பெண்ணை இரசிப்பது என்று எழுதியிருக்கிறீர்கள். பின்னர் ‘ஜொல்லு’ என்று காம உண்ர்ச்சிக்குப்போய் விடுகிறீர்கள். எதைச்சொல்ல வருகிறீர்கள்? அங்கமைப்பு கவர்ச்சி, அதாவது காமத்தைக் கிளர வண்ணம் இருப்பதைக்க்ண்டு சூடானதைப்ப்ற்றியா சொல்கிறீர்கள்?
அப்படியென்றால், ஏன் குற்றவுணர்வு? காரணம்?
அதைத் தேடிகண்டுபிடியுங்கள். அதை வைத்து ஒரு தீசிசே எழுதலாம். நான் எழுதலாம். பின்னூட்டம் நீண்டுவிடும். நானே சிந்த்தால் எப்படி? நீங்களும் சிந்திக்க வேண்டாவா? கண்டிபிடியுங்கள்.
" நீ நாள் முழுவதும் என்னை பூஜித்தது மட்டுமல்லாமல், அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாய். அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள். யார் கூட இருப்பாள், என்று. ஆனால் அவளோ செய்யும் தொழில் தவறாக இருந்தாலும், தான் இந்த தொழில் செய்கிறோமே? இது தவறு இல்லையா? என் வருந்தி நாள் முழுவதும் என்னையே நினைத்துக் கொண்டிருந்தாள். இதுதான் காரணம்"
///
நல்ல கருத்தை எடுத்துச் சொன்னதற்கே பாராட்டுக்கள்!
சுவாமி நித்யானந்தரை சந்தித்துப் பாருங்கள் பலன் உண்டாகலாம்.
நல்ல ஒரு பொருளைத் தொட்ட பதிவு.
அழகிய எந்த ஒரு பொருளும் ரசிக்கத தகுந்ததே;ஆனால் அது தனக்கு வேண்டும் என்று மனம் நினைக்கும் போதுதான் அதில் பிரச்னை வருகிறது.
அதற்குக் காரணம் மனம்;அதாவது அறிவை மீறிய 'எதையும் தனக்கு' என்று சிந்திக்கின்ற மனம்.
மனத்துக்கும் அறிவுக்குமான தொடர்பு ஒரு கடல்.
என்னுடைய இந்தப பதிவைப் பாருங்கள்.
இது ரொம்ப ரொம்ப ஹ்யூமன். நல்லது கெட்டது என்றெல்லாம் இதைத் தரம் பிரிப்பது தப்பு. உணர்வுக்கு லாஜிக் தெரியாது. ஆனால் அது செயலாக மாறும் போது அறிவு வழியாகத்தான் ஆகும். எதை செயலாக்கலாம், எதை உணர்வு நிலையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு அந்த டிபார்ட்மென்ட்டில் நல்ல பில்டர்கள் உள்ளன. இது மாதிரி எண்ணங்கள் நிற்க வேண்டுமானால் உடம்பில் டேச்டோச்டேரோன் சுரப்பது நின்றால்தான் முடியும்!
http://kgjawarlal.wordpress.com
//பிறன் மனை நோக்காத பேராண்மை"
என்று தான் சொன்னார்.
"பிறன் மனை பார்க்காத பேராண்மை" என்ற் சொல்ல வில்லை.
பர்ர்ப்பதற்குத் தான் அழகு//
உங்கள் வருகைக்கு நன்றி நண்பா.
//nice one...//
நன்றி சக்தி.
//நான் எல்லாம் குரு பக்கம்...//
நானும்தான் ரோஸ்விக்.
//இதற்க்கு காரணம் மனிதனின் பரிமாண வளர்ச்சி என்ற பார்வையில் பார்க்கலாம். என்ன தான் கலாச்சார அளவில் மனிதன் மிருகத்திடம் இருந்து வேறு பட்டாலும், முழுமையாக விடுபட முடியாது.//
நீங்கள் சொல்வது சரிதான் நண்பா.
உங்கள் வருகைக்கு நன்றி.
//வலைபதிவு அழகாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.//
நன்றி.
//தமிழை சரியாக உணர்ந்து எழுதியதுபோல் எனக்குத் தோன்றவைல்லை.//
அப்படியா?
//அதைத் தேடிகண்டுபிடியுங்கள். அதை வைத்து ஒரு தீசிசே எழுதலாம். நான் எழுதலாம். பின்னூட்டம் நீண்டுவிடும். நானே சிந்த்தால் எப்படி? நீங்களும் சிந்திக்க வேண்டாவா? கண்டிபிடியுங்கள்.//
எனக்கு நேரம் கிடைக்கும்போது கண்டுபிடித்து சொல்கிறேன் சார்.
//நல்ல கருத்தை எடுத்துச் சொன்னதற்கே பாராட்டுக்கள்!//
நன்றி டாக்டர்.
//சுவாமி நித்யானந்தரை சந்தித்துப் பாருங்கள் பலன் உண்டாகலாம்.//
கிண்டல்தானே தர்ஷன்.
//நல்ல ஒரு பொருளைத் தொட்ட பதிவு.//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அறிவன்.
//இது ரொம்ப ரொம்ப ஹ்யூமன். நல்லது கெட்டது என்றெல்லாம் இதைத் தரம் பிரிப்பது தப்பு. //
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜவஹர்.
Post a Comment