Dec 16, 2009

மிக்ஸர் - 16.12.09

எனக்கு இந்த 'டீலா, நோ டீலா' நிகழ்ச்சியைப் பார்க்க எரிச்சலாக வருகிறது. அப்புறம் ஏன் பார்க்கிறேன் என்கின்றீர்களா? நீங்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. என் பதில் இதுதான். வேறு வழி இல்லாமத்தான். வெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு எல்லா நிகழ்ச்சிகளையும் திட்டிக்கொண்டே பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். எல்லாவற்றையுமே திட்டி ஒதுக்கிவிட்டால் குடும்பத்துடன் எப்படி பொழுதைக் கழிப்பது? ஆனால், பிள்ளைகளுக்கு அந்த நிகழ்ச்சி ரொம்ப பிடித்திருக்கிறது. எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்கின்றீர்களா? சொல்கிறேன், வலுவான காரணம் இருக்கிறது. சீட்டு விளையாடுவது எனக்கு ரொம்ப பிடித்த விளையாட்டு. காசு வைக்காமல் விளையாடுவதில் எனக்கு விருப்பமில்லை. காசு வைத்து ரம்மி விளையாடுவதில் இருக்கும் சுகமே தனிதான். ஆனால் எவ்வளவு காசு வைத்து விளையாண்டாலும், கடைசியில் எல்லோரும் ஜெயித்த பணத்தில் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவோம். விடுமுறை நாட்களில்தான் நிறைய நேரம் விளையாடுவொம். அப்படித்தான் ஒரு முறை விளையாடியபோது நண்பர்களுக்குள் சின்ன சண்டை வந்து, அந்த நேரத்தில் அங்கே போலிஸ் வந்து....... வேண்டாம் விடுங்கள், அது எதற்கு இப்போது?

சாதாரண சீட்டு விளையாட்டை கண்டிக்கும் நம் சட்டம், இவ்வளவு பெரிய சூதாட்டம் அனைத்து மக்களும் பார்க்கும் ஒரு தொலைக்காட்சியில் நடப்பதை ஏன் கண்டிக்கவில்லை? எந்த உழைப்பும் இல்லாமல் கிடைக்கும் இந்த பணத்திற்கு வருமான வரி உண்டா, இல்லையா? என எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னை அதிகம் கடுப்பேத்தும் ஒரு விசயம், கலந்து கொள்பவர்களின் ரியாக்சன் தான். ஏதோ அவர்கள் உழைத்து சம்பாதித்த பணம் அவர்களை விட்டு போகாமல் அவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்பது போல அப்படியே சாமி கும்பிடுவதும், டென்சன் ஆவதும் சேசேசே..... கொஞ்சமாவது உழைத்து சம்பாதிக்க ஆசைப்படுங்கப்பா! உழைக்காமல் வரும் காசு உடம்பில் ஒட்டாது.

************************************************

ஒரு வழியாக 'கோலங்கள்' நாடகம் முடிந்து என்னை மன நோயிலிருந்து காப்பாற்றி விட்டது. இனி ஜென்மத்துக்கும் எந்த சீரியலும் பார்க்க மாட்டேன். தேவயானியை நல்ல பெண்ணாக காட்டுவதற்காக நாடகத்தில் நடித்த அனைவரையும் கெட்டவராக காண்பித்த டைரக்டரை என்ன வென்று சொல்வது? தேவயானி ஒரு வருடத்தில் அத்தனை ப்ராஜக்டையும் முடித்து அததனை கோடி சொத்துகள் சேர்த்த வித்தையை கொஞ்சம் டைரக்டர் நம்மிடம் பகிர்ந்து கொண்டால் நல்லது? நாமும் முயற்சிக்கலாம் அல்லவா?.

************************************************

எங்கள் ஊரில் ஒரு பீச் ஹோட்டல் உள்ளது. நான்கு நட்சத்திர ஹோட்டல் என நினைக்கிறேன். அந்த ஹோட்டலை சுற்றி மிகப் பெரிய கோல்ப் மைதானம் உள்ளது. நான் அடிக்கடி அந்த ஹோட்டலுக்கு செல்வது வழக்கம். கோல்ப் விளையாட செல்கிறேன் என நீங்கள் நினைத்தால், சாறி. அதற்காக செல்வது இல்லை. யாராவது கம்பனிக்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களுடன் சாப்பிட செல்வது வழக்கம். அவ்வாறு சாப்பிடச் சென்ற ஒரு நாள் எங்கள் டேபிளுக்கு அருகில் உள்ள டேபிளில் சில ஜப்பானியகள் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். சும்மா ஒரு 'ஹேய், ஹலோ' சொல்லி விட்டு வந்து விட்டோம். அடுத்த வாரம் திரும்பவும் இன்னொரு விருந்தினருடன் செல்கையில், திருமபவும் அதே ஜப்பானியர்களை பார்க்க நேர்ந்தது. சரி, ஒரு வார விடுமுறை போல என நினைத்து வந்து விட்டேன். பிறகு ஒரு மாதம் கழித்து செல்கையில் மீண்டும் அதே ஜப்பானியர்களைப் பார்த்தேன். எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது. என்ன இது? எந்த சனி, ஞாயிறு வந்தாலும் இவர்கள் இருக்கிறார்களே? சில சமயம் மற்ற நாட்களிலும் இருக்கிறார்களே? என நினைத்து, கேட்டு விட தீர்மானித்து, முடிவில் அவர்களிடம் கேட்டே விட்டேன். அவர்கள் சொன்ன பதில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அதாவது, ஜப்பானில் கோல்ப் விளையாட செலவழிப்பதை விட , ஜப்பானில் இருந்து விமானத்தில் மலேசியா வந்து கோல்ப் விளையாடி விட்டு செல்வது மிக மிக குறைந்த செலவாம். அவர்களால் கோல்ப் விளையாடாமல் இருக்க முடியாதாம். அதற்காக ஒவ்வொரு சனி, ஞாயிறும் மலேசியா வந்து விளையாடி விட்டு செல்கிறாகளாம். இதை என்னவென்று சொல்வது?

இன்னும் எங்கள் ஊரில் மேட் இல்லாமல் தான் கிரிக்கட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

************************************************

எங்கள் கம்பனியில் வேலை பார்க்கும் ஒருவரை அடிக்கடி மொட்டைத் தலையுடன் பார்த்தேன். முதலில் எனக்கு ஒன்றும் அவ்வளவு வித்தியாசமாகத் தெரியவில்லை. ஒரு முறை எதேச்சையாக பார்க்கும் போது தான் அதனை கண்டு பிடித்தேன். அதாவது வாரத்தின் முதல் நாள் முழு மொட்டை, பிறகு கொஞ்சம் வளர்கிறது. பிறகு மீண்டும் அடுத்த வாரம் முதல் நாள் அதே போல். பொறுக்க முடியாமல் அவரை கூப்பிட்டு,

" ஏம்பா எப்பவுமே மொட்டையுடன் இருக்கிறாய்? ஏதாவது ஹெல்த் ப்ராப்ளமா?"

" அதெல்லாம் ஒண்ணுமில்லை சார். சும்மாதான்"

" சும்மான்னா, புரியலை. ஏன் அடிக்கடி மொட்டை அடிக்கறீங்க"

" இல்லை சார், கடைக்குப்போனா பதினைந்து வெள்ளி கொடுக்கணும் அதான்"

" முடி வெட்டுவதற்காகவாவது மாதம் ஒரு முறைதான் பணம் கொடுக்கணும். நீயோ வாரம் தவறாமல் மொட்டை அடிக்கிறாய். அப்படியானால் வார வாரம் கொடுக்க வேண்டாமா?"

" வேண்டாம் சார்"

" ஏன்?"

" ஏன்னா, எனக்கு வாரா வாரம் மொட்டை அடிச்சு விடுறது என் வொய்ப் சார். அதனால ப்ரீதான் சார்"

என்னத்தை சொல்லறது. வேண்டாம்னு சொல்ற அவனுக்குத்தான் முடி அதிகமா வளருது, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

************************************************

18 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

//அவர்கள் உழைத்து சம்பாதித்த பணம் அவர்களை விட்டு போகாமல் அவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்பது போல அப்படியே சாமி கும்பிடுவதும், டென்சன் ஆவதும் சேசேசே..... கொஞ்சமாவது உழைத்து சம்பாதிக்க ஆசைப்படுங்கப்பா! உழைக்காமல் வரும் காசு உடம்பில் ஒட்டாது.//

அப்ப‌டியில்லாம் இல்லண்ணா ந‌ம் அர‌சிய‌ல்வாதிக‌ள் யாருக்குத்தான் ஒட்ட‌ல‌? அவங்க‌ என்ன‌ உழைச்சா ச‌ம்பாரிக்கிறாங்க‌

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஒரு வழியாக 'கோலங்கள்' நாடகம் முடிந்து என்னை மன நோயிலிருந்து காப்பாற்றி விட்டது//

ச‌ந்தோச‌ ப‌டாதீங்க‌.அதே டைம்ல‌ "அல‌ங்கோல‌ங்க‌ள்"னு ஒரு நாட‌க‌ம் ஆர‌ம்பிக்க‌ போறாங்க‌ளாம்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஒவ்வொரு சனி, ஞாயிறும் மலேசியா வந்து விளையாடி விட்டு செல்கிறாகளாம்//
ஃபீரியா உடுங்க‌. ஓவர் டென்ச‌ன் உட‌ம்புக்கு ஆகாது

அப்பாவி முரு said...

//என்னத்தை சொல்லறது. வேண்டாம்னு சொல்ற அவனுக்குத்தான் முடி அதிகமா வளருது, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//

நீங்களும் வேண்டாம்ன்னு சொல்லிப்பாருங்களேன்...

iniyavan said...

முன்பு நான் இரண்டு முறை வெளியிட்ட பின்னூட்ட பதிலை மீண்டும் வெளியிடுகிறேன்:

முரு,

போன என் பதிவில் உங்கள் பின்னூட்டத்திற்கு ஒரு பதில் போட்டிருந்தேன் பார்த்தீர்களா?

என்னால் உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட இயல வில்லை.

பல முயன்றும் போக மாட்டேன் என்கிறது. என்ன காரணம்?

iniyavan said...

அய்யா கரிசல்,

ரொம்ப நன்றி உங்கள் அனைத்து பின்னூட்டங்களுக்கும்.

அப்பாவி முரு said...

//December 16, 2009 9:55 PM முன்பு நான் இரண்டு முறை வெளியிட்ட பின்னூட்ட பதிலை மீண்டும் வெளியிடுகிறேன்:

முரு,

போன என் பதிவில் உங்கள் பின்னூட்டத்திற்கு ஒரு பதில் போட்டிருந்தேன் பார்த்தீர்களா?

என்னால் உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட இயல வில்லை.

பல முயன்றும் போக மாட்டேன் என்கிறது. என்ன காரணம்?//

எனக்கும் தெரியலை. பரவாயில்லை விடுங்க.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஏதோ அவர்கள் உழைத்து சம்பாதித்த பணம் அவர்களை விட்டு போகாமல் அவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்பது போல அப்படியே சாமி கும்பிடுவதும், டென்சன் ஆவதும் சேசேசே..... கொஞ்சமாவது உழைத்து சம்பாதிக்க ஆசைப்படுங்கப்பா! உழைக்காமல் வரும் காசு உடம்பில் ஒட்டாது.//

இதுக்கெல்லாம் ஒத்திகை பார்க்கிறார்களாமே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நல்ல பெண்ணாக காட்டுவதற்காக நாடகத்தில் நடித்த அனைவரையும் கெட்டவராக காண்பித்த டைரக்டரை என்ன வென்று சொல்வது?//


போலீஸ் ஹீரோவா வந்தா அந்த படத்தில் அவரைத்தவிர அனைத்து போலீசும் செட்டவர்களாக வருவார்களே அந்த மாதிரித்தான் தல இதுவும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஜப்பானில் இருந்து விமானத்தில் மலேசியா வந்து கோல்ப் விளையாடி விட்டு செல்வது மிக மிக குறைந்த செலவாம்.//

இனிமேல் நாமும் ஜப்பான் போய் அங்கிருந்து மலேசியா போய் விளையாடுவோம்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எனக்கு வாரா வாரம் மொட்டை அடிச்சு விடுறது என் வொய்ப் சார். அதனால ப்ரீதான் சார்"//

அது,...,

Cable சங்கர் said...

நல்ல கரமொரு மிக்சர்

Beski said...

டீலா நோ டீலா - வுக்கு கலந்துகொள்ள பணம் வாங்குகிறார்களா என்ன?

நம்ம ஆபீசிலும் ஒருத்தர் இப்படித்தான் மொட்டை போட்டுக்கொண்டு அலைகிறார். கேட்டால் சென்னையில் தூசி அதிகம், அதிகம் பைக் ஓட்டுவதால் அதிகம் தூசியாகி வேறு வித பாதிப்பு வரும் என்று சொன்னார்.

அதெல்லாம் சும்மா, அவர் வழுக்கையை மறைக்கத்தான் இப்படி என நண்பன் தனியாகச் சொன்னது வேறு விசயம்.

Romeoboy said...

\\வேண்டாம் விடுங்கள், அது எதற்கு இப்போது? //

ஏதோ சொல்லவரிங்க ஆனா சொல்ல மாற்றிங்க.. சில பதிவுல இந்த மாதிரி தான் பண்ணுரிங்க ..

iniyavan said...

//இனிமேல் நாமும் ஜப்பான் போய் அங்கிருந்து மலேசியா போய் விளையாடுவோம்//

தங்கள் வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி டாக்டர்.

iniyavan said...

//நல்ல கரமொரு மிக்சர்//

வருகைக்கு நன்றி கேபிள்.

iniyavan said...

//அதெல்லாம் சும்மா, அவர் வழுக்கையை மறைக்கத்தான் இப்படி என நண்பன் தனியாகச் சொன்னது வேறு விசயம்.//

வருகைக்கு நன்றி அதிபிரதாபன்.

iniyavan said...

//ஏதோ சொல்லவரிங்க ஆனா சொல்ல மாற்றிங்க.. சில பதிவுல இந்த மாதிரி தான் பண்ணுரிங்க ..//

இனிமே தெளிவா சொல்லீடறேன்.