Dec 25, 2009

மிக்ஸர் - 25.12.09

முதலில் உலகத்திலுள்ள அனைத்து கிறிஸ்துவ நண்பர்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்தது ஒரு சிறிய கிராமத்தில். நாங்கள் குடியிருந்த தெருவில் எங்களைத் தவிர அனைவருமே கிரிஸ்துவர்கள். எங்கள் வீட்டிலிருந்து ஐந்து வீடு தள்ளி சர்ச். அதனால் தினமும் சர்ச் போன அனுபவம் உண்டு. ஒவ்வோரு ஞாயிறும் அப்பம் போல் ஏதோ ஒன்று தருவார்கள். நன்றாக இருக்கும். பின்பு படித்த பள்ளி திருச்சி பிஷ்ப் ஹீபர் தெப்பக்குளம். அங்கு தினமும் காலை பிரேயரில், தலைமை ஆசிரியர் பைபிளில் இருந்து சில பகுதிகளை வாசிப்பார். பிறகு ஒரு பாடலை செலக்ட் செய்து பாடச் சொல்வார். அனைத்து மாணவர்களும் சேர்ந்து பாடுவோம். " காலமை தேவனைத் தேடு'. "ஏசுவே நீர் பெரியவர், ஏசுவே நீர் பரிசுத்தர்', ஏசுவின் நாமம் இனிய நாமம்" இப்படி பல பாடல்கள். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பாடுவோம். மறக்க முடியாத நாட்கள். பிறகு செயிண்ட் ஜோசப் காலேஜ், திருச்சியில் பட்டப் படிப்பு. இப்படி இளமையின் பல ஆண்டுகளை கிறிஸ்துவ பள்ளிகளிலும், சர்ச்சுகளிலும் கழித்து இருக்கிறேன். அப்போது நண்பர்கள் அனைவரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இந்துக் கோவில்களுக்கும், ஞாயிறு சர்ச்சுக்கும், ரம்ஜான் சமயங்களில் மசூதிக்கும் செல்வோம். என் முஸ்லீம் நண்பன் ஒருவன், எங்கள் வீட்டில் அருகே உள்ள மசூதியில் ஓதுவான். நான் அவனுடன் சேர்ந்து, " அல்லாஆஆஅ அக்பர் அல்லா" என ஓதியிருக்கிறேன். ஏனோ அனைத்தும் இன்று நினைவில் வந்து போகின்றது. உலகம் முழுவதும் இதே போல் ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

****************************

ஒரு மனிதனை மிமிக்ரி என்ற பெயரில் கிண்டல் செய்வது அவர்களை எந்த அளவில் பாதிக்கும் என்பதை இன்று காலை சன் டிவியில் டி ராஜேந்தரின் பேட்டியை பார்த்தபோது உணர்ந்தேன். காலை கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சியில் டி ராஜேந்தரின் பேட்டியை ஒரு பத்து நிமிடம் தான் பார்க்க முடிந்தது. 8.00 மணியிலிருந்து 8.10 வரை பார்த்தேன். அதற்குள் அலவலகம் செல்ல நேரம் ஆகிவிட்டதால் வந்து விட்டேன். அந்த 10 நிமிசத்தில் டி ராஜேந்தர், சிட்டி பாபுவிடம் எதுகை மோனைப் பற்றி சொன்னதுதான் என்னை சிந்திக்க வைத்தது. " நான் ஒரு தலை ராகத்தில் 'இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர தாலாட்டு' (இன்னும் பல பாடல்களை அருமையாக மேற்கோள் காட்டினார்) போன்ற பாடல்களை எழுதினேன். நானே இசையும் அமைத்தேன். 1979ல் ஒரு தலை ராகத்தில் அனைவருமே புதியவர். யாருமே யாரிடமுமே உதவியாளராக பணி புரிந்த்து இல்லை. அந்தப் படம் வெள்ளி விழாப் படம். என்னுடைய எந்த படத்திற்கும் ஹீரோவைத் தேடி அலைந்ததில்லை. ஏன் சிம்புவையே நான் மீண்டும் கதாநாயகன் ஆக்கவில்லை. இப்படி என்னிடம் உள்ள பல திறமைகளை விட்டு விட்டு, நான் ஏதோ ஒருபடத்தில் 'தங்கச்சி....' பேசியதை வைத்து கிண்டல் செய்வது நியாயமா?"

அவர் கேட்பதும் நியாயம்தானே. ஒருவரின் மனம் புண்படாமல் ஏன் மிமிக்ரி செய்ய முடியாதா???

****************************

தெலுங்கானா பிரச்சனை எதில் போய் முடியும் என எனக்குத் தெரியவில்லை. மத்திய சர்க்கார் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதை போல் தெரிகிறது. 'முடியாது' என்று முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே? அவர் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதற்காக ஒரு நாடகம் ஆடிவிட்டு, இப்போது ஏதேதோ பேசுகிறார்கள். அன்று இதே பிரணாப் முகர்ஜி தெலுங்கான கோரிக்கை அவர்களின் 60 வருட கோரிக்கை என்றார். இன்று? ஆந்திராவே பற்றி எரியும் சூழல். யாரால் ஏற்பட்டது? முடிவு எடுப்பதில் ஏன் இவ்வளவு குழப்பம். நமது பிரதமர் என்ன செய்கிறார்? ஏன் இப்படி தனி மாநிலம் கேட்கிறார்கள் என்றும் எனக்கு புரியவில்லை. ஒரு காமன் மேனுக்கு அவர்கள் ஸ்டேட் எங்கு இருந்தால் என்ன? அவர்களின் தனி மனித வருமான விகிதம் எவ்வளவு? அதை உயர்த்த என்ன செய்ய வேண்டும்? ஏன் நம் நாடு மற்ற நாடுகள் போல் முன்னேற முடியவில்லை? என்றல்லவா யோசிக்க வேண்டும்? எவ்வளவு பொது சொத்துக்கள் இப்போது நாசம் பாருங்கள். "தனி தெலுங்கானா அமையா விட்டால் ஆந்திராவே பற்றி எரியும்" என்கிறார் சந்திர சேகர் ராவ். சாதாரணமாக இருந்த அவரை இந்த அளவுக்கு வளர்த்து விட்டவர்கள் யார்? எந்த கட்சி? மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியும், ​ காங்கிரஸும்தானே?

இனி ஹைதராபாத்தில் தொழில் தொடங்க எல்லோரும் ஆயிரம் முறை யோசிப்பார்களே? என்ன செய்யப் போகிறது நமது காங்கிரஸ் அரசாங்கம்!

****************************

காலைல இந்தியாவில் இருந்து எனக்கு வந்த குறுஞ்செய்தி உங்களுக்காக:

" வேட்டைக்காரன் படம் ரிலீஸுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"

-பின்லேடன்.

எப்படியெல்லாம் யோசிக்கறாங்க பாருங்க?

விஜய் அன்றைக்கு கலாநிதிமாறனைப் பார்த்து " வேட்டைக்காரன் வெற்றிக்கு" நன்றி சொன்னாரே! அப்படின்னா படம் சூப்பர் ஹிட்டா? உண்மை என்னன்னு எனக்குத் தெரியலை. இருந்தாலும் பிள்ளைகள் விஜய் ரசிகர்கள். தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்கிறார்கள். நான் பார்க்க போகிறேன். படத்தை பார்க்காமல் எந்த குறையும் சொல்லக்கூடாது இல்லையா? ஆனால், விமர்சனம் எல்லாம் எழுத மாட்டேன் கவலைப்பட வேண்டாம்.

****************************

ஒரு நண்பர் அவருடைய நண்பருக்கு ஒரு வேலை வாங்கித் தரும்படி என்னிடம் சொன்னார். நண்பரின் நண்பர் ஒரு ஜாலி டைப் போல. நான் ஒரு நாள் எதேச்சையாக அவரைச் சந்தித்த போது அவருடைய குவாலிபிகேஷன் என்ன ? என்று விசாரித்தேன். "MBA" என்றார். அவருக்கு நான் வேலை பார்த்து வைப்பதற்காக கல்வித் தகுதியை கேட்கிறேன் என்று சொல்லாமல் விட்டது என் தவறு என்பதை பின்பு உணர்ந்தேன்.

பிறகு நண்பரின் மூலமாக அவரின் பயோடேட்டா வந்தது. பார்த்தவன் அதிர்ந்து போனேன். அவரின் கல்வித் தகுதி பிகாம் என்று போட்டிருந்தது. பிறகு என் நண்பரை அழைத்து விசாரித்தேன். ஆமா, அவர் பிகாம்தான் என்றார். பின்பு நண்பரின் நண்பரை போனில் தொடர்பு கொண்டேன்,

" உங்க பயோடேட்டா வந்தது. நீங்க பிகாமா?"

" ஆமா சார்"

" அன்னைக்கு MBAனு சொன்னீங்க"

" அதுவா சார். நீங்க சும்மா கேட்கறீங்கனு நினைச்சு சொன்னேன்"

" அப்போ நீங்க MBA இல்லையா?"

" MBAவும் சார்"

" புரியலியே"

" Married But Available சார்"

இவரை என்னங்க செய்யலாம்?

****************************

17 comments:

Cable சங்கர் said...

ராஜேந்தர் விஷயத்துக்கு வ்ருவோம்.. மிமிக்ரி என்பது ஒரு கலை.. நல்ல ஜோவியலாய் எடுத்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். பக்கத்துவீட்டுல கரண்ட் இல்லைங்கிறதுகெல்லாம் முணுக்குனு கண்ணுல தண்ணி விட்டு அழுகிறவர்கிட்ட இந்த மாதிரி கமெண்டை தவிர எதை எதிர்பாக்க முடியும்.

அப்புறம்..தெலுங்கானா மேட்டர் எனக்கு தெரிஞ்சு வராதுன்னு நினைக்கிரேன்.

சரி.. முடிஞ்சா ஒரு போன் பண்ணுங்க.. உங்க கிட்ட பேசணும்.

அகநாழிகை said...

நல்லா எழுதியிருக்கீங்க. ரசித்தேன்.

மாதேவி said...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

"மிக்ஸர்" இறுதி சுவைத்தேன்.

பரிசல்காரன் said...

அவரை ஏதாவது செய்ங்க சாரே... கொலவெறி பதில்!

பின்னோக்கி said...

என் மாமனார் பிஷப் ஹீபரில் தான் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

---

மிமிக்ரிக்கு எதற்கு வருத்தப்படவேண்டும். இவரை மக்கள் நியாபகம் வைத்திருப்பது மிமிக்ரியால் தான்

---
காங்கிரஸ்னாலே இப்படித்தான். பெரிசா எதுவும் எதிர்பார்க்க முடியாது
---
m.b.a கிட்ட கொஞ்சம் கேர்புல்லாயிருங்க.

இராகவன் நைஜிரியா said...

ராஜேந்தர் - தங்கச்சி மட்டுமல்ல - டண்டணக்கா என்று பேசுவது கூட மிமிக்ரி செய்யப் படுகின்றது. தலையைச் சிலுப்புவது மிமிக்ரி செய்யப் படுகின்றது.

நல்ல பாடலாசிரியர் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக இவரை யாருங்க நடிக்கச் சொன்னது. நானும் நடிப்பேன் ஆனால் யாரும் எதுவும் சொல்லக் கூடாது என்றால் முடியாதுங்க.

முதல்ல அவரை நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம் என்ற வசனம் தான் ஞாபகத்துக்கு வருது.

தெலுங்கான பிரச்சனை, புலி வால் புடிச்சக் கதைதான்.

MBA சூப்பர் விளக்கம்.

iniyavan said...

//அப்புறம்..தெலுங்கானா மேட்டர் எனக்கு தெரிஞ்சு வராதுன்னு நினைக்கிரேன்//

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கேபிள்.

iniyavan said...

//நல்லா எழுதியிருக்கீங்க. ரசித்தேன்.//

உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் ரொம்ப நன்றி வாசுதேவன் சார்.

iniyavan said...

//"மிக்ஸர்" இறுதி சுவைத்தேன் //

வருகைக்கும் ரொம்ப நன்றி தோழி மாதேவி..

iniyavan said...

//அவரை ஏதாவது செய்ங்க சாரே... கொலவெறி பதில்!//

நிச்சயம் பரிசல்.

iniyavan said...

//என் மாமனார் பிஷப் ஹீபரில் தான் ஆசிரியராக பணியாற்றுகிறார்//

அப்படியா சார்!பெயர் என்ன?

iniyavan said...

//காங்கிரஸ்னாலே இப்படித்தான். பெரிசா எதுவும் எதிர்பார்க்க முடியாது//

வருகைக்கும் ரொம்ப நன்றி நண்பர் பின்னோக்கி..

iniyavan said...

//தெலுங்கான பிரச்சனை, புலி வால் புடிச்சக் கதைதான்.

MBA சூப்பர் விளக்கம்//


உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி இராகவன் சார்.

iniyavan said...

//Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'மிக்ஸர் - 25.12.09' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 26th December 2009 07:49:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/159110

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

மணிஜி said...

உலக்ஸ் மிக்சர் நல்லாயிருக்கு.ஆனால் சரக்கைதான் கண்ணுல காட்டலை.

iniyavan said...

//உலக்ஸ் மிக்சர் நல்லாயிருக்கு.ஆனால் சரக்கைதான் கண்ணுல காட்டலை.//

தலைவரே,

வாங்கி வரணுமா???

மணிஜி said...

/ என். உலகநாதன் said...
//உலக்ஸ் மிக்சர் நல்லாயிருக்கு.ஆனால் சரக்கைதான் கண்ணுல காட்டலை.//

தலைவரே,

வாங்கி வரணுமா??//

மிக்சர் நாங்க இங்க வாங்கிடறோம்!!