இந்த நொடியை வெறுக்கிறேன். இந்த கணத்தை வெறுக்கிறேன். இனிமேல் இது போன்ற நொடிகள் வரக்கூடாது என இறைவனை யாசிக்கிறேன். இது என் வாழ்க்கையில் ஆறாவது முறை. மலேசியா வந்த பிறகு இது மூன்றாவது முறை. இந்த கணத்தில் என் மனதில் தோன்றும் உணர்ச்சிகளை இங்கே பதிவிட முயல்கிறேன்.
அவர் என்னுடைய பெரிய மாமனார். அதாவது என் மாமியாரின் அக்கா கணவர். என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர். நான் அடைந்துகொண்டிருக்கும் அனைத்து சந்தோசங்களுக்கும் ஒரு வகையில் காரணமானவர். என் உயிரைவிட நான் அதிகமாக நேசிக்கும் என் மனைவி கிடைத்ததற்கு காரணமானவர். எல்லோவற்றிலுமே நான் கொஞ்சம் அதிகப் படியானவன். எல்லோருக்கும் 'அந்த' உணர்ச்சிகள் 16 வயதுக்கு மேல் வரும் என்பார்கள். நான் அதிலும் விதிவிலக்கானவன். 13 வயதிலிருந்தே அந்த உணர்ச்சிக்கு ஆளானவன். வீட்டில் முதல் மூவரும் பெண்கள். அனைவருக்கும் கல்யாணமாகி என் லைன் கிளியர் ஆனபோது கல்யாண மார்க்கெட்டை இழந்தவன். இனி நமக்கு கல்யாணமே அவ்வளவுதான் என நினைத்து உணர்ச்சிகளுக்கு விடுதலை கொடுத்து ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என நினைக்கையில், என் மனைவியின் ஜாதகத்தை என் வீட்டிற்கு கொடுத்தவர். அதன் பிறகு ஒரு சில காரணங்களால் நான் தயங்கியபோது, என் அப்பாவிடம் பேசி என் கல்யாணம் நடக்க காரணமாயிருந்தவர். தன் பெண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளையை விட தன் சகலையின் பெண்ணிற்கு நல்ல இடத்தை அமைத்துக் கொடுத்தவர்.
ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் அவர் வீட்டிற்கு சென்று ஒரு அரை நாள் அவருடன் செலவழித்து அவருடன் லஞ்ச் சாப்பிட்டு விட்டு வருவது வழக்கம். கடந்த தீபாவளிக்கு செல்லும்போது குறைந்த நாட்களே லீவ் இருந்ததால் அவர் வீட்டிற்கு செல்லாமல் வந்துவிட்டேன். அதற்கு இப்போது வருந்துகிறேன். நான் முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன்.
காஞ்சி பெரியவர் உயிருடன் இருக்கையில் நண்பர்கள் அனைவரும் ஒரு ஞாயிறு காலை அவரைப் பார்க்க முடிவு செய்து என்னையும் அழைத்தார்கள். அப்போது நான் ராணிப்பேட்டையில் இருந்தேன். வழக்கம்போல் ஏற்பட்ட அதே சோம்பேறித்தனம். அதுவுமில்லாமல், அருகே உள்ள காஞ்சிபுரத்தில் தானே இருக்கிறார், எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்து, நண்பர்களிடம், " நான் அடுத்த ஞாயிறு வருகிறேன். நீங்கள் போங்கள்" என அனுப்பிவிட்டேன். தெய்வத்தை பார்க்க வேண்டுமானால் நாம் தான் போய் பார்க்க வேண்டும். அதுவும் தெய்வம் தரிசனம் கொடுக்கும்போதே பார்க்க வேண்டும். கோயில் கதவுகளை மூடிய பின் தரிசனத்திற்காக ஏங்குவதில் என்ன பயன்? நமக்காக தெய்வம் காத்திருக்குமா என்ன?. அடுத்த ஞாயிறு வருவதற்குள் பெரியவர் இறைவனடி சேர்ந்து விட்டார். அன்று நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. நாம் எங்காவது நல்ல காரியத்திற்கு போக வேண்டும் என நினைத்தாலோ அல்லது யாராவது வற்புறுத்திக் கூப்பிட்டாலோ தட்டிக்கழிக்காமல் உடனே செல்ல வேண்டும் என உணர்ந்த நாள் அது.
பெரிய மாமனாருக்கு கடுமையான பல்வலி ஏற்பட அதனால் அவர் டாக்டரிடம் சென்று பல்லைப் பிடுங்கி உள்ளார். சரியாக இரண்டு தினங்களில் வீட்டில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பிறகு ஆஸ்பத்திரியில் சேர்த்து, ஆங்கே அவருக்கு வலிப்பு வர, 10 நாட்களுக்கு பிறகு குணமாகி வீட்டிற்கு வந்துள்ளார். ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையில் எந்த பாதிப்பு இல்லையென்றும், பல் பிடுங்குகையில் ஏதோ ஒரு நரம்பில் கோளாறு ஏற்பட்டதால் அப்படி ஆனதாகவும் டாக்டர்கள் கூறி அனுப்பி விட்டனர்.
நேற்று முன் தினம் கடுமையான விக்கல் ஏற்பட மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். விக்கல் நிற்காமல், கோமா ஸ்டேஜ் போய் (இன்று)சரியாக மூன்று மணி நேரத்திற்கு முன் இறைவனடி சேர்ந்து விட்டதாக போன் வந்தது. வீட்டில் செய்தி கேட்டவுடன் ஒரே அழுகை. நான் மிகவும் ஸ்திரமானவன் ஆனாலும் இது போன்ற விசயங்களில் கோழையே. ஏற்கனவே தங்கை மரணத்திற்கும் இப்படியே அலறி அடித்துப் போனேன். அப்பா மரணத்திற்கும். சித்தி மரணம் சனிக்கிழமை ஏற்பட்டதால் செல்ல முடியவில்லை. இப்போது பெரிய மாமனார். என் குடும்பத்தில் பல மரணங்களை நான் சந்தித்து இருந்தாலும், ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு பாடத்தையும், ஒவ்வொரு விதமான அனுபவங்களையும் எனக்கு கற்றுத்தருகிறது. மரணத்தைப் பற்றிய பயமே இல்லாமல் போய் விட்டது.
உடனடியாக செல்ல முடியாத நிலை. மாமனார் வீட்டில் கேட்டால் 4 நாட்களுக்கு மேல் கோமாவில் இருந்ததால் இன்று இரவே அடக்கம் செய்யப் போவதாக கூறுகிறார்கள். வெளி நாடுகளில் வேலைப் பார்ப்பதால் அனுபவிக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்று. அவசரத்திற்கு உடனே செல்ல இயலாது.எனக்கு வரும் வேதனையில் என்ன செய்வது என்று தெரியவில்லை.
முன்பெல்லாம் இந்த மாதிரி சூழ்நிலையில் அமைதியாக ஒரு இடத்தில் தியானம் என்ற பெயரில் உட்கார்ந்து இருப்பேன். இப்போது அப்படியில்லை. நீங்கள் எல்லாம் இருக்கின்றீர்கள் என்கிற தைரியத்தில் என் மனபாரத்தை உங்களிடம் இறக்கி வைக்கிறேன்.
அவர் ஏகப்பட்ட நபர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அவர் மகனுக்கு நிச்சயம் பண்ணி, கல்யாணம் தை மாதத்தில் என முடிவாகி இருந்தது. பிறகு அவரின் நிலை அறிந்து இன்று ஆஸ்பத்திரியிலேயே திருமணம் செய்ய முடிவாகி இருந்த நிலையில் அவருடைய மரணம். என்ன சொல்லி அவரின் மகனைத் தேற்றுவது? ஆண்டவா, ஏன் இப்படி நல்லவர்களை சோதிக்கிறாய்?
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அதனால் இந்த நொடியை வெறுக்கிறேன். இனிமேல் இது போன்ற நொடிகள் எனக்கு வரக்கூடாது என இறைவனை யாசிக்கிறேன்.
22 comments:
//வெளி நாடுகளில் வேலைப் பார்ப்பதால் அனுபவிக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்று. அவசரத்திற்கு உடனே செல்ல இயலாது//
என்ன பண்றது சார் பணத்துக்காக எல்லாத்தையும் இழக்கிறோம்
அவரின் ஆன்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
நான் நேரில் சொன்னது போல உங்களை ஆறுதல் படுத்திக் கொள்ளுங்கள் .
ஆன்மாவின் பயணம் தொடர்கிறது. தங்கள் நினைவுகள் அதன் பயணத்தை தடை செய்யாதிருக்க உணர்ச்சிகளை கட்ட்ப்படுத்திக்கொள்ளுங்கள்
இது போன்ற தருணங்களில் ஆறுதல் கூறுவது என்பதே இயலாத காரியம்,. இது போன்றதொரு நிகழ்வில் இருந்து இப்போதுதான் மீண்டு வருகிறேன்., மனதை திடப் படுத்தி கொள்ளுங்கள். ஒரு நல்ல பாடத்தை புகட்டி உள்ளீர்கள். காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும் எந்த செயலையும். உண்மையாக சொல்கிறேன், நானும் இது போன்றதொரு நிகழ்வில் அலட்சியம் காட்டி விட்டேன்:-(
//அதனால் இந்த நொடியை வெறுக்கிறேன். இனிமேல் இது போன்ற நொடிகள் எனக்கு வரக்கூடாது என இறைவனை யாசிக்கிறேன்.//
இனிமேல் இது போன்ற நொடிகள் உங்களுக்கு வரக்கூடாது என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆழ்ந்த வருத்தங்கள் அன்பரே ..
மறப்பதற்கு நாட்கள் ஆகும் ஆனால் மறந்துதான் ஆகவேண்டும், அல்லது அதுவே மறைந்துவிடும்.
//அவரின் ஆன்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்//
நன்றி கரிசல்காரன்.
//அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.//
நன்றி நண்பர் ச்சின்னப் பையன். இதுதான் உங்களின் முதல் வரவு என்று நினைக்கிறேன்.
//நான் நேரில் சொன்னது போல உங்களை ஆறுதல் படுத்திக் கொள்ளுங்கள்//
நன்றி நண்பர் ஸ்டார் ராஜன்.
//இது போன்ற தருணங்களில் ஆறுதல் கூறுவது என்பதே இயலாத காரியம்,. இது போன்றதொரு நிகழ்வில் இருந்து இப்போதுதான் மீண்டு வருகிறேன்., மனதை திடப் படுத்தி கொள்ளுங்கள். ஒரு நல்ல பாடத்தை புகட்டி உள்ளீர்கள். காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும் எந்த செயலையும். உண்மையாக சொல்கிறேன், நானும் இது போன்றதொரு நிகழ்வில் அலட்சியம் காட்டி விட்டேன்:-(//
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி காவேரிகரையோன்.
//ஆன்மாவின் பயணம் தொடர்கிறது. தங்கள் நினைவுகள் அதன் பயணத்தை தடை செய்யாதிருக்க உணர்ச்சிகளை கட்ட்ப்படுத்திக்கொள்ளுங்கள்//
தங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி சித்தூர் முருகேசன்.
//இனிமேல் இது போன்ற நொடிகள் உங்களுக்கு வரக்கூடாது என இறைவனை பிரார்த்திக்கிறேன்.//
தங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி மகா.
//மறப்பதற்கு நாட்கள் ஆகும் ஆனால் மறந்துதான் ஆகவேண்டும், அல்லது அதுவே மறைந்துவிடும்.//
ஆம் நண்பா, முயற்சிக்கிறேன்.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'இந்த நொடியை வெறுக்கிறேன்?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 15th December 2009 02:20:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/152679
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
Dear Ulaganathan,
I empathise with your situation & convey my condolences to you, your wife and family. I pray for the departed soul to rest in peace.
Sir, my sincere condolence to you n your family. i know the pain of living abroad when such things happens back in india. it happened to me last year when my aunty expired.
we have to recover from that slowly.
dont you have daily flights to Trichy or Chennai from KL?.
Karthik.
usa.
புரிகிறது....அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
//Dear Ulaganathan,
I empathise with your situation & convey my condolences to you, your wife and family. I pray for the departed soul to rest in peace.//
ரொம்ப நன்றி அருணாச்சலம் சார்.
//dont you have daily flights to Trichy or Chennai from KL?.
Karthik.//
We have daily 4 flights to chennai and 2 flights to trichy karthik.
But I have to take one more flight to reach KL and as I have mentioned in my post they do not want to keep the body till next day.
//புரிகிறது....அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.//
ரொம்ப நன்றி அருணா மேடம்.
/வெளி நாடுகளில் வேலைப் பார்ப்பதால் அனுபவிக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்று. அவசரத்திற்கு உடனே செல்ல இயலாது//
இந்த கொடுமையை நாலு வருடம் அனுபவித்தவன்.
வார்த்தைகளில் அடங்காது.
ஆறுதல் கொள்ளுங்கள். இதுவும் கடந்து போகட்டும்.
Post a Comment