பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து
விசயங்களையும் எழுத
மனம் ஆவலாய் பறக்கிறது
வாழ்வில் அனுபவிக்கும்
அனைத்து நிகழ்வுகளையும்
ஒரு புனைவாகவோ
அல்லது கவிதையாகவோ
எழுதித்தொலைக்க மனம்
கடந்து துடிக்கிறது
எப்படியாவது எதையாவது
சாதிக்க வேண்டும் என்கிற
போதை மனதில் ஏற்பட்டு
தூக்கத்தை கெடுக்கிறது.
மனம் குரங்காகி மரம் மரமாக
தாவுகிறது
ஆனால் உலகத்தில் நடக்கும்
நிகழ்வுகளைப் பார்க்கும் போது
நிறைய நேரம் கோபமும்
ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே
சந்தோசம் கலந்த
உணர்ச்சிகள் ஏற்படுகிறது
அதை எழுத
நினைக்கையில்
வார்த்தைகள் கர்ப்ப
பையை விட்டு பிரசவிக்க
மறுக்கிறது.
அதனால்
எப்போதும் போலவே
எதை எதையோ எழுத
நினைத்து எதையும்
எழுதாமல் போகும்
என்னை மன்னித்து
விடுங்கள் நண்பர்களே!
14 comments:
மன்னிக்க வந்து மன்னிக்காமல் போகும் என்னை மன்னிக்க வேண்டாம் நண்பரே...
:)
எனக்கும் உங்க மேல கோவம்க..
நேரில் மற்றவை...
தண்டோரா எழுதிருக்கற தொனியைப் பார்த்தா அருவோளாட காத்திருப்பாருன்னு நெனைக்கறேன்.. எதுக்கும் பார்த்து கவனமா போங்க சார்....
//அப்பாவி முரு
December 24, 2009 7:40 AM மன்னிக்க வந்து மன்னிக்காமல் போகும் என்னை மன்னிக்க வேண்டாம் நண்பரே...
:)
//
-:)
***
கேமரோன் மலைல சிங்கை மலேசிய பதிவர் சந்திப்ப போடலாமா ?
//மன்னிக்க வந்து மன்னிக்காமல் போகும் என்னை மன்னிக்க வேண்டாம் நண்பரே...
:)//
சரி முரு!
//எனக்கும் உங்க மேல கோவம்க..//
இந்த மாதிரி கவிதை எழுதுனதுனாலையா?
//நேரில் மற்றவை...//
எப்படா அந்த தருணம் வரும்னு இருக்கு சார்!
//தண்டோரா எழுதிருக்கற தொனியைப் பார்த்தா அருவோளாட காத்திருப்பாருன்னு நெனைக்கறேன்.. எதுக்கும் பார்த்து கவனமா போங்க சார்....//
அப்படியா சொல்லறீங்க பரிசல்.
பார்த்தா ரொம்ப நல்லவரா தெரியரார்?
//கேமரோன் மலைல சிங்கை மலேசிய பதிவர் சந்திப்ப போடலாமா ?//
போடலாமே!
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'என் மேலே எனக்கு கோபம்!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 25th December 2009 07:07:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/158354
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
அதை எழுத
நினைக்கையில்
வார்த்தைகள் கர்ப்ப
பையை விட்டு பிரசவிக்க
மறுக்கிறது.
மறுத்தது போக, எதிர்த்து வந்ததே இவ்வளவு அழகாக உள்ளதே.. வாழ்த்துக்கள்..
உங்க அவஸ்தை எனக்கு புரியுது.
எல்லோருக்கும் அப்பப்போ இப்படி ஆவதுண்டு!
Post a Comment