Jan 20, 2010

இதற்கு யார் காரணம்? ( 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவும்) - பாகம் 1

என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு ஒரு டி.எஸ்.பி நல்ல பழக்கம். அவரிடம் ஒரு வித்தியாசமான கேஸ் வந்தது. அதை என் நண்பன் என்னிடம் கூறி, அவர் அவனிடமும் என்ன முடிவு எடுப்பதென்று ஆலோசனை கேட்டதாகவும் என்னுடைய கருத்து என்ன? என்றும் கேட்டான். நானும் என் கருத்தினைக் கூறினேன். இந்த சம்பவத்தைப் படிப்பவர்கள் இப்படி நடந்திருக்குமா? என எண்ண வேண்டாம். ஜனவரி ஆரம்பத்தில் நடந்த சம்பவம் இது. வித்தியாசமாக இருப்பதால்தான் இங்கே பதிக்கிறேன்.

சம்பவத்தின் நாயகன் பெயர் குமார் என்றும், நாயகி பெயர் வள்ளி என்று வைத்துக் கொள்வோம். இனி அந்த கேஸைப் பற்றிய விபரம்,

வள்ளி அந்த ஊரின் மிகச் சிறந்த அழகி. நல்ல கலர். உடல் முழுவதும் ஒரு நல்ல மினுமினுப்பு. பிரம்மன் அவளைப் படைக்கும்போது மிகுந்த சிரமப்பட்டு எல்லாமே மிகச் சரியான அளவில் வைத்திருந்தான். சினிமா நடிகைகள் போல் இல்லாமல் மேக்கப் இல்லாமலே அவள் எப்போதும் அழகாக தெரிந்தாள். அவள் வீட்டின் முன்னே எப்போதும் ஒரு கும்பல் இருந்து கொண்டே இருக்கும். அவளால் பைத்தியம் பிடித்து அலைந்தவர்கள் பல பேர். அவர்கள் அலைவது குறித்து எப்போதும் ஒரு வித மகிழ்ச்சியுடனே இருப்பாள். அவர்கள் குடும்பம் ஒன்றும் அவ்வளவு வசதியானது இல்லை. ஆனால் அந்த அளவு ஏழையும் இல்லை. ஆனால், அவள் மனதில் இருந்தது என்னவோ கலர் கலரான கனவுகள். பலரையும் பைத்தியமாக்கிய அவளுக்கும் திருமணம் பண்ணி வைக்க அவள் குடும்பம் விரும்பியது. அவளுக்காக மாப்பிள்ளை நிறைய இடத்தில் பார்த்தார்கள். அனைத்து மாப்பிள்ளைகளையும் அவள் நிராகரித்தாள். ஏன் ஒப்புக்கொள்ளவில்லை? என்ற சரியான காரணம் தெரியாமல் பெற்றோர்கள் குழம்பி தவித்தார்கள். அவளைக் கேட்டுப் பார்த்தும் ஒரு பிரயோசனமும் இல்லை.

அந்த நேரத்தில்தான் குமாரின் ஜாதகம் அவர்கள் பெற்றோர்களின் கைகளில் கிடைத்தது. ஜாதகம் நன்றாக பொருந்தியது. எல்லோரையும் ஆச்சர்யப் படுத்தும் விதமாக வள்ளி, குமாரை பிடிப்பதாக கூறிவிட்டாள். இத்தனைக்கும் குமார் ஒன்றும் அழகன் இல்லை. இதுவரை பார்த்த மாப்பிள்ளைகளிலே ரொம்ப சாதாரணமானவன். ஏன் வள்ளிக்கு குமாரைப் பிடித்து போனது? என யாருக்கும் தெரியவில்லை. பெற்றோர்கள் அவசரமாக அவள் மனம் மாறுமுன் கல்யாண ஏற்பாட்டை செய்ய ஆரம்பித்தார்கள். ஊரே ஆச்சர்யப்படும் விதமாக அவள் கல்யாணம் நடந்தது.

குமார் வேலைப் பார்ப்பது மிலிட்டரியில். ஒரு மாத லீவில் வீட்டிற்கு வந்து இருந்தான். பெண் பார்க்கும் படலத்திற்கே பத்து நாட்கள் ஓடி விட்டது. அடுத்த பத்து நாட்களில் கல்யாணமும் நடந்து விட்டது. மீதி இருந்தது 10 நாட்கள்தான். அதற்கு பிறகு மீண்டும் ஊருக்கு வர ஒரு வருடமாகும்.

குமார் ஆசையுடன் எதிர்பார்த்த முதல் இரவும் வந்தது. என்னதான் வயது ஆகி இருந்தாலும் குமாரைப் பொறுத்தவரையில் அந்த விசயத்தில் அவன் ஒரு ஸீரோ வாகவே இருந்தான். ஆனால், வள்ளியை பொறுத்தவரை மிகுந்த ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டாள். குமாருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் இரண்டாம் நாள், மூன்றாம் நாள் அவளின் வேகத்தைப் பார்த்து கேட்டே விட்டான்,

" உனக்கு எப்படி இதில் இவ்வளவு ஆர்வம்?"

" என் போன்ற பெண்கள் கொஞ்சம் அதிகப்படியாக நடந்தால் இப்படி கேட்கிறீர்களே?" என ஓஓ வென அழத்தொடங்கினாள். குமாரும் அதோடு எந்த கேள்வியையும் கேட்காமல் அனுபவிக்க ஆரம்பித்தான். பத்து நாட்களும் அவளுடைய ஆளுமையில் நேரம் காலம் பார்க்காமல் அனுபவித்தான். குமார் ஊருக்கு போகும் நாளும் வந்தது. அழுகையுடன் அவனை அனுப்பி வைத்தாள் வள்ளி.

ஊருக்கு போன குமாரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நாள் முழுவதும் அவள் நினைவு. காமப் பசி வேறு. ஆறு மாதத்திற்கு மேல் அவனால் தாக்குப் பிடிக்க முடியாமல் அவசர விடுமுறையில் ஊருக்கு வந்தான். ஊருக்கு வந்தவுடனே இவனைப் பார்த்த பலர் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டதை கவனிக்கத் தவறவில்லை குமார். 'ஏன் அப்படி என்னவோ தங்களுக்குள் தன்னைப் பார்த்து பேசிக் கொள்கிறார்களே?' என நினைத்துக் கலவரமானான்.

வீட்டில் அந்த இரவில் அவனுக்கு ஒண்ணும் வித்தியாசம் தெரியவில்லை. அடுத்த நாள் அவனுடைய நெருங்கிய நண்பன் வீட்டிற்கு சென்றான். அவன் சொன்ன விசயம்தான் குமாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படி என்ன சொன்னான்?

" மாப்பிள்ளை, சொல்றேனு தப்பா நினைக்காத. உன் மனைவி நடத்தை சரியில்லை. நிறைய பேரோட தொடர்பு இருப்பதா பேசிக்கிறாங்க. நானே அன்னைக்கு டவுன்ல வேற ஒருத்தரோட பார்த்தேன்"

நேரே வீட்டிற்கு வந்தவன் வள்ளியைப் பார்த்து விசயத்தைக் கேட்டான். பதில் சொல்லாமல் அவனுடன் அந்த இடத்திலேயே வித்தியாசமான முறையில் உறவு கொள்ள ஆரம்பித்தாள். காமம் வென்றதால் அவனால் கேட்க வந்த விசயத்தை முழுமையாக கேட்க முடியவில்லை. அடுத்த நாள் காலை முதலில் எழுந்தவுடன் கேட்க போனவனின் உதட்டில் முத்தமிட ஆரம்பித்தபோதே ஏதோ தப்பு இருப்பது உண்மைதான் என உணர்ந்தான்.அவளை விலக்கி விட்டு,

" ஊரில் எல்லோரும் சொல்வது உண்மையா?"

இந்த முறை அவள் யோசிக்காமல் பதில் சொன்னாள்,

" ஆமாம்"

- தொடரும்

11 comments:

butterfly Surya said...

தொடருங்கள்.

Romeoboy said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் .. என்ன தலைவரே மேட்டர் செம சூடா இருக்கு ..

Beski said...

சூடாத்தான் போகுது...

iniyavan said...

//தொடருங்கள்.//


வருகைக்கு நன்றி சூர்யா.

நாளை தொடர்கிறேன்.

iniyavan said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ் .. என்ன தலைவரே மேட்டர் செம சூடா இருக்கு ..//

சூடான மேட்டர் தான். ஆனா விசயம் இருக்கு ரோமியோ.

iniyavan said...

//சூடாத்தான் போகுது...//

வருகைக்கு நன்றி பெஸ்கி.

நிறைய சாப்பிடுங்க. அடுத்த தடவை நான் பார்க்கும்போது இன்னும் கொஞ்சம் குண்டாகி இருக்கணும். சரியா!

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'இதற்கு யார் காரணம்? ( 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவும்) - பாகம் 1' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 20th January 2010 08:07:02 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/172029

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

அண்ணே அடுத்த பாகம் எப்போ வரும்!!!!!! ஹி ஹி

'பரிவை' சே.குமார் said...

தொடருங்கள்.

iniyavan said...

//அண்ணே அடுத்த பாகம் எப்போ வரும்!!!!!! ஹி ஹி//

வருகைக்கு நன்றி போனிஃபேஸ்

iniyavan said...

//தொடருங்கள்.//

வருகைக்கு நன்றி குமார்.