Jan 9, 2010

யானைக்கும் அடி சறுக்கும்! - 2

பஸ் என்றால் அடுத்த பஸ்ஸை பிடித்து வரலாம். ஆனால், விமானத்தை தவறவிட்டால்? என்ன செய்வது? பணத்தை திரும்ப வாங்குவது என்பது இயலாத காரியம். ஏற்கனவே போர்டிங் பாஸ் அவர்களிடம் இருப்பதால், "நோ ஷோ" என்று சொல்லி ஒரு பைசா தர மாட்டார்கள். அப்போது திடீரென இன்னொரு பயம் வந்து விட்டது?

ஆமாம். எங்கள் லக்கேஜ் என்ன ஆனது? ஏனென்றால் லக்கேஜை நாங்கள் முதல் ஏற்போட்டிலே சென்னைக்கு புக் செய்து விட்டோம். லக்கேஜ் மட்டும் சென்னைக்கு சென்று விட்டதோ என்று ஒரே குழப்பம். ஏஜண்ட் பெண்மணி லைனில் வந்தாள். எந்த அளவிற்கு என் கோபத்தை காண்பிக்க முடியுமோ அந்த அளவிற்கு காண்பித்து பிறகு சமாதானமானேன். ஏனென்றால், அவர்தான் ஏதாவது செய்ய வேண்டும்.

அவர், " சார் நீங்கள் இருங்கள் நான் இந்தியன் ஏர்லைன்ஸில் டிக்கட் இருக்கிறதா என்று பார்க்கிறேன்" என்றார். இந்தியன் ஏர்லைன்ஸ் காலை 9.25க்கு புறப்படும். அப்போது 9 மணி. அந்த கவுண்டருக்கு சென்றால் அங்கேயும் மூடி விட்டார்கள். நான், " ஏர் ஏசியாவில் நேராக திருச்சி சென்று விடுகிறேன்" என்றேன். அவர் " அத்தனையும் வேஸ்ட் ஆகிவிடும். கிங் பிஷர் டிக்கட்டில் மட்டுமே 35000 ரூபாய் போய் விடும். மொத்தத்தில் 120,000 நஷ்டமாகிவிடும்" என்று ஏறக்குறைய அழுது விட்டார். நான் ஆபிஸுக்கு ஏற்கனவே போன் செய்து அவருக்கான பேமெண்டை நிறுத்தச் சொல்லிவிட்டேன்.

என்ன செய்வதென்று தெரியவில்லை. காலை 3 மணியிலிருந்து யாரும் சாப்பிடவில்லை. " சார், நீங்கள் போய் சாப்பிடுங்கள். நான் ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்" என்றார். உடனே அங்கு உள்ள மெக்டனால்ஸ் சென்றோம். அங்கு சென்றால், ஏறக்குறைய அனைத்தும் தீர்ந்து விட்டது. சிக்கன் பர்கரும் ஏதோ ஒரு பன்னுடன் தந்தார்கள், என் மனைவியும், என் பையனும் சாப்பிடாமல் வெறும் ஜூஸ் மட்டும் சாப்பிட்டார்கள். இதை நான் இங்கு குறிப்பிடும் காரணத்தை இந்த கட்டுரையின் பின் பகுதியில் அறிவீர்கள். பிறகு ஏஜண்ட் கூறியபடி, ஜெட் ஏர்வேய்ஸ் ஆபிஸ் சென்றேன்.

முதலில் ஒரு 15 நிமிடம் கத்தி தீர்த்தேன். ஏஜெண்ட் ஜெட் ஏர்வேய்ஸ் ஆபிஸை குறை கூறினார். ஜெட் ஏர்வேய்ஸ் மேனேஜர் ட்ரேன்ஸ்வர் கவுண்டர் ஆளை குறை கூறினார். மொத்தத்தில் பாதிக்கப்பட்டது என்னவோ நான்தான். கஷ்டத்திலும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால். இரவில் புறப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ஜெட் ஏர்வேய்ஸுடன் கோ ஷேரின் விமானம். அதில் ஏதும் டிக்கட் கிடைக்குமா என்று பார்த்தார். நல்ல வேளை, டிக்கட் இருந்தது.

நான் அவ்வளவு கோபப்பட்டாலும், அந்த மேனேஜர் பொறுமையாக பதில் சொன்னார். அந்த பேச்சிலிருந்து வேண்டும் என்றுதான் அவர்கள் போர்டிங் பாஸ் தரவில்லை என்று உறுதி செய்து கொண்டேன். எங்களால், அவர்கள் விமானத்தை தாமதமாக்க விரும்பவில்லை. அந்த நேரத்தில் என் கோபத்தை குறைத்துக் கொண்டேன். ஏனென்றால், அவர்தான் எனக்கு இரவு விமானத்திற்கு அதே பணத்தில் டிக்கட் தர வேண்டும்.

அவர், " சார், உங்கள் லக்கேஜை ஆப் லோட் செய்து விட்டார்கள். அதனால், நீங்கள் காரணத்தை எழுதிக் கொடுத்து லெவல் 2க்கு சென்று உங்கள் லக்கேஜை வாங்கி வந்து விடுங்கள்" என்றார். கிட்டத்தட்ட அன்று அனைத்து லெவல்களுக்கும் ஓடி விட்டேன். பிறகு மீண்டும் லெவல் 2க்கு ஓடினேன். அங்கே என் லக்கேஜை கலக்ட் செய்தபோது, அங்கு இருந்த ஆபிஸர் லக்கேஜ் ஆப் லோட் செய்யப்பட்டதற்கான காரணத்தை எழுதச் சொன்னார். " அதிகாரிகளின் அலட்சியப்போக்கு" என்று எழுதி விட்டு வந்தேன்.

டிக்கட் ரெடியாக இருந்தது. காலை 10 மணி. இரவு 8.30க்குத்தான் விமானம். அது வரை என்ன செய்வது?. ஏற்போர்ட்டிலிருந்து டவுனுக்கு சென்று வர 150 வெள்ளி வரை செலவு ஆகும். செலவு ஆனாலும் லக்கேஜுடன் எப்படி செல்வது?

" சார், பக்கத்துல உள்ள ஹோட்டல தங்கிட்டு வாங்க. எங்கள் ரேட்டில் ரூம் புக் செய்து தருகிறேன். நீங்கள் லக்கேஜை இப்போதே இரவு விமானத்துக்கு செக் இன் செய்து விடுங்கள்" என்றார் ஜெட் ஏர்வேய்ஸ் மேனேஜர். அதே போல் லக்கேஜை இரவு விமானத்திற்கு புக் செய்து விட்டு போர்டிங் பாஸ் வாங்கினேன். போர்டிங் பாஸ் வாங்கிய போது அங்கு இருந்த அதிகாரி, " சார், சாயந்திரமாவது சீக்கிரம் வந்து விடுங்கள்" என்றார். கோபம் கலந்த சிரிப்புடன் அங்கு இருந்து நகர்ந்தேன்.

பின்பு ஹோட்டல் சென்றோம். போனால் அது ஒரு 5 ஸ்டார் ஹோட்டல். சாப்பாட்டுக்கே பல ஆயிரம் செலவு பண்ண வேண்டிய சூழ்நிலை. மதியம் ரெஸ்ட்ராண்டுக்கு சென்றோம். அங்கே உள்ள பெண்ணிடம், " சாப்பாடு ஹோட்டல் வாடகையுடன் சேராதா?'' என்றேன்.

" பிரேக் பாஸ்ட் உண்டு சார். காலையில வாங்க"

" காலையில மெட்ராஸ்ல இருப்பேன். அதனால லன்ச் தாங்க" என்றேன்.

அவர் எங்கேயோ பேசிவிட்டு, " மூன்று பேருக்கு தருகிறேன். ஆனால் ஒருவருக்கு நீங்கள் பே பண்ண வேண்டும்" என்றார்.

" சரி" என்று சந்தோசமாக ஒப்புக்கொண்டேன். ஏனென்றால் ஒரு பஃபே சாப்பாட்டின் விலை 45 வெள்ளி.

நானும் பிள்ளைகளும் புகுந்து விளையாட ஆரம்பித்தோம். ஆனால் எங்கள் வீட்டில் வெஜிட்டேரியன். ஒரு சிக்கன் லெக் பீஸை கடித்துக் கொண்டே காரணம் கேட்டேன்.

" ஏங்க இன்னைக்கு வைகுண்ட ஏகாதேசி இல்லையா? நான்வெஜ் சாப்பிடலாமா?"

" முதல்லயே சொல்லக் கூடாதா?"

" நீங்கதான், காணாததை கண்ட மாதிரி பர்கரை உடனே வாயில வைச்சிட்டீங்களே?"

" ஓக்கே. இப்ப மட்டும் நைட் பிளைட்டுல சாப்புடலை"

நைட்டும் பிளைட்டுலையும் அதையே சாப்பிட்டது தனிக்கதை.

அந்த இடைப்பட்ட நேரத்தில் ஏகப்பட்ட டென்ஷனுக்கு இடையில் கிங் ஃபிஷர் பிளைட்டையும் அடுத்த நாளுக்கு மாற்றிக் கொடுத்தார் ஏஜண்ட்.

பிறகு ஒருவாறு பொன்னான ஒரு நாளை கோலாலம்பூரில் வேஸ்ட் செய்து விட்டு அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தோம்.

29ம் தேதி. காலை சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சென்று விட்டு சென்னை பதிவர்களை சந்தித்து விட்டு ஹோட்டலுக்கு வரும்போது இரவு 12 மணி. காலை எழுந்து 11.45 மணி திருச்சி பிளைட் பிடிக்க 9.30க்கு கிளம்பி ஏற்போர்ட்டை 10 மணிக்கு அடைந்தோம்.

போர்டிங் பாஸ் வாங்கும்போது சொன்னார்கள்,

" திருச்சி பிளைட் மூன்று மணி நேரம் லேட்"

8 comments:

Romeoboy said...

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை தலைய விரிச்சு ஆடுச்சாம் அது மாதிரி தான் இருக்கு உங்க கதை தலைவரே .. பாவம் நீங்க இத்தனை கஷ்டபட்டின்களே

iniyavan said...

//கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை தலைய விரிச்சு ஆடுச்சாம் அது மாதிரி தான் இருக்கு உங்க கதை தலைவரே .. பாவம் நீங்க இத்தனை கஷ்டபட்டின்களே//

வருகைக்கு நன்றி ரோமியோ பாய்.

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'யானைக்கும் அடி சறுக்கும்! - 2' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th January 2010 11:07:09 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/166936

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

CS. Mohan Kumar said...

குடும்பத்தோட இப்படி ஒரு அனுபவம் ரொம்ப கஷ்டம் தான்.. நாம சந்தித்ததை பற்றி ஒரு பதிவில் எழுதியிருக்கேன். சுட்டி இதோ: முடியும் போது வாசியுங்கள்.

http://veeduthirumbal.blogspot.com/2009/12/n-t.html

தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

Ramesh said...

எனக்கு என்னவோ தப்பு உங்க பேர்ல தான்னு தோனுது. குடும்பத்தோடு பயணம் செய்யும் போது ரிஸ்க் எடுக்க கூடாது.

iniyavan said...

//தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி//

மோகன்,

உங்களை சந்தித்ததில் எனக்கும் நன்றி.

iniyavan said...

//தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி//

மோகன்,

உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

iniyavan said...

//எனக்கு என்னவோ தப்பு உங்க பேர்ல தான்னு தோனுது. குடும்பத்தோடு பயணம் செய்யும் போது ரிஸ்க் எடுக்க கூடாது.//

வருகைக்கு நன்றி ரமேஷ். இனி ரிஸ்க் எடுக்க மாட்டேன்.