சில
நிகழ்வுகள்
நிகழாமல்
இருப்பதே
நலம்.
பசியில் ருசித்து
சாப்பிட்டு என்
வாகனத்தை
வெளியே எடுக்கும்
வேளை
'ஸ்ஸ்ஸ்ஸ்'
என்ற விசில்
சத்தம்.
மோகன்ராஜ்
நன்றாக நினைவில்
உள்ளது.
5ம் வகுப்பில்
ஆசிரியரிடம்
பெரிய மிலிட்டரி
ஆபிஸர் ஆவேன்
என்று சொன்னவன்.
இன்று ஹோட்டல்
ஒன்றில்
செக்யூரிட்டியாய்.
பார்வையை தவிர்க்க
அவன் எண்ணிய
அந்த கணத்தில்
என் கண்கள் அவன்
விழிகள் சிந்திய நீரை
பார்த்து தொலைத்து
விட்டது.
காரில் நான்
செக்யூரிட்டியாய் அவன்
இன்று பசிக்காமலே
இருந்திருக்கலாம்.
12 comments:
ஒரு சில நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதே நல்லது. அதில் இதுவும் ஒன்று.
வித்தியாசமான மனம் வலிக்கச் செய்யும் கவிதை.
//ஒரு சில நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதே நல்லது. அதில் இதுவும் ஒன்று.//
வருகைக்கு நன்றி குமார்.
//வித்தியாசமான மனம் வலிக்கச் செய்யும் கவிதை.//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'பால்ய சிநேகிதன்!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 19th January 2010 02:00:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/171645
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
கவிதை அழகாகவும் இருக்கு, பிடிச்சும் இருக்கு...
கொஞ்சம் உரை நடை சாயல் இருந்தாலும் கருத்துள்ள கவிதை. என் மகனை வாசிக்க வைத்து கல்வியின் அருமையை புரிய வைத்தேன்.
please visit www.poongatru.blogspot.com
//கவிதை அழகாகவும் இருக்கு, பிடிச்சும் இருக்கு...//
வருகைக்கு நன்றி சங்கவி சார்.
//கொஞ்சம் உரை நடை சாயல் இருந்தாலும் கருத்துள்ள கவிதை. என் மகனை வாசிக்க வைத்து கல்வியின் அருமையை புரிய வைத்தேன்.//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரமேஷ்.
பால்ய சினேகிதன் நிலை அறிந்து
அதிர்ந்தேன்!!!
பால்ய சினேகிதன் நிலை அறிந்து
அதிர்ந்தேன்!!!
மொக்க ராசு:
இது கவிதை அல்ல,
ஆழ்ந்த நட்பின் வலி
Post a Comment