சூடாகிப் போன உடம்பால்
அடக்க முடியாத
தருணங்களில்
சலிப்பான நிமிடங்களில்
வெறுப்பான உணர்வுகளால்
கோபம்
எப்போதும் குழந்தை
மேல்தான்
சனியன்!
சீக்கிரம் தூங்காதா
நம் ஆசை தீராதா
கடுப்பில் திட்டிவிட்டு
மெல்ல நகர்ந்து
அவள் அருகே
தூங்கி விடுகிறேன்.
சில சமயம்
எல்லாம் முடிந்து
சலித்துப்
படுக்கையில்
குழந்தையின்
அழகான அமைதியான
தூங்கும் முகம்
கண்டு
நொந்து நூலாகி
அந்த கணத்தை நினைத்து
குழந்தையை சனியன்
என்றதற்காக
வெட்கி தலை
குனிகிறேன்
இனி அவ்வாறு
நடந்துக் கொள்ளக்கூடாது
என்று தீர்மானிக்கிறேன்.
அடுத்த நாள் இரவு,
சனியன்,
சீக்கிரம் தூங்காதா...
.....
கடைசியில் என்
தீர்மானம் என்னவோ
பிரசவ
வைராக்கியம் போல்
ஆகிவிட்டது.
6 comments:
வாவ் ரொம்ப நல்லாருக்குங்க..
simply superb....
சுய கட்டுடைப்போ?
//வாவ் ரொம்ப நல்லாருக்குங்க..//
வருகைக்கு நன்றி சிவாஜி சங்கர்.
//simply superb....//
நன்றி மகா.
//சுய கட்டுடைப்போ?//
வருகைக்கு நன்றி நண்பா!
Post a Comment