மூளையில் சேகரித்து
வைத்திருந்த நினைவுகளிலிருந்து
ஒன்றை எடுத்து சரி பார்த்தேன்.
நான் எப்போதிலிருந்து
கவிதை என்ற ஒன்றை
எழுத ஆரம்பித்தேன்?
ஆம் சகியே!
உன்னைப் பார்த்ததிலிருந்துதான்
நான் எழுதிய முதல் கவிதையே
உன்னைப் பற்றித்தான்.
எப்படி இருக்கிறது
என்றதற்கு
'கிறுக்கல்கள்' என்று சொல்லி
நகர்ந்து போனாய்.
கவிதையைப் பற்றி
கவிதை எழுதினால்
எப்படி கிறுக்கலாகும்
என நினைத்து குழம்பிப் போனேன்.
பின்பு நான் எழுதிய
அனைத்தையும் கிறுக்கல்கள்
என்றாய், ஏன் என்னையே
கிறுக்கன் என்றாய்.
காலத்தின் கட்டாயத்தினால்
நான் உன்னிடம் எழுதிய
முதல் கிறுக்கலை
பத்து மாதத்திற்கு
பிறகு 'நீ எழுதிய அழகிய
கவிதை இது' என்கிறாய்.
இங்கே
கவிதை கிறுக்கல்கள் ஆனதும்
என் கிறுக்கல் கவிதை ஆனதையும்
நினைத்து
வியந்து போய் நிற்கிறேன்
நான்!!!
9 comments:
Very Nice,It reminds kannadasan lines "naan kathalennum kavithai sonnen katilin mele....
Ramesh
www.poongatru.blogspot.com
Very Nice,It reminds kannadasan lines "naan kathalennum kavithai sonnen katilin mele....
Ramesh
www.poongatru.blogspot.com
இப்படி ஒரு பாசிடிவான காதல் கவிதை படித்து ரொம்ப நாள் ஆச்சு!
ஏனோ என் நினைவுகள் பத்து வருஷங்கள் பின்னோக்கி போகுது!
உலக்ஸ், நீங்க இவ்ளோ நல்ல கவிதை எல்லாம் கூட எழுதுவீங்களா???
அழகான கவிதை.
//Very Nice,It reminds kannadasan lines "naan kathalennum kavithai sonnen katilin mele....
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரமேஷ்.
//உலக்ஸ், நீங்க இவ்ளோ நல்ல கவிதை எல்லாம் கூட எழுதுவீங்களா???//
ரொம்ப நன்றி நண்பரே.
//அழகான கவிதை.//
நன்றி கண்ணகி.
சகியாகும் முன்னர் முதலில் சகிக்கமுடியவில்லை என்றாள்.
சகியாகிப் போனதும் சகித்துக்கொள்ள முடிகிறது என்கிறாள்.
நல்லதொரு கவிதை.
"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...
நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..
உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.com வலைப்பூவில் வெளியிடுகிறோம்;
அல்லது
உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....
முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல...
Start MUSIC.......
அ
Post a Comment