Feb 16, 2010

மிக்ஸர் - 16.02.10

பரிசல் பழகுவதற்கு இனிமையானவர். இரண்டு முறை முயற்சித்தும் இன்னும் என்னால் சந்திக்க இயலவில்லை. விரைவில் சந்திப்பேன். நான் பதிவுலகத்திற்கு வந்ததற்கு பரிசல் எப்படி காரணமோ அதேபோல் இன்னும் பதிவுலகை விட்டு விலகாமல் இருப்பதற்கும் பரிசலே காரணம். சிறு வயதிலிருந்தே என்னைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். ஏனென்றால் அப்போதிருந்தே பல விசயங்களையும் படித்து நண்பர்களுடன் விவாதிப்பேன். எல்லா பத்திரிக்கைகளையும், பேப்பர்களையும் படித்துவிட்டு விவாதிப்பேன். அரசியலாகட்டும், சினிமாவாக இருக்கட்டும், இல்லை படிப்பாக இருக்கட்டும், அனைத்தையும் விவாதிப்பேன். அதனால் நான் பேசுவதே அதிகமாக இருக்கும். ஆனால், சில காலமாக நான் பேசுவதை குறைத்துக்கொண்டு அடுத்தவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்கிறேன். அதற்கு காரணம் பரிசல். என்னைவிட வயதில் சிறியவர் பரிசல். ஆனால், நல்ல விசயங்கள் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். இப்போதெல்லாம் தினமும் ஒரு 30 நிமிடம் காலையோ அல்லது மாலையோ பரிசலிடம் கூகிளில் பேசாவிட்டால் ஒரு திருப்தி ஏற்படுவதில்லை. எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. நேரில் பார்க்காமலேயே ஒருவரிடம் இவ்வளவு அன்பாக பழக முடியுமா? ஆம். முடியும், அது பரிசலால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட நண்பனின் புத்தகவெளியீட்டு விழாவிற்கு என்னால் செல்ல முடியாதது வருத்தமாக உள்ளது. பரிசல் இது போல் நிறைய எழுத வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

கேபிள் சங்கர். நல்ல கலகலப்பான மனிதர். யாரை பார்த்தாலும், 'தலைவரே' என்று அன்போடு அழைப்பவர். ஒரே ஒரு முறை நேரில் நண்பர் தண்டோரா அலுவலத்தில் சந்தித்து இருக்கிறேன். நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். அவர் வாய்திறந்து பேசினாலே ஒரே சந்தோசம்தான். சிரித்துக்கொண்டே இருக்கும் மாமனிதர். அன்று கார்க்கியிடன் சேர்ந்து நன்றாக பாடவும் செய்தார். ஒரு இயக்குனருக்கான அனைத்து தகுதியும் இருந்தும் ஏன் இன்னமும் ஜெயிக்கவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. விரைவில் ஒரு நல்ல படத்தை இயக்குவார் என நம்புகிறேன். தலைவருக்கும் வாழ்த்துக்கள். பரிசலும், கேபிளும் எப்படியாவது புத்தகங்களை எனக்கு மலேசியாவிற்கு அனுப்பி வைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன். பணம் கொடுத்துவிடுவேன்!!!

போட்டோக்கள் அனைவரது பதிவுகளிலும் பார்த்தேன். ஆனால் பதிவர் நண்பர் மோகன் குமாரின் படங்கள்தான் டாப். என்ன ஒரு கிளாரிட்டி. என்ன கேமரா மோகன்? கலக்கிட்டீங்க.

***********************************

சனிக்கிழமை 'அசல்' படம் பார்த்தேன். எல்லா விமர்சனங்களையும் படித்து விட்டு, யுவகிருஷ்ணாவின் விமர்சனத்தையும் படித்து விட்டு தியேட்டருக்கு சென்றேன். விமர்சனங்களை படித்து விட்டு படம் பார்க்க செல்வதில் சில நல்லதும் இருக்கிறது பல கெட்டதும் இருக்கிறது. "யுவா" எழுதிய மூன்று விசயங்கள் படம் பார்க்கும் வரை மனதில் இருந்து கொண்டே இருந்தது. 1) கதை - என்ற இடத்தில் அஜித்தின் பெயர் இடம் பெறுகிறது. இல்லாத ஒன்றுக்கு ஏன் பெயர் போடுகிறார்கள், 2) உதவி இயக்குநர் - அஜித்தின் பெயரும் உள்ளது - இனி அவர் இயக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன், 3) நான் பாவனாவாய் இருந்தால் அங்கிள் அஜித்தை சைட் கூட அடிக்க மாட்டேன். யுவாவின் இந்த மூன்று கருத்துக்களுடன் நானும் ஒத்துப் போகிறேன்.

ஆனால் இதையும் மீறி படம் அப்படி ஒன்றும் குறை சொல்லும்படி இல்லை. படம் ரொம்ப போர் என்று சொல்ல முடியவில்லை. அதே சமயம் சூப்பர் டூப்பர் என்றும் சொல்ல முடியவில்லை. பாடல்கள் சுமார் ரகம்தான். இந்த முறை பரத்வராஜ் சரணை நன்றாக ஏமாற்றிவிட்டார். அஜித்தின் தந்தையை பற்றிய பாடலை கண்களை மூடிக்கொண்டு கேட்டால், அப்படியே சிவாஜியை பற்றி பாடுவதுபோல் உள்ளதாம். இது சரண் சொன்னது. நான் கண்களை மூடிக்கொண்டும் கேட்டேன், திறந்து கொண்டும் கேட்டேன், எனக்கு ஏதும் தோன்றவில்லை. படத்தை படமாக்கியவிதம் அருமை. ஒரு ஆங்கிலப் படத்தை பார்த்த திருப்தி ஏற்பட்டது. ஆனால் பில்லாவின் பாதிப்பு நிறைய இடங்களில் தெரிகிறது. 'தல' கொஞ்சம் உடம்பை குறைத்தால் நல்லது. நான் அசலை அனுபவித்தே பார்த்தேன். ஆனால் என்ன ஒரு கொடுமையான விசயம் என்றால், தியேட்டரில் என் குடும்பத்தையும், ஆப்பரேட்டரையும் சேர்த்து மொத்தமே 10 பேர்தான்.

***********************************

சமீபத்தில் நானும் என் நண்பர் ஒருவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தோம். எங்கள் குடும்பத்தில் உள்ள சிலரும், அவர் குடும்பத்தில் உள்ள சிலரும் சேர்ந்து ஆளுக்கு 50,000 ரூபாய் போட்டு ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, ஏழை எளியவர்களின் படிப்பிற்கும், ஏழை நோயாளிகளுக்கும் உதவலாம் என ஒரு மனதாக பேசி ஏற்பாடுகளை ஆரம்பித்தோம். இதைபற்றி சிங்கப்பூரில் உள்ள ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் என்னிடம் கேட்ட கேள்விகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்ததால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

" நீங்கள் பிறருக்கு உதவுவதற்கு முன் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உதவி தேவைப்படுகிறதா? என்று பாருங்கள். நம் குடும்பத்திலேயே கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருந்தால், அவர்களை விட்டு விட்டு மற்றவர்களுக்கு உதவுவதில் என்ன பயன்? நம் குடும்பம் என்றால், அனைத்து உறவினர்களையும் குறிப்பிடுகிறேன். நம்மிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால், நாம் அடுத்தவர்களுக்கு உதவினால், அவர்கள் அதை நினைத்து நமக்கு நன்றி சொன்னால் சந்தோசப்படுகிறோம். அப்படி சொல்லாவிட்டால் கூட அதை பெரிதாக நினைக்காமல், ஒருவருக்கு உதவி செய்தோம் என்ற திருப்தியோடு இருக்கிறோம். அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால், இதே உறவினர்களுக்கு உதவி செய்து அவர்கள் நன்றி சொல்லாவிட்டாலோ அல்லது நாம் எதிர்பார்த்த மரியாதை தரவில்லையென்றாலோ மிகுந்த கோபம் அடைகிறோம். இது தவறு. எதையும் எதிர்பார்க்காமல் செய்வதுதான் உதவி. ஏதாவது எதிர்பார்த்து உதவி செய்தால் அதில் ஒரு புண்ணியமும் இல்லை. அதனால், முதலில் உங்கள் உறவினர்களுக்கு ஏதாவது உதவி தேவையா? என்று பாருங்கள். பிறகு டிரஸ்ட் ஆரம்பிப்பதை பற்றி யோசியுங்கள்"

அவர் சொல்வது சரி என்றும் படுகிறது. குழப்பத்தில் நான். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

***********************************

"என் உறவினர் ஒருவர் அவர் வாழ்க்கையை தொலைத்து விட்டு தனி ஆளாக நிற்கிறார். எப்படியாவது அவரை காப்பாற்றி அவருக்கு ஒரு நல் வாழ்வை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அது நடக்காமலே இருக்கிறது. இன்னும் அந்த உறவினர் மேலும் ஆண்டவன் மேலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இருவருமே நான் சொல்வதை ஒரு வேளை காது கொடுத்து கேட்கக் கூடும்"

இப்படி ஒரு பதிவில் எழுதியிருந்தேன். உடனே நல்ல வேலையிலிருக்கும் வெளிநாட்டில் உள்ள ஒரு தோழியிடமிருந்து ஒரு மெயில் வந்தது. "என்ன உதவி வேண்டும் சொல்லுங்கள். நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன். அந்த நபரின் போன் நம்பர் குடுங்கள். என்னை அறிமுகப்படுத்தி வையுங்கள், நான் பேசுகிறேன். நான் கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்கிறேன். நான் அவருக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன்" என்று எழுதியிருந்தார்கள். அதை பற்றி சம்பந்தப்பட்ட நண்பருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். சும்மா படித்து விட்டு போகாமல் எனக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்து என்னை தொடர்பு கொண்ட அந்த தோழிக்கு என் இதயம் கனிந்த நன்றி.

***********************************

வெள்ளிக்கிழமை இரவு ரொம்ப போர் அடித்ததால் மலேசியா ஆஸ்ட்ரோவில் ஆறுமுகம் என்ற ஒரு பாடாவதியான படத்தை பார்த்தேன். பார்க்க பார்க்க இந்த படத்தை எங்கேயோ பார்த்தது நினைவுக்கு வந்தது. அப்படியே படம் அண்ணாமலை போல இருந்தது. இந்த படம் அதன் ரீ மேக்கா என்று எனக்குத் தெரியவில்லை. தலைவர் இடத்தில் பரத். வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இந்த லட்சணத்தில் இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா.

சில படங்கள் மலேசியா ஆஸ்ட்ரோவில் டைரக்டாக ரிலீஸ் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். கொடுமைடா சாமி!

***********************************

கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் 'தல'யின் பேச்சை படிக்க நேர்ந்தது. இந்த மாதிரி தைரியமாக பேச தலைவர் சூப்பர் ஸ்டார்னால மட்டும்தான் முடியும். அதனால்தானோ, என்னவோ, தலைவரே எழுந்து கைதட்டியிருக்கார். எப்போதும் அமைதியாக இருக்கும் தல இந்த தடவை பொங்கி எழுந்துருக்கார். எனக்கு என்னவோ பாட்சா பட வெற்றியில் தலைவர் பேசிய பேச்சுக்கள் ஞாபகம் வந்து போனது. வாழ்த்துக்கள் தல.

கார்க்கி கோபித்துக் கொள்ள வேண்டாம். எனக்கு விஜயும் பிடிக்கும்.

***********************************

25 comments:

CS. Mohan Kumar said...

நன்றி நண்பா. சோனி கேமராவில் எடுத்த படங்கள்..

நம்ம ப்ளாக் வந்தா ஒரு வரி எழுதிட்டு போறது? வந்தீங்கன்னு பின்னே எப்படி தெரியும்? :))

Prabu M said...

நான் உங்களோட சைலண்ட் வாசகன்..
உங்க இயல்பான நடைக்கு ரசிகன்..

குடும்பத்திலிருப்பவர்களுக்கு/ அறிந்தவர்களுக்கு உதவ நிறைய இருக்கும்போது ஊருக்கு உதவும் மனம் வருவது வாடிக்கைதான்.... அதன்பின்னே இருப்பது "எதிர்பார்ப்பு" தான் என்று சிம்பிளாக சொன்ன சைக்காலஜியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.....

நான் மலேஷியாவில் கடந்த வருடம் முழுதும் இருந்துவிட்டு இப்போதுதான் நான்கு மாதங்களாக தாயகம் திரும்பியுள்ளேன்.....

a Sweet Mixer as usual...

iniyavan said...

//நன்றி நண்பா. சோனி கேமராவில் எடுத்த படங்கள்..

நம்ம ப்ளாக் வந்தா ஒரு வரி எழுதிட்டு போறது? வந்தீங்கன்னு பின்னே எப்படி தெரியும்? :))//

வருகைக்கு நன்றி மோகன். இனி, நிச்சயம் பின்னூட்டமிடுவேன்.

iniyavan said...

//நான் உங்களோட சைலண்ட் வாசகன்..
உங்க இயல்பான நடைக்கு ரசிகன்..//

ரொம்ப நன்றி பிரபு.

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'மிக்ஸர் - 16.02.10' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 16th February 2010 11:49:03 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/186794

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

Kumar said...

உங்கள் உறவினருக்கு நல்ல வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்தனை செய்வோம்.

சென்ஷி said...

நல்லாயிருக்குண்ணே! (சத்தியமா சொல்றேண்ணே)

Anonymous said...

நீர் உயர வரப்பு உயரும்.
வரப்புயர நெல் உயரும்.
நெல் உயர குடி உயரும்.
குடி உயர கோன் உயரும்.
கோன் உயர நாடு உயரும்.
இக்கூற்றை Reverse ஆக பார்த்தால், வாழ்வில் ஒவ்வொன்றும் அதன் நெருங்கிய செயல்களினால்தான் உயர்வுறுகின்றது என்பது என் திடமான எண்ணம். நம் சுற்றத்தார்களும் உயர்ந்தால்தான் நாமும் உயர்வு பெற்றதாக அர்த்தம். இல்லையெனின் அது வெறும் சுயநலம்தான் என என் சிற்றறிவு சொல்கிறது.
ஆகவே நம் உறவினர்களை முதலில் கை தூக்கி விடுவதுதான் சிறந்தது என்று நினைக்கிறேன்.
-நவாப், துபாய்.

சரவணகுமரன் said...

//நீங்கள் பிறருக்கு உதவுதற்கு முன் உங்கள் குடும்பத்தில் யாருக்குவாது உதவி தேவை படுகிறதா? என்று பாருங்கள். நம் குடும்பத்திலேயே கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருந்தால், அவர்களை விட்டு விட்டு மற்றவர்களுக்கு உதவுவதில் என்ன பயன்? //

கரெக்ட்டு...

பரிசல்காரன் said...

நன்றி உலக்ஸ்!

வலையில் எழுதும்போது முகம் தெரியாதவர்களின் நட்பும், அன்பும் எவ்வளவு மகிழ்வுக்குரியதாக்குகிறது என்பதைச் சொன்னது உங்களை அழைத்த தோழியின் செயல்..

Anonymous said...

//அவர் சொல்வது சரி என்றும் படுகிறது. குழப்பத்தில் நான். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?//

very correct.

iniyavan said...

//உங்கள் உறவினருக்கு நல்ல வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்தனை செய்வோம்.//

வருகைக்கு நன்றி குமார்.

iniyavan said...

//நல்லாயிருக்குண்ணே! (சத்தியமா சொல்றேண்ணே)//

உண்மையாகவா சொல்லறீங்க. வருகைக்கு நன்றி சென்ஷி

iniyavan said...

//ஆகவே நம் உறவினர்களை முதலில் கை தூக்கி விடுவதுதான் சிறந்தது என்று நினைக்கிறேன்.
-நவாப், துபாய்.//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நவாப்.

iniyavan said...

//கரெக்ட்டு...//

வருகைக்கு நன்றி சரவணக்குமரன்

iniyavan said...

//நன்றி உலக்ஸ்!

வலையில் எழுதும்போது முகம் தெரியாதவர்களின் நட்பும், அன்பும் எவ்வளவு மகிழ்வுக்குரியதாக்குகிறது என்பதைச் சொன்னது உங்களை அழைத்த தோழியின் செயல்..//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பரிசல்.

iniyavan said...

//very correct.//

வருகைக்கு நன்றி shiridi.

மணிஜி said...

அன்பு உலக்ஸ்.. வணக்கமும், வாழ்த்துக்களும்...

அகநாழிகை said...

நல்லா எழுதியிருக்கீங்க உலகநாதன்.

உங்களின் சேவை நோக்கே சிறந்தது என்பேன். உறவுகளுக்கு உதவினால் அது சர்ச்சையில்தான் முடியும். இது என் கருத்து.

சிநேகிதன் அக்பர் said...

//அவர் சொல்வது சரி என்றும் படுகிறது. //

எனக்கும் சரியாதான் படுகிறது.

ஆனால் ஒருவருக்கு உதவுவது மற்றவருக்கு தெரிந்தால் போச்சு. அப்புறம் தேவையோ தேவை இல்லையோ வரிசை கட்டி வந்து விடுவார்கள் . நான் மட்டும் குறைச்சலா என்று.

உதவணும்னு மனசு இருந்தாக்கூட பலபேர் வெறுத்துப்போவது இந்த சூழ்நிலையில்தான் என்று நினைக்கிறேன்.

அமுதா கிருஷ்ணா said...

எங்கோ முகம் தெரியாதவர்களுக்கு உதவுவதை விட தெரிந்தவர்களுக்கு உதவுவதும்,அவர்களின் முன்னேற்றத்தை பார்ப்பதும் மிக மகிழ்ச்சியை தரும் என்பது என் கருத்து.

iniyavan said...

//அன்பு உலக்ஸ்.. வணக்கமும், வாழ்த்துக்களும்...//

வருகைக்கு நன்றி தலைவரே.

iniyavan said...

//நல்லா எழுதியிருக்கீங்க உலகநாதன்.

உங்களின் சேவை நோக்கே சிறந்தது என்பேன். உறவுகளுக்கு உதவினால் அது சர்ச்சையில்தான் முடியும். இது என் கருத்து.//

வருகைக்கு நன்றி வாசு சார்.

iniyavan said...

//எனக்கும் சரியாதான் படுகிறது.

ஆனால் ஒருவருக்கு உதவுவது மற்றவருக்கு தெரிந்தால் போச்சு. அப்புறம் தேவையோ தேவை இல்லையோ வரிசை கட்டி வந்து விடுவார்கள் . நான் மட்டும் குறைச்சலா என்று.//

தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி அக்பர்.

iniyavan said...

//எங்கோ முகம் தெரியாதவர்களுக்கு உதவுவதை விட தெரிந்தவர்களுக்கு உதவுவதும்,அவர்களின் முன்னேற்றத்தை பார்ப்பதும் மிக மகிழ்ச்சியை தரும் என்பது என் கருத்து.//

தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி அமுதா மேடம்.