Feb 1, 2010

என்னால் மறக்க முடியாத பெண்!

சென்ற முறை நான் அலுவலக பயணமாக சிங்கப்பூர் சென்றிருந்த போது நடந்த சம்பவம் இது. கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் சிங்கப்பூர் விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்தேன். அப்போது ஒரு நடுத்தர வயது அம்மாவும், ஒரு இளம்பெண்ணும் என்னை நோக்கி வந்தார்கள். அந்த அம்மாவிற்கு ஒரு 40 வயது இருக்கலாம். அந்த பெண்ணிற்கு 17 வயதுதான் இருக்க வேண்டும். நல்ல அழகு. நல்ல நிறம். பார்க்க லட்சணமாக இருந்தாள். அந்த அம்மாவும் ஏறக்குறைய அவர் வயதிற்குரிய அழகுடன் இருந்தார். அவர் என்னிடம் வந்து சிங்கப்பூர் இமிகிரேஷன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரச்சொன்னார். நானும் ஒவ்வொரு கேள்வியாக கேட்டு பாரத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தேன். சிங்கப்பூரில் தங்கும் விலாசத்தைப் பற்றி கேட்டபோதுதான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் அவர் கொடுத்த ஹோட்டல் முகவரி அப்படிப்பட்டது. இனி எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடலை கீழே தருகிறேன். படித்துப் பாருங்கள்:

"அங்கு தங்கி என்ன செய்யப்போகின்றீர்கள்?"

" வேலை செய்யப் போறோம் சார்"

" என்ன வேலை செய்யப்போறீங்க?"

" அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, தங்குபவர்களுக்கு மசாஜ் செய்வேன் சார்"

" இதுக்கு முன்னாடி அங்கு போயிருக்கீங்களா"

" ம்ம். ஏற்கனவே இரண்டு முறை வேலை பார்த்திருக்கிறேன் சார்"

" எத்தனை மாசம் தங்கப் போறீங்க?"

" முதல்ல ஒரு மாசம் அப்புறம் இன்னுமொரு மாசம்"

" டூரிஸ்ட் விசால வந்துருக்குறீங்க. எப்படி இரண்டு மாசம் தங்க முடியும்?"

" முதல்ல ஒரு மாசம் தங்குவோம் சார். அப்புறம் எப்படியாவது அடுத்த மாசம் விசா வாங்கிவிடுவோம். இல்லைனா மலேசியா போயிட்டு திரும்பி வந்துடுவோம்"

" இவ்வளவு செலவு பண்ணி வந்திருக்கிறது வெறும் ரெண்டு மாத வேலைக்குத்தானா?"

" இரண்டு மாதம் போதும் சார். செலவு பண்ணியதைவிட மூன்று மடங்கு சம்பாதித்துவிடுவோம் சார்"

('அவர் என்ன வேலை செய்து சம்பாதிப்பார்' என்பதனை படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்)

" உங்க கூட இருக்கிற அந்தப் பெண் யார்?"

" என்னுடைய மகள்"

" ஏங்க படிக்கிற வயசுல அந்த சின்னப் பெண்ண இதுல ஈடுபடுத்துறீங்களே, இது நியாயமா?"

" என் புருஷன் நல்லா இருந்தா, நான் ஏன் சாமி இப்படி இருக்கப்போறேன்"

" ஏன், அவர் உங்களை வைத்து சரியா காப்பாத்துறது இல்லையா"

" ஏன் சார், நீங்க வேற ஜோக் அடிச்சுட்டு இருக்கீங்க. அந்த ஆள் நல்லா என்னை சக்கையா புளிஞ்சிட்டு ஐந்து புள்ளைய கொடுத்துட்டான். தினமும் குடிதான். அடிதான். போதாக் குறைக்கு கொஞ்ச நாளா என் தங்கச்சியையும் வைச்சிட்டு இருக்கான். அவன் என்ன காப்பாத்துறதாவது. நான்தான் கொஞ்ச காலமா அவனை காப்பாத்திட்டு வரேன்"

" அதுக்காக இந்த மாதிரி தொழிலுக்கு வரணுமா?. வேற வேலையே இந்தியால இல்லையா?"

" ஆமாம், விரும்பி இந்த தொழிலுக்கு வந்தேனாக்கும். சிங்கப்பூருல வீட்டு வேலை இருக்குனு சொல்லி என்னை கூப்பிட்டு வந்து இந்த பாழும் கிணத்துல தள்ளி விட்டதே என் புருசன் தான் சார்" என்றவர் அழ ஆரம்பித்தார்.

ஏர்போர்ட்டில் எல்லோரும் என்னையே பார்க்கவே, சிறிது நேரம் கழித்து அவர் அமைதியானவுடன், என் மனதை உறுத்திய அந்த கேள்வியை மீண்டும் கேட்டேன்,

" சரி, நீங்கதான் இப்படி ஆயிட்டிங்க. படிக்க வேண்டிய வயசுல இருக்க உங்க பொண்ண ஏம்மா இப்படி?"

" இதுவும் ஒரு காரணத்திற்காகத்தான் சார். என் புருசனுக்கு இரண்டு கிட்னியும் பெயிலியர். அவருக்கு உடனடியா ஆப்பரேசன் பண்ணனும். என்னால அவ்வளோ பணம் புறட்ட முடியாது. இவளை வைச்சுத்தான் நான் பணம் சம்பாதிச்சு அவரை காப்பாத்தணும்"

" அப்படி எதுக்குமா அந்த ஆளை காப்பாத்தணும்னு நினைக்கறீங்க. உங்களுக்கு இவ்வளவு கொடுமை செஞ்ச அவன் சாவட்டும்னு உட வேண்டியதுதானே?"

" அது எப்படி சார். ஆயிரம்தான் இருந்தாலும் என்னை தொட்டு தாலி கட்டின புருஷன் இல்லையா?"

(பாழாப் போன தாலி சென்டிமெண்ட் நம்ம ஊரு பொண்ணுங்களை விட்டு என்னைக்கு போய்த்தொலையுமோ தெரியலை?)

அதற்குமேல் அந்த அம்மாவிடம் எனக்கு பேச விருப்பம் இல்லை. விமானம் வந்தவுடன் ஏறி அமர்ந்தவன் அவர்கள் இருக்கும் இடம் கூட திரும்பி பார்க்கவில்லை. குழப்பமான மன நிலையில் பயணம் செய்தேன்.

சிங்கப்பூரை அடைந்ததும், அந்தம்மா என்னிடம் ஓடி வந்து,

" சார், முடிஞ்சா நைட்டு எங்க ஹோட்டலுக்கு வாங்க. என் பொண்ணும் அங்கதான் இருப்பா. நம்ம ஆளா இருக்கீங்க வந்துட்டு போங்க"

பதில் சொல்லமால் காரில் ஏறினேன். அன்று முழுவதும் அந்த சின்னப் பெண்ணே என் மனதை ஆக்கிரமித்திருந்தாள். நான் செல்லவில்லை. ஆனால் யாரோ ஒருவன் அவளை...... என்ன கொடுமை இது? நம்புவதற்கு உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். நானும் அப்படித்தான் கஷ்டப்பட்டேன்.

ஒரு குடும்பத்தில் கணவன் சரியில்லாத காரணத்தால் அந்த குடும்பமே சீரழிந்து போனதை நினைத்து நான் வருந்தாத நாளே இல்லை. அந்த பெண் இப்போது எங்கு இருக்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ? எங்கு இருந்தாலும் அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

ஒவ்வொரு முறை சிங்கப்பூர் செல்லும்போது செராங்கன் ரோடை கடக்கும் போதெல்லாம் அவளை பார்த்து விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே செல்கிறேன்.

14 comments:

Anonymous said...

Night poneengalaa illayaa?

iniyavan said...

//Night poneengalaa illayaa?//

"நான் செல்லவில்லை"னு எழுதியிருக்கேனே படிக்கலையா நண்பா?

அப்பாவி முரு said...

:((

Anonymous said...

உலக்ஸ், இவங்கள பாக்கும் போது பரிதாபம் ஏற்படவில்லை.. பத்து பாதிரம் தேய்த்து குடும்பத்த
காப்பாத்த்றவங்களும் நம்ம ஊர்ல இருக்காங்க.. சூழ்நிலைய காரணம் காட்டி என்ன வேனும்னாலும் செய்ய முடியுமா??

Starjan (ஸ்டார்ஜன்) said...

வருத்தமான நிகழ்வு இது .

iniyavan said...

:((

நன்றி முரு!

iniyavan said...

//உலக்ஸ், இவங்கள பாக்கும் போது பரிதாபம் ஏற்படவில்லை.. பத்து பாதிரம் தேய்த்து குடும்பத்த
காப்பாத்த்றவங்களும் நம்ம ஊர்ல இருக்காங்க.. சூழ்நிலைய காரணம் காட்டி என்ன வேனும்னாலும் செய்ய முடியுமா??//

உண்மைதான் நண்பா!

iniyavan said...

//வருத்தமான நிகழ்வு இது .//

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்!

தமிழ். சரவணன் said...

//ஒரு குடும்பத்தில் கணவன் சரியில்லாத காரணத்தால் அந்த குடும்பமே சீரழிந்து போனதை நினைத்து நான் வருந்தாத நாளே இல்லை. அந்த பெண் இப்போது எங்கு இருக்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ? எங்கு இருந்தாலும் அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.//

இந்த தாயாரின் நி​லையில் இருந்த என் தாயர் எங்க​ளை டிக்க​டை ​வைத்து படிக்க​வைத்தார் இன்று நாங்கள் அ​னைவரும் நல்ல நி​லையில் படித்து முன்​னேறி​னோம். ​கேட்டு ​போவதற்கும் ​கேட்டுப்​​போனதற்கும் ஆயிரம் காரணம் கூறலாம்.. ஆனால் இன்று எனக்கு வாய்த ம​னைவியினால் எனது குடும்ப​மே சிதறி சின்னாபின்னமாகி ​​ஜெயில், ​போலீஸ் ​கேஸ் என்று அ​​ழைந்து ​கொண்டிருக்கின்​றோம். ம​னைவி சரியில்ல காரணத்தினால் இன்று ​கோர்ட் ​கேஸ் என்று அ​ழையும் அ​லைக்லிக்கப்படும் குடும்பங்கள் இன்று அதிகம். குறிப்பாக இதில் அதிகம் பாதிக்கப்படுவது எதும்அறியா குழந்​தைகள் தான்.

அன்புடன்,

தமிழ். சரவணன்

பா.ராஜாராம் said...

நெகிழ்வான பகிர்வு தலைவரே.

மணிஜி said...

கொடுமை?

iniyavan said...

//குறிப்பாக இதில் அதிகம் பாதிக்கப்படுவது எதும்அறியா குழந்​தைகள் தான்.

அன்புடன்,

தமிழ். சரவணன்//

வருகைக்கு நன்றி தமிழ்சரவணன்.

iniyavan said...

//நெகிழ்வான பகிர்வு தலைவரே.//

வருகைக்கு நன்றி பா ரா.

iniyavan said...

//கொடுமை?//

வருகைக்கு நன்றி தலைவரே.