Feb 17, 2010

நீங்களும் ஏமாந்து விடாதீர்கள்!

2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் என் நண்பர் ஒருவர் ஒரு ஸ்கீமை சொல்லி என்னை அதில் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தினார். நான் இந்த முதலீடு விசயங்களில் அதிகமாக அலட்டிக்கொள்வதில்லை. "உடம்பு முழுவதும் எண்ணையை தடவிகிட்டு மண்ணில் விழுந்தாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்" னு ஒரு பழமொழி சொல்வாங்க இல்லையா? நான் அந்த டைப். அதிக ஆசைப்படாமல் இருந்ததும் ஒரு காரணம். சேமிக்கும் அளவிற்கோ, முதலீடு செய்யும் அளவிற்கோ என்னிடம் பணம் இல்லாமல் இருந்ததும் ஒரு காரணம். ஏதோ சம்பாதிச்சோம் செலவு பண்ணினோம்னு இருந்தேன். ஓரளவுக்கு பணம் வந்த பிறகு கூட சாதாரணமாகத்தான் இருந்தேன்.

2004 ஆம் ஆண்டு வாக்கில் தங்கம் ஒரு கிராம் 650 ரூபாய் மலேசியாவில் விற்றது. நண்பர்கள் பலர், சொன்னால் நம்ப மாட்டீர்கள், அரை கிலோ வாங்கினார்கள். " ஏன் இவ்வளவு வாங்குகின்றீர்கள்? கடை வைக்கப் போகின்றீர்களா?" என நக்கலாக கேட்டபோது, ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, " தங்கம் விலை ஏறும் வாய்ப்பு உள்ளது. அதனால் இப்போதே வாங்கி பேங்க் லாக்கரில் வைத்துவிட்டால், பெண் கல்யாணத்திற்கு உதவும்" என்று பதில் கூறினார் ஒரு நண்பர். அவர் பெண்ணுக்கு கல்யாண வயது என்றோ இல்லை கல்யாண வயதை நெருங்கி கொண்டிருந்தார் என்றோ நீங்கள் நினைத்தீர்களானால் அது தவறு. அப்போது அவரின் பெண்ணின் வயது ஒன்று. நான் வீட்டில் சொல்லி சொல்லி சிரித்துக்கொண்டிருந்தேன். ஆனால் நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்றும் அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி என்றும் இப்போது உணர்கிறேன். அப்போது 3,25,000 ரூபாய்க்கு அவர் வாங்கிய தங்கத்தின் இன்றைய மதிப்பு சுமார் 8,64,000 ரூபாய். ஏறக்குறைய 5,39,000 ரூபாய் லாபம் அடைந்திருக்கிறார் 6 வருடத்தில். நான் அந்த சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டேன்.

ஆனால், என்னுடைய லாஜிக் என்னவென்றால், அவர் தங்கத்தை அப்படியே வைத்திருக்காமல், எல்லாவற்றையும் விற்று இன்று பணமாக்கி, 3,25,000 ரூபாயை மட்டும் தங்கமாக வைத்து விட்டு, லாபத்தை பணமாக்கி அதை FD யில் வைத்தால் அதை உண்மையான லாபமாக ஏற்றுக் கொள்வேன். ஆனால், நாம் என்ன செய்வோம்,

"அப்பா, நான் 5,39,000 ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டோம்" என சொல்லுவோமே தவிர, அதை பணமாக்க மாட்டோம். இதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது. திரும்பவும் தங்க விலை குறைந்தால் என்ன ஆவது? இந்த மாதிரி எண்ணங்களால்தான் எதிலும் அதிக ரிஸ்க் எடுக்காமல் இருந்து வந்தேன்.

எல்லோரும் என்னை கேட்பதுண்டு, "பைனான்ஸ் ப்ரொபஷனில் இவ்வளவு பெரிய ஆளாக இருந்து கொண்டு முதலீடு விசயத்தில் இவ்வளவு வீக்காக இருக்கிறாயே". நான் அவ்வாறு கேட்கிறார்களே எனக் கோபப்படுவதில்லை. ஏனென்றால் உண்மையைத்தானே சொல்கிறார்கள். அந்த அளவிற்கு இருந்த என்னை, நான் மேலே முதல் பாராவில் குறிப்பிட்ட அந்த நபர் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதை கரைத்து, குழப்பி முதலீடு செய்யுமாறு வற்புறுத்தினார். 2004 லிருந்தே அவர் என்னை எல்.ஐ.ஸியில் முதலீடோ அல்லது பாலிஸியோ எடுக்கச் சொல்லி தொந்தரவு செய்தார். நான் மறுத்துக்கொண்டே இருந்தேன். இந்த முறை அவர் நச்சரிப்பு தாங்காமல் ஒப்புக்கொண்டேன். அவர் என்னை SBI UNIT Linked Insurance Office க்கு அழைத்துச் சென்றார். அங்கு இருந்த மேனேஜர் கம்ப்யூட்டரில் எக்ஸல் டேபிளில் பலவாறு கணக்கு போட்டு,

" சார், இந்த ஸ்கீமுல வருசத்துக்கு 5 லட்சம்னு மூன்று வருடம் தொடர்ந்து முதலீடு செஞ்சீங்கன்னா, மூன்று வருடம் லாக் இன் பீரியட் முடிந்தவுடன் நீங்கள் முதலீடு செய்த 15 லட்சத்துக்கு நாங்கள் 30 லட்சம் கொடுப்போம். நாங்கள் சாதாரண பங்குகளிலோ அல்லது Mutual Fund லோ முதலீடு செய்வதில்லை. எல்லாம் பெரிய பெரிய கம்பனிகளில்தான் முதலீடு செய்வோம். அதுவுமில்லாமல் மூன்று வருடத்திற்கு இன்ஸ்யூரன்ஸ் வேறு உங்கள் குடும்பத்திற்கு கவர் ஆகிவிடும்" என்று கூறினார்.

இதைக் கேட்ட நான் என் இயல்பு நிலையிலிருந்து மாறி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் பேரில் ஒரு லட்சமும், என் தம்பியின் பேரில் ஒரு லட்சமும் போட்டேன். நான் காசோலை கொடுக்கும் முன் என்னைப்போட்டு புடுங்கி எடுத்தார். அவசரப் படுத்தினார். ஒரு நாள் என் தேவைக்கு கார் எல்லாம் கொடுத்தார். பின்புதான் எனக்குத் தெரிந்தது. 5 லட்சத்துக்கு கிட்டத்தட்ட அவருக்கு கமிஷன் 1 லட்ச ரூபாய். ஒரு லட்சத்துக்கு 20,000 ரூபாய் கமிஷன். இதே அடுத்த ஏஜண்டிடம் சென்றிருந்தால், அந்த கமிஷனில் பாதி எனக்கு கிடைத்திருக்கும். அதாவது 90,000 கட்டினால் போதும். ஆனால், தெரிந்த நண்பரே என்னை ஏமாற்றி விட்டார்.அதோடு இல்லாமல், அவருடைய டார்கெட்டை முடிக்க என் 5 லட்சம்தான் உதவியிருக்கிறது. அதனால், பேங்கின் மூலம் அவருக்கு மொரிஷியஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்து, போயும் வந்து விட்டார். இப்படியே சம்பாரித்து பெரிய கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.

ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடம் பணம் கட்ட வேண்டிய தருணத்தில் திருச்சியில் உள்ள பேங்க் மேனேஜருக்கு போன் பண்ணினேன். அந்த புண்ணியவான், "சார், நான் பொய் சொல்ல விரும்புல. fund நல்லா போகலை. அதனால நீங்க ஒரு டேர்மோட நிறுத்திக்குங்க" என்று கூறினார். அவருக்கு ஏனோ எனக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கும் போல. நானும் ஒரு வருடத்திற்கு பிறகு கட்டவில்லை. அம்மா ஒவ்வொரு முறையும் போன் செய்யும் போது 'பேங்கில் இருந்து லட்டர் வந்துள்ளது' என்பார்கள். லாக் இன் பீரியட்ல தானே இருக்கு? அதனால் என்ன எழுதியிருந்தால் என்ன? என்று விட்டு விட்டேன்.

மூன்று வருடம் முடிந்து, தீபாவளி சமயத்தில் ஊருக்கு போயிருந்த போது பணத்தை எடுக்கலாம் என விசாரித்தபோது, அவர்கள் சொன்னதைக்கேட்டு அதிர்ந்து விட்டேன். 5 லட்சத்துக்கு 10 லட்சம் வர வேண்டும், ஆனால் அவர்கள் சொன்னதோ,

" சார், இப்போ எடுத்தீங்கன்னா, 2,50,000 ரூபாய் தான் கிடைக்கும். அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க"

நொந்து போய் வந்து விட்டேன். பொங்கலுக்கு போன போது கேட்டேன்,

" இன்னும் ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கங்க சார். அதிகம் கிடைக்கும்"

போட்ட பணம் கிடைக்க இன்னும் எத்தனை ஆறு மாதம் காத்து இருக்க வேண்டும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ஒழுங்கா பேங்க்ல FDல இருந்திருந்தாலாவது நார்மல் பேங்க் வட்டி வந்திருக்கும். உள்ளதும் போய் இப்போ முதலுக்கே மோசமாயிருச்சு.

அதனால என்னோட அனுபவத்துல சொல்றேன், நல்ல முதலீடுனா என்னோட சாய்ஸ் ரெண்டுதான்:

1) நிலம் (வயல்) அல்லது வீட்டு மனை
2) தங்கம்.

இல்லைனா பேங்க்ல கொடுக்கற வட்டி போதும்னு இருந்துட வேண்டியதுதான். மீதி எல்லாத்துலயும் அதிக ரிஸ்க் இருக்கு.

ஏதோ உங்க கிட்ட பகிர்ந்துக்கனும்னு தோணுச்சு, அதான் சொல்லிட்டேன் .

19 comments:

Anonymous said...

படித்தே தீரவேண்டிய பதிவு.

Kumar said...

Nice one..

Anonymous said...

neenga nejama finance field-la than irukkingala ? paarththa romba appaviyaa theriyuthae ?? enna intha pathivila solirukka vishayam rompa pavama kaadduthae

Muthu Skandan

Unknown said...

வாசித்தோம்

பரிசல்காரன் said...

ஆயிரமோ, ஆயிரத்தைநூறோ சொச்சமா என் கைல இருந்தா டக்னு போய் ஒரு க்ராம் (அப்ப ஆயிரம் இப்ப 1600) காசு வாங்கிட்டு வந்து வெச்சுக்குவேன். அப்படி சேர்த்தறது டக்னு பல நேரத்துல எனக்கு உதவிருக்கு.

வெல் செட் பாஸ்!

butterfly Surya said...

அன்பின் உலகநாதன்,

நான் துறை சார்ந்து எழுதுவதில்லை என்று கூறியிருக்கிறேன்.

தவறான நபரை தேர்ந்தெடுத்தால் தான் இந்த ஏமாற்றம்.


உங்கள் நண்பர் தனது வியாபார உத்திக்காக தவறு செய்து இருக்கலாம். ஆனால் மியூட்சுவல் மற்றும் ஷார் மார்க்கெட் முதலீடுகள் அதிக லாபத்தை கொடுக்கும்.

I agree the risk factor. But If you invest thru experts (not just brokers) you can earn good returns.


உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் முதலீடு ஆலோசனை தேவையெனில் என் மின்னஞசலுக்கு
தொடர்பு கொள்ளவும்.

iniyavan said...

//படித்தே தீரவேண்டிய பதிவு.//

வருகைக்கு நன்றி Shridi.

iniyavan said...

//Nice one..//

வருகைக்கு நன்றி குமார்

iniyavan said...

//neenga nejama finance field-la than irukkingala ? paarththa romba appaviyaa theriyuthae ?? enna intha pathivila solirukka vishayam rompa pavama kaadduthae//

ஆமாம். நான் அப்பாவிதான் முத்து. தங்கள் வருகைக்கு என் நன்றி.

iniyavan said...

//வாசித்தோம்//

வருகைக்கு நன்றி சங்கர்.

iniyavan said...

//ஆயிரமோ, ஆயிரத்தைநூறோ சொச்சமா என் கைல இருந்தா டக்னு போய் ஒரு க்ராம் (அப்ப ஆயிரம் இப்ப 1600) காசு வாங்கிட்டு வந்து வெச்சுக்குவேன். அப்படி சேர்த்தறது டக்னு பல நேரத்துல எனக்கு உதவிருக்கு.

வெல் செட் பாஸ்!//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பரிசல்.

iniyavan said...

//உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் முதலீடு ஆலோசனை தேவையெனில் என் மின்னஞசலுக்கு
தொடர்பு கொள்ளவும்.//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சூர்யா. தொடர்பு கொள்கிறேன்.

iniyavan said...

Hello Sir,


I am a regular reader of your blog. It is very interesting and useful information that you are writing your experience to help others ...


God will bless you...


Thanks and Regards
Saran

நன்றி சரண்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

// "உடம்பு முழுவதும் எண்ணையை தடவிகிட்டு மண்ணில் விழுந்தாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்" //

இதை என் தந்தையார் அடிக்கடி கூறுவார்.
பணம் இருந்தால் நிலம்; தங்கம் (நகையல்ல) காசுகளாக வாங்கிச் சேமிக்கலாம். நகையாகச் சேமிப்பதென்பது பொய்; இங்கே ஒரு சவரன் நகையாக வாங்க சவரன் விலையுடன்; அதே தொகை
செய்கூலியாக அறவிடுகிறார்கள். அதே நகையை விற்கும் பொழுது தங்கத்தின் நிறைக்கே ,அன்றைய வாங்கும் விலையையே நிர்ணயிக்கிறார்கள்.
கிடைக்கும் வட்டிக்கு அரச வங்கிகளில் இட்டுவைப்பது பாதுகாப்பானதே!
தங்கள் அனுபவம் பலருக்குப் பாடம்.

sriram said...

நல்ல பதிவு இனியவன்.

தங்க மேட்டர்ல உங்க கருத்திலிருந்து மாறு படுகிறேன்.

தங்கம் விலை சில நேரங்களில் குறைந்தாலும் Long Run ல ஏறிக்கிட்டேத்தான் இருக்கு. Gold is not an endless commodity. There is a limit of Gold available on earth but the need is ever increasing, so the price is going to go in only one direction - Northwards..

864000 ரூபாய் மதிப்புள்ள தங்கம் என்னிடமிருந்தால் நான் செய்வது

1. அப்படியே வைத்திருப்பேன்,
கண்டிப்பா விலை ஏறும். Cash is the fastest depreciating commodity.
to explain this more : assume your friend sells the gold and invest 864000 Rs in FD, at the current rate of interest of 5-6%, he will have about 10,30,000Rs at the of 3 yrs. The amount of Gold or Silver or Rice or Petrol he would get for that amount after 3 yrs will most likely be less than what he can get for 864000Rs today.

2. I would split the 864000 into Gold and Silver or buy a land (by putting some more money)

3. I would retain gold worth 325,000 and spend the rest on a car or on a vacation. After all we earn to spend and nothing wrong in enjoying the appreciation.

இப்போ இன்சூரன்ஸ் மேட்டருக்கு வருவோம். Unit Linked Insurance Policy களில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. Let me explain my understanding on ULIP.
The investors money is divided into 3, one goes towards the cost of insuring the person, one gets invested in the market and the other goes towards the admin charges (company charges and sales man commission). The last one is pretty high and you have understood that already.

There is a good alternate for this. Instead of giving 5,00,000 to ULIP and get a insurance coverage of 10,00,000 ( I am assuming this), you may take a TERM POLICY with LIC for the same insurance coverage for a very very less premium (im paying about 7000Rs per annum for a term policy of 25 Lakhs) and invest the rest in good Mutual funds (you can get to know where to invest from reliable advisors or from http://new.valueresearchonline.com

money invested in India in mutual funds with a long term horizon is bound to give you good returns.
My outlook is India will sustain 7-8% growth over next 15-25 yrs and if that happens, one can get 10% growth year on year in good funds.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

அவ்வ்வ்வ்
பதிவு சைஸில் ஒரு பின்னூட்டம் போட்டிருக்கேன், ஒரு acknowledgement கூட இல்லியா???
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

iniyavan said...

சாரி ஸ்ரீராம், இரண்டு நாட்களாக கொஞ்சம் வேலையிருந்ததால் அதிகம் நெட் பக்கம் வர முடியவில்லை. அதனால்தான் உடனே பதில் எழுத முடியவில்லை. உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நல்ல பயனுள்ள தகவல்களை தந்திருக்கின்றீர்கள். நிறைய பேரை உங்கள் கருத்து அடைந்துள்ளது.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மீண்டும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

iniyavan said...

//தங்கள் அனுபவம் பலருக்குப் பாடம்.//

தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி யோகன்.

Anonymous said...

Great Post