Feb 26, 2010

இந்த வீடியோவை பாருங்கள்....

நம்மைச் சுற்றி ஆபத்துகள் எப்போதும் உள்ளன. அதில் முக்கியமானது பிரயாணங்களின் போது ஏற்படும் விபத்து. டூவீலர் அல்லது கார் ஓட்டும்போது ஏற்படும் விபத்துகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. டூவீலர்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து ஓட்டினால் ஓரளவு நாம் விபத்துக்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் நம்மில் நிறைய பேர் ஹெல்மெட் போடுவதில்லை. அரசாங்கம் ஹெல்மெட் போடுவதை சட்டமாக கொண்டுவந்தாலும் நாம் மதிப்பதில்லை. ஏதாவது காரணங்கள் சொல்லி அதை தடுத்து நிறுத்துகிறோம். மலேசியாவில் டூவீலர் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். பின்னாடி உட்கார்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் என்பது இங்கே உள்ள சட்டம். இல்லையென்றால் மிக அதிக அபராதம் செலுத்த வேண்டி வரும். அதனால் அனைவரும் ஹெல்மெட் அணிந்துதான் வண்டி ஓட்டுகின்றார்கள்.

அதே போல்தான் கார் ஓட்டுவதும். கார் ஓட்டும்போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணியவேண்டும். பின்னால் அமர்ந்து வருபவர்களும் சீட் பெல்ட் அணிவது ரொம்ப முக்கியம். நம் ஊருக்கு செல்லும்போதெல்லாம் நான் சீட் பெல்ட் அணிந்து காரில் செல்வது வழக்கம். அதைப் பார்த்து கிண்டல் பண்ணியவர்கள் ஏராளம். ஆனால் இப்போது, " இவன் இப்படித்தான்" என விட்டு விட்டார்கள். என்னால் ஒரு சில பேர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவதை பார்க்கும்போது சந்தோசமாக உள்ளது. கார் விபத்தில் தப்பித்தவர்களால் மட்டுமே சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்தை சொல்ல முடியும். மலேசியாவில் சாலைகள் மிக அருமையாக இருக்கும். அதில் கார் ஓட்டிச்செல்வது மிக அருமையான அனுபவம். ஹைவேஸில் அதிக பட்ச வேகம் மணிக்கு 110 கிலோ மீட்டர். நான் மாதம் ஒரு முறை எங்கள் ஊரிலிருந்து கோலாலம்பூருக்கு சென்று வருகிறேன்.மொத்தம் 375 கிலோ மீட்டர் தூரம். ஒவ்வொரு முறை போகும்போதும் அதிக பட்ச ஸ்பீடில் செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் ஏதாவது விபத்து ஒன்று கண்ணில் படுவதுண்டு. அந்த விபத்துக்களைப் பார்க்கும்போது என்னையறியாமல் என் கார் மெதுவாக செல்வதுண்டு. நிறைய விபத்துகளில் நான் பார்க்கிறேன். அதிகம் பாதிக்கப்படுவர்களும், இறப்பவர்களும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தவர்களே.

நண்பர் ஒருவர் கீழ்கண்ட வீடியோவை அனுப்பினார். சீட் பெல்ட்டின் அவசியத்தை உணர்த்தும் வீடியோ இது. இப்போது நம் ஊர் சாலைகளும் உலகத் தரத்திற்கு இருப்பதால், இந்த வீடியோவை பார்க்கும் நண்பர்களும் தயவு செய்து காரில் செல்லும்போது சீட் பெல்ட் போடும் பழக்கத்தை கடைபிடியுங்கள்.

8 comments:

ஆயில்யன் said...

சீட்பெல்ட்டின் மகத்துவம் பற்றி அருமையாக விளக்கும் வீடியோ

குடும்பத்தினரை முன்னிலைப்படுத்தும் விளம்பரங்களைத்தான் இப்பொழுது எல்லா நாடுகளிலும்,போக்குவரத்து அறிவுரை விளம்பரங்களாக வெளியிடப்படுகின்றன.

பகிர்தலுக்கு நன்றி !

இராகவன் நைஜிரியா said...

Seat Belt can save the life, if you wear it.

நைஜிரியாவிலும், சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது..

பரிசல்காரன் said...

பதிவுல எல்லாப்பக்கமும் தேடிப்பாக்கறேன்.. எனக்கு ஒரு நன்றி கூட கிடையாதா?

சரி. சரி.. பாத்துட்டேன்.. பார்த்துக்கறேன்....!

காரணம் ஆயிரம்™ said...

கிரேட்!!!

காரில்லை..
ரோடில்லை..
விபத்தில்லை..

ஆனால், மெஸேஜ் அனைவரையும் சென்றடைந்திருக்கும்!

அத்துடன், சாலை வாகன விதிமுறைகளை மீறுவது என்பது நம்மவருக்கெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி ஆகிவிட்டது. சிவப்பு விளக்கு ஒளிர்ந்தாலும், பாதசாரிகள் கடப்பதையும் கவனிக்காமல் ‘விர்ர்ர்ர்ரூம்’கிறார்கள் பைக்காரர்கள். இந்த விஷயத்தில், தனியார்கள் மட்டுமில்லை.. மாநகர பேருந்துகளும் அப்படித்தான். இந்த சிக்னல் சிக்கலுக்கும் ஏதாவது வீடியோ இருந்தால் தேவலை.

அன்புடன்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com

iniyavan said...

//சீட்பெல்ட்டின் மகத்துவம் பற்றி அருமையாக விளக்கும் வீடியோ//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஆயில்யன்.

iniyavan said...

//Seat Belt can save the life, if you wear it.

நைஜிரியாவிலும், சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது..//

வருகைக்கு நன்றி இராகவன் சார்.

iniyavan said...

//பதிவுல எல்லாப்பக்கமும் தேடிப்பாக்கறேன்.. எனக்கு ஒரு நன்றி கூட கிடையாதா?

சரி. சரி.. பாத்துட்டேன்.. பார்த்துக்கறேன்....!//

இந்தப் பதிவே உமக்காக எழுதியதுதானேய்யா!

iniyavan said...

//ஆனால், மெஸேஜ் அனைவரையும் சென்றடைந்திருக்கும்! //

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி காரணம் ஆயிரம்.