Mar 29, 2010

பெட்ரோனாஸ் டவரில் நான்!கடந்த ஒரு மாதமாக கடுமையான வேலை. கடுமையாக உடல் உழைப்பு என்றால் பரவாயில்லை. ஆனால், மூளையை கசக்கிக்கொள்ளும் வேலையாக உள்ளது (மூளை இருக்கிறதா எனக்கு என்று கேட்டு, நீங்கள் உங்கள் மூளையை கசக்கி கொள்ள வேண்டாம்). எப்போதுமே ஒரு டென்ஷனிலே வாழ வேண்டி உள்ளது. இதையெல்லாம் விட்டு அவ்வளவு சுலபமாக விலகிச் செல்லவும் முடியாது போல் உள்ளது. கடுமையான வேலை செய்து பழக்கப்பட்டவர்கள், ரிடையர்ட் ஆன பிறகு ஒரு வேலையும் இல்லாத காரணத்தினால் நோயாளியாகி போகிறார்கள். அப்படி நோயாளி ஆன பல நபர்களை என் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறேன். ஆனால், என் அப்பா அவர் இறக்கும் வரையில் வேலை செய்து கொண்டுதான் இருந்தார். டென்ஷன் இல்லாமல் என்னால் ஒரு நாள் கூட வாழ முடியாது போல் உள்ளது. அதனால் கடுமையான பணிகளை சிறிது புன்முறுவலுடனே ஏற்றுக்கொள்ள பழகிவிட்டேன். எந்த டென்ஷனையும் நாம், அவ்வப்போது குடும்பத்துடன் வெளியில் செல்வதன் மூலம், குறைத்துக்கொள்ள முடியும். அதைத்தான் கடந்த வாரம் நான் செய்தேன்.பெட்ரோனாஸ் இரட்டைக்கோபுரத்தையும், கே எல் டவரையும் பார்க்காதவர்கள் மலேசியாவில் இருக்க முடியாது. நான் பலமுறை பார்த்திருக்கிறேன். தற்போது வாராவாரம் பெட்ரோனாஸ் இரட்டைக்கோபுரத்தை பார்க்கிறேன். எங்கள் கமபனிக்கு ராமெட்டீரியல் பெட்ரோனாஸிடம்தான் வாங்குகிறோம். அதனால், அடிக்கடி அங்கே மீட்டிங் செல்வதுண்டு. எங்கள் மீட்டிங் நடைபெறும் இடம் 43வது மாடி. பெட்ரோனாஸ் டவரில் மொத்தம் 88 மாடிகள். இரண்டு கோபுரத்தையும் இணைக்கும் SKY Bridge இருப்பது 41வது மற்றும் 43வது மாடியில். 41வது பாலம் பொது மக்களுக்கு. 43வது மாடி அலுவலக உபயோகத்திற்கு. நான் ஒவ்வொரு முறை மீட்டிங் முடிந்ததும், அந்த மேல் அதிகாரிகளுடன் 43வது பாலத்தை அடிக்கடி பார்ப்பதுண்டு. போன வாரம் 43வது பாலத்திலிருந்து வீட்டிற்கு பேசும்போது என் பிள்ளைகள், "அடுத்த தடவை கண்டிப்பாக அவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்" என்று கூறினார்கள். அந்த அதிகாரி, " சார், நீங்கள் வரும் நாளை சொல்லுங்கள். நான் ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.எனக்கு அதில் உடன்பாடு இல்லை. திருப்பதிக்கு சென்றால் வரிசையில் சென்று தரிசிப்பதையே விரும்புவேன். அப்போதுதான் அதன் சுகம் தெரியும். அவர்களுடன் போனால் நாம் மட்டுமே அந்த பாலத்தை பார்க்க முடியும். ஆனால், பொது மக்களுடன் போனால், அவர்களுடன் சேர்ந்து கூட்டமாக பார்க்கலாம். அந்த சுகமே தனி. ஹோட்டலில் சொன்னார்கள், "சார், இப்போ மணி 7.15, போய் இப்பவே டிக்கட் வாங்கி வந்துவிடுங்கள். பின்பு வந்து காலை உணவு சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அங்கே போய் பொறுமையாக பார்த்துவிட்டு வாருங்கள்".அதனால், காலை 7 மணிக்கு கிளம்பி, சரியாக காலை 7.20க்கு டிக்கட் கவுண்டருக்கு சென்றோம். பிறகுதான் என் தவறினை உணர்ந்தேன், "ஒழுங்காக அந்த அதிகாரிகள் சொன்னபடி 43வது மாடி பாலத்திற்கு சென்று இருக்கலாம்". 7.20லிருந்து வரிசையில் நின்றோம். ஏகப்பட்ட வெளிநாட்டு மக்கள். ஒரு நாளைக்கு 1700 டிக்கட்தான் கொடுப்பார்களாம். வெள்ளியன்று 1400 டிக்கட்தான். நாங்கள் சென்றது கடந்த வெள்ளிக்கிழமை. இரண்டு மணிநேர அவஸ்தைக்கு பிறகு 9.20க்கு டிக்கட் கிடைத்தன. நீங்கள் பார்க்க விரும்பும் நேரத்தை நீங்களே கேட்டு பெறலாம். காலை 9 மணிக்கு ஆரம்பித்து பேட்ச் பேட்ச்சாக மாலை 6.30 மணி வரை அனுமதிக்கிறார்கள். எங்களுக்கு கிடைத்தது காலை 11.30க்கு. பிறகு ஹோட்டல் போய் சாப்பிட்டுவிட்டு, 11.00 மணிக்கு வந்தோம். 11.15க்கு உள்ளே அனுமதித்து, ஒரு 7 நிமிடத்திற்கு டவரைப்பற்றிய ஒரு வீடியோ போடுகிறார்கள்.சரியாக 11.30க்கு லிப்டில் ஏறினால, 2 மணி நேரம் காத்திருந்து டிக்கட் வாங்கி, 41வது மாடி பாலத்தை அடைய லிப்ட் எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 58 வினாடிகள்தான். ஆனால், அந்த பாலத்தில் நடக்கும்போது ஏற்படும் சந்தோசம் இருக்கிறதே, அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை. அதை அனுபவித்தால்தான் உணரமுடியும். நீங்களும் மலேசியா வந்தால், தயவு செய்து ஒரு முறை பெட்ரோனாஸ் இரட்டைக்கோபுரத்தை பார்த்து விடுங்கள்.

இன்னும் சில போட்டோக்கள் இங்கே:நான் இருக்கும் கடைசி மூன்று போட்டோக்களும் என் வீட்டில் எடுத்தார்கள். நான் கேட்டேன்,

" ஏம்மா, ரொம்ப கருப்பா இருக்கு. லைட்டிங் பத்தலையா?"

" அப்படி எல்லாம் இல்லைங்க. சட்டில இருக்கறதுதானே அகப்பையில வரும்"

ஆமால்ல!!!

நாளை கே.எல். டவர் பற்றி.....

6 comments:

வடுவூர் குமார் said...

எங்க‌ளை மாதிரி ஆட்க‌ளுக்கு இது ஒரு தின‌ச‌ரி நிக‌ழ்வு ஆதாவ‌து உய‌ர‌த்தில் இருந்து பார்த்து அனுப‌விப்ப‌து.
நான் அங்கிருக்கும் போது இத‌ற்கு அஸ்திவார‌ம் போட்டுக்கொண்டிருந்தார்க‌ள்.

வடுவூர் குமார் said...

எங்க‌ளை மாதிரி ஆட்க‌ளுக்கு இது ஒரு தின‌ச‌ரி நிக‌ழ்வு ஆதாவ‌து உய‌ர‌த்தில் இருந்து பார்த்து அனுப‌விப்ப‌து.
நான் அங்கிருக்கும் போது இத‌ற்கு அஸ்திவார‌ம் போட்டுக்கொண்டிருந்தார்க‌ள்.

iniyavan said...

//எங்க‌ளை மாதிரி ஆட்க‌ளுக்கு இது ஒரு தின‌ச‌ரி நிக‌ழ்வு ஆதாவ‌து உய‌ர‌த்தில் இருந்து பார்த்து அனுப‌விப்ப‌து.
நான் அங்கிருக்கும் போது இத‌ற்கு அஸ்திவார‌ம் போட்டுக்கொண்டிருந்தார்க‌ள்.//

வருகைக்கு நன்றி வடுவூர்குமார்.

Kumar said...

Nice info!. Keep posting.

iniyavan said...

//Nice info!. Keep posting.//

Thanks Kumar.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//எனக்கு அதில் உடன்பாடு இல்லை. திருப்பதிக்கு சென்றால் வரிசையில் சென்று தரிசிப்பதையே விரும்புவேன். அப்போதுதான் அதன் சுகம் தெரியும். அவர்களுடன் போனால் நாம் மட்டுமே அந்த பாலத்தை பார்க்க முடியும். ஆனால், பொது மக்களுடன் போனால், அவர்களுடன் சேர்ந்து கூட்டமாக பார்க்கலாம். அந்த சுகமே தனி//
அட நம்ம பழக்கமாச்சே!
இக்கோபுரங்கள் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன்.படங்கள் நன்று!