'அதைப்' பற்றிய எண்ணங்கள் என் மனதில் தோன்ற ஆரம்பித்தது 9 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது. அப்போதெல்லாம் இப்போது போல் இண்டர்நெட் வசதிகள் இல்லை. வகுப்பில் வயதில் பெரிய பையன்கள், அதாவது ஒரே வகுப்பில் நிறைய வருடம் படிக்கும் நண்பர்கள் கதை கதையாக சொல்வார்கள். நாங்கள் 'ஆ' என்று வாய் பிளந்து கேட்டுக்கொண்டு இருப்போம். அவர்கள் சொல்வது சரியா? தவறா என்று கூட நாம் யாரிடமும் கலந்து ஆலோசிக்க முடியாது. சிக்கலான வயது அது. நம் ஒத்த வயதுடைய பெண்களைப் பார்த்தாலே உடம்பும், மனதும் சும்மா 'ஜிவ்வ்வ்' என்று ஏறும். அதனால் உடல் நிலை கெட்டதுதான் மிச்சம். கல்லூரி படிக்கும் போது ஒரளவு தெரிய ஆரம்பித்தது. பல புத்தகங்கள் நண்பர்கள் கொடுத்து உதவினார்கள். பாடப் புத்தகங்கள் கொடுக்கின்றார்களோ இல்லையோ இது போன்ற புத்தகங்கள் நிறைய கொடுத்து உதவுவார்கள்.
பிறகு ஒரு வாரியாக தியரிடிக்கலாக தெரிந்து கொண்டேன். பிராக்டிக்கலாக தெரிந்து கொள்ளும் துணிவு எனக்கு என்றைக்குமே வந்தது இல்லை. காரணம் பயம் தவிர வேறு என்ன? பிறகு எல்லாம் தெரிய வந்த போதுதான், படிப்பதற்கும், பார்ப்பதற்கும், செயல் முறைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது என தெரிய வந்தது. முழுமையான சந்தோசம் அடைய தேவை மனமும் மனமும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும், சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்கக் கூடாது என்ற உண்மையும் பிறகுதான் தெரிந்தது.
நான் நிறைய நாட்கள் நினைப்பது உண்டு. இந்த கற்பழிப்பு என்கின்றார்களே? அதில் உண்மையிலேயே சம்பந்தப்பட்ட அந்த நபர் முழுமையான சுகம் அடைய முடியுமா? என்னை பொறுத்தவரை முடியாது என்றே நினைக்கிறேன். அதற்குறிய மனமும், மனதில் ஏற்படும் அந்த உணர்ச்சிகளும், உடல் ஒத்துழைப்பும் இல்லாமல் முழு சந்தோசம் அடைய முடியாது என்றே நான் நினைக்கிறேன். அதனால்தான் கூடலை ஒரு புனிதமான செயல் என்றார்கள், நம் முன்னோர்கள். நானும் அந்த ஒரு விசயத்தை ஒரு புனிதமான செயல் என்றே நினைக்கிறேன்.
இதைப் பற்றி ஏன் இப்போது எழுதுகிறேன் என்றால், அப்படிபட்ட அந்த புனிதமான செயல் இப்போது எப்படி மக்களால் பார்க்கப் படுகிறது? என்று எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலம் சொல்லத்தான். கோலாலம்பூரில் புக்கிட் பிண்டாங் என்று ஒரு பகுதி உள்ளது. மிகவும் பிரபலாமான பகுதி அது. அங்கே நிறைய ஷாப்பிங் மால்கள் உள்ள ஒரு பிஸியான ஏரியா. அங்கே நிறைய மஜாஜ் பார்லர்களும், பப்களும் உள்ளது. அங்கே இரவானாலும், பகலானாலும் நீங்கள் அங்கே நடந்து செல்லும் போது, நிறைய நபர்கள் உங்களை, மஜாஜுக்கு அழைப்பார்கள். தேவை என்றால் போகலாம், தேவை இல்லை என்றாலும் உங்களை வற்புறுத்த மாட்டார்கள். இங்கே உள்ள அனைத்து ஹோட்டல்களிலுமே மஜாஜ் பார்லர்கள் உண்டு.
எல்லா ஹோட்டல்களிலுமே மஜாஜும் உண்டு, மஜாஜ் என்ற பெயரில் மற்றவைகளும் உண்டு. நாம்தான் கொஞ்சம் சுயக்கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். எல்லா அறைகளிலும் அதற்குறிய குறிப்புகளோடு பேப்பர்களும் உண்டு. அதுவும் நீங்கள் தனியே வந்து இருக்கின்றீர்கள் என்றால், சில சமயம் போன் செய்து உங்களுக்கு மஜாஜ் வேண்டுமா? என்று கேட்பதும் நடக்கும்.
9வது படிக்கும்போது, 'என்ன? என்ன? எப்படி இருக்கும்' என்று நினைத்த அந்த நினைவு இன்று அங்கே நடந்து போகையில் அவர்கள் என்னை அழைக்கும்போது ஏற்படுவதில்லை. எதையும் மூடி வைத்தால்தான் அதற்கு மதிப்பு உண்டு என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நம் ஊரில் ஒரு பெண்ணை பாவடை தாவணியில் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட காலம் மட்டுமே என் நினைவில் வந்து போகிறது. அப்படிப்பட்ட என்னை ஒரு பெண் ஒரு ஷார்ட்ஸையும், ஒரு ஸீ த்ரூ டி சர்ட்டையும் அணிந்து கொண்டு கூப்பிடும்போது, அந்த உணர்ச்சி வருவதற்கு பதில் அறுவெருப்பே வருகிறது.
புனிதமாக செயல்படுத்த வேண்டிய அந்த உறவை காசுக்காக அவர்கள் சர்வசாதரணமாக விற்கும்போது அவர்களை நினைத்து பரிதாபம் மட்டுமே என்னால் பட முடிகிறது. நம் நாட்டில் எந்த பெண்ணும் அவ்வாறு தமிழில் கேட்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இங்கே ஆங்கிலத்தில், ' அது வேண்டுமா? இது வேண்டுமா? பண்ணட்டா?' என்று கேட்கையில், செக்ஸ் என்பது எவ்வளவு கேவலமாக போய் விட்டது என்று தெரிகிறது. அங்கே கிளப்களுக்கு வரும் வெளிநாட்டுக்காரர்கள், பிலிப்பினோ பெண்களையோ அல்லது தாய்லாந்து பெண்களையோ சர்வசாதரணமாக அழைத்துச் செல்வதை நாம் பார்க்கலாம். அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்து சென்றால் கூட ஹோட்டல் நிர்வாகம் எதுவும் கேட்பதில்லை. அவர்களுக்கு எல்லாம் எய்ட்ஸ் என்ற ஒரு நோய் இருப்பது தெரியுமா? இல்லை அவர்களுக்கு எல்லாம் வராதா? என்றும் எனக்குத் தெரியவில்லை.
வெளி நாட்டில் தனியாக இருந்து வேலை பார்க்கும் ஆண்கள் அல்லது தனியாக ஹோட்டலில் தங்கும் ஆண்கள், தங்கள் கற்பை காப்பற்றிக் கொள்வது என்பது மிகவும் கஷ்டமான சூழ்நிலை போல் ஆகிவிட்டது. சுயக்கட்டுப்பாடு என்பது மிக மிக முக்கியம். இல்லை என்றால் சில நிமிட சுகத்திற்கு பல வருட சந்தோசங்களை இழக்க வேண்டி வரலாம்.
ஒரு சில அனுபவங்கள் பற்றி நாளைய இடுகையில்...
இன்னும் வரும்...

11 comments:
இதை எதற்கு 18+ என்று போட்டீர்கள் தலைவரே..:)
தலைவரே,
அந்த விசயத்தைப் பற்றி எழுதுனதுனால் அப்படி போட்டேன்.
வேணும்னா 18+ எடுத்துடவா???
I would like to quote a dialogue from the Associates (woopi goldberg movie)
'The sex organ is not between the legs but it is between the ears'
So true!
ஹலோ உலகு இந்த விசயத்துக்கு 18+சா?
முடியால...
//சுயக்கட்டுப்பாடு என்பது மிக மிக முக்கியம்.//
நச்சுன்னு சொல்லியிருக்கிங்க.
18+ எடுத்துடுங்க. அனைவரும் படித்து தெரிந்துகொள்ளட்டும்.
Nice one!. Much needed.
//I would like to quote a dialogue from the Associates (woopi goldberg movie)
'The sex organ is not between the legs but it is between the ears'
So true!//
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ரவி.
//ஹலோ உலகு இந்த விசயத்துக்கு 18+சா?
முடியால...//
நண்பரே,
18+ எடுத்துட்டேன். வருகைக்கு நன்றி.
//நச்சுன்னு சொல்லியிருக்கிங்க. //
நன்றி வரதராஜுலு.
//18+ எடுத்துடுங்க. அனைவரும் படித்து தெரிந்துகொள்ளட்டும்.//
எடுத்துட்டேன் நண்பரே.
//Nice one!. Much needed.//
நன்றி குமார்.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு..(18+)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 6th April 2010 07:56:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/219456
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
Post a Comment