Apr 7, 2010

ஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2

நான் கோலாலம்பூரில் தங்கும் சமயங்களில் அதிகாலை எழுந்து, என் ஹோட்டலில் இருந்து பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் வரை வாக்கிங் செல்வதுண்டு. அது ஒரு அருமையான இனிமையான அனுபவமாக இருக்கும். அவ்வாறு ஒரு நாள் நான் வாக்கிங் சென்ற போது எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வெளிநாட்டுக்கு தனியே வந்து தங்கும் புதிய நண்பர்களுக்கு என் அனுபவம் உதவுமே என்ற நோக்கில்தான் நான் இதை எழுதுகிறேன். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை.

அந்த இரவு என் மீட்டிங் முடிய வெகு நேரம் ஆகிவிட்டது. எனக்கு ஹோட்டல்களில் சரியாக தூங்க முடியாது. அதனால் ஏதாவது புத்தகம் படித்துக்கொண்டோ, பாட்டுக்கெட்டுக்கொண்டோ தூங்குவேன். ஆனால் எந்த நேரத்தில் தூங்கினாலும், காலை வாக்கிங் செல்ல எழுந்துவிடுவேன். அன்று காலையும் அப்படித்தான். சரியாக 5.30க்கு எனக்கு ஏற்படப்போகும் ஆபத்தை உணராமல் என் வாக்கிங்கை தொடங்கினேன். லேசாக மழை தூறிக்கொண்டு இருந்தது. ஹோட்டலிலே எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு குடை வாங்கிக்கொண்டேன். ஹோட்டலுக்கு எதிரில் மிக அருகிலேயே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உள்ளது. நான் தங்கியிருந்ததும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல்தான். இதை எதற்கு நான் கூறுகிறேன் என்றால், இரண்டு ஹோட்டல்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தை விளக்கத்தான்.

நான் தங்கியிருந்த ஹோட்டலில் அதிகமாக மிடில் ஈஸ்டில் இருந்து வருபவர்கள்தான் தங்குவார்கள். வெள்ளைக்காரர்களை பார்ப்பது அறிது. ஆனால், அருகில் உள்ள ஹோட்டலில் அதிகமாக ஈரோப்பியர்களும், அமெரிக்கர்களும் தங்குவார்கள். இரண்டுமே ஐந்து நட்சத்திர விடுதி என்றாலும், இரண்டுக்கும் ஒரு கலாச்சார வேறுபாடு இருப்பதை எளிதாக நம்மால் புரிந்து கொள்ள முடியும். சரி, விசயத்திற்கு வருகிறேன். நான் என் குடையை எடுத்துக்கொண்டு என் வாக்கிங்கை தொடங்கினேன். அந்த ஹோட்டலில் அதிகமாக செயற்கையாக செய்த புதர்கள் போல், அங்கங்கே செடிகள் இருக்கும். நான் அதன் அழகை பார்த்து ரசித்தபடியே அன்றைய மீட்டிங்களில் பேசப்போவதை அசைப்போட்டுக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, அந்த இடத்தை கடக்கையில், திடீரென ஒரு கை என்னை உள்ளே இழுத்தது. என்னவோ, ஏதோ என்று நான் சுதாரிப்பதற்குள் நான் புதரின் உள்ளே ஒரு மிக அழகிய பெண்ணின் இரு கைகளுக்கிடையே இருந்தேன். அதோடு இல்லாமல் திடீரென அந்த பெண் தன்னுடைய டி ஷர்ட்டை முழுவதுமாக உயர்த்திவிட்டாள். எல்லாம் அப்படியே வெளியே தெரிந்தது. அவளுடைய இன்னோரு கையால் என்.................?

இந்த இடத்தில் உங்களுக்கு நான் ஒரு விசயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். உங்களுக்கு கொத்து புரோட்டா என்றால் சாப்பிட ரொம்ப பிடிக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக ஒரு பிளேட் கொத்து புரோட்டாவை அதிகாலை நீங்கள் எழுந்தவுடன் கொடுத்தால் சாப்புடுவீர்களா? மாட்டீர்கள். ஏன் என்றால், அதற்கு என்று ஒரு நேரம் இருக்கிறது. உங்களுக்கு பிடித்ததை சாப்பிட உங்களுக்கு பசி இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு சாப்பிட ஆசை வரும். அது போல்தான் ஆனது என் நிலை.

என்னதான், எனக்கு பிடிக்கும் என்றாலும் நான் 'அதை' பார்க்கும் மன நிலையில் அப்போது இல்லை. எனக்கு வாக்கிங் முடிந்து வந்து எங்கள் சேர்மனுடன் ப்ரேக் பாஸ்ட் மீட்டிங் முடிக்க வேண்டும், பிறகு வெளியே மீட்டிங் செல்ல வேண்டும் என்றுதான் என் மனம் நினைத்துக் கொண்டிருந்ததே தவிர, அவளின் டி ஷர்ட்டின் உள்ளே உள்ளதை பார்க்க ஆசைப்படவில்லை. ஆனால், நான் அவள் கைகளின் உள்ளே. என்ன செய்வது? திரும்பி பார்த்தால் அருகிலேயே ஒரு போலிஸ் பூத். கத்தலாம் என்றால், அவள் ஏதாவது நம்மை மாட்டிவிட்டால்?, 'நாம் வேறு இந்தியாவில் இருந்து வந்து இங்கே வேலை பார்ப்பவன்', அதனால் போலீஸ் அவர்களுக்கு சாதகமாகதான் நடந்து கொள்ளும், என்ன செய்வது? ஒரு நிமிடத்தில் அனைத்தும் நடந்தது.

திடீரென ஒரு சிந்தனை என் மனதில் தோன்றியது. "நாமோ தினமும் ஜிம் சென்று உடம்பை நன்றாக வைத்துள்ளோம். அவளோ ஒரு பெண். அதனால் சமாளிக்கலாம்" என நினைத்து, அவளை ஒரே தள்ளு புதரில் தள்ளி ஒட்டமாக எதிர் திசை நோக்கி ஓடினேன். உடம்பெல்லாம் வேர்த்து கொட்ட ஆரம்பித்து விட்டது. இருதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. இதை நான் சொல்கையில் சிலருக்கு சற்று மிகையாக தெரியலாம். எந்த செயலுமே மூளை ஒத்துழைத்தால் மட்டுமே உடலும் ஒத்துழைக்கும். இல்லை என்றால் கஷ்டம்தான். இதை விளக்குவதற்கு நான் இன்னுமொரு உதாரணமும் சொல்கிறேன். ஒரு முறை ஒரு நண்பரின் வற்புறுத்தலின் பேரில் ஒரு மிக உயர்ந்த கிளப்பிற்கு போனேன். அங்கு உள்ள பெண்கள் எல்லாம் ஸ்கூல் ஸ்டுடண்ட் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அங்கே காரை பார்க்கிங்கில் நிறுத்த இடம் இல்லை. அங்கே சிறு சிறு அறையாக இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை. அங்கே உள்ள பெண்ணிடம் பேச, அருகில் அமர்ந்து சாப்பிட என்று.... அந்த சிறிய அறையில் ஒரு ஷோபா, டிவி, பாத்ரூம் டாய்லெட் எல்லாம் இருக்கும். இது எல்லாம் அங்கே இருந்த மேனஜர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். நான் அங்கே போனவுடன், எனக்கு ஏற்பட்ட உணர்ச்சியை உங்களுக்கு இங்கே சொல்கிறேன்.

என் நண்பர் அந்த மேனேஜரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். என் உடம்பு நடுங்குகிறது. வயிற்றைக்கலக்குகிறது. இருதயம் வேகமாக அடிக்க ஆரம்பிக்கிறது. கால்கள் தள்ளாடுகிறது. என் நண்பர் பயந்து போய் என்னை அழைத்து வந்து விட்டார். வெளியே வந்ததும் நார்மலாக ஆகிவிட்டேன். என் நண்பர், " நீ எல்லாம் பேசதான் லாயக்கு. எதற்கும் ஒரு பிரோயசனமும் இல்லாத ஆள்" எனக் கோபித்துக் கொண்டார். உண்மைதான். எப்போதோ என் அப்பா அம்மா சொன்ன அறிவுரைகள்தான் என்னை இன்னும் எந்த தப்பும் செய்யாமல் வைத்துள்ளது. அங்கே சென்றவுடன், 'இது தவறான இடம்' மூளை ஆர்டர் போட்டதால்தான் என் உடம்பு ஆட ஆரம்பித்தது. இதுதான் உண்மை. நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

மீண்டும் விசயத்திற்கு வருகிறேன். பிறகு ஒரு வழியாக என் வாக்கிங்கை அரைகுறையாக முடித்துக்கொண்டு அதே வழியில் மிக ஜாக்கிரதையாக நடந்து வந்தேன். அப்போது சிறிது வெளிச்சம் வந்திருந்தது. அந்த ஹோட்டல் அருகிலேயே ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. அதில் போய் பேஸ்ட் வாங்குவதற்காக சென்றேன். உள்ளே சென்றே எனக்கு ஒரே அதிர்ச்சி. அங்கே புதரின் உள்ள என்னை இழுத்த அதே பெண் சிகரட் வாங்கிக்கொண்டிருந்தாள்.

என் அதிர்ச்சி அவள் சிகரட் வாங்கியதால் ஏற்பட்டது அல்ல. பின் எதனால்? ஏன் என்றால் அவ்வளவு கவர்ச்சியும், அழகும், செக்ஸியான முகமும் கொண்டிருந்த அவள் ஒரு பெண்ணே அல்ல. அவள் ஒரு ஷீ மேல். அந்த மாதிரியான நபர்கள் ஒரு சில விசயத்தில் ரொம்ப பேமஸ் என்று பின்னால் அறிய நேரிட்டது. அவர்களின் வியாபார இடம் இது போல செடிகள் நிறைந்த இடமும், ஹோட்டல்களின் கார் பார்க் ஏரியாவும் என்பதை, பின்பு நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

எனக்கு எப்போதுமே அவர்கள் மேல் ஒரு பரிதாபம் உண்டு. ஆனால், அதிலும் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். சிலர் இப்படியும் இருக்கிறார்கள். அவர்களாவது ஏதோ தெரியாமலோ அல்லது வயிற்று பிழைப்புக்காகவோ இப்படி செய்கிறார்கள். ஆனால், ஆண்களில் சிலரும், பெண்களில் சிலரும் கூட இப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பது உங்களால் ஜீரணிக்க முடிகிறதா?

ஆண்களில் சிலரும் எந்த அளவிற்கு கீழ் இறங்கி 'அதற்காக' அலைகிறார்கள் என்பதைப் பற்றிய என் அனுபவம் நாளை......

இன்னும் வரும்...

7 comments:

மணிஜி said...

கேபிள் பாவம்...

மணிஜி said...

கொத்துப்புரோட்டாவை ஏன் டீ ஷர்ட்டுக்குள் வைத்திருந்தாள் உலக்ஸ்?

iniyavan said...

மணிஜீ has left a new comment on your post "ஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2":

கொத்துப்புரோட்டாவை ஏன் டீ ஷர்ட்டுக்குள் வைத்திருந்தாள் உலக்ஸ்.

iniyavan said...

மணிஜீ...... to me
show details 8:37 PM (15 hours ago)


மணிஜீ...... has left a new comment on your post "ஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2":


கேபிள் பாவம்...

- Hide quoted text -

Kumar said...

என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. முதலில் இந்த பதிவை முடியுங்கள். நான் பிறகு சொல்லுகிறேன் எனது கண்ணோட்டத்தை.

iniyavan said...

Kumar said...

என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. முதலில் இந்த பதிவை முடியுங்கள். நான் பிறகு சொல்லுகிறேன் எனது கண்ணோட்டத்தை.

April 7, 2010 1:58 PM

iniyavan said...

//என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. முதலில் இந்த பதிவை முடியுங்கள். நான் பிறகு சொல்லுகிறேன் எனது கண்ணோட்டத்தை.//

குமார்,

பதிவு முடிந்ததாக நினைத்துக்கொண்டு உங்கள் கண்ணோட்டத்தை சொல்லுங்கள்.