Apr 26, 2010

மிக்ஸர் - 26.04.2010

விஜய் படங்களின் பாடல்கள் என்றால் அனைத்துமே சூப்பராக இருக்கும். யார் மியுஸிக் டைரக்டராக இருந்தாலும் அனைத்துப் பாடல்களுமே ஹிட்தான். அப்படித்தான் இது வரை இருந்தது. ஆனால், சுறா படத்தின் பாடல்கள் அவ்வளவு நன்றாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நானும் தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எப்படியாவது நமக்கு பிடிக்காதா? என்ற நம்பிக்கையில். ஆனால்..? விஜய் படங்களுக்கு ஏ. ஆர் ரகுமான், ஹரிஷ் ஜெயராஜ், விஜய் ஆண்டனி மட்டுமே மியூஸிக் டைரக்டர்களாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், இந்தப் படம் சன் டிவியின் வெளியீடு. எப்படியாவது பாடல்களை ஹிட் ஆக்கி விடுவார்கள்.

ம்ம்ம். அடுத்த நல்ல பாடல்கள் வரும்வரை விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களை கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

********************************************************************

சிறு வயதில் பள்ளி விடுமுறை என்றால் ரொம்ப கொண்டாட்டமாக இருக்கும். படிக்க வேண்டாம். யாரும் அதிகம் கண்டிக்க மாட்டார்கள். தெருவில் விளையாடலாம். கோலிக்குண்டு, கிட்டிப்புல், கபடி இப்படி நிறைய. மேல் நிலை பள்ளி படிக்கையில் வீட்டில் கேரம், செஸ் விளையாடுவோம். அதைத் தவிர யாராவது விருந்தினர்கள் வந்து போய் கொண்டு இருப்பார்கள். அதிகாலையும், சாயங்கால வேளைகளிலும் கிரிக்கட் விளையாடுவோம். கல்லூரி படிக்கையில் நிறைய நேரம் நண்பர்களுடன் அரட்டையில் செலவிடுவோம்.

ஆனால் உறவினர் வீட்டிற்கு லீவிற்காக சென்றதே இல்லை. என்ன காரணம் என்று இன்று வரை தெரியவில்லை. அப்பா எங்களை எந்த உறவினர் வீட்டிற்கும் லீவிற்காக அனுப்பியதே கிடையாது. இருந்தாலும் சந்தோசமாகவே விடுமுறை நாட்களை அனுபவித்திருக்கிறேன். ஆனால், அதே சந்தோசங்கள் என் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை எனும்போது மிகுந்த வேதனையாக உள்ளது. என் பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை விட்டு 10 நாட்கள் ஆகிறது. ஆபிஸ் வேலை காரணமாக எங்கும் கூட்டிச் செல்ல இயலவில்லை.

நான் சிறு வயதில் அனுபவித்த எதுவுமே அவர்கள் அனுபவிக்காமல் போய்விடுவார்களோ? என வருத்தமாக உள்ளது. நான் வசிக்கும் தெருவில் இந்தியர்களே கிடையாது. எல்லோருமே மலேசியர்கள். சேர்ந்து விளையாடுவது என்பது நடக்காத காரியம். காரணம் கலச்சார வேறுபாடு. வீட்டிலே பிள்ளைகள் அடைந்து கிடப்பதை நினைக்கையில் வெறுப்பாக உள்ளது.

பணத்திற்காக என்னவெல்லாம் இழக்க வேண்டியுள்ளது பாருங்கள். என் பிள்ளைகள் நிறையவே மிஸ் செய்கிறார்கள். அவர்கள் மட்டுமா? நாங்களும்தான். எப்போழுது இந்தியா வந்து வாழப் போகிறோம் என்று ஏக்கமாக உள்ளது.

********************************************************************

சனிக்கிழமை இரவு 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சி சன் டிவியில் பார்த்தேன். இது இந்தியாவில் சென்ற வாரம் ஒளிப்பரப்பட்டு இருக்கும் என நினைக்கிறேன். சமீபகாலமாக இந்த நிகழ்ச்சி மிகவும் போரடிக்க ஆரம்பித்து விட்டதால், மதுரை முத்துவின் ஜோக்குகளுக்கு பிறகு பார்ப்பதில்லை. ஆனால் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக பிரிதிவிராஜ் வரவே முழுவதும் பார்த்தேன். பிரிதிவியின் பங்களிப்பும் மிக நன்றாகவே இருந்தது. அதில் ஈரோடு சீனுவும், கிரியும் சேர்ந்து செய்த அண்ணாமலை படக் காமடி கிளாஸ். இன்னும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். தலைவர் ரஜினி பார்த்தால் கூட சிரித்துக்கொண்டே இருப்பார்.

பார்க்காதவர்கள் எப்படியாவது அந்த காமடியை பார்த்துவிடுங்கள். ரொம்பவே சிரிப்பீர்கள்.

********************************************************************

சனிக்கிழமை 'பையா' படம் பார்த்தேன். ஏப்ரல் 2ம் தேதியிலிருந்து இன்றுவரை மலேசியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்கள் சென்றபோது மொத்தம் ஆறு பேர்தான். எங்களுக்காக படம் போட்டார்கள். முதலில் நாங்கள் நான்கு பேர்தான். இண்டர்நெட்டில் டிக்கட் புக் செய்திருந்தேன். ஐந்து நபர்களுக்கு மேல் இருந்தால்தான் படம் போடுவார்களாம். அதற்காக கொஞ்சம் கவலையுடன் காத்திருந்தேன். நல்ல வேளை ஒரு காதல் ஜோடி கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றியது. இதை வைத்து படம் நன்றாக இல்லை என்று முடிவு செய்யக்கூடாது. இங்கே இருக்கும் தமிழ் மக்கள் மிகக் குறைவு. ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள். அவர்களும் எதத்னை முறைதான் பார்ப்பார்கள். தமன்னா நல்ல அழகான, செக்ஸியான பிகர் என்றுதான் இந்த படம் பார்க்கும்வரை நினைத்திருந்தேன். கேமரா மேனுக்கு அப்படி என்ன தமன்னா மேல் கோபமோ தெரியவில்லை? குளோசப் காட்சிகளில் தமன்னா முகம் படு கேவலமாக உள்ளது.

'அடடா அடடா அடமழைடா' பாட்டில் மட்டும் கொள்ளை அழகு. ஜோக்கே இல்லாமல் ஒரு முழுப்படம் எடுக்க நிறைய தைரியம் வேண்டும். லிங்குசாமிக்கு அது நிறையவே உள்ளது. இது படத்தை பற்றிய விமர்சனம் அல்ல.சும்மா நானும் இந்த படத்தை பார்த்துட்டேன் அப்படீனு சொல்றதுக்காக இதை எழுதிகிறேன்.

********************************************************************

நேற்றைய இரவு சன் டிவி நியூஸிலும், இன்று காலை மக்கள் டிவி நிகழ்ச்சியிலும் இந்த செய்தியினை கேட்டேன், "துபாயிலிருந்து கொச்சின் வந்த விமானம் நடுவானில் ஏர் பாக்கட் காரணமாக 15000 அடி தூரம் தலை கீழாக விழுந்து, விமானியின் சாமார்த்தியத்தால், பத்திரமாக பின்பு தரை இறங்கி உள்ளது".

படிக்கும் மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண செய்தி. ஆனால், எனக்கு? இதைப் பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன். அந்த கொடுமையை நானும் அனுபவித்திருக்கிறேன். 24.10.2000 அன்று இரவு மலேசிய நேரம் சரியாக 11.30 மணிக்கு எனக்கு அந்த அனுபவம் கோலாலம்பூரிலிருந்து சென்னை செல்லும்போது ஏற்பட்டது. நான் தனியே என் குழந்தையை பார்க்க சென்று கொண்டிருந்தேன். அப்போது அவள் நான்கு மாதக் குழந்தை. 31.10.2000 அன்று இரவு என் மனைவியுடனும், என் மகளுடனும் மலேசியா திரும்பி வருவதாக ஏற்பாடு. அப்போதுதான் நான் சென்ற விமானம் 10000 அடி கீழே மிக வேகமாக விழுந்தது. நான் அநேகமாக அவ்வளவுதான் என்று முடிவு செய்து விட்டேன். விமானத்தில் உள்ள அனைவரும் கத்தி தீர்த்து விட்டனர். அவ்வாறு இரண்டு முறை விமானம் விழுந்தது. அன்று தான் என் இதயம் அவ்வளவு வேகமாக கூட துடிக்க முடியும் என்பதை நான் அறிந்தேன்.

உயிர் பயம் என்றால் என்ன? என்பதை உணர்த்திய நாள் அது.

********************************************************************

படிக்கும் உங்களிடம் ஒரு கேள்வி!

எனக்கு நிறைய கருத்துக்கள்/விசயங்கள்/கட்டுரைகள் மெயில்களில் வருகின்றன. நண்பர்கள் அதனை என் பிளாக்கில் பிரசுரிக்கச் சொல்கின்றனர். சில மெயில்கள் ஆங்கிலத்தில் உள்ளன. நான் கூடுமான வரை என்னுடைய எழுத்துக்களையே இங்கே பிரசுரிக்க நினைக்கிறேன். யார் எழுதியது என்று தெரியாமல், நாம் எப்படி பிரசுரிக்கலாம்? சமப்ந்தப்பட்டவர்கள் படிக்க நேர்ந்தால்? அதனால் எனக்கு என்னவோ அப்படி அடுத்தவர்கள் எழுதியதை, எழுதியவர்கள் பெயர் தெரியாத நிலையில் பிரசுரிக்க விருப்பம் இல்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

12 comments:

dondu(#11168674346665545885) said...

//யார் எழுதியது என்று தெரியாமல், நாம் எப்படி பிரசுரிக்கலாம்? சமப்ந்தப்பட்டவர்கள் படிக்க நேர்ந்தால்?//
சம்பந்தப்பட்ட மின்னஞ்சலிலிருந்து ஒரு வாக்கியத்தை நகலெடுத்து கூகள் தேடுபெட்டியில் போடவும். சாதாரணமாக பல ஹிட்ஸ் வரும்.

எல்லாமே ஒரே விஷயம்தான். இதில் போய் யார் ஒரிஜினலாக எழுதியது என்பதைக் கண்டு பிடிக்க முடியாது.

ஒன்று செய்யலாம், மின்னஞ்சலில் வந்தது என்பதை சொல்லி விட்டே போடுங்கள். ஒரு பிரச்சினையும் வராது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

iniyavan said...

//ஒன்று செய்யலாம், மின்னஞ்சலில் வந்தது என்பதை சொல்லி விட்டே போடுங்கள். ஒரு பிரச்சினையும் வராது.//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி டோண்டு சார்.

யாசவி said...

:)

Kumar said...

I agree with Raghavan sir. There wont be any problem if we dont claim the ownership.

CS. Mohan Kumar said...

உங்கள் விமான அனுபவம் மிரள வைத்தது!!

மணிஜி said...

சும்மா உலக்ஸ்க்கு ஒரு ஹாய்

iniyavan said...

:)

நன்றி யாசவி.

iniyavan said...

//I agree with Raghavan sir. There wont be any problem if we dont claim the ownership.
//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குமார்.

iniyavan said...

//உங்கள் விமான அனுபவம் மிரள வைத்தது!!//

வருகைக்கு நன்றி மோகன்.

iniyavan said...

//சும்மா உலக்ஸ்க்கு ஒரு ஹாய்//

தலைவரே,

நலமா? உடலும் உள்ளமும் நலமா?

Ramesh said...

//ம்ம்ம். அடுத்த நல்ல பாடல்கள் வரும்வரை விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களை கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான்.//

பையாவில் யுவன் பாடிய என் காதல் சொல்ல கேட்டுப் பாருங்கள்.

iniyavan said...

//பையாவில் யுவன் பாடிய என் காதல் சொல்ல கேட்டுப் பாருங்கள்.//

ஆமாம் ரமேஷ். அருமையா இருக்கு.

நன்றி.