Apr 12, 2010

ஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 3 (18+)

அன்று எல்லா மீட்டிங்கும் முடிந்து ஹோட்டல் செல்வதற்கு இரவு 10 மணி ஆனது. உடம்பெல்லாம் ஒரே அசதி. உடன் வந்த நண்பர் உடனே ரூமுக்கு சென்று விட்டார். நான் சிறிது நேரம் ஹோட்டல் லாபியில் அமரலாம் என்று அங்கே சென்றேன். நான் தங்கியிருந்த அந்த ஹோட்டலில் கீழ் தளத்தில் லாபியில் உள்ள ரெஸ்டாரண்டில் இரவில் ஒரு ட்ரூப் பாடல்கள் பாடுவார்கள். அந்த பாடல்களை கேட்டுக்கொண்டே அங்கே இருக்கும் நபர்கள் மது அருந்துவார்கள். பாடிக்கொண்டே நடனம் ஆடுபவர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். ஆடைகள் எல்லாம் மிக குறைந்த அளவிலே இருக்கும். பார்த்து பார்த்து பழகிவிட்டதால் எனக்கு எந்தவிதமான உணர்வுகளும் வருவதில்லை. ஆரம்ப காலங்களில் புத்தி பேதலிச்சுப் போய் பார்த்துக்கொண்டிருந்ததை ஒப்புக்கொள்கிறேன்.

தண்ணி அடிக்கும் நல்ல பழக்கம் இல்லாததால் ஒரு ஆரஞ்சு பழ ஜீஸை வாங்கிக்கொண்டு நான் அந்த ரெஸ்ட்ராண்டில் சிறிது நேரம் அமர்ந்தேன். அவர்கள் பாடும் பாடல்களையும், நடன அசைவுகளையும் ரசித்துக்கொண்டே அமர்ந்து இருந்தேன். அப்போது ஒரு ஆணும் பெண்ணும் அங்கே வந்தார்கள். வந்தவர்கள் சீனாக் காரர்களாகவோ அல்லது வெளிநாட்டுக்காரர்களாகவோ இருந்திருந்தால் நான் இந்த பதிவை எழுத வேண்டிய அவசியமே ஏற்பட்டு இருக்காது. வந்தவர்கள் இருவரும் தமிழர்கள். உடன் வந்த ஆண், அந்த பெண்ணை விட்டு விட்டு சென்றுவிட்டார். அந்த பெண்மணி எப்படி இருந்தார்கள் என்றால், அசல் படத்தில் வெளிநாட்டில் ஒரு பெண் இருப்பாரே? அவர் பெயர் என்ன? ஷமிரா ரெட்டி? அவர் போலவே இருந்தார். உடையும் அதே போல் ஷர்ட், மேலே கருப்பு நிற கோட், ஒரு ஸ்கர்ட் அப்புறம் ஒரு நீண்ட ஸ்டாக்கின்ஸ். பார்ப்பதற்கு ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில், பெரிய ஸ்தானத்தில் வேலை பார்க்கும் ஊழியர் போல் இருந்தார்.

இங்கே பெரிய கமபனிகளில் வேலை பார்க்கும் எக்ஸ்க்யூட்டிவ்கள் அந்த மாதிரி உடை அணிவது வழக்கம். அதே போன்ற உடையை ஒரு தமிழ் பெண் அணிந்து பார்ப்பது ஒருவித அழகுதான். மறுப்பதற்கு இல்லை. அதுவும் அங்கே அவரை இறக்கிவிட்டு சென்றவருடன் அவர் பேசிய அந்த நுனி நாக்கு ஆங்கிலம்....கேட்பதற்கே இனிமையாக இருந்தது. நான் என்ன நினைத்தேன் என்றால், "அவரும் என்னைப்போல ஏதோ ஒரு மீட்டிங்கை முடித்துவிட்டு அங்கே வந்துருக்கிறார். அதே ஹோட்டலில் தங்குவார் போல" என்று. ஆனால், அந்த பெண்மணியை பார்த்ததும் என்னை அறியாமல் ஒரு மரியாதை ஏற்பட்டது.

பிறகு அங்கும் இங்கும் சுற்றி பார்த்துவிட்டு எங்கும் இடம் இல்லாததால் என் அருகே வந்து அமர்ந்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஏனென்றால் அவர் அமர்ந்தவிதம். அவரின் உடைகளைப்பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். மற்றவைகளையும், ஏன் எனக்கு ஒரு மாதிரி ஆனது என்பதையும் வாசகர்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

" ஹலோ" என்றார்.

நானும் பதிலுக்கு "ஹலோ" என்றேன்.

பிறகு தொடர்ந்து பேச ஆரம்பித்தார். நான் பொதுவாக தெரியாத நபர்களிடம் அதிகம் பேசுவதில்லை. அதுவும் பெண்கள் என்றால் கொஞ்சம் பயப்படுவேன். தேவையில்லாமல் என் மனதை சஞ்சலப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை. ஆனால், இந்த முறை அவரின் பேச்சு என்னை கொஞ்சம் வசீகரித்தது என்னவோ உண்மைதான். தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

நானும், என்ன சொல்லலாமோ அந்த அளவிற்கு மட்டும் என்னைப்பற்றி சொல்லிகொண்டு வந்தேன். அருகில் பார்க்க மிக கவர்ச்சியாக இருந்தார். லைட்டை வேறு டிம் ஆக்கிவிட்டிருந்தார்கள். கோட்டை கழட்டி பின்னால் சேரில் மாட்டினார். குனிந்து பேச ஆரம்பித்தார். அவர் போட்டிருந்த டி ஷர்ட் அவருடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியே வர முயற்சித்தது. என் கண்கள் என் கட்டளைகளை உதாசீனப்படுத்தியது. பிறகு அவரைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். தான் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், அந்த இரவு மட்டும் அங்கே தங்கி விட்டு காலை ஊருக்கு செல்வதாகவும் கூறினார். கூட வந்தவர், "யார்?'' என்று கேட்டேன். அது அவருடைய கஸின் பிரதர் என்றார். அப்படியே பல விசயங்களை ரொம்ப, ரொம்ப ரொம்ப டீஸண்டாக பேசிக்கொண்டிருந்தார்.

பிறகு, " ஏதேனும் டிரிங்ஸ் சாப்பிடலாமா?" என்றார்.

" வொய் நாட்?" என்று சொல்லிவிட்டு சர்வரை கூப்பிட்டேன். சர்வர் வந்தவுடன் அவர்தான் ஆர்டர் பண்ணினார். அவர் ஆர்டர் பண்ணியதை கேள்வி பட்டதும் எனக்கு ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். இங்கே பல பேரை நான் அப்படி பார்த்த அனுபவம் உள்ளதால், எனக்கு அந்த அளவு அதிர்ச்சி ஏற்படவில்லை.

" எனக்கு ஒரு லார்ஜ் விஸ்கி. சார் உங்களுக்கு?"

" எனக்கு ஒரு ஆரஞ்சு ஜூஸ் போதும்"

" ஏன் சார், டிரிங்ஸ் சாப்பிட மாட்டிங்களா?"

" இல்லைங்க நான் சாப்பிடறது இல்லை"

" என்ன சார், இவ்வளவு பெரிய போஸ்ட்ல இருக்கீங்க. டிரிங்ஸ் சாப்பிட மாட்டேங்கறீங்க"

" இல்லீங்க. எனக்கு பிடிக்காது"

பிறகு டிரிங்ஸ் வந்தது. சாப்பிட ஆரம்பித்தோம். நான் இதுவரை நடந்ததை எதையுமே தவறாக நினைக்கவில்லை. 'நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண அங்கே போனேன். யாரோ ஒருவர் வந்து என் முன்னே அமர்ந்து டிரிங்ஸ் சாப்பிடுகிறார்' அந்த அளவிற்கு தான் நான் நினைத்தேன்.

டிரிங்ஸ் கொஞ்சம் உள்ளே போக ஆரம்பித்ததும், " ரொம்ப கோல்டா இருக்கு இல்லை இந்த இடம்" என்றார்.

" ஆமாம்" என்றேன்.

" உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?" என்றார். ஏனோ பொய் சொல்லத் தோன்றவில்லை.

" எனக்கு இன்னும் ஆகவில்லை" என்றார்.

எனக்கு அது தேவையில்லாத விசயமாக இருந்த போதும், "ம்ம்ம்ம்" என்றேன்.

" என்ன சம்பாதித்து என்ன பயன்? கல்யாணம் ஆகவில்லை என்றால் என்ன பிரயோசனம்"

" ஏன் அப்படி சொல்லறீங்க. பண்ணிக்க வேண்டியதுதானே"

" நமக்கு புடிச்சா மாதிரி கிடைக்கணும் இல்ல. உங்களை மாதிரி ஒரு ஆள் கிடைச்சா பரவாயில்லை"

பேச்சு திசை மாதிரி செல்வதை உணர்ந்தேன். பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தேன்.

திடீரென என் கையைப் பிடித்தவர், " ஐ நீட் யு நவ்" என்றார்.


இன்னும் வரும்...

பின் குறிப்பு: எனக்கு ஏற்பட்ட உண்மை அனுபவத்தை மட்டுமே இங்கே எழுதியிருக்கிறேன். பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் நிறுத்திவிடுகிறேன். தொடரலாமா? வேண்டாமா? இன்னும் இரு பாகம் வரை வரலாம்.

4 comments:

Anonymous said...

தொடருங்கள்

அன்புடன் சுந்தர் ராஜன்.

iniyavan said...

ராம்ஜி_யாஹூ to me
show details 1:05 AM (8 hours ago)


ராம்ஜி_யாஹூ has left a new comment on your post "ஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 3 (18+)":

you can write so many volumes of your imaginary stories, no one is going to stop you.

iniyavan said...

அன்பு நண்பர் ராம்ஜி யாகூவிற்கு,

முதலில் உங்கள் பின்னூட்டத்தை தவறுதலாக டெலிட் செய்தமைக்கு மன்னித்துக்கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் பின்னூட்டம் பற்றி:

சென்ற வாரம் எனக்கு நடந்த உண்மை சம்பவத்தையே ஒரு கதை போல் எழுதினேன். இது சத்தியமாக கற்பனை கதை இல்லை.

எப்படி உங்களுக்கு நிரூபிப்பது என்று தெரியவில்லை.

இன்னும் ஒரு பாகம் மட்டும் எழுதி உள்ளேன். உங்களுக்கு பிடிக்காத காரணத்தால் அதை வெளியிடலாமா அல்லது வேண்டாமா? என யோசித்துக்கொண்டுருக்கிறேன்.

karthik said...

Please continue write.

thx.

karthik.
usa.