Apr 14, 2010

ஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 4 (18+)

திடீரென என் கையைப் பிடித்தவர், " ஐ நீட் யு நவ்" என்றார்.

என் உடல் நடுங்க ஆரம்பித்தது. என்னால் பதில் பேச முடியவில்லை. அந்த நிமிடம் கூட ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவர், கல்யாணம் ஆகாததால், செக்ஸ் விசயத்தில் வீக்காக இருக்கிறார் என்றுதான் நினைத்தேன். அடுத்து அவர் பேசியவைகள்தான் என்னை அதிர்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டது.

" வாங்க உங்க ரூமுக்கு போலாம். நான் நல்லா உங்களை திருப்தி படுத்துறேன். ஒரு மணி நேரம் தான். அதுக்கு அப்புறம் உங்களுக்கு நல்லா மசாஜ் பண்ணி விடறேன். உங்களுக்கு என்ன விருப்பமோ, எப்படியெல்லாம் இருக்கணும்னு பிரியப்படறீங்களோ, அப்படியெல்லாம் இருக்கலாம். வெறும் 200 வெள்ளிதான்"

நான் நொறுங்கி போய்விட்டேன். நான் அவர்களை அப்படி நினைக்கவே இல்லை. நினைத்தும் பார்க்க முடியவில்லை. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. இண்டர்நேஷனல் அழகு எனலாம். அவர் ஏன் இப்படி எல்லாம்?

" நான் அந்த மாதிரி ஆள் இல்லைங்க. சாரி. என்னை விட்டுடுங்க"

" நான் ரொம்ப கஷ்டப்படறேங்க, ஹெல்ப் பண்ணக்கூடாதா? ப்ளீஸ் என கெஞ்ச ஆரம்பித்து விட்டார்". தமிழில் பச்சை பச்சையாக பேச ஆரம்பித்து விட்டார். கல்யாணம் ஆகாதவர்கள் என்றால் நிச்சயம் சபலப்பட்டு விடுவார்கள்.

யாருக்குமே அங்கே தமிழ் தெரியாதது அவருக்கு சவுகரியமாக போய்விட்டது. நான் முடியவே முடியாது என மறுத்துவிட்டேன். ஆனால், விடாப்பிடியாக என்னை நச்சரிக்க ஆரம்பித்தார். நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். ஹைகிளாஸ் பெண்மணியாக நான் நினைக்க அவர் ஒரு ரோட்டோர ப்ராஸ்டியூட் போல் நடந்து கொண்டதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

நான் முன்பே கூறியிருந்தது போல செக்ஸ் என்பதை புனிதமாக நினைப்பவன் நான். அது இந்த மாதிரி விலைபோவதை என்றைக்குமே நான் விரும்புவதில்லை. பிறகு ஒரு வழியாக சமாளித்து,

" உண்மையாகவே எனக்கு விருப்பம் இல்லைங்க. ஆனா, நீங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டீங்க. உங்களை நான் இது போல நினைச்சுக்கூட பார்க்கலை. உங்க நடை, உடை, பேச்சு எல்லாம் ரொம்ப ஹைகிளாஸா இருக்குது. நீங்க ஏன் இப்படி"

" வறுமை சார். வறுமை"

" அதுக்கு வேற தொழில் பண்ணுவதுதானே. இதான் கிடைச்சுதா" என்று ஆரம்பித்து நான் பேச ஆரம்பித்ததை அவர் விரும்பவில்லை என்று அவர் பார்வையிலேயே தெரிந்தது.

பிறகு அவர் கேட்ட இன்னொரு கேள்வி என்னை ரொம்ப எரிச்சலாக்கியது.

" சார், உங்களுக்கு என்னோட இருக்கப் பிடிக்கலைனா பரவாயில்லை. உங்களுக்கு போன்ல செ... பிடிக்குமா? வெறும் 100 வெள்ளிதான்"

" எனக்கு ஒன்னும் பிடிக்காது. ஆளை விடுங்க"

" நல்லா இருக்கும் சார்"

" வேண்டாம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர ஆரம்பித்தேன். அப்போது அங்கு வந்த ஒரு ஈரோப்பியன்,

" ஹாய் இந்தியன் ஸ்வீட்டி" என்று கூறியவாறு அந்த பெண்மணிக்கு கை கொடுத்தான்.

என் கண் முன்னாலே, எழுந்து அவரை இழுத்து அணைத்தபடி ஒரு கிஸ் கொடுத்துக்கொண்டே அடுத்த இருட்டான டேபிளை நோக்கி நகர்ந்தார். 'விட்டது சனியன்' என நினைத்து போகலாம் என நினைத்தால், சர்வர் வந்து பில்லை நீட்டினார். அவரிடம் எப்படி கேட்பது?

ஒன்றுமே செய்யாமல் 100 வெள்ளி தண்டம் அழுதுவிட்டு ரூமுக்கு வந்தேன். தூங்கலாம் என நினைத்தால் அந்த பெண்மணியும், அந்த வெளிநாட்டுக்காரனும் நினைவுக்கு வந்தார்கள். கஷ்டப்பட்டு தூங்க ஆரம்பித்தேன்.

காலை 5.30க்கு வாக்கிங் கிளம்பினேன். அப்போது ஒரு கார் வந்து ஹோட்டல் வாசலில் இறங்கியது. அதிலிருந்து ஒருவன் இறங்கினான். இவனை எங்கோ பார்த்து இருக்கிறோமே? ஆம். நேற்று அந்த பெண்ணுடன் வந்தவன் அல்லவா இவன்? ஒளிந்து கொண்டு என்ன நடக்கிறது என்று பார்த்தேன்.

காரிலிருந்து அவன் கூட ஒரு 5 வயது பெண் குழந்தையும் இறங்கியது, " டாடி, இருங்க நானும் வறேன்"

அப்போதுதான் அந்த பெண்மணி லிப்டில் இருந்து இறங்கி வந்தாள்.

" அம்மா" என்று கத்திக்கொண்டு அந்த குழந்தை அவளை நோக்கி ஓடியது.

சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

என்று காறி துப்பிவிட்டு நான் வாக்கிங் சென்றேன்.

7 comments:

Sophi said...

ஜீரணிக்க கஷ்டமா இருக்கு.

CS. Mohan Kumar said...

முடிவு சிறுகதை போல் உள்ளது (தவறாய் சொல்லலை.. சில நிகழ்வுகள் அப்படி தான்)

iniyavan said...

//ஜீரணிக்க கஷ்டமா இருக்கு.//

வருகைக்கு நன்றி ஷோபி.

iniyavan said...

//முடிவு சிறுகதை போல் உள்ளது (தவறாய் சொல்லலை.. சில நிகழ்வுகள் அப்படி தான்)//

வருகைக்கும், தங்கள் புரிதலுக்கும் நன்றி மோகன் குமார்.

dondu(#11168674346665545885) said...

முன்னே பின்னே தெரியாத ஒரு பெண் ட்ரின்க் சாப்பிடலாமா என கேட்கும்போதே அது கேஸ் என நினைக்கக்கூட தோன்றவில்லையே. அவ்வளவு அப்பாவியா நீங்கள்?

நானாக இருந்தால் “குடி, ஆனால் நீ குடிப்பது உனது கணக்கில்” எனக்கூறிவிட்டு, வெயிட்டரிடமும் அதையே சொல்லியிருப்பேன்.

முக்கால்வாசி நேரங்களில் வெயிட்டரும் அவள் ஆளாகத்தான் இருப்பான். ஆகவே நீங்கள் இவ்வாறு ஸ்ட்ரிக்டாக சொன்னதும் அப்போதே பேச்சை முறித்து சென்றிருப்பார்கள். உங்களுக்கும் 100 வெள்ளி மிச்சமாகியிருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

iniyavan said...

//முன்னே பின்னே தெரியாத ஒரு பெண் ட்ரின்க் சாப்பிடலாமா என கேட்கும்போதே அது கேஸ் என நினைக்கக்கூட தோன்றவில்லையே. அவ்வளவு அப்பாவியா நீங்கள்?//

இல்லை சார். பெண்கள் டிரிங் சாப்பிடுவது இங்கே சர்வசாதரணம் சார்.

dondu(#11168674346665545885) said...

நான் அவர்கள் தனிப்பட்ட முறையில் சாப்பிடுவதை கூறவில்லை.

முதன் முறையாக அவள் பார்க்கும் உங்களிடம் சாப்பிடலாமா என்றால் பில்லை நீங்கள்தான் தரவேண்டும் என்பது எழுதப்படாத விதி. நீங்கள் என்ன அவள் மாமனா மச்சானா, உங்களிடம் அவள் எதிர்பார்க்க?

அகில உலகிலும் இதுதான் நிலைமை. இனிமேலாவது சூதனமாக இருந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்