Apr 3, 2010

சில எரிச்சலான செய்திகள்...

மலேசியாவில் ஆஸ்ட்ரோ டிவியில் தமிழ் (ஓரளவு) புதுப்படத்திற்கு என்று ஒரு சேனல் உள்ளது. இதற்கு தனியே பணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு படம் ரிலீஸாகும். ஒவ்வொரு படமும் தினமும் இருமுறை ஒளிப்பரப்பாகும். இதை ஏற்கனவே வேறு ஒரு இடுகையில் குறிப்பிட்டுள்ளேன். இப்போது சில நிகழ்ச்சியினையும் அதே போல் ஒளிப்பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். போன வாரம் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் இரவு 9 மணியிலிருந்து 12 மணி வரை "2008 விஜய் அவார்ட்ஸ்" நிகழ்ச்சி (விழா 2009 இறுதியில் நடந்திருக்கும் என நினைக்கிறேன்) ஒளிப்பரப்பானது. இந்தியாவில் உள்ள நண்பர்கள் ஏற்கனவே பார்த்திருக்கக்கூடும். நானும் இந்த நிகழ்ச்சியை ரசித்துத்தான் பார்த்தேன். அதில் நான் பார்த்த ஒரு பகுதி என்னை எரிச்சல் ஏற்படுத்தியது. அந்த பழைய நிகழ்ச்சியைப் பற்றி ஏன் இப்போது எழுதுகின்றீர்கள்? என தயவு செய்து கேட்காதீர்கள். நான் பார்க்கும்போதுதானே நான் எழுத முடியும்?

சிறந்த குழுவிற்கான பரிசு சுப்ரமணியபுரம் படத்திற்கு கிடைத்தது. பரிசு வாங்குவதற்காக சசிகுமாரும், மற்றவர்களும் மேடைக்கு வந்தனர். நடிகர் ஜெய், ஜேம்ஸ் வசந்தனையும் மேடைக்கு அழைத்தார். அவரும் உடனே மேடைக்கு வந்தார். உடனே நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி, "உங்கள் குழு சார்பாக யார் பேசப் போகின்றீர்கள்" என்றார். உடனே சசி, ஜேம்ஸ் வசந்தனை கைக்காட்டினார். உடனே கோபி, "பாத்தீங்களா ஜேம்ஸ் சார். சசிகுமார் உங்களின் ஒரு நல்ல மாணவன் என்பதை எப்படி நிரூபிக்கிறார்? " என்று கேட்டார். அதற்கு ஜேம்ஸ் வசந்தனின் விளக்கத்தை பாருங்கள்:

" இந்த விசயத்துல சசிகுமார் நல்ல ஸ்டூடண்ட் தான். ஆனால்... என்று நிறுத்திவிட்டு ஒரு நக்கல் சிரிப்புடன், சசிகுமாரின் அனுமதியுடன் உங்களுக்கு ஒரு சமபவத்தை கூறுகிறேன். நான் அவன் மாணவனாக இருந்த காலங்களில் அவ்வப்போது அவனுக்கு ஆங்கில இலக்கணத்தை சொல்லித் தருவதுண்டு. நாங்கள் சவுதி அரேபியாக்கு சென்றிருந்த போது அங்கே பாலைவனத்தை (டெஸர்ட்ஸ்) பார்த்தோம். சுற்றிப் பார்த்துவிட்டு அங்கே உள்ள ஒரு கிளப்பில் இரவு உணவு சாப்பிட்டோம். பிறகு சாப்பிட்டு முடித்தவுடன், 'நாங்கள் டெஸர்ட்ஸ் சாப்பிட போகிறோம்' என்று கிளம்பினான் சசி. நான், " இப்போதுதானே டெஸர்ட்டிலிருந்து வந்தாய். மீண்டும் டெஸர்ட் என்கிறாயே? இந்த டெஸர்ட்டுக்கு என்ன அர்த்தம்? என்றேன். உடனே சசி, "டெஸர்ட்னா டெஸர்ட்தான்" என்றான். "இரண்டுக்கும் ஸ்பெல்லிங் என்ன ?" என்றும் கேட்டேன். அவரும் ஜெய்யும் பல நிமிட யோசனைக்குப் பிறகு desert என்று கூறினார்கள். நான், இரண்டுக்கும் ஒரே ஸ்பெல்லிங் இல்லை, என்று சொல்லிவிட்டு, இரவு உணவிற்கு பிறகு சாப்பிடும் டெஸர்டுக்கு கூட ஒரு S சேர்க்க வேண்டும், என்று கூறினேன். பிறகு ஒரு அரைமணி நேரத்திற்கு பிறகு என்னிடம் வந்தவர், என்னிடம் வந்த சசி, 'சார் ஒரு S சேர்க்கனும்னு சொன்னிங்க, எந்த இடத்துல சேர்க்கனும்னு கேட்டார்' னு சொல்லி அவ்வளவு பெரிய மேடையில் அவர் மட்டுமே சிரித்தார்.

உடனே சசிகுமார், " நான் ஒரு தமிழன்" என்று சொல்லிவிட்டு சென்றார். சசிகுமாருக்கு கோபம் வந்ததோ இல்லையோ? எனக்கு அவ்வளவு கோபமும், எரிச்சலும் வந்தது. என்னுடைய கேள்வி இதுதான். அவ்வளவு பெரிய அரங்கில், அத்தனை மக்களுக்கு மத்தியில் ஒருவரின் குறையை இப்படியா சொல்வது. அப்படியென்ன, ஆங்கிலம் என்பது அவ்வளவு பெரிய விசயமா? என்ன?. சசிக்கு சரியாக ஆங்கிலம் தெரியாததால் என்ன குறைந்து போய்விட்டார். இல்லை ஆங்கிலம் அதிகம் தெரிந்த ஜேம்ஸ்தான் என்னைத்தை பெரிதாக சாதித்து விட்டார்? அதிலும் ஜேம்ஸ் வசந்தனின் அந்த அசட்டு சிரிப்பு அப்படியே...........

இதுல என்ன ஒரு கொடுமைனா தினமும் அந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்புகின்றார்கள்.

சாரி, ஜேம்ஸ் வசந்தன்! நீங்க செஞ்சது தப்பு!

****************************************************************

அதே நிகழ்ச்சியில கோபியின் தொண தொண பேச்சும் ஒரே எரிச்சல். ஏதோ இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்ததற்கு சந்தோசப்படுவது போல், ஹரிஷ் ஜெயராஜும், கொளதம் மேனனும் மேடையில் இருப்பதை பார்த்து, பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து இருப்பது சந்தோசம் அளிக்கிறது என்றும், அவர்கள் மீண்டும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்றும் (இல்லையென்றால் உலகம் அழிந்துவிடும் போல) பேசும்போது எல்லாம் எரிச்சல்தான் வந்தது. பேச வேண்டியதுதான், எது தேவையோ அதை மட்டும் பேசினால் போதாதா? தொண தொணன்னு சே... அதுலயும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் கமலே கூச்சப்படும் அளவிற்கு அவரை புகழ்ந்து தள்ளியது... திஸ் ஈஸ் டூ மச் கோபி.

****************************************************************

வியாழன் மதியம் கோலாலம்பூரில் ஒரு லன்ச் மீட்டிங்கின் போது அங்கே வந்திருந்த விருந்தினர் ஒருவர் கூறியது;

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இந்தியாவை சுற்றிப்பார்ப்பதற்காக இந்தியா சென்றுள்ளார். அமெரிக்காவில் அவரின் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடியிருப்பவர், ஒரு இந்தியர். அமெரிக்கர் ஒரு மாதம் இந்தியாவில் பயணம் செய்து விட்டு அமெரிக்கா சென்றுள்ளார். நீண்ட நாட்களாக இந்தியாவுக்கே செல்லாத அந்த பக்கத்து வீட்டு இந்தியர், அமெரிக்கரிடம்,

" இந்தியா எப்படி உள்ளது?" என்றாராம்.

அதற்கு அவர், " நன்றாக உள்ளது. டெல்லி, மும்பை (இப்படி பல இடங்களை சொல்லி) எல்லாமே அருமையாக உள்ளது" என்றாராம்.

" இந்தியர்கள் எப்படி உள்ளார்கள்?"

மீண்டும் அவர், பல இடங்களையும், கட்டிடங்களையும் பற்றி அருமை என்று சொல்லி இருக்கிறார். நம்ப ஆளும் விடாமல்,

" எல்லாம் சரி, இந்தியர்கள் எப்படி உள்ளார்கள்?" என்று கேட்டுருக்கிறார்.

அதற்கு அமெரிக்கர், " இந்தியர்களை நான் பார்க்கவில்லை" என்று இருக்கிறார்.

நம் நண்பருக்கு ஆச்சர்யம். உடனே, " என்ன நீங்கள் ஒரு மாதம் இந்தியாவில் இருந்து உள்ளீர்கள். இந்தியர்களையே நான் பார்க்கவில்லை என்கின்றீர்களே? எப்படி?" என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அமெரிக்கர் இப்படி பதில் சொன்னாராம்:

" ஆமாம். நான் ஒரு மாதம் இந்தியாவில் இருந்தது உண்மைதான். ஆனால் ஒரு இந்தியரையும் பார்க்கவில்லை என்பதும் உண்மைதான். நான் பார்த்து எல்லாம், மராட்டியர்கள், காஷ்மீரியர்கள், பீகாரிகள், தமிழர்கள், தெலுங்கர்கள்..............இப்படித்தான். இந்தியர் என்று ஒருவரையும் பார்க்கவில்லை"

அவர் சொன்னது ஒரு வேளை உண்மையோ???

****************************************************************

9 comments:

ராம்ஜி_யாஹூ said...

james vasanthan has told this same story for 50 times in 50 stages, wherever he goes. He is one of the egoistic person.

அப்பாவி முரு said...

ரீ டெலிகாஸ்ட் பார்ப்பாங்கன்னு தெரியும்.,

இவ்வளவு பழைய ரீ டெலிகாஸ்டை பார்த்தது மட்டுமில்லாமல், விமர்சனம் வேறயா?


ப்ளாக்கர் கடமை புல்லரிக்குது....

அப்பாவி முரு said...

அடுத்து இந்தியன் மேட்டர்.,

நக்கல் பதில்:-


கமல் நடிச்ச படத்தோட டி.வி.டி அந்தாளுக்கு கிடைக்கலை போல...

:))))


நல்ல பதில்:-

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியான்னு சொல்லுவாங்களே மறந்துட்டீங்களா?

பாலாஜி சங்கர் said...

நாம் மொழி வாரியாக இன வாரியாக பிரிந்து இருப்பதை அப்படியும் சொல்லலாம்
இந்தியராய் எப்போதும் இருப்போம் என்றே தெரியவில்லை

iniyavan said...

//james vasanthan has told this same story for 50 times in 50 stages, wherever he goes. He is one of the egoistic person.//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ராம்ஜி.

iniyavan said...

//ரீ டெலிகாஸ்ட் பார்ப்பாங்கன்னு தெரியும்.,

இவ்வளவு பழைய ரீ டெலிகாஸ்டை பார்த்தது மட்டுமில்லாமல், விமர்சனம் வேறயா?


ப்ளாக்கர் கடமை புல்லரிக்குது....//

நான்தான் ஏற்கனவே இப்படி எழுதியிருக்கிறேனே முரு:

/அந்த பழைய நிகழ்ச்சியைப் பற்றி ஏன் இப்போது எழுதுகின்றீர்கள்? என தயவு செய்து கேட்காதீர்கள். நான் பார்க்கும்போதுதானே நான் எழுத முடியும்?/

iniyavan said...

//நல்ல பதில்:-

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியான்னு சொல்லுவாங்களே மறந்துட்டீங்களா?//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி முரு!

iniyavan said...

//நாம் மொழி வாரியாக இன வாரியாக பிரிந்து இருப்பதை அப்படியும் சொல்லலாம்
இந்தியராய் எப்போதும் இருப்போம் என்றே தெரியவில்லை//

வருகைக்கு நன்றி பாலாஜி.

இருமேனிமுபாரக் said...

உலகநாதன் ஸார். இதுக்கே இப்படி வாருராங்களே. இதை விட அரதப் பழசான நிகழ்ச்சி எல்லாம் இன்னைக்கி நிகழ்ச்சி மாதிரி புதுசா காண்பிக்கிறார்களே ஸன் டிவி அஸ்ட்ரோ டிவி அதுவும் காசு கொடுத்து பாக்குரோம் அதுல வரதெல்லாம் பாத்து ஏதாவது எழுதிடாதீங்க. நடிகர் ஒருவர் செத்து ஆறு மாசம் கழிச்சு அவர் பேட்டியை போடுவார்கள். போன வருசத்துக்கு முந்தய வருசத்து தீபாவளி நிகழ்ச்சியை இந்த வருட தீபாவளிக்கு புதுசு மாதிரி காட்டுவார்கள். நம்மள கிறுக்கனாக்குறதை தமிழ்நாட்டுல உள்ளவங்க பார்த்தா சிரிப்பாங்க வேற மாதிரி.