Apr 19, 2010

இது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்!

கடந்தவார இறுதியில் ஒரு நாள் பிஸினஸ் மீட்டிங்கிற்காக பக்கத்து டவுன் செல்ல வேண்டியிருந்தது. என்னை கூப்பிட்ட அந்த நபர் 'இன்னும் சில இந்தியர்களையும் நீங்கள் சந்திக்கலாம், அதனால் தவறாமல் வந்துவிடுங்கள்' என்றார். அவர் பல வருடங்களாக என்னைக் கூப்பிட்டு வந்தாலும் இப்போது அவரை சந்திப்பதற்கான ஒரு முக்கிய காரணம் இருந்ததால், நான் அங்கே செல்லலாம் என முடிவெடுத்தேன். என் கூட இன்னொரு நண்பரும் வந்தார். மீட்டிங் அன்று மதியம் என்னிடம் பேசிய அந்த ஆர்கனைஸர்,

" சார், நாம் சந்திக்க போகும் இடம் ஒரு கிளப். அங்கே நிறைய பிஸினஸ் பெரும்புள்ளிகள் வருவார்கள். அதனால், அங்கே சும்மா சந்திப்பது இயலாத காரியம். டிரிங்க்ஸ் சாப்பிட்டு கொண்டுதான் நாம் பேச வேண்டி இருக்கும். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லைதானே" என்றார்.

" நான் டிரிங்க்ஸ் சாப்பிடுவதில்லை. எனக்கு ஏதேனும் ஜூஸ் இருந்தால் போதும்" என்றேன்.

" கொஞ்சம் ஒயின் சாப்பிடுங்களேன்" என்றார்.

" வேண்டாம். ஜூஸ் போதும்" என்றேன்.

நானும் என் நண்பரும் அந்த கிளப்பிற்கு இரவு 8 மணிக்கு சென்றடைந்தோம். மெதுவாக பிஸினஸ் பேச ஆரம்பித்தோம். முதலில் அவர் பீர் ஆர்டர் செய்தார். அங்கே ஜுஸ் இல்லாததால் எனக்கு 100+ என்ற ஒரு கேன் டிரிங்கை ஆர்டர் செய்தார். பிறகு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். பக்கத்து ஹாலில் ஏற்கனவே நிறைய நபர்கள் குழுமிருந்தார்கள். அங்கே அனைவரும் பில்லியார்ட்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அனைவரும் மாலை நான்கு மணியிலிருந்தே அங்கே இருப்பதாக பின்பு அறிந்தேன். அவர்கள் அனைவருமே முழு போதையில் இருந்தார்கள். எல்லோரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார், அந்த நண்பர். அங்கே இருந்த அனைவருமே பெரிய பெரிய பிஸினஸ்மேன்கள். எல்லோரும் எங்கள் டேபிள் அருகே வரும்போது, என் நண்பர் அறிமுக படுத்தி வைப்பார். அனைவரும் ஆரம்பித்த உடனேயே, " நீங்கள் ஒன்றும் டிரிங்க்ஸ் சாப்பிடவில்லையா?" எனக் கேட்பார்கள். நான், "வேண்டாம்" என்றதும், "அட்லீஸ்ட் ஒயின் சாப்பிடலாமே" என்பார்கள்.

ஒரு கட்டத்தில் எனக்கு வெறுப்பாகிவிட்டது. இதற்குத்தான் நான் அந்த மாதிரி இடங்களுக்கு செல்வதில்லை. பெரும்பாலும் நான் அவாயிட் செய்து விடுவேன். அன்று தெரியாமல் சென்று மாட்டிக்கொண்டேன். அங்கே வேலை செய்பவர்கள் அனைவரும் பெண்கள். அதுவும் தமிழ்ப் பெண்கள். ஆனால், அந்த பிஸினஸ் மேன்கள் அனைவரும் பச்ச பச்சையாக கெட்ட வார்த்தையில் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். அங்கே இருந்த பெண்களும் அதை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. எனக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது.

"When In Rome, Do As The Romans Do" என்று நானும் குடித்திருந்தால் எனக்கு ஒன்றும் தவறாக தெரிந்திருக்காது. ஆனால், குடிக்காமல் இருந்ததால், எனக்கு எல்லாமே வித்தியாசமாக இருந்தது. என் நண்பர்களுடன் நான் அனைத்து பார்ட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஒருவரும் என்னை 'கொஞ்சம் டிரிங்க்ஸ் சாப்பிடு என்றோ, நீ குடிக்காததால் எங்கள் சந்தோசம் போனது' என்றோ சொன்னதில்லை. ஏனென்றால் எல்லோருக்குமே என்னைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் என்னை யாரும் வற்புறுத்துவதும் இல்லை. என் சந்தோசமோ அல்லது அவர்கள் சந்தோசமோ கெட்டதும் இல்லை.

பின்பு ஒரு வழியாக மீட்டிங் முடிந்து இரவு 11.30 மணி அளவில் கிளம்பினோம். அங்கே இருந்து ஒரு மணி நேரம் காரில் பயணம் செய்துதான் வீட்டிற்கு வர வேண்டும். வரும் வழியில் எனக்கும் என் உடன் வந்த நண்பருக்கும் நடந்த ஒரு விவாதம் என்னை எரிச்சல் படுத்தியது. அவரும் நானும் பேசியதை, உங்களின் கருத்திற்காக இங்கே தருகிறேன்:

" உலக்ஸ், யார் டிரிங்க்ஸ் சாப்பிடுகிறாயா? என்று கேட்டாலும், ஐ டோண்ட் டிரிங்க் என்று சொல்வது ஒன்றும் பெரிய விசயமில்லை"

நான் ஒன்றும் பதில் பேசாமல் அமைதி காத்தேன். அநாவசியமான விவாதத்திற்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. பின்பு அவரே தொடர்ந்தார்.

" டிரிங்க்ஸ் சாப்பிடாமல் இருப்பது பெரிய விசயம் இல்லை. அளவோடு சாப்பிடுவது தான் பெரிய விசயம். இப்போது என்னை பாருங்கள், எவ்வளவு ஸ்டியாக வண்டி ஓட்டுகிறேன் ( நண்பர் ஏற்கனவே நிறைய பாட்டில் பீர் குடித்திருந்தார். காரின் ஸ்பீடா மீட்டர் 120 கிமீ வேகம் காட்டியது. உயிரை கையில் பிடித்து காரில் உட்கார்ந்து இருந்தது, எனக்கல்லவா தெரியும்). இந்த மாதிரி மீட்டிங் எல்லாம் வரும்போது, டிரிங்க்ஸ் சாப்பிடவில்லை என்றால், அனைவரும் கோபித்துக் கொள்வார்கள். அவர்களை அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொள்வார்கள். எந்த பிஸினஸும் கொடுக்க மாட்டார்கள். கொஞ்சம் அளவாக குடிப்பதில் எந்த தவறும் இல்லை. நானும் உன்னைப் போல் ஆரம்ப காலத்தில் குடிக்காமல்தான் இருந்தேன். ஒரு பிஸினஸில் ஒரு முக்கியமான ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து வாங்க அவரை அழைத்துக்கொண்டு ஒரு ஹோட்டல் பாருக்கு சென்றிருந்தேன். அவருக்கு டிரிங்க்ஸ் ஆர்டர் செய்தேன். அவர் நீண்ட நேரம் கையெழுத்தும் போடவில்லை. குடிக்கவும் ஆரம்பிக்க வில்லை. பின்பு ஏன் என்று விசாரித்தேன். நீங்கள் குடிக்காமல், நான் குடிக்க முடியாது என்றார். அன்றுதான் முதல் பாட்டிலைத் தொட்டேன். அது இன்று வரை தொடர்கிறது. சோஷியல் டிரிங்கராக இருப்பதில் எந்த தவறும் இல்லை" என்று நீண்ட விளக்க உரை கொடுத்தார்.

நான் அமைதியாக இருந்ததை பார்த்து, " நான் ஒன்றும் நீங்கள் குடித்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை" என்றார். அதற்கு மட்டும் நான் பதில் சொன்னேன்,

" குடித்துத்தான் ஆக வேண்டும் என்று நீங்கள் சொன்னாலும், நான் குடிக்கப் போவதில்லை. பிறகு எதற்கு இந்த பேச்சு. தயவு செய்து வேறு பேச்சு பேசுங்கள்" என்றேன். அதன் பிறகு அவர் வாயே திறக்கவில்லை. நான் அவரையும் எந்த குறையும் சொல்ல வில்லை. அவர் பார்வையில் அது சரி. ஆனால், குடிக்க விரும்பவில்லை என்று சொல்லும் ஒருவனை, குடித்துத்தான் ஆக வேண்டும், இல்லாவிட்டால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள், என்று சொலவது எந்த விதத்தில் நியாயம்?

அந்த கிளப்பிற்கு வரும் பிஸினஸ்மேன்கள் எல்லாம் தினமும் வந்து அங்கே இரவு வரை இருந்து குடித்து விட்டு பிஸினஸ் பேசிவிட்டு செல்கிறார்கள் என்று பின்பு அறிந்தேன். அது அவர்களின் இஷ்டம். ஆனால், அதற்காக மீட்டிங் அரேஞ் செய்த நண்பர் சொன்ன ஒரு விளக்கம் என்னை ரொம்பவே யோசிக்க வைத்து விட்டது:

" நாங்கள் இங்கே தினமும் வருகிறோம். குடித்துக்கொண்டே அனைத்து பிரச்சனைகளையும் பேசி அலசுகிறோம். ஒருவருக்கு ஒருவர் ஆலோசனை பெற்றுக்கொள்கிறோம். அதனால்தான் எங்களால் எங்கள் துறைகளில் சிறந்து விளங்க முடிகிறது. இல்லை என்றால் அவ்வளவுதான்"

நான் இதுவரை அந்த மாதிரி கிளப்களில் மெம்பர் இல்லை. அந்த மாதிரி கிளப்களுக்கு போய், அந்த மாதிரி நபர்களிடம் எநத பிரச்சனையும் சொன்னதில்லை, ஆலோசனைகளையும் பெற்றதில்லை. அதனால் நான் என் துறையில் சிறந்து விளங்காமல் ஒன்றும் இல்லை.

அவர்கள் மேலே சொன்ன அந்த கருத்து, தினமும் குடிப்பதற்கு அவர்களாகவே ஏற்படுத்திக்கொண்ட காரணமாகத்தான் நான் நினைக்கிறேன். நான் யாரையும் குடிப்பது தவறு என்று அறிவுரை சொல்லவில்லை. நான் குடிப்பதில்லை, அவ்வளவுதான்.

ஆனால், என் நண்பர் உள்பட அங்கே இருந்த சிலர் என்னை பார்த்த அந்த ஏளனப் பார்வை!! அப்பா!!!

"ஒருத்தன் குடிக்காம இருப்பது தப்பாய்யா?"

15 comments:

யாசவி said...

சரி நீங்க ஏன் புட்பால் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடினீர்கள்

நீங்க விளையாடும் இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும் அல்லவா?

:)

iniyavan said...

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி யாசவி.

Kumar said...

குடிப்பதற்கு ஒரு காரணம் வேண்டும். அது எதுவானால் என்ன!.

சரி விடுங்க உலக்ஸ்.. :)

iniyavan said...

வருகைக்கு நன்றி குமார்.

மணிஜி said...

நா ஒரு பின்னூட்டம் மட்டுமே போட்டுக்கிறேன்...(காரணம் தெரியும் உலக்ஸ்க்கு..ஏ அப்பா.அடுத்த வாட்டி ரெண்டு பாட்டிலா வாங்கிட்டு வாய்யா..)

iniyavan said...

//நா ஒரு பின்னூட்டம் மட்டுமே போட்டுக்கிறேன்...(காரணம் தெரியும் உலக்ஸ்க்கு..ஏ அப்பா.அடுத்த வாட்டி ரெண்டு பாட்டிலா வாங்கிட்டு வாய்யா..)//

தலைவரே,

உங்களுக்கு இல்லாததா? வாங்கி வரேன்.

google.com said...

சாா்உங்கள் ேபால ஒரு கணவா் எனக்கு கிைடக்கனுேம,,,,

Roja

google.com said...

சாா்உங்கள் ேபால ஒரு கணவா் எனக்கு கிைடக்கனுேம,,,,

Roja

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என் 25 வருட அனுபவத்தில் வெள்ளையர்கள் வசம் இப்படியான இழி குணம் இல்லை. ஒருவர் வேண்டாமென்றால் நிர்ப்பந்திப்பதே இல்லை.ஒரு தடவை இங்கு எனக்கு உறவுபோல் உள்ள பிரஞ்சுக் குடும்பம் அவர்கள் வைன் உற்பத்தியாளர்கள்; அவர்கள் வைன் உற்பத்திக் கிராமத்திற்குச் சென்றபோது
மேசையில் வைன் திறந்தார்கள்.
அப்போது அவர்கள் இதுவரையில் நீ வைன் சுவைக்கவில்லையா? எனக் கேட்டார்கள்.இல்லை என்றபோது; என் கிளாசில் சிறுது ஊற்றி சுவைக்கும் படி கேட்டார்கள். அதன் சுவையை அறியத்தான் வேண்டுமென வாயுள் ஒரு மிறடு எடுத்தேன்.
அது சுவைக்கவில்லை. மெள்ள துப்பினேன்.எப்படி எனக்கேட்ட போது "மாட்டு மூத்திரம்" மணமாக இருக்கே...என்றேன்.
அவர்கள் கோவிக்கவுமில்லை; என்னை வற்புறுத்தவும் இல்லை.இன்றுவரை அவர்களுடன் சாப்பிடும் போது
நான் நீர்தான் பருகுவேன். எனது இந்த குடியில்லா வாழ்வு பற்றி அவர்கள் பெருமையாகத் தான்
நண்பர்களிடம் அறிமுகப் படுத்துவார்கள்.
ஆகவே! நான் அறிந்த வகையில் " வியாபார விருத்திக் என்பது" இது குடிக்க சாட்டு.
இங்கே வைத்தியரிடம் சென்றால் முதல் கேள்வி "குடி,புகை" உண்டா? இல்லை என்றதும்; திறே பியான் - மிக நன்று என்பார்கள். இத்தனைக்கும் வைன் உற்பத்தி செய்யும் தேசம்.
நீங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டிருங்கள்.
நீங்கள் மாற்ற வேண்டியது உங்கள் இந்தப் பழக்கத்தையல்ல, நண்பர்களையே!

iniyavan said...

//சாா்உங்கள் ேபால ஒரு கணவா் எனக்கு கிைடக்கனுேம,,,,

Roja//

அன்பின் ரோஜா,

நல்ல எண்ணங்களுடனும், தூய்மையான மனத்துடனும், ஆண்டவன் மேல் பக்தியுடனும், பிறருக்கு உதவும் மனப்பான்மையுடன் இருங்கள், "என்னைவிட நல்ல கணவர் உங்களுக்கு கிடைப்பார்".

iniyavan said...

//நீங்கள் மாற்ற வேண்டியது உங்கள் இந்தப் பழக்கத்தையல்ல, நண்பர்களையே!//

உங்களின் வருகைக்கும், நீண்ட பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி யோகன்.

தனி காட்டு ராஜா said...

//நல்ல எண்ணங்களுடனும், தூய்மையான மனத்துடனும், ஆண்டவன் மேல் பக்தியுடனும், பிறருக்கு உதவும் மனப்பான்மையுடன் இருங்கள், "என்னைவிட நல்ல கணவர் உங்களுக்கு கிடைப்பார்".//குடி னா என்னுகண்ணா??? எதாவது ஊர் பேரா??
நீங்க நல்லவரா ...!!??

தயாளன் said...

//நீங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டிருங்கள்.
நீங்கள் மாற்ற வேண்டியது உங்கள் இந்தப் பழக்கத்தையல்ல, நண்பர்களையே!//

வழிமொழிகிறேன்

arasu said...

I am a textile business man from TamilNadu. I face same kind of problem while I have business meetings with overseas buyers and Indian business men. Except Indians, no one compelled me to drink & they respect our individuality. But Indians dont understand Individual characters and their policies and try to implement their own views to others. Many times I decided to lose business instead of drinking.I am not against drinkers or social drinkers. But they should respect others policy too.

நிகழ்காலத்தில்... said...

ஓட்டுப்போட்டு விட்டேன் நண்பரே