May 20, 2010

ஒரு இனிமையான பயணம் - 3

அவர்,

" யூ டேர்ன் எடுத்து சாப்பிட்டு முடித்தவுடன், எந்த பாதை வழியாக சென்றீர்கள்?'' என்றார்.

" சாப்பிட்டு அப்படியே நேரா போனோம்"

" ஏன் சார், நான் உங்களை சாப்பிடத்தான் யூ டேர்ன் எடுக்க சொன்னேன். மலாக்கா போக இல்லை. சாப்பிட்டு முடித்தவுடன் திரும்பவும் யூ டேர்ன் எடுத்து வந்த வழியா போனா மூன்றாவது சிக்னல ரைட் சைடு போனா நான் சொன்ன வழி வரும். முதல்ல திரும்பி சாப்பிட்ட இடத்துக்கு போங்க. அங்கே இருந்து போன் பண்ணுங்க" என்று சற்று கோபமாக பேசினார்.

அவர் சொன்னபடியே சென்று, போன் செய்து சரியான, வழியை கண்டு பிடித்து பயணத்தை தொடர்ந்தோம். இந்த அனுபவமும் ஒரு வித சந்தோசத்தையே கொடுத்தது. எங்கேயோ பிறந்து, வளர்ந்து வேறு ஒரு நாட்டில் வந்து வழி தெரியாமல் கையில் மேப்பை வைத்துக்கொண்டு காரில் பயணம் செய்வது கொஞ்சம் திரில் கலந்த சந்தோசமாக இருந்தது. பிறகு இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு Alor Kaja என்ற இடத்தை அடைந்தோம். அங்கே சென்று A Famosa Resort ஐ கண்டுபிடிப்பதில் அவ்வளவு சிரமம் இல்லை.அருமையான ரிசார்ட். மொத்தம் 525 ஹெக்டேர் நிலத்தை தனி ஒரு மனிதர் வாங்கி நிர்வகித்து வருகிறார். அங்கே ரிசார்ட் ஹோட்டலும் உள்ளது. அப்பார்ட்மெண்டும் உள்ளது. நாங்கள் ஹோட்டலில் தங்கினோம். அந்த ஹோட்டலின் செக் இன் டைம் மாலை நான்கு மணி. நாங்கள் சரியாக 1 மணிக்கு சென்று விட்டோம். சரி, நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அங்கே என்ன என்ன பார்க்கலாம் என்று ஆரோய்ந்தோம்.

அங்கே பார்த்து அனுபவிக்க வேண்டியவை:

01. Animal World
02. Water World
03. Cowboy Town
04. Fishing
05. Golf Resort
06. Micro Light & Sports Center

நாங்கள் முதலில் Animal World செல்லலாம் என்று நேராக அங்கே சென்றோம். எல்லோமே காஸ்ட்லி டிக்கட்ஸ். நாங்கள் மலேசியா ஐடி கார்ட் வைத்து இருந்ததால் எங்களுக்கு கொஞ்சம் டிஸ்கவுண்ட் உண்டு. அங்கே தனிப்பட்ட ஹோட்டல்களோ, உணவகமோ, காபி ஷாப்போ கிடையாது. எங்கே சாப்பிடுவது என்று குழம்பிபோய் அருகே இருந்த நபரிடம் கேட்டேன்.

" சார் ஏன் கவலை படறீங்க. டிக்கட்ல சாப்பாடும் உண்டு சார்"

அப்புறம் எந்த இடம்னு கேட்டு தெரிஞ்சுட்டு சாப்பிட போனோம். அருமையான சாப்பாடு. தவறுதலா ஒரு டிக்கட் எனக்கு கூட கொடுத்துட்டாங்க. அதுக்காக இன்னொரு சாப்பாடு சாப்பிடமிடியாது இல்லையா. அதனால ஒரு டிரிங்ஸ் மட்டும் அதிகமா வாங்கிட்டு முதல் இடத்துக்கு போனோம். அருகிலேயே ஒரு போட் பார்த்தோம்.

அங்கே இருந்தவரிடம், "இந்த போட் எங்கே போகுது?" என்றேன்.

" மங்கி ஐலேண்ட் போகுது வறீங்களா?" என்றார். சரி, என்று ஏறி உட்கார்ந்தோம். அப்போது மணி 2.10.

அந்த படகோட்டி, " சார் நான் சொல்றா மாதிரி Animal Worldல டைம் செலவிடுங்க. 2.30க்கு Cow Boy Show, 3.00 Bird Show, 3.45 Multi Animal Show and 4.30 Elephant show. அதுக்கு அப்புறம் 5.00க்கு வேன்ல Animal Safari போங்க" என்றார். எனக்கு ரொம்ப சந்தோசம். ஏனென்றால் பல இடங்களில் சரியான புரோக்ராம் தெரியாமல், சில நிகழ்ச்சி பார்த்தும், சில நிகழ்ச்சிகள் பார்க்காமலும் வந்ததுண்டு. இப்போது எல்லாமே தெரிந்ததால் எதையும் மிஸ் பண்ண வேண்டியதில்லை. ஆனாலும் எனக்கு ஒரு குழப்பம். இப்போது மணி 2.10. Cow Boy Show 2.30க்கு. நாம் செல்வதோ மங்கி ஐலேண்டுக்கு. எப்படி 2.30க்குல் வருவது?

அப்படி குழம்பிக்கொண்டிருந்த நிலையிலே படகு நின்றது. ஏன் என்றால் ஐலேண்ட் வந்துவிட்டது. மொத்தமே 2 நிமிட பயணம்தான். நான் ஏதோ ரொம்ப தூரம் செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அருகில் இருக்கும் என நினைக்கவில்லை. கடைசிவரை நானும் என் பிள்ளைகளும் ஏதாவது ஒரு குரங்கு தென்படுமா? என்று தேடினோம். கிடைக்கவே இல்லை. ஒரு குரங்கு கூட இல்லாத இடத்திற்கு ஏன் மங்கி ஐலேண்ட் என பெயர் வைத்தார்கள் தெரியவில்லை. மொத்தம் 5 நிமிடம் மட்டுமே அங்கே இருந்து விட்டு மீண்டும் படகில் வந்து சேர்ந்தோம்.

சரியாக Cow Boy Show நடக்கும் இடத்திற்கு வந்தோம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு ஷோ நான் பார்த்ததே இல்லை. நமக்கு முன்னால் தத்ரூபமாக ஒரு நாடகம் போல நடிக்கிறார்கள். நல்ல மியூஸிக் சிஸ்டம். சண்டை போடுகிறார்கள். நிஜ துப்பாகியால் சுடுவதை போல ஒருத்தருக்கு ஒருத்தர் சுட்டுக் கொள்கிறார்கள். ரத்தம் கொட்டுகிறது. ஒரிஜினல் சண்டை போல் டைமிங் மிஸ் செய்யாமல் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். இவர்கள் சுடுவதால் வரும் நெருப்பில் அங்கங்கே தீப்பிடித்து எரிகிறது.
கடைசியில் நடந்த சீன் புல்லரிக்க வைத்து விட்டது. கிட்டத்தட்ட 50 அடி உயரத்தில் ஒருத்தர் நிற்கிறார். கீழே நின்ற ஒருவர் சுடுகிறார். துப்பாக்கி குண்டு அவரை துளைக்கிறது. அவர் தலை கீழாக 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுகிறார். சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட எனக்கு, நேரில் பார்க்கும்போது அவ்வளவு திரில்லிங்காக இருந்தது.

பிறகு Bird Show,Multi Animal Show பார்த்து விட்டு Elephant show வந்தோம்.

அங்கே சில சுவாரஸ்யங்கள். அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும். அப்படி என்ன சுவாரஸ்யம்?

- தொடரும்

6 comments:

பத்மா said...

தொடருங்கள் படிக்கிறோம் ..another manian on the making

nedun said...

அந்த Cow Boy Show சான்சே இல்லை அவ்வளவு தத்ருபமா நடிசங்க. செவ்விந்தியர்கள் குதிரையில் வந்து சுடுவது -- நல்ல டைமிங் சென்ஸ். ஆமா நீங்க எப்ப போனிங்க

Killivalavan said...

Cow Boy Show போல ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ஒரு ஷோ உண்டு. அதன் பெயர் ஞாபகம் இல்லை

iniyavan said...

//தொடருங்கள் படிக்கிறோம் ..another manian on the making//

நன்றி பத்மா.

iniyavan said...

//அந்த Cow Boy Show சான்சே இல்லை அவ்வளவு தத்ருபமா நடிசங்க. செவ்விந்தியர்கள் குதிரையில் வந்து சுடுவது -- நல்ல டைமிங் சென்ஸ். ஆமா நீங்க எப்ப போனிங்க//

வருகைக்கு நன்றி நண்பா. நான் ஏப்ரல் 29 ம் தேதி போயிருந்தேன்.

iniyavan said...

//Cow Boy Show போல ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ஒரு ஷோ உண்டு. அதன் பெயர் ஞாபகம் இல்லை//

அப்படியா? எனக்குத் தெரியாது.

வருகைக்கு நன்றி கிள்ளிவளவன்.