என்ன செய்வது? பின்பு அருகில் இருந்த செக்யூரிட்டியிடம் சென்று கேட்டேன். அவர்தான் காரணத்தை கண்டுபிடித்தார். " சார், நீங்க வாட்டர் கேம் விளையாடும்போது ரிமோட்டை பேண்டிலேயே வைத்து இருந்தீர்களா?"
அப்போதுதான் எனக்கு உரைத்தது. போன், பர்ஸ் ஆகியவற்றை மனைவியிடம் கொடுத்த நான் ரிமோட்டை கொடுக்க மறந்துவிட்டிருக்கிறேன். ரிமோட் தண்ணீரில் நனைந்ததால் வேலை செய்யவில்லை. பிறகு செக்யூரிட்டி அருகே இருந்த யானைப்பாகனிடம் சென்று ஒரு சிறு கத்தியை வாங்கிவந்தார்.
" சார், ரிமோட்டை திறந்து பார்க்கலாம். தண்ணீரை துடைத்து பிறகு மாட்டி பார்க்கலாம். 95% வேலை செய்ய சான்ஸ் இல்லை. ஏனென்றால் இதுவும் செல் போன் போலத்தான். தண்ணீரில் மூழ்கினால் அவ்வளவுதான்" என்றார்.
கொஞ்சம் டென்ஷன் ஆனது உண்மைதான். ஒரு வேளை வேலை செய்யாவிட்டால் என்ன செய்வது? அதைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் ரிமோட்டை ஓப்பன் செய்தோம். பிறகு வெயிலில் காய வைத்தோம். என் நல்ல நேரம் நன்றாக வேலை செய்தது. உடனே அவர்களுக்கு என் நன்றியை சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு மலாக்கா கிளம்பினேன். போகும்போது ஒரு சிறிய தவறு செய்ய இருந்து சரி பண்ணிவிட்டேன். அதாவது எங்கள் ஊரிலிருந்து ரிசார்ட் வரும்போது KL Highway ஆனால் திரும்பி போகும் போது அதே Highway தான். ஆனால், அதன் பெயர் Johor Higway. ஹைவே மாறினால் கோலாலம்பூர் போக வேண்டி இருக்கும். ஒரு வழியாக மாலை 4 மணிக்கு மலாக்கா வந்து சேர்ந்தோம்.
சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு மாலை 6 மணி அளவில் மலாக்காவில் உள்ள பகுதிகளை பார்க்க சென்றோம். மலாக்காவில் பார்க்க வேண்டிய இடங்கள்:
01. Malaka River
02. Eye on Malaka
03. St Francis Xavier church
04. Bukit Cina
05. Cheng Hoon Teng Temple
06. Christ Church
07. Cultural Museum
08. Sky Tower
09. Crocodile Park
10. Zoo
11. Butterfky garden
இன்னும் சில ஹிஸ்டாரிகல் இடங்களும் உள்ளன. ஆனால், பிள்ளைகளுக்கு எது விருப்பமோ அதை மட்டுமே நான் தேர்வு செய்தேன். நாங்கள் முதலில் போனது. மலாக்கா ஸ்கை டவர்.


உயர்ந்த டவரில் சுற்றிலும் இருக்கைகள். டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். அங்கே இருவர் குடுமப்த்துடன் போட்டோ பிடித்தார்கள். நான் வேண்டாம் என்றேன். ஆனால் அவரோ, " சார், சும்மாதான் என்றார். போட்டோ பிடித்த பிறகு டவரில் உள்ள இருக்கைகளில் அமர்ந்தோம். டவரை மெதுவாக சுற்றிக்கொண்டே மேலே செல்வதற்கு ஒரு நிமிடம் ஆகிறது. மேலே 5 நிமிடம் சுற்றிக்கொண்டே நிற்கிறது. அங்கே இருந்து மலாக்காவை பார்க்க அருமையாக உள்ளது. சில போட்டோக்கள் எடுத்தேன். பிறகு கீழே வந்தவுடன் பார்த்தால், என் குடுமப போட்டோ பெரிய அளவில் பிரேமுடன் மாட்டி வைத்துள்ளார்கள். அதை என்னிடம் கொடுத்து 35 ரிங்கட் என்றார்கள். என்ன கொடுமை பாருங்கள். நான், " நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு வேண்டாம்" என்று கூறி விட்டேன்.
டவர் மேலிலிருந்து எடுத்த படங்கள் சில உங்கள் பார்வைக்கு:
பிறகு அங்கிருந்து நடந்து அருகே உள்ள ஒரு கப்பலில் ஏறினோம். மரத்தாலே கப்பல் செய்து பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அங்கே ஒரு பெண் என்னைக் கூப்பிட்டாள். "என்ன என்றேன்?"
" உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமா?"
" ஏன் என்னுடன்?"
" எனக்கு இந்தியர்கள் என்றால் பிடிக்கும்" என்றாள்.
அருகில் என் மனைவி இருக்கவே, " நோ தேங்க்ஸ்" என்று நழுவிவிட்டேன். பிறகு அங்கிருந்து மலாக்கா ரிவர் பகுதிக்கு சென்றோம். கடலிலிருந்து நீர் ஊருக்குள்ளே வருகிறது அதை அந்த டவுனை சுற்றி ஒரு ரிவராக அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். எல்லோரும் டிக்கட் வாங்கிக்கொண்டு போட்டில் அமர்ந்தோம். சரியாக 45 நிமிட பயணம். ஊருக்குள்ளேயே. அருமையாக இருக்கிறது. கட்டிடங்களின் பின் பகுதிகளில் அழகான ஓவியங்கள் வரைந்து வைத்திருக்கிறார்கள். நல்ல காற்று. மலாக்கா போகும் அனைவரும் அனுபவிக்க வேண்டிய ஒன்று இந்த படகு பயணம்.
பிறகு ஹோட்டலுக்கு சென்று காரை நிறுத்திவிட்டு, இந்திய ஹோட்டல் எங்கே இருக்கிறது என்பதை கேட்டறிந்து நடந்து சென்றோம். இரவு 10 மணி. ஒரு இந்தியர் வழி மறித்தார்,
" சார், இந்த பக்கமா போகாதீங்க"
- தொடரும்
4 comments:
\\" எனக்கு இந்தியர்கள் என்றால் பிடிக்கும்" என்றாள்.
அருகில் என் மனைவி இருக்கவே, " நோ தேங்க்ஸ்" என்று நழுவிவிட்டேன்//
ஹ்ம்ம் .. ஆளு இருந்தா எலி ,, இல்லை என்றால் புலி .. ரைட்டா அண்ணே .?? ஹி ஹி ஹி
ஏதாவது ஒரு suspense ஓடவே முடிக்கிரிங்களே.
//ஹ்ம்ம் .. ஆளு இருந்தா எலி ,, இல்லை என்றால் புலி .. ரைட்டா அண்ணே .?? ஹி ஹி ஹி//
சில விசயங்களை பொதுவில் சொல்லக்கூடாது ரோமியோ.
வருகைக்கு நன்றி நண்பா?
//ஏதாவது ஒரு suspense ஓடவே முடிக்கிரிங்களே.//
ஒரு தொடர் கதை எழுதப்போறேன் குமார். அதற்கான ஒத்திகை இது.
Post a Comment