பறந்து கொண்டிருக்கிறேன் தினமும். இலக்கை நோக்கி. எடுத்த ப்ராஜக்ட் முடியும் தருவாயில் உள்ளது. நண்பன் போன் செய்யும்போதெல்லாம் ஒவ்வொரு ஏர்போர்ட்டில் இருந்தேன். என்னால் சரிவர பேச முடியவில்லை. கடுப்பான அவன், " லால்குடியில், மெயின்கார்ட் கேட் போக 58 டவுண்ட் பஸ்ஸுக்கு நின்னு ஓடி போய் ஏறியதெல்லாம் நினைவில்லையா?'' என்றான். உண்மைதான். அதற்காக அப்படியேவா இருக்கும் வாழ்க்கை. அதற்காக பழசை மறந்துவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. அவ்வப்போது அசைப்போட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். கடந்து வந்த பாதையை மறக்க கூடாது அல்லவா?
எழுத வந்த புதிதில் தினமும் மூன்று பதிவுகள், பின்பு இரண்டானது, பின்பு ஒன்றானது, பின்பு ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆனது. இப்போது வாரத்திற்கு மூன்றே கஷ்டம்போல் உள்ளது. ஏனென்றால் அந்த அளவிற்கு மற்ற வேலைகள். நான் பதிவு எழுதுவதை சொன்னேன். நீங்கள் வேறு எதையாவதை நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. அதிகம் எழுதாமல் இருப்பதற்கு வேலைப்பளு மட்டும் காரணம் அல்ல. பல காரணங்கள். எல்லோருக்கும் தெரிந்த காரணங்கள்தான். சரி அதை விட்டுவிடுவோம்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். உண்மைதான். வீட்டில், உணவினை சில சமயம் குறை சொல்லிக்கொண்டே சாப்பிடுவதுண்டு. ஆனால், வீணாக்குவதில்லை. ஆனால், இப்போது பயணங்களில் இருக்கும்போது அதன் அருமை தெரிகிறது. என்னதான் 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு என்றாலும், எனக்கு பிடிப்பதில்லை. வீட்டிற்கு வந்து மனைவி கையால் ஒரு ரசம் சாதமோ அல்லது தயிர் சாதமோ சாப்பிடுவதில் இருக்கும் இன்பமே தனி. அந்த நேரத்தில் அது அத்தனை ருசியாக இருக்கும். அதற்காகவே நிறைய டூர் செல்லலாம் போல் இருக்கிறது.
சிங்கப்பூர் சென்றிருந்தேன். இரண்டு நாட்களும் காலை முதல் இரவு வரை மீட்டிங். எப்படியாவது கோவிக்கண்ணன் சாரை பார்த்துவிட வேண்டும் என எண்ணினேன். ஆனால், போனில் மட்டுமே பேச முடிந்தது. அடுத்த முறை நிச்சயம் சந்திக்க வேண்டும். அவர் எழுத்தில் சில சமயம் காரம் இருந்தாலும், போனில் மிக இனிமையாக பேசுகிறார்.
என்னுடைய பல நாள் ஆசை சென்ற வாரம் நிறைவேறியது. ஆம், நான் கேட்ட புத்தகங்கள் எல்லாம் அகநாழிகை வாசுதேவன் சார் வாங்கி அனுப்பினார். இப்போது நேரம் கிடைக்கும் போது எல்லாம் புத்தகங்களை படித்துக்கொண்டிருக்கிறேன். வாசு சாருக்கு நன்றி.
கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் சிங்கம் படம் பார்த்தோம். எங்களுக்கு பிடித்திருந்தது. மூன்று மணி நேரம் போனதே சரியில்லை. அனுஷ்கா....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஒக்கே. ஆனா, அவங்க இனி நடிக்காமல் இருப்பதே நல்லது. முகத்துல ஒரு முதிர்ச்சி தெரியுது. என்னால அனுஷ்காவை சூர்யாவோட காதலியா ஏத்துக்கவே முடியலை. உயரம் வேற கொஞ்சம் அதிகம். 25 படத்துல சூர்யா அடைந்த உயரம், நினைச்சே பார்க்க முடியல. Hard Work Never Fails.
ராவணன் டிரயிலர் பார்த்தோம். விக்ரம் உடல் அமைப்பு. அப்பா! எப்படித்தான் இப்படி உடலை பாதுகாக்கிறாரோ தெரியல. நானும் 10 வருடமாக ஜிம் செல்கிறேன். ஆனால், உடம்பு அப்படியே தான் உள்ளது. ஜிம் என்றதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு தோழி என்னிடம், " ஜிம் டெய்லி போறங்கறீங்க. பார்த்தா அப்படி தெரியலையே?" என்றாள். உடனே நான் இப்படி பதில் சொன்னேன், "அதை நீ கேட்க கூடாது. உன்னை கம்பேர் செய்யும் போது எனக்குத்தானே பெ..... இருக்கு". கோபப்படவில்லை அவள். ஆனால், முகம் சிவந்தது.ரொம்ப நாள் கழித்து ராவணன் ட்ரையிலரில் ஐஸ்வர்யாவை பார்த்தேன். 13 வருசம் முன்னாடி ஜீன்ஸ்ல எப்படி இருந்தாங்களோ அப்படியே ப்ரிட்ஜ்ல வைச்சா மாதிரி இருக்காங்க. குடுத்து வச்ச அபிஷேக்.
ஆனந்த விகடன் நிறுவனத்தை சேர்ந்த யாராவது இதை படிப்பார்களானால், அவர்களின் கவனத்திற்கு! நானும் ஒவ்வோரு வாரமும் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் கோலாலம்பூர் செல்லும் போது ஆனந்த விகடன் வாங்க முயற்சி செய்கிறேன். கிடைப்பதில்லை. உடனே விற்று தீர்ந்து விடுகிறது. வியாழன் வரும் ஆவி ஞாயிற்றுக்கிழமைக்குள் விற்று விடுகிறது. மலேசியாவிற்கு கொஞ்சம் அதிகமா ஆவி அனுப்புங்க சார்.
அன்றைக்கு ஒரு நாள் சன் மியூஸிக்கில் பாடல்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு பாடலில் சினேகா மழையில் நனைந்து பாடிக்கொண்டிருந்தார். என் பையன் (அடுத்த மாதம் வந்தால் ஆறு வயது), " அப்பா, இந்த பாட்டு கொஞ்சம் ஓவரா இல்லை" என்றான். எங்களுக்கு தூக்கி வாரிபோட்டது.
அவன் சொன்ன இன்னொரு விசயமும் என்னை அதிர்ச்சிகுள்ளாக்கியது. விளையாடிவிட்டு வந்தான். ஒரே வேர்வை. டி சர்ட்டை கழட்டிகொண்டே அவன் அக்காவை பார்த்து சொன்னான்,
" அக்கா, நான் கழட்டினா மாதிரி நீ கழட்டிடாத. நாங்க எல்லாம் பாய்ஸ். கழட்டலாம். ஆனா, கேர்ல்ஸ் அப்படி கழட்டக்கூடாது"
அவன் வயதில் நான் என் கிராமத்தில் படித்துக்கொண்டிருந்ததை நினைத்துக்கொண்டேன். இதற்கெல்லாம் என்ன காரணம்? சந்தோசப்படுவதா? இல்லை டிவி மோகத்தை நினைத்து கவலைப்படுவதா? நான் 15 வயதில் இந்த மாதிரி பேச ஆரம்பித்த போது, எனக்கு கிடைத்த பெயர், " பிஞ்சிலேயே பழுத்தவன்". எதிர்கால சமுதாயத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. அதுவும் இங்கே பள்ளிகளில் செக்ஸ் கல்வி என்ற பெயரில் சொல்லிக் கொடுப்பதை பற்றி எல்லாம் கேள்வி படும்போது பயமாக உள்ளது. எப்படா, தமிழ் நாடு வருவோம், என்று உள்ளது.
அடிக்கடி பயணம் செய்வதால், சில சமயம் எரிச்சல் வருகிறது. அதிக கோபம் வருகிறது. ஆனால், எங்கள் MDக்களை பார்க்கும் போது நான் அலைவதெல்லாம் சாதாரணம் என்று ஆகிவிடுகிறது. அவர் எப்போதுமே ப்ளைட்டில்தான். இந்த வயதிலும் அப்படி ஒரு உழைப்பு. சிங்கப்பூரில் இரவு மீட்டிங் முடிய 11.30 ஆனது. ரூமுக்கு வர 12 மணி. 5 மணி நேர தூக்கம். பின்பு ஏர்போர்ட் பயணம். ஏர்போர்ட்டிலே MD சொன்னபடி அனைத்து மீட்டிங்கும் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்தேன். விமானத்தில் ஏறும் வரை இருவரும் பிஸி. ஏறி அமர்ந்து, ப்ளைட் டேக் ஆப் ஆகும்போது, இருக்கையை விட்டு என் அருகில் வந்த MD, " உலக்ஸ் KL போக இன்னும் 50 நிமிடம் ஆகும். அதற்குள் நேற்றைய மீட்டிங்கின் மினிட்ஸ் எழுதீடறியா". ஒரு நிமிடத்தைக் கூட அவர் வீணாக்குவதில்லை. என்னையும் வீணாக்க விடுவதில்லை. அதனால்தான் அவர் MD.
மலேசியாவில் புட் பால் பீவர் ஆரம்பித்துவிட்டது. எங்கு திரும்பினாலும் டிவிதான். அதை பற்றிய பேச்சுதான். இந்த முறை யார் ஜெயிப்பார்கள்? ஸ்பெயினா? அர்ஜண்டினாவா?, இங்கிலாந்தா? இல்லை இத்தாலியா? ஒரு பெரிய விவாதமே இங்கே நட்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், எனக்கு பிடித்த ரெனால்டோ, டேவிட் பெக்காம் இந்த முறை விளையாட வில்லை. டேவிட் பெக்காம் இந்த முறை விளையாடினால், நான்கு முறை உலக கோப்பை விளையாடிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமை கிடைத்திருக்கும்.
சரி, இப்போது தலைப்பிற்கு வருவொம்.
"என்னாச்சு உனக்கு?"
நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன். கடந்த 15 நாட்களில் பல விசயங்கள் எழுத முடியாமல் போய்விட்டது. இனி எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன்,
8 comments:
ஆனந்த விகடன் நிறுவனத்தை சேர்ந்த யாராவது இதை படிப்பார்களானால், அவர்களின் கவனத்திற்கு!
//Online subscription pannungo... will be helpful not for you, me too :)
பதிவுலக சண்டைகள் பார்த்து வெறுத்து நானும் கூட கொஞ்ச நாள் எழுதாமல் இருந்தேன். நீங்களும் அப்படி தான் எழுதலை என நினைத்தேன்
டிவியால் பசங்க நிறைய தெரிந்து கொள்றாங்க...(வேண்டாததையும்)
HI FRIEND :)
VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/
//Online subscription pannungo... will be helpful not for you, me too :)
எனக்கு ஆன்லைனில் படிப்பதில் அவ்வளவு விருப்பம் இல்லை நண்பரே!
வருகைக்கு நன்றி.
//பதிவுலக சண்டைகள் பார்த்து வெறுத்து நானும் கூட கொஞ்ச நாள் எழுதாமல் இருந்தேன். நீங்களும் அப்படி தான் எழுதலை என நினைத்தேன்//
வருகைக்கு நன்றி மோகன்.
//டிவியால் பசங்க நிறைய தெரிந்து கொள்றாங்க...(வேண்டாததையும்)//
ஆமாம் மேடம். வருகைக்கு நன்றி.
//HI FRIEND :)
VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com///
வருகைக்கு நன்றி நண்பரே.
Post a Comment