எங்கள் ஊர் இடையாற்றுமங்கலம். அது வளஞ்சார் எழில் மிகு சீருர். விடாயாற்றிமங்கலம் என்ற பெயரும் அதற்குண்டு. அவ்வூரில் எங்கள் வீடு உழவர் பெருமக்கள் வாழும் நெடுந்தெருவில் நலங்கொழிக்கும் வலமனை.
எங்கள் தாத்தாவிற்கு அவரின் முதல் மனைவிமூலம் ஒரு பெண் மகவொன்று பிறந்து இறந்தது. பின்னர் குழந்தை இல்லாததால், முதல் மனைவியே எங்கள் தாத்தாவிற்கு விரும்பி இரண்டாம் திருமணம் செய்து வைத்திருக்கிறார். எங்க அப்பாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். தாத்தா கஷ்டப்பட்டு அவர்களை வளர்த்து இருக்கிறார்.
என் அப்பா உ.நாராயணசுவாமி தெளிந்த சிந்தையோடு செயல்திறன் கொண்டவர். அறிவோடும் ஆற்றலோடும் உயரிய பண்புகளோடும் வாழ்ந்தவர். அரிய பணிகளையும் உரிய செயல்களையும் ஆற்றிப் பேரூர் மக்கள் பயனுறத் திகழ்ந்தவர். அவர் தன்முனைப்பில்லாது அடக்கத்தோடு ஆரவாரமின்றிப் பணி செய்து கிடந்தவர். அப்பணிகள் வெளியில் தெரியாத வேர்களைப் போன்று இருந்து மக்களுக்கு பயனளித்தவை.
அவரது வாழ்க்கை பேரூர் மக்களுக்கு என்றும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது. அவர் வாழ்க்கையை வள்ளுவம் வளப்படுத்தியது. அந்நெறியில் வாழ்ந்த முறையால், அவர் வாழ்வாங்கு வாழ்ந்தவர் ஆகிறார். ஊர் போற்ற வாழ்ந்து குடிபெருமையையும் அவர் உயர்த்தி ஓண்புகழ் பெற்றவர். இவ்வாறு அவரது ஏற்றத்திற்குக் களமாகும் மனநலத்தையும் இன நலத்தையும் குறிப்பிட்டுக்கூறுவது இங்கே பொருந்தும்.
அப்பா வேலைக்கு போன பிறகு அவருக்கு பெண் பார்த்திருக்கிறார் தாத்தா. அப்பாவிற்கு பெண்ணை பிடித்து விட்டது. ஆனால், தாத்தாவை அந்த வீட்டில் சரியாக மதிக்கவில்லையாம். அதனால் அந்த பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். அப்பாவிற்கு தாத்தாவிடம் 'பெண் பிடித்திருக்கிறது' என்று சொல்ல பயம். உடனே அவர் கிளம்பி கோயம்புத்தூருக்கு கிளம்பி வேலைக்கு சென்றுவிட்டார்.
அப்பாவின் ஆசையை புரிந்து கொண்ட தாத்தா, அவருக்கு பிடித்த பெண்ணிற்கே திருமணம் செய்துவிட்டார். ஆனால், அப்பா என்ன செய்தார்? அவருக்கு பிடித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு வந்துவிட்டு, தாத்தாவை அவர்கள் சரியாக மதிக்காத காரணத்தால், அம்மாவை கடைசிவரை அவர்கள் வீட்டிற்கு கூட்டிச் செல்லவே இல்லை. இது தவறு என்று எனக்கு இப்போது தெரிந்தாலும், அப்பா ஏன் அப்படி நடந்து கொண்டார் என நாங்கள் யாரும் அவரிடம் கேட்டது இல்லை. ஆனால், அம்மாவை நன்றாகவே வைத்திருந்தார். அப்பாவிற்கு முதல் மூன்றும் பெண் குழந்தைகள். தாத்தாவிற்கு பேரனை பார்க்க ஆசை. அந்த சமயத்தில் அம்மா மீண்டும் கர்ப்பம்.
அம்மா நிறைமாத கர்ப்பமாக இருந்த போது தாத்தாவிற்கு உடம்பிற்கு முடியவில்லை. தாத்தா அம்மாவை கூப்பிட்டு இந்த முறை உனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என சொல்லிவிட்டு இறைவனிடம் சென்றுவிட்டார். அவர் இறந்த மூன்றாவது நாள் நான் பிறந்திருக்கிறேன். அதனால், அப்பா எனக்கு 'உலகநாதன்' என்று பெயர் வைத்துவிட்டார். எல்லோரும் தாத்தா பெயரை கூப்பிட சங்கட பட்டுக்கொண்டு வீட்டில் ரவி என கூப்பிட ஆரம்பித்தனர்.
தாத்தா இறந்த பிறகு முழுக்குடும்ப பொறுப்பும் அப்பாவிடம் வந்துவிட்டது. கஷ்டப்பட்டு அனைவரையும் கரை சேர்த்திருக்கிறார். அப்பா பட்ட கஷ்டங்களில் ஒரு சதவிகிதம் கூட நான் படவில்லை. எங்கள் கிராமத்திலிருந்து பல நாட்கள் 5 கிலோ மீட்டர் நடந்தே பஸ் ஸ்டாண்டு செல்வார். ஒரு சைக்கிள் வாங்க கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். எந்த நிமிடம் நினைத்தாலும் என் மனம் கண் கலங்குகிறது.
அப்பா கஷ்டப்பட்டு அவர் தம்பி தங்கைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தார். அவரின் கடைசி தங்கைக்கு என் அப்பா திருமணம் செய்து வைத்த போது என் பெரிய அக்கா கல்யாண வயதை கடந்துவிட்டார். நினைத்துப்பாருங்கள், எவ்வளவு வேதனையை அவர் மனதில் சுமந்து இருப்பார் என்று!
அப்பா ஓய்வு எடுத்து நான் பார்த்ததே இல்லை. எப்போழுதும் உழைத்துக்கொண்டே இருப்பார். கலக்டர் உஜாகர் சிங் திருச்சி மாவட்ட கலக்டராக இருந்த போது, அவர் கையால் "மிஸ்டர் கிளீன்" என்ற அவார்டை வாங்கியவர் அப்பா.
கடின உழைப்பை அப்பாவிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். அப்பா ரொம்ப கண்டிப்பாக இருந்தவர். கஷ்டமான காலங்களில் கூட எங்களை கஷ்டப்படாமல் வளர்த்தவர். ஆனால், ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன ஆசாமி.
ஒரு மிலிட்டரி ஆபிஸர் போல் நடந்து கொள்வார். எனக்கு நன்கு விவரம் தெரியும் வரையில் அவர் எனக்கு வில்லனாகத்தான் தெரிந்தார். அவர் மட்டும் வில்லன் போல் நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால் நான் கெட்டு சீரழிந்து போயிருப்பேன்.
இரவு 9 மணிக்குள் வீட்டிற்கு வந்து விட வேண்டும். வர லேட் ஆனால், தெரு முனையில் நிற்பார். வரும்போது அவர் பார்க்கும் பார்வை என்னை சுட்டு எரிக்கும். இத்தனை வயது ஆகியும், இன்றும் இரவு 9 மணிக்கு மேலே வெளியில் இருந்தால் ஒரு படபடப்பும், பயமும் என்னிடம் இருக்கிறது. நானும் எவ்வளவோ முயன்றும் அநத உணர்வை தடுக்க முடியவில்லை.
அப்பாவைப் பற்றிய நினைவுகள் இன்னும் தொடரும்.......

13 comments:
ஆவலோடு எதிர்பார்கிறேன்
சரியான தருணத்தில் அப்பாவைப்பற்றி நல்ல பகிர்வு.தொடருங்கள்...
அப்பாதான் நம்முடைய முதல் ஹீரோ.
//பின்னர் குழந்தை இல்லாததால், முதல் மனைவியே எங்கள் தாத்தாவிற்கு விரும்பி இரண்டாம் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.//
எங்கள் பெரியம்மா அவருக்கு குழந்தை இல்லாததால் அவருடைய அண்ணன் மகளை அப்பாவிற்கு இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து வைத்தார். நாங்கள் பெரியம்மாவை ”அம்மா” என்றும் அம்மாவை “சின்னம்மா” என்றுதான் கூப்பிடுவோம்!
nice....
Very good start Mr. Ulaganathan
seenubhai
Very good start mr. ulaganathan
Seenubhai
//ஆவலோடு எதிர்பார்கிறேன்//
வருகைக்கு நன்றி.
//சரியான தருணத்தில் அப்பாவைப்பற்றி நல்ல பகிர்வு.தொடருங்கள்...//
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ரவிச்சந்திரன்.
//nice....//
வருகைக்கு நன்றி மேடம்.
//Very good start Mr. Ulaganathan//
வருகைக்கு நன்றி சீனுபாய்
nice article.
பலரது வாழ்வில் நாயகனும் வில்லனும் அப்பாவே!
மிஸ்ரர் கிளீன் விருது பெற்ற அப்பா..
பெருமையாக இருக்கு.
//nice article.//
நன்றி கணேசன்.
//பலரது வாழ்வில் நாயகனும் வில்லனும் அப்பாவே!
மிஸ்ரர் கிளீன் விருது பெற்ற அப்பா..
பெருமையாக இருக்கு.//
வருகைக்கு நன்றி யோகன்.
Post a Comment