Oct 6, 2010

அப்பா என் அன்பு தெய்வம்.........! (பாகம் 2)

ஒரு முறை கல்லூரி படிக்கும்போது அப்பாவிடம் பேண்ட் சட்டை வாங்க பணம் கேட்டேன். அவர் கொடுத்த பணம் எனக்கு போதவில்லை. அதனால் அப்பாவிடம் சண்டை போட்டேன். "என் கிட்ட அவ்வளவு பணம் இல்லைப்பா?" என்றவர், நான் தொடர்ந்து பணம் கேட்கவே, என் நச்சரிப்பு தாங்காமல் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவர் நான் கேட்ட பணத்தை கொடுத்தார்.

அம்மாவிடம் கேட்டேன், " ஏதும்மா, அப்பாவுக்கு பணம்? முதலில் இல்லை என்றாரே?"

"எங்காவது கடன் வாங்கி வந்திருப்பார்" என்றார்கள்.

அடுத்து வந்த ஒரு நாளில், நான் புது ட்ரெஸ்ஸை போடலாம் என நினைத்து, ரூமிற்கு சென்று எடுக்க போகையில், அப்பாவை பார்க்கிறேன். அவர் பனியன் முழுவதும் ஓட்டை. அதை போட்டு வெள்ளை சைட்டை போட்டு ஆபிஸ் செல்கிறார். அப்பொழுது அவர் ஸ்பெஷல் தாசில்தாராக இருந்தார். அம்மாவிடம் கேட்கிறேன்,

"ஏம்மா, அப்பா ஒரு நல்ல பனியன் வாங்கி போட்டுக்கக் கூடாதா?''

"இதை, நீ பணம் பத்துலனு அப்பாட்ட சண்ட போட்ட பாரு, அப்ப கேட்டுருக்கணும்"

அதற்கப்புறம் அந்த சட்டை போடும்போதெல்லாம் அதே நினைவு. இன்று எத்தனை உடைகள், எத்தனை பனியன்கள்????

அப்பா எனக்குத் தெரிந்து எந்த ஊருக்கும் சுற்றுலாவோ இல்லை ஓய்வு எடுக்கவோ போனதில்லை. காலம் முழுக்க எங்களுக்காகவே உழைத்தார். ஒரு நல்ல உடை அணிந்ததில்லை. எல்லோவற்றையும் பிள்ளைகளுக்கே செலவழிப்பார். பிள்ளைகள் அனைவரையும் அதிகமாக படிக்க வைத்தார். படிப்புதான் உங்களுக்கு நான் வைத்து விட்டு போகும் சொத்து என்பார். உண்மைதான். அந்த படிப்பினால் மட்டுமே என்னால் வாழ்க்கையில் முன்னேற முடிந்தது.

எங்கள் கிராமத்தில் ஐந்தாவது வரைதான் வகுப்புகள் உண்டு. ஆறாவது படிப்பதற்கு லால்குடி வரவேண்டும். தினமும் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் நடக்க வேண்டி வரும். நான் கஷ்டப்பட கூடாது என்பதற்காக குடும்பத்தையே லால்குடிக்கு மாற்றினார். வாடகை வீட்டில்தான் குடி இருந்தோம். வீட்டு வாடகை கட்ட முடியாமல் பல வீடுகள் மாறி இருக்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகை கட்ட அவர் பட்ட பாடு இன்னும் என் நினைவில் வந்து போகிறது.

1997ஆம் ஆண்டு வரை வாடகை வீட்டில் குடி இருந்தோம். 1997ம் வீட்டிலிருந்து அத்தை கட்டிய வீட்டிற்கு குடிபுகுந்தோம். அப்பாவை எப்படியாவது சொந்த வீட்டில் குடி வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சித்தேன். கடைசிவரை சரியான வீடோ, இடமோ அமையவில்லை.

இன்று என்னிடம் மிகப் பெரிய பங்களா போன்ற வீடு உள்ளது. இன்னும் வீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால் என்ன பயன்? அதில் எல்லாம் இருந்து அனுபவிக்க என் அப்பா இல்லையே?

காலம் முழுவதும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தவர் சந்தோசத்தை அனுபவிக்காமலேயே போய் சேர்ந்துவிட்டார்.

என்னை மிகுந்த தன்னம்பிக்கை உள்ளவனாகவும், தைரியசாலியாகவும் வளர்த்த பெருமை அப்பாவிற்கே உண்டு. ஒரு சமயத்தில் நான் திசை மாறி செல்ல வாய்ப்புகள் அதிகம் இருந்தது. அறியாத வயது. எதையும் அனுபவித்து பார்க்க துடித்த வயது. எப்படியோ என்னைப் பற்றி தெரிந்து கொண்டு என்னை நல் வழியில் ஈடுபடுத்தினார்.

எப்போதுமே அப்பா பையிலிருந்து அவருக்கு தெரியாமல் காசு எடுப்பது என் வழக்கம். அவ்வாறு எடுத்து நண்பர்களுக்கு எல்லாம் நிறைய செலவு செய்திருக்கிறேன். தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி இருந்த போது கூட தொடர்ந்து அந்த தவறை செய்திருக்கிறேன்.

தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படத்தில் ஒரு வசனம் வரும். அப்பா பையிலிருந்து தனுஷ் காசு எடுத்திருப்பார். அதை தெரிந்து கொண்ட அவர் அப்பா அன்று இரவு தனுஷை அடிப்பார். அப்போது தனுஷைப் பார்த்து சொல்வார்:

"நாளைக்கு உன் பையன் வளர்ந்து பெரியவன் ஆகி உன் பையிலிருந்து காசு திருடுவான் பாரு, அப்பத்தெரியும்டா அதோட வலி"

இந்த காட்சியைப் பார்த்த போது எனக்கு என் அப்பா நினைவு வந்தது. ஒரு நாள் செலவுக்கு பணம் எடுக்க பாக்கட்டில் தேடிய போது பணம் தட்டுப்படவில்லை. பொதுவாக அப்பா தூங்கும் போது எடுப்பதுதான் வழக்கம். நான் யோசித்துக்கொண்டு நின்ற போது ஒரு குரல்:

"டேய், சட்டை பையில இல்லை. மேஜைல வைச்சிருக்கேன் பார். எடுத்துக்கோ"

எனக்கு ஒரே அதிர்ச்சி. அப்போ, இத்தனை நாள் நான் பணம் எடுத்தது தெரிந்திருக்கிறது. ஆனால் ஒன்றும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.

ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் அவர் பையிலிருந்து காசு எடுப்பதையே நிறுத்திவிட்டேன்.

நான் கல்லூரி படிக்கையில் பணம் தேவை என்றால் அப்பாவிடம், 'புத்தகம் வாங்க வேண்டும். பணம் கொடுங்கள்" என்பேன். அவரும் படிப்பிற்கு என்றால் என்ன ஏது? எனக்கேட்காமல் பணம் கொடுப்பார். அந்த பணத்தை வாங்கி செலவு செய்வேன். அது எல்லாம் அப்போது எனக்கு தவறாக தெரியவில்லை. ஆனால், இப்போது வருந்துகிறேன்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். என்னிடம் இருக்கும் அனைத்து நல்ல பழக்கங்களுக்கும் அப்பாதான் காரணம்.

ஒரு முறை பாழப்போன காதலில் சிக்கி பிரச்சனை பெரிதானபோது, என்னிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொண்டவர், அன்று இரவு நான் தூங்கியதாக நினைத்துக்கொண்டு, அம்மாவிடம் அவர் பேசிய வார்த்தைகள் இன்னும் என் நினைவில் உள்ளது,

"ஏண்டி, அப்படி யாருடி அது? என் பையனுக்கு பிடிச்ச அந்த பொண்ண ஒரு தடவை பார்க்கணும் போல உள்ளது. நீ பார்த்திருக்கியா? சின்ன பையனா இருக்காண்டி. இல்லாட்டி கூட பேசி பார்க்கலாம்"

அதுதான் அப்பா!

ஒரு சிறிய கம்பனியில் வேலையில் முதலில் சேர்ந்தேன். அந்த கமபனி MD அப்பாவுக்குத் தெரிந்தவர். சேர்ந்த ஒரு வாரத்தில் என்னைக் கூப்பிட்டு 50000 ரூபாய் பணத்தைக் கொடுத்து சேலத்தில் ஒரு இடத்தில் சேர்க்க சொன்னார். நான் வீட்டிற்கு வந்து அம்மாவிடம், ''எனக்கு பயமாக உள்ளது. இவ்வளவு பணத்தை எப்படி தனியாக சேலத்திற்கு எடுத்து செல்வது. எனக்கு இந்த வேலையே வேண்டாம்" என்று சொல்லிவிட்டு அன்று இரவே ஆபிஸ் சென்றேன். ஆபிஸிலேயே தூங்கி விட்டு, அடுத்த நாள் அதிகாலை சேலம் செல்வதாக ஏற்பாடு.

நான் ஆபிஸ் வந்து அன்று இரவு தூங்கி விட்டேன். அலுவலகம் இருந்தது மூன்றாவது மாடியில். ரிசப்ஸன் என்று ஒன்றும் அங்கே கிடையாது. காலையில் எழுந்து ஆபிஸ் கதவை திறந்தால், அந்த அலுவலக்த்தின் நுழைவாயிலில், செருப்புகள் போடும் இடத்தில் அப்பா உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். அன்று இரவு வீட்டிற்கு சென்றவுடன், அம்மா நான் பேசியதை சொல்லி இருக்கிறார். உடனே இரவே புறப்பட்டு வந்து கூனி குறுகி அவர் அந்த சிறிய இடத்தில் படுத்து இருந்தது இன்னும் என் கண்களில் இருக்கிறது.

" ஏம்பா, வந்தோன காலிங் பெல்லை அடிக்க வேண்டியதுதானே? நான் வந்து உள்ளே கூட்டி போயிருப்பென் இல்லை"

" நீ துங்கி கிட்டு இருப்ப. உன்னை எதுக்கு தொந்தரவு செய்துகிட்டு அப்படினு நான் பெல் அடிக்கலை"

அதுதான் அப்பா!

எல்லோருக்கும் நல்ல குருவாய், தெய்வமாய், தோழனாய், கண்டிக்கும்போது வில்லனாய், அப்பா அமைவது மிகவும் அறிது.

எனக்கு அந்த பாக்யத்தை ஆண்டவன் அருளினான்.

29 comments:

Anonymous said...

ரொம்ப நெகிழ்வா இருக்கு அண்ணா!
உண்மைலேயே நீங்க ரொம்ப கொடுத்துவச்சவர்!

Mugundan | முகுந்தன் said...

நட்சத்திர வாழ்த்துகள்,இனியவன்

அப்பா,சில பேருக்கு இனிமையான பெயர்,பல‌
பேருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் ஒரு வார்த்தை.

உங்கள் அப்பா, சந்தோச தருணங்களை காணாமல்
போனது வேதனை தான்.

Subramanian Vallinayagam said...

/* அன்று இரவு வீட்டிற்கு சென்றவுடன், அம்மா நான் பேசியதை சொல்லி இருக்கிறார். உடனே இரவே புறப்பட்டு வந்து கூனி குறுகி அவர் அந்த சிறிய இடத்தில் படுத்து இருந்தது இன்னும் என் கண்களில் இருக்கிறது. */

ரொம்ப நெகிழ்வா இருக்கு.. I liked this post and remember my dad.

Vasishtar said...

ஹலோ சார்

நானும் லால்குடி தான்

Vasishtar said...

உண்மையான உங்கள் வரிகள் என்னை தொட்டது. யாரும் இருக்கும் வரை அருமை தெரியாது. அவர் போன பிறகு தான் தெரியும். சார், ரியல்லி என் அப்பாவும் இப்படித்தான். ஆனால் அவரை யாரும் இன்று வரை புரிந்து கொள்ளவில்லை.

மோகன்ஜி said...

யதார்த்தமான எழுத்துக்களில் அடிமனத்திலிருந்து எழுதியிருக்கிறீர்கள்.. உங்கள் தந்தையை பற்றிய சொற்சித்திரத்தில்,என தந்தையை தரிசித்தேன். பிள்ளைகள் வேறு வேறு வகை.. அப்பாக்களோ ஒரே வகை. நெகிழ்வுடன்,
மோகன்ஜி
ஹைதராபாத்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தவமாய் தவமிருந்த அப்பாக்கள்...மிக
நெகிழ்வான பதிவு.

iniyavan said...

//ரொம்ப நெகிழ்வா இருக்கு அண்ணா!
உண்மைலேயே நீங்க ரொம்ப கொடுத்துவச்சவர்!//

வருகைக்கு நன்றி பாலாஜி சரவணா.

iniyavan said...

//நட்சத்திர வாழ்த்துகள்,இனியவன்

அப்பா,சில பேருக்கு இனிமையான பெயர்,பல‌
பேருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் ஒரு வார்த்தை.

உங்கள் அப்பா, சந்தோச தருணங்களை காணாமல்
போனது வேதனை தான்.//

வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றி எண்ணத்தூப்பூச்சி.

iniyavan said...

//ரொம்ப நெகிழ்வா இருக்கு.. I liked this post and remember my dad.//

வருகைக்கு நன்றி சுப்ரமணியம்.

iniyavan said...

//ஹலோ சார்

நானும் லால்குடி தான்//

அப்படியா ரொம்ப சந்தோசம் ராதிகா.

முடிந்தால் லால்குடியில் எங்கே என்பதை மெயிலில் தெரியப்படுத்தவும்.

iniyavan said...

//உண்மையான உங்கள் வரிகள் என்னை தொட்டது. யாரும் இருக்கும் வரை அருமை தெரியாது. அவர் போன பிறகு தான் தெரியும். சார், ரியல்லி என் அப்பாவும் இப்படித்தான். ஆனால் அவரை யாரும் இன்று வரை புரிந்து கொள்ளவில்லை.//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ராதிகா.

iniyavan said...

//யதார்த்தமான எழுத்துக்களில் அடிமனத்திலிருந்து எழுதியிருக்கிறீர்கள்.. உங்கள் தந்தையை பற்றிய சொற்சித்திரத்தில்,என தந்தையை தரிசித்தேன். பிள்ளைகள் வேறு வேறு வகை.. அப்பாக்களோ ஒரே வகை. நெகிழ்வுடன்,
மோகன்ஜி
ஹைதராபாத்//

வருகைக்கு நன்றி மோகன்ஜி

iniyavan said...

//தவமாய் தவமிருந்த அப்பாக்கள்...மிக
நெகிழ்வான பதிவு.//

வருக்கைக்கு நன்றி யோகன்.

R.Ravichandran said...

Very Nice sir

CS. Mohan Kumar said...

மிக மிக நெகிழ்ச்சியாய் உள்ளது. எத்தனை உன்னதமான அன்பு!! எனக்கும் என் தந்தையுடனான சில சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது இந்த பதிவு. நன்றி உலகநாதன்

அமுதா கிருஷ்ணா said...

எல்லோருக்கும் அருமையான அப்பா அமைவது கிடையாது சார்...

அது ஒரு கனாக் காலம் said...

நட்சித்திர வாழ்த்துக்கள் .... அப்பா பற்றிய முதல் பதிவும், இதுவும் அபாரம். அவருடைய ஆசிகள் உங்களுக்கு என்றுஎன்றும் உண்டு ....

மாதேவி said...

"அப்பா என் அன்பு தெய்வம்"
மனத்திற்கு இனிய பதிவு.

அமர பாரதி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் உலகநாதன். பதிவு சிறிது சினிமாத்தனமாக இருந்தாலும் உங்கள் அப்பா அன்பு என்னை பொறாமை கொள்ள வைக்கிறது. அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் அய்யா. வாழ்க வளமுடன்.

அமர பாரதி said...

//எல்லோருக்கும் அருமையான அப்பா அமைவது கிடையாது சார்// உண்மை அமுதா கிருஷ்னா. அந்த துரதிருஷ்டசாலிகளில் முதலில் வருபவன் நான் தான்.

iniyavan said...

//Very Nice sir//

நன்றி ஆர்.ரவிச்சந்திரன்

iniyavan said...

//மிக மிக நெகிழ்ச்சியாய் உள்ளது. எத்தனை உன்னதமான அன்பு!! எனக்கும் என் தந்தையுடனான சில சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது இந்த பதிவு. நன்றி உலகநாதன்//

வருகைக்கிற்கும், கருத்திற்கும் நன்றி மோகன்.

iniyavan said...

//எல்லோருக்கும் அருமையான அப்பா அமைவது கிடையாது சார்...//

ஏன் இப்படி சொல்லறீங்க மேடம்?

வருகைக்கு நன்றி.

iniyavan said...

/நட்சித்திர வாழ்த்துக்கள் .... அப்பா பற்றிய முதல் பதிவும், இதுவும் அபாரம். அவருடைய ஆசிகள் உங்களுக்கு என்றுஎன்றும் உண்டு ....//

நன்றி நண்பா!

iniyavan said...

//"அப்பா என் அன்பு தெய்வம்"
மனத்திற்கு இனிய பதிவு.//

நன்றி மாதேவி.

iniyavan said...

//நட்சத்திர வாழ்த்துக்கள் உலகநாதன். பதிவு சிறிது சினிமாத்தனமாக இருந்தாலும் உங்கள் அப்பா அன்பு என்னை பொறாமை கொள்ள வைக்கிறது. அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் அய்யா. வாழ்க வளமுடன்.//

வருகக்கும், வாழ்த்திற்கும் நன்றி அமர பாரதி.

Kannan said...

Nice Post Ulaganathan. We fail to understand our parents when we are young. We understand when we grow up. Current parent generation (We) have to raise to the challenge of providing our kids the same educational wealth / character what our parents gave to us.

iniyavan said...

//Nice Post Ulaganathan. We fail to understand our parents when we are young. We understand when we grow up. Current parent generation (We) have to raise to the challenge of providing our kids the same educational wealth / character what our parents gave to us.//

வருகைக்கு நன்றி கண்ணன்.