Oct 4, 2010

வரலாறு முக்கியம்!

முதலில் என்னை இந்த வார நட்சத்திரப் பதிவராக தேர்வு செய்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஏழு நாட்களில் என் முன்னேற்றத்திற்கு காரணாமாக இருந்த சிலரைப் பற்றியும், சில நல்ல அனுபவங்களையும் உங்களுடன் பகிர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

சில அனுபவ இடுகைகளை நான் எழுதுவதற்கு காரணம், யாருக்கேனும் என் அனுபவம் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவாதா? என்ற நல்ல எண்ணத்தில்தான்.

என்ன எழுதலாம்? என நினைக்கும்போதே உடனே மனதிற்குள் தோன்றிய ஒரே வார்த்தை "அப்பா". என்னை இந்த உலகிற்கு கொண்டு வந்த என் அப்பாவை பற்றி முதலில் எழுதுவதுதான் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். நான் என் அப்பாவை பற்றி ஏற்கனவே சில இடங்களில் எழுதி இருந்தாலும், விட்டு போன பல விசயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். என் அப்பாவை பற்றி தினமும் கூட என்னால் எழுத முடியும். ஏனென்றால் அவ்வளவு விசயங்கள் என் ரத்தத்தில் கலந்து கிடக்கின்றன.

அதற்கு முன் என் பரம்பரை வரலாற்றைப் பற்றி சில விசயங்களை பதியலாம் என எண்ணுகிறேன். அதன் பிறகு அப்பாவைப் பற்றி. நான் ஏன் இதை எல்லாம் இங்கு எழுதுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது. இந்த உலகத்தில் சுயசரிதை நூல்கள் எல்லாம் பிரபலமானவர்களிடம் மட்டும் இருந்தே வருகிறது. ஏன் என்னை போல் அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவன் சுயசரிதை எழுதக்கூடாதா? நான் சாதாரண நாட்களில் என் வலைப்பூவில் எழுதினால் தினமும் ஒரு 100 பேர் படிப்பார்கள். அதுவே நட்சத்திர பதிவராக இருக்கும்போது எழுதினால் அதிகம் பேர் படிப்பார்கள். அதுவே புத்தகமாக வந்தால், இன்னும் நிறைய பேர் படிப்பார்கள். அதற்கான சிறு முயற்சியாக கூட இது இருக்கலாம் இல்லையா?

அப்படி என் கதையை படிப்பதனால் யாருக்கு என்ன பயன்? ஏதேனும் பயன் இருக்காதா? என்ற ஆசைதான்.

எங்கள் மரபினரைக் குறித்த வாழ்க்கைச் செய்திகள் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னைப் பழமை கொண்டவை.

இந்நாளில் விளங்கும் பிச்சாண்டார் கோயிலுக்கு அண்மையில் இருக்கும் கூத்தூரே எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடம். அவர்கள் கலை நுணுக்கங்களோடு மர வேலைகள் செய்யும் கைவினைஞர்கள். அம்முன்னோர்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தவர்கள்.

அந்தக் கூத்தூரில் ஒருநாள் கூத்து ஒன்று, இங்குச் சொல்லுதற்குரியது. ஆடவர்கள் வீட்டின் முன்புறத்தில் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

செல்வச்சிறிமியர்களோ வீட்டின் உள்ளே விளையாடிக்கொண்டிருந்தார்கள். அங்கே கல கல என்ற சிரிப்பொலி வளையலொலி சலங்கையொலிகள் எல்லாம் கலந்து ஒலித்தன. அந்த மகிழ்ச்சி பொங்கலில் இடிவிழுந்தது.

அப்பொழுது சமயபுரத்தைத் தன் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட சிற்றரசன் ஒருவன் அவ்வழியே வந்தான். அவனோ காமுகன். அவன் அங்கு நின்றான்; அந்த மகிழ்ச்சி ஒலி வெள்ளத்தைக் குறித்து கேட்டான். அவனை நன்கறிந்த எங்கள் முன்னோர்கள், "நாங்கள் வளர்க்கும் சண்டைக் கடாக்களின் சலங்கை ஒலி அது" என்று கூறினார்கள். அவனோ "அந்தக் கடாக்களை நாளை அரண்மனைக்குக் கொண்டு வாருங்கள்" என்று ஆணையிட்டுச் சென்று விட்டான்.

எங்கள் முன்னோர்கள் செயவதறியாது திகைத்தார்கள். சிலர் எதிர்க்கத் துணிந்தார்கள். ஆனால் அச்சிறுமியர்களோ தங்களைக் காமுகனிடமிருந்து காத்துக் கொள்ள வழியின்றி அன்று இரவே சாகத்துணிந்து மாண்டார்கள். எஞ்சியிருந்தோர் மனம் நொந்த நிலையில், கொடுங்கோல் மன்னன் நாட்டிலும் கடும்புலி வாழும் காடு நன்றே என்று அவ்வூரை விட்டே புறப்பட்டு விட்டார்கள்.

வழியில் அவர்கள் காவிரி ஆற்றைக் கடந்தபோது அங்குச் செப்புச்சிலை ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது. அச்சிலை இடக்கையில் குழந்தையோடு கூடியது. அம் முன்னோர்கள் அதனை எடுத்துக்கொண்டு மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியை அடைந்தார்கள். அதனைத் தங்கள் வாழிடமாகக் கொண்டார்கள். அஃது ஓர் ஊர் ஆயிற்று. அதுவே திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் இருக்கும் செங்கிப்பட்டியை அடுத்துள்ள தச்சன்குறிச்சி.

மரங்கள் அடர்ந்த அப்பகுதியில் அவர்கள் மகிழ்ச்சி சிறக்க வாழ்ந்தார்கள். தங்களுக்குக் கிடைத்த தெய்வச்சிலையை வழிபடு தெய்வமாகக் கொண்டு வணங்கத் தொடங்கினார்கள். இதுவே எங்களுக்கு குலதெய்வம், கொப்பாட்டி அம்மன்.

(150 வருடங்கள் ஒரு பானையில் ஒருவர் வீட்டிலிருந்த அந்த சிலைக்கு 2001 ஆம் ஆண்டு அப்பா முயற்சி எடுத்து பங்காளிகளின் உதவிகளோடு ஒரு சிறு கோயிலை அதே இடத்தில் கட்டி கும்பாபிசேஷகம் நடத்தினார். இப்போது நாங்கள் அந்த கோயிலை நிர்வகித்து பராமறித்து வருகிறோம்)

முன்னோர் வாழ்க்கை வளமானதாக அமைந்தது. அவர்களில் ஒரு சாரர் நிலபுலன்கள் வாங்கி உழவிட்டு நிலக்கிழார் போல் வாழ்ந்தார்கள். எனினும் அவர்களும் தம் குழத்தொழிலை மறந்துவிடவில்லை. மற்றொரு சாரார் கலைநுட்பங் காட்டும் கைவன்மையைப் பெருக்கிக் கொண்டார்கள்.

காலம் சுழன்றது. வறட்சி ஏற்பட்டது. நிலம் படைத்தோர் நீர் வளம் மிக்க பகுதியை நாடினார்கள், கலை வல்லவர்களோ தாம் படைத்த கலைப் பொருட்கள் விலை போகும் இடத்திற்குச் சென்றார்கள்.

இப்போதும் செட்டி நாட்டிலுள்ள அரண்மனைகளில் காணப்பெறும் மர வேலைப்பாடுகளெல்லாம் தச்சன்குறிச்சித் தச்சர்கள் செய்தவை என்பார்கள். அப்பணிக்கெனச் சென்றவர்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள்.

நிலத்தை நம்பியவர்கள் சோளகம்பட்டிக்கு அருகில் உள்ள சுரைக்குடிப்பட்டி வந்தார்கள். ஏரி நீரால் வளம் பெற்ற நிலங்களை வாங்கி அங்கேயே தங்கி வாழ்ந்தார்கள். காலப்போக்கில் அங்கும் வறட்சி ஏற்பட்டது. அதனால் நிலத்தைப் பிறரிடம் ஒப்படைத்துவிட்டுக் குலத் தொழிலையே மேற்கொண்டு பிற்பகுதிகட்குச் சென்று விட்டார்கள்.

ஒரு குடும்பம் தஞ்சையைச் சேர்ந்த திருச்சோற்றுத் துறைக்கும், மற்றொரு குடும்பம் கரந்தைக்கும் சென்றது.

எங்கள் குடும்பவழி முன்னோர்கள் இடையாற்றுமங்கலம் வந்தார்கள். இடையாற்று மங்கலத்தில் எங்கள் கொள்ளுத்தாத்தா பழனியாண்டி குடியேறினார். அவர் பதினாறு குழந்தைகளுக்குத் தந்தை. அக்குழந்தைகளில் என் தாத்தா உலகநாதனார் கடைக்குழந்தைக்கு மூத்தவர். எங்கள் தாத்தா வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்தது. அவர் பொன் வேலைகளை நுணுக்கமாக செய்து வந்தவர்.

தாத்தா தொழில் பற்றிச் சுருக்கமாகச் சில சொல்லுவதும் இங்குப் பொருந்துவதாகவே இருக்கும். அவரது பொன் செய் பட்டறையில் பலர் பணியாற்றுவர். சித்த மருத்தவம் செய்தவர். சித்த மருத்துவத்தில் அவர் மேதை. மூலிகைகளை கொண்டு பல புதிய மருந்துகளைக் கண்டுபிடித்து வியத்தகு சாதனைகளையெல்லாம் படைததவர் அவர்.

- தொடரும்

33 comments:

Unknown said...

இந்த வாரத்தில் நிறைய எழுதுங்கள்.மலேசியாவை பற்றி நிறைய எழுதுங்கள் நண்பரே.நான் விரும்பும் பதிவர்.வாழ்த்துக்கள்.

Ravichandran Somu said...

நட்சத்திர வாழ்த்துகள்!

துளசி கோபால் said...

நட்சத்திரத்துக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

கே.என்.சிவராமன் said...

நட்சத்திர வாழ்த்துகள் ;-)

CS. Mohan Kumar said...

வாழ்த்துக்கள்.

Very glad to know that you are the Thamizh Manam star of the week. Good recognition. Hope you will do well ..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.

அமுதா கிருஷ்ணா said...

valthukkal....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துகள்!

ஜோதிஜி said...

வாழ்த்துகள்.

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துகள் நண்பரே..

தொடர்ந்து உங்கள் எழுத்துகளை வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன்

பவள சங்கரி said...

நட்சத்திர வாழ்த்துக்கள். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை........தொடருங்கள்.

மணிஜி said...

உலக்ஸ் மிக சந்தோஷமாக இருக்கிறது

அ.வெற்றிவேல் said...

நட்சத்திர வாழ்த்துகள்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தங்கள் வரலாறு மிகச் சுவாரசியமாக உள்ளது.

iniyavan said...

//இந்த வாரத்தில் நிறைய எழுதுங்கள்.மலேசியாவை பற்றி நிறைய எழுதுங்கள் நண்பரே.நான் விரும்பும் பதிவர்.வாழ்த்துக்கள்.//

வருகைக்கு நன்றி நந்தா ஆண்டாள் மகன்.

iniyavan said...

//நட்சத்திர வாழ்த்துகள்!//

நன்றி ரவிச்சந்திரன் சார்!

iniyavan said...

//நட்சத்திரத்துக்கு இனிய வாழ்த்து(க்)கள்.//

நன்றி மேடம்.

iniyavan said...

//நட்சத்திர வாழ்த்துகள் ;-)//

நன்றி சிவராமன் சார்!

iniyavan said...

//வாழ்த்துக்கள். //

நன்றி மோகன்.

iniyavan said...

//நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.//

நன்றி குருஜி.

iniyavan said...

//valthukkal....//

நன்றி மேடம்.

iniyavan said...

//நட்சத்திர வாழ்த்துகள்!//

நன்றி டிவிஆர் சார்.

iniyavan said...

//வாழ்த்துகள்.//

நன்றி ஜோதிஜி

iniyavan said...

//வாழ்த்துகள் நண்பரே..

தொடர்ந்து உங்கள் எழுத்துகளை வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன்//

வருகைக்கு நன்றி சிவா.

iniyavan said...

//நட்சத்திர வாழ்த்துக்கள். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை........தொடருங்கள்.//

நன்றி நித்திலம்.

iniyavan said...

//உலக்ஸ் மிக சந்தோஷமாக இருக்கிறது//

நன்றி மணிஜீ!

தலைவரே, எப்படி இருக்கீங்க!

iniyavan said...

//நட்சத்திர வாழ்த்துகள்..//

நன்றி வெற்றிவேல்.

iniyavan said...

//தங்கள் வரலாறு மிகச் சுவாரசியமாக உள்ளது.//

வருகைக்கு நன்றி யோகன்.

Ravichandran Somu said...

////நட்சத்திர வாழ்த்துகள்!//

நன்றி ரவிச்சந்திரன் சார்!//

தலைவரே, “சார்” எல்லாம் வேண்டாம். We are in the same age group. Please call me "Ravi" only.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

Anonymous said...

Congrats Mr. Ulaganathan

Seenubhai

cheena (சீனா) said...

அன்பின் உலகநாதன்

இனிய நடசத்திர நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

iniyavan said...

//Congrats Mr. Ulaganathan

Seenubhai//

நன்றி சீனுபாய்

iniyavan said...

//அன்பின் உலகநாதன்

இனிய நடசத்திர நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா//

நன்றி சீனா ஐயா