Oct 8, 2010

என்னை செதுக்கிய சிற்பி திரு ஆர். பார்த்தசாரதி

வேலை தேட தொடங்கியபோதுதான் உணர்ந்தேன். என் லட்சியத்தை அடைவது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை என்று. இரண்டு கம்பனிக்கு அப்ளை செய்தேன். ஒன்று பன்னாரி அம்மன் சுகர்ஸ், இன்னொன்று Breakes India Ltd. இரண்டிலுமே written test and Interview பாஸ் செய்துவிட்டேன். ஆனால் Group Discussionல் சொதப்பிவிட்டேன். ஏதாவது ஒரு டாபிக் கொடுத்து உரையாட சொல்வார்கள். என்னால் முடியாது. அப்படியே அவர்கள் பேசுவதையே பொறாமையாக பார்த்துக்கொண்டு இருப்பேன். ஏனென்றால் எனக்கு ஆங்கில அறிவு கிடையாது. நான் படித்த கிராமத்தில் எல்லாமே தமிழ்தான். நான் இங்கிலீஷ் மீடியத்தில் சேர்ந்ததே 9ம் வகுப்பில்தான். நான் பிஷப் ஹீபர் தெப்பக்குளத்தில் படித்தேன். அங்கு சேர்ந்த மாணவர்கள் எல்லாம் வெஸ்ட்ரி மற்றும் கேம்பியன் ஸ்கூலில் படித்தவர்கள். அவர்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வார்கள்.

எனக்கு அழுகையாக வரும். யாரும் என்னிடம் பேசமாட்டார்கள், எல்லாம் ஒரு மூன்று மாதம்தான். முதல் காலாண்டுத்தேர்வில் நான் எடுத்த மதிப்பெண்களை பார்த்தவர்கள் அவர்களாகவே என்னிடம் பேச ஆரம்பித்தார்கள். படித்து மனப்பாடம் பண்ணி பரிட்சை எழுதி நிறைய மார்க் வாங்கினேனே தவிர சரியாக என்னால் ஆங்கிலத்தில் உரையாட முடியாமலே போய்விட்டது. அதனுடைய கஷ்டம் வேலைத் தேடும்போதுதான் தெரிந்தது. இந்த காரணங்களால் அந்த இரு கம்பனியிலும் நான் தேர்வாகவில்லை.

அந்த சமயத்தில்தான் எங்கள் கம்பனிக்கு அப்ளை செய்தேன். மே மாதம் 15ஆம் தேதி 1992ல் நேர்காணலுக்காக முதல் முறையாக ராணிப்பேட்டை சென்றேன். பெர்சனல் மேனஜர் என்னைப் பார்த்து, அக்கவுண்ட் மேனேஜர் என்னைப் பார்த்து முடித்தவுடன், என்னை MDயை பார்க்க அனுப்பினார்கள். எப்படி இருந்தாலும் அவர் ஆங்கிலத்தில்தான் உரையாடப் போகிறார். நாம் அவ்வளவுதான் என நினைத்துக் கொண்டே அவர் ரூமை நெருங்கினேன்.

எங்கள் MD ஆர்.பார்த்தசாரதி பார்க்க உயரமாக ஈரோப்பியன் போல இருப்பார். அவரை பார்த்தவுடனே கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்தேன். ஆங்கிலத்தில் ஆரம்பித்த அவர் என் தடுமாற்றத்தை புரிந்து கொண்டு தமிழிலேயே கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். கடைசியில் ஒரு கேள்வி கேட்டார்,

"இவ்வளவு தகுதிகள் இருந்தும் ஏன் உனக்கு இன்னும் நல்ல கம்பனியில் வேலை கிடைக்கவில்லை?"

உடனே தயங்காமல் பதில் சொன்னேன்,

"எனக்கு இங்கிலீஷ்ல பேச தெரியாது சார். அதனால எல்லோரும் என்னை ரிஜக்ட் பண்ணுகின்றார்கள். ஆனாலும் என்னால் விரைவில் கற்றுக்கொள்ள முடியும். என்னுடைய லட்சியங்கள் எல்லாம் வேறு. அதை அடைய வேண்டும் என்றால் யாராவது வாய்ப்பு கொடுத்தால்தானே என்னால் முன்னேற முடியும்"

சிரித்துக்கொண்டே என்னை வெளியில் காத்திருக்கச் சொன்னார். ஒரு மணி நேரம் கழித்து என்னை உள்ளே கூப்பிட்டார். உள்ளே சென்றவுடன், என் கையில் ஒரு கடிதத்தை கொடுத்தார். என்ன என்று படித்தவுடன்தான் தெரிந்தது, அது என்னுடைய அப்பாயிண்மெண்ட் ஆர்டர் என்று. என்னை Assistant Accountant ஆக ஆபிஸர் கேர்டரில் தேர்வு செய்திருந்தார். நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.

"All the Best" என்று சொல்லிவிட்டு 'எப்போது வேலையில் சேர முடியும்' என்று கேட்டார். நான், "என் வேலையை அப்படியே விட்டுவிட்டு வர முடியாது. அதனால் எனக்கு ஒரு மாதம் டைம் வேண்டும்" எனக் கேட்டேன். அதற்கு ஒப்புக்கொண்டார். மிக சந்தோசமாக ராணிப்பேட்டையிலிருந்து இரவோடு இரவாக லால்குடி சென்றேன். அந்த இரவில் அப்பா எழுந்து, 'இண்டர்வியூ என்னாச்சு?" எனக்கேட்டார். நான் சஸ்பென்ஸாக இருக்கட்டும் என்று நினைத்து "காலையில் சொல்கிறேன்" என்றேன்.

உடனே அப்பாவின் முகம் மாறிவிட்டது. வேலை கிடைக்கவில்லை என நினைத்து விட்டார்போலும். அதனால் அவரை காக்க வைக்க விரும்பாமல் உடனே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை காட்டினேன். அந்த இரவில் என் அப்பா அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. மொத்த குடும்பமே சந்தோசத்தில் மிதந்தது.

ஆனால் அடுத்த நாள் சிறு குழப்பம் ஏற்பட்டது. எப்போழுதோ இண்டர்வியூ அட்டண்ட் செய்த கம்பனியில் இருந்து வேலைக்கான லெட்டர் வந்தது. சம்பளம் இதைவிட 1500 ரூபாய் அதிகம். ஆனால் அப்பாவும், என் நண்பனும் அந்த கம்பனியில் சேரக்கூடாது, இந்த கம்பனியில்தான் சேர வேண்டும். ஏனென்றால் இப்போது கிடைத்திருப்பது Manufacturing Unit ஆனால் அது மார்க்கெட்டிங் கம்பனி என்று சொல்லி விட்டார்கள்.

பிறகு ஒரு வழியாக 13.06.1992 அன்று என் கம்பனியில் வேலையில் சேர்ந்தேன். சேர்ந்து ஒரு வாரம் கழித்து அப்பாவிற்கு போன் செய்தேன்,

"என்னப்பா திடீர்னு போன் செய்யற"

"ஒண்ணும் இல்லை அப்பா. ஒரு விசயம் சொல்லணும்"

"என்ன?"

"எனக்கு இந்த கம்பனி பிடிக்கலை. ரிஸைன் பண்ணலாமானு பார்க்கறேன்"

"ஏன்?''

"பிடிக்கலை அதான்"

"உடனே கிளம்பி வா பேசலாம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே"

உடனே கிளம்பி ஊருக்கு சென்றேன். அப்பா என்ன காரணம் என விசாரித்தார். காரணம் ரொம்ப சிம்பிள். அப்போது எங்கள் அலுவலக்த்தில் நான் மட்டுமே இளைஞன். அனைவரும் நல்ல அனுபவஸ்தர்கள். கொஞ்சம் வயதானவர்கள். அதுவும் இல்லாமல் என்னால் உடனே அவ்வளவு பெரிய கம்பனியின் அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட் வேலைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. யாரிடமும் உதவி எதிர்பார்ப்பதும் கடினம். அவர்கள் எல்லோரும் என் சேர்மனின் அப்பா காலத்திலிருந்து எங்கள் கம்பனியில் வேலை பார்ப்பவர்கள்.

அப்பா எனக்கு நன்றாக எடுத்து புரியும்படி கூறினார். நீயாகதான் கற்றுக்கொள்ள வேண்டும். விரைவில் எல்லோரும் திரும்பி பார்க்கும்படி உன் திறமையை வளர்த்துக்கொள். நான் வேறு மூன்று வருட பாண்ட் கொடுத்து இருந்தேன். அதனால் அரைமனதுடன் மீண்டும் ராணிப்பேட்டை வந்து சேர்ந்தேன்.

இந்த இடத்தில் எங்கள் MD ஆர்.பார்த்தசாரதியைப் பற்றி சொல்ல வேண்டும். மிக பெரிய புத்திசாலி. Master of All Subjects எனலாம். எந்த சப்ஜக்ட்டைப் பற்றி பேசினாலும் அதைப் பற்றி பேசுவார். நாம் எல்லாம் எதையாவது படித்தாலோ அல்லது பார்த்தாலோ உடனே மறந்துவிடுவோம். அவர் அப்படியே நினைவில் வைத்திருப்பார். 24 மணி நேரமும் கம்பனி பற்றிய சிந்தனையிலே இருப்பார். நான் குழப்பத்தில் இருப்பதை தெரிந்து கொண்டு, அவர் ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு நலம் விசாரித்துவிட்டு, சில புத்திமதிகள் சொன்னார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார். அந்த ஒரு மணி நேர பேச்சுத்தான் என்னை அவருடன் 18 வருடமாக இணைத்து வைத்திருக்கிறது. பிறகு அதன்படி நடக்க ஆரம்பித்தேன். சில மாதங்கள் கழித்து நான் அவருடன் ஒரு ப்ராஜக்ட் விசயமாக வேலை பார்க்க வேண்டிய சூழல். தூக்கம் இல்லாமல் வேலை பார்த்தோம். இரவு முழுவதும் வேலை பார்த்தோம். நான் காலை 4 மணிக்கு சென்று 9 மணிக்கு வந்தேன். அவரோ 6 மணிக்கு வீட்டிற்கு சென்று 8 மணிக்கே வந்துவிட்டார். அந்த டெடிகேஷனை அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். கடின உழைப்பு என்றால் என்ன? எப்படி ஒரு விசயத்தை அணுகுவது? எப்படி அலசி ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் எனபதையும் அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.

- தொடரும்

15 comments:

அமுதா கிருஷ்ணா said...

படிக்க சுவாரசியம்..

பாலாஜி சங்கர் said...

நன்றாக இருந்தது தொடரவும்

Ravichandran Somu said...

//அப்படியே அவர்கள் பேசுவதையே பொறாமையாக பார்த்துக்கொண்டு இருப்பேன். ஏனென்றால் எனக்கு ஆங்கில அறிவு கிடையாது. நான் படித்த கிராமத்தில் எல்லாமே தமிழ்தான்.//

ஆங்கிலத்தில் பேசுவது என்பது ஒவ்வொரு கிராமத்து மாணவனும் சந்திக்கும் சவால். தன்னம்பிக்கையுடன் உழைத்து முன்னேறியதற்கு வாழ்த்துகள். மேலும் வளர்க... உயர்க!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தடைக்கல்லையேல்லாம் படிக்கல்லாக்கியுள்ளீர்கள்.
தங்கள் தகமையை உணர்ந்த திரு.பார்த்தசாரதி அவர்கள் போல் பலர் தமது நாடுகளில் இல்லை.

எம்.எம்.அப்துல்லா said...

//அப்படியே அவர்கள் பேசுவதையே பொறாமையாக பார்த்துக்கொண்டு இருப்பேன். ஏனென்றால் எனக்கு ஆங்கில அறிவு கிடையாது. நான் படித்த கிராமத்தில் எல்லாமே தமிழ்தான்.//

இதே பிரச்சனைதான் ஆரம்பத்தில் எனக்கும்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//அப்படியே அவர்கள் பேசுவதையே பொறாமையாக பார்த்துக்கொண்டு இருப்பேன். ஏனென்றால் எனக்கு ஆங்கில அறிவு கிடையாது. நான் படித்த கிராமத்தில் எல்லாமே தமிழ்தான்.//

ஹி ஹி ...,சார் நானும் இதே ..,இப்போதும் நிறைய interview தோல்வி ...,ஆனால் விட மாட்டேன் சார் ..,ஒரு வழி நானா அதுவா என்று ..,நல்ல MD சார் உங்களக்கு ...,

குடுகுடுப்பை said...

ரவி,உலகநாதன் மற்றும் அப்துல்லா அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன், நானெல்லாம் சின்னப்புள்ளைலேந்து இங்கிலீசுன்னா அல்வா சாப்பிடமாதிரி அப்படி பேசுவேன், எல்லாரும் பக்கத்தூர்ல இருந்திருங்கீங்க எங்கிட்ட கத்துட்டு இருந்திருக்கலாம்.

iniyavan said...

//படிக்க சுவாரசியம்//

வருகைக்கு நன்றி அமுதா மேடம்.

iniyavan said...

//நன்றாக இருந்தது தொடரவும்//

நன்றி பாலாஜி சங்கர்

iniyavan said...

//ஆங்கிலத்தில் பேசுவது என்பது ஒவ்வொரு கிராமத்து மாணவனும் சந்திக்கும் சவால். தன்னம்பிக்கையுடன் உழைத்து முன்னேறியதற்கு வாழ்த்துகள். மேலும் வளர்க... உயர்க!//

வாழ்த்திற்கு நன்றி ரவிச்சந்திரன்.

iniyavan said...

//தடைக்கல்லையேல்லாம் படிக்கல்லாக்கியுள்ளீர்கள்.
தங்கள் தகமையை உணர்ந்த திரு.பார்த்தசாரதி அவர்கள் போல் பலர் தமது நாடுகளில் இல்லை.//

வருகைக்கு நன்றி யோகன்.

iniyavan said...

//இதே பிரச்சனைதான் ஆரம்பத்தில் எனக்கும்//

தங்களின் முதல் வருகைக்கு நன்றி அப்துல்லா.

iniyavan said...

//ஹி ஹி ...,சார் நானும் இதே ..,இப்போதும் நிறைய interview தோல்வி ...,ஆனால் விட மாட்டேன் சார் ..,ஒரு வழி நானா அதுவா என்று ..,நல்ல MD சார் உங்களக்கு ...,//

வருகைக்கு நன்றி பனங்காட்டு நரி.

iniyavan said...

//ரவி,உலகநாதன் மற்றும் அப்துல்லா அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன், நானெல்லாம் சின்னப்புள்ளைலேந்து இங்கிலீசுன்னா அல்வா சாப்பிடமாதிரி அப்படி பேசுவேன், எல்லாரும் பக்கத்தூர்ல இருந்திருங்கீங்க எங்கிட்ட கத்துட்டு இருந்திருக்கலாம்.//

அப்படியா நண்பா! தெரியாம போச்சே. வருகைக்கு நன்றி குடுகுடுப்பை.

Ravichandran Somu said...

//ரவி,உலகநாதன் மற்றும் அப்துல்லா அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன், நானெல்லாம் சின்னப்புள்ளைலேந்து இங்கிலீசுன்னா அல்வா சாப்பிடமாதிரி அப்படி பேசுவேன், எல்லாரும் பக்கத்தூர்ல இருந்திருங்கீங்க எங்கிட்ட கத்துட்டு இருந்திருக்கலாம்.//

அடடா, நம்ம பக்கத்து கிராமத்துல இருந்த குடுகுடுப்பை என்னும் லண்டன் துரையை தெரியாம போச்சே:)))