Oct 9, 2010

மாதா, பிதா, குரு, திரு ஆர். பார்த்தசாரதி

அந்த ப்ராஜக்ட் முடிந்தவுடனேயே எனக்கு Accounts Officer ஆக பதவி உயர்வு கொடுத்தார். அவ்வளவு பெரிய நிறுவனத்தில் எத்தனையோ பேர் வேலை பார்க்க எனக்கு மட்டும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நிறைய அறிவுரைகளும், உதவிகளும் செய்திருக்கிறார். பிறகு எனக்கு படிப்படியாக பதவி உயர்வுகளை வழங்கினார். பின்பு Assistant Manager ஆக பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்தார்.

1997ல் அக்கா திருமணத்தின்போது பணம் இல்லாமல் கஷ்டப்பட்டோம். அப்போது கம்பனியில் லோன் அப்ளை செய்தேன். கம்பனியின் பாலிஸிபடி மிக குறைந்த அளவு பணமே கிடைத்தது. அதனால் மனம் வாடி போய் உட்கார்ந்து இருந்தேன். இதை உணர்ந்த அவர் என்னை அவர் அறைக்கு அழைத்தார். பேண்ட்டிலிருந்து கட்டுகட்டாக தன் சொந்த பணத்தை எடுத்து கொடுத்தார். கம்பனியின் ரூல்ஸையும் மதிக்க வேண்டும் அதே சமயம் எனக்கும் உதவ வேண்டும் என்ற அவரது நல்ல எண்ணத்தை அன்றுதான் புரிந்து கொண்டேன். பிறகு நான் அந்த பணத்தை இரண்டு வருடங்கள் கழித்துதான் திருப்பிக்கொடுத்தேன்.

அதே போல் வீட்டில் தங்கைக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. அந்த விசயம் எனக்குத் தெரியாமல் இருந்தது. சரியான அந்த சமயத்தில் என்னை புரோமோட் செய்து மலேசியாவிற்கு அனுப்பினார். என் மனைவியை செலக்ட் செய்வதில் நான் மிகுந்த குழப்பத்தில் இருந்த போது, அவர் மலேசியா வந்த தருணத்தில் என்னை அவரின் ஹோட்டல் ரூமுக்கு அழைத்து சென்று ஒரு மணிநேரம் அட்வைஸ் செய்தார். என் சந்தோசமான மணவாழ்க்கைக்கு அவரும் ஒரு காரணம். அதனால்தான் இன்றுவரை நான் அவரை ஒரு வாழும் கடவுளாகவே மதித்து வருகிறேன்.

ஒரு முறை கோலாலம்பூரில் நடந்த ஒரு பெரிய கான்பிரன்ஸுக்கு அவர் செல்வதாக இருந்தது. மொத்தம் 5 நாட்கள். திடிரென என்னை அந்த கான்பிரன்ஸுக்கு அனுப்பினார். அது ஒரு இண்டர்நேஷனல் கான்பரன்ஸ். வந்தவர்கள் எல்லோருமே CEO லெவல். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மற்றவர்கள் பேசுவது எதுவும் எனக்கு புரியவில்லை என்றாலும், கம்பனி இவ்வளவு செலவு செய்திருப்பதால், மிகவும் கவனமாக அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தேன். ஒரு வழியாக செமினார் முடிந்து கம்பனிக்கு வந்தேன்.

இந்தியாவிலிருந்து வந்திருந்த என் சேர்மன், என்னைக் கூப்பிட்டு,

"செமினார் எப்படி இருந்தது? பயனுள்ளதாக இருந்ததா?" என்று கேட்டார்.

நான் உடனே, "சார், அவர்கள் ஆங்கிலத்தில் பேசியது எதுவுமே எனக்கு புரியவில்லை. எனக்கு அந்த அளவு ஆங்கில அறிவு இல்லை" என்றேன்.

அதற்கு அவர் என்ன பதில் கூறினார் தெரியுமா?

"நீ ஏன் அப்படி நினைத்து உன்னைத் தாழ்த்திகொள்கிறாய். ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அது அவர்களுக்கு தாய் மொழி. அதனால் அவர்கள் சரியாக பேசி இருக்கலாம். உனக்குத்தெரிந்த தமிழ் அவர்களுக்கு தெரியாது. அதே போல் நீ பேசுகிற ஆங்கிலமும், அவர்களுக்கு புரியாமல் இருக்கலாம் இல்லையா?' அதனால், உன்னுடைய ஆங்கில அறிவு கம்மி என்று எப்போதும் நினைக்காதே?"

என்ன மாதிரி ஒரு அறிவுரை பாருங்கள். அதுதான் எங்கள் சேர்மன் கம் MD திரு ஆர்.பார்த்தசாரதி.

இதற்காக நான் செய்தது எல்லாம் ஒன்றும் அதிகம் இல்லை. கடின உழைப்பு அவ்வளவுதான். இதோ 13 வருடங்கள் மலேசியாவில் இருந்துவிட்டேன். மொத்தம் 18 வருடங்கள் இந்த குரூப்பில் இருந்து விட்டேன். நான் சம்பாதித்த அனைத்து சொத்துகளுக்கும், செல்வங்களுக்கும், என் சந்தோச வாழ்க்கைக்கும் காரணம் என் சேர்மன் ஆர்.பார்த்தசாரதிதான். நண்பர்கள் சொல்வதுண்டு, "நீ வேறு கம்பனிக்கு சென்றால் இதை விட அதிகம் சம்பாதிக்கலாம்" என்று. இருக்கலாம். பணம் மட்டுமே சம்பாதிக்க முடியும். இந்த மாதிரி ஒரு அன்பான பாஸ் கிடைப்பாரா?

இதோ இப்போது கூட என் நீண்ட நாள் கனவான CFO பதவி கொடுத்து என்னை உயர்த்தி இருக்கிறார். அதனால்தான் சொன்னேன், தனியார் கம்பனிகளிலும் உண்மையாக உழைத்தோம் என்றால் எந்த உயரத்தையும் நாம் தொட முடியும். மக்கள் மத்தியில் தனியார் கம்பனி என்றால் மாடு மாதிரி உழைக்க சொல்வார்கள். ஆனால் அதற்குறிய சம்பளம் தர மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் உள்ளது. தனியார் கம்பனியாக இருந்தாலும் உண்மையாகவும், கடுமையாகவும் உழைத்தால் நிச்சயம் நாம் விரும்பியதை அடையலாம் என்பதை மீண்டும் இங்கே வலியுறுத்துகிறேன்.

ஆனால் நம் லட்சியமும், குறிக்கோளும் தெளிவாக இருக்க வேண்டும். நல்ல முயற்சி எடுக்க வேண்டும். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எண்ணம் நல்லவையாக இருக்க வேண்டும். கடுமையான உழைப்பும், தெளிவான சிந்தனையும் இருக்க வேண்டும். எப்போதும் ஒரு தேடல் நம் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தோமானால் தோல்வி நம்மை அண்டவே அண்டாது. தோல்வி நம்மிடம் தோல்வி அடைந்து விடும்.

என்னுடைய லட்சியம் இன்னும் முடிவடையவில்லை. இன்னும் சாதிக்க வேண்டும். சாதிப்பேன். சாதிப்பேன் என்றதும் உடனே யாரையும் கம்பேர் செய்து அப்படி என்ன சாதித்து விட்டாய் என கேட்காதீர்கள். சினிமா நடிகரையோ, பணக்கார நண்பர்களையோ தயவு செய்து கம்பேர் செய்யாதீர்கள். என்னை போல் அடிமட்டத்திலிருந்து வந்தவர்களோடு கம்பேர் செய்யுங்கள். அப்போதுதான் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று தெரியும். சாதாரணமாக லால்குடி டீக்கடையில் உட்கார்ந்து இருந்த நான் இன்று மல்டி நேஷ்னல் லெவெல் வங்கிகளின் CEO க்களிடமும் தாரளமாக பிஸினஸ் பேச முடிகிறது என்றால் என்ன காரணம்? கடினமான உழைப்பும், தெளிவான சிந்தனை மட்டுமே.

தயவு செய்து நான் எழுதியவைகளை, "இவன் தற்பெருமை அடிக்கிறான்'' என யாரும் கிண்டல் செய்ய வேண்டாம். என்னைப் போல் கிராமத்தில் இப்போதும் கஷடப்பட்டு படித்து முன்னேறிக்கொண்டிருக்கும் எவரேனும் இதை படிக்க நேர்ந்தால் அவர்களுக்கு என் எழுத்து ஒரு நம்பிக்கையை கொடுக்கும் என்ற நம்பிக்கையிலெயே இவைகளை நான் சொல்ல நேர்ந்தது.

20 comments:

Unknown said...

////இவன் தற்பெருமை அடிக்கிறான்'' என யாரும் கிண்டல் செய்ய வேண்டாம். என்னைப் போல் கிராமத்தில் இப்போதும் கஷடப்பட்டு படித்து முன்னேறிக்கொண்டிருக்கும் எவரேனும் இதை படிக்க நேர்ந்தால் அவர்களுக்கு என் எழுத்து ஒரு நம்பிக்கையை கொடுக்கும் என்ற நம்பிக்கையிலெயே இவைகளை நான் சொல்ல நேர்ந்தது////இதை நான் உணர்ந்தேன் நண்பரே.

http://senbagadasan.blogspot.com/ said...

உயர்ந்த குறிக்கோளும் ,தன்னை உயர்த்திக்கொள்ளும் உந்துதலும் இருந்தால் சாதிக்க முடியாதது ஏதும் இல்லை.நம்பிக்கை ,நாணயம் ,நன்றி இணையில்லா பண்புகள். மேன்மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன் .
காளிதாசன்

karthik said...

Sir, your experience really gives a motivation & encouragement. Please dont think like self show off.

As you said hard work and clear determination will take to heights.


Thx.

Karthik.
usa.

Ravichandran Somu said...

//என்னைப் போல் கிராமத்தில் இப்போதும் கஷடப்பட்டு படித்து முன்னேறிக்கொண்டிருக்கும் எவரேனும் இதை படிக்க நேர்ந்தால் அவர்களுக்கு என் எழுத்து ஒரு நம்பிக்கையை கொடுக்கும் என்ற நம்பிக்கையிலெயே இவைகளை நான் சொல்ல நேர்ந்தது//

கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து,ஆங்கிலம் தெரியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் உழன்று, தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழ்க்கையில் நல்ல உயரத்திற்கு வரும்போது கிடைக்கும் மனநிறைவை வேற எதனுடன் ஒப்பிட முடியாது!

நர்சிம் said...

வாழ்த்துகள்

Anusuya said...

Sir,

I am also brought from middle class family and I can understand the pain how you brought up.. I appreciate your hard work and that brings motivation for us..

Thankyou,
Anu

அமுதா கிருஷ்ணா said...

அருமையான் பாஸ் உங்களுக்கு...

அது ஒரு கனாக் காலம் said...

வாழ்த்துக்கள் நண்பா , கடின உழைப்புக்கு மாற்று - எதுவுமே இல்லை . ரொம்ப அழகாக இருந்தது குருவுக்கு நன்றியுடன் கூடிய இப்பதிவு .

iniyavan said...

//இதை நான் உணர்ந்தேன் நண்பரே.//

வருகைக்கிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நந்தா.

iniyavan said...

//உயர்ந்த குறிக்கோளும் ,தன்னை உயர்த்திக்கொள்ளும் உந்துதலும் இருந்தால் சாதிக்க முடியாதது ஏதும் இல்லை.நம்பிக்கை ,நாணயம் ,நன்றி இணையில்லா பண்புகள். மேன்மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன் .
காளிதாசன்//

வருகைக்கு நன்றி காளிதாசன்

iniyavan said...

Sir, your experience really gives a motivation & encouragement. Please dont think like self show off.

As you said hard work and clear determination will take to heights.


Thx.

Karthik.
usa.

நன்றி கார்த்திக்.

iniyavan said...

//கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து,ஆங்கிலம் தெரியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் உழன்று, தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழ்க்கையில் நல்ல உயரத்திற்கு வரும்போது கிடைக்கும் மனநிறைவை வேற எதனுடன் ஒப்பிட முடியாது!//

வருகைக்கும், உங்களின் தொடர் பின்னுட்டத்திற்கும் நன்றி ரவிச்சந்திரன்.

iniyavan said...

//வாழ்த்துகள்//

நான்றி நர்சிம்.எப்படி இருக்கீங்க?

iniyavan said...

Sir,

I am also brought from middle class family and I can understand the pain how you brought up.. I appreciate your hard work and that brings motivation for us..

Thankyou,
Anu

வருகைக்கு நன்றி அனு.

iniyavan said...

//அருமையான் பாஸ் உங்களுக்கு...//

வருகைக்கு நன்றி அமுதா.

iniyavan said...

//அது ஒரு கனாக் காலம் said...
வாழ்த்துக்கள் நண்பா , கடின உழைப்புக்கு மாற்று - எதுவுமே இல்லை . ரொம்ப அழகாக இருந்தது குருவுக்கு நன்றியுடன் கூடிய இப்பதிவு .//

வருகைக்கு நன்றி நண்பா.

எம்.எம்.அப்துல்லா said...

// கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து,ஆங்கிலம் தெரியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் உழன்று, தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழ்க்கையில் நல்ல உயரத்திற்கு வரும்போது கிடைக்கும் மனநிறைவை வேற எதனுடன் ஒப்பிட முடியாது!

//

அனுபவப்பூர்வமாக,மனப்பூர்வமாக உணர்கிறேன்.

Anonymous said...

Hello,

Nice to hear this kind of real life story. Is it possible for you to post your company's name and photo of your chairman.

Thanks for your blog posts.

Mohan

அஜீம்பாஷா said...

very nice posting mr. olaga natan, i am also from trichy, i studied mcom in jamal in day time evening used to sell hand kerchives and school bags in NSB road platform. Whenever there is police raid to take our material from platform, and police used to come month end petty case, my father never give my name, he will go himself . he is afraid it will affect my future. even after i finishing i was aimless what to do, my father first life time for me asked his friend to give me a visa to saudi arabia. Now i am working in saudi arabia since 1993 , my father is no more to enjoy the life. Now I have a good job in a good compnay. I always used to feel that my father is around me.

Thank you, keep posting about your growth.

-Azeem basha

Vasishtar said...

thks really coming from a small town and i am also the native of lalgudi. me too working sincerely for the promotions and to attain my aim.
thanks for ur post.