அந்த தொலைபேசி அழைப்பு வந்தபோது நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன். காலையில்தான் எங்கள் ஊரிலிருந்து 5 மணிக்கு காரில் கிளம்பி அறு மணிக்கு அடுத்த டவுணில் உள்ள ஏர்போர்ட்டை அடைந்து அவசர அவசரமாக முதல் விமானத்தை பிடித்து கோலாலம்பூர் வந்து, டாக்ஸியில் சென்றால் நேரம் ஆகும் என்று அங்கிருந்து KLIA Express Train பிடித்து காலை 9 மணிக்கு அந்த மீட்டிங் ஹாலை அடைந்து, காலை உணவு சாப்பிடாமல், பசியுடன் அமர்ந்து இருந்தபோதுதான் அந்த அழைப்பு வந்தது.
பொதுவாக மீட்டிங்கின் போது எந்த தொலைபேசி அழைப்பு வந்தாலும் எடுப்பதில்லை. காரணம் வரும் அழைப்புகளால் நாம் பேச வேண்டியதில் இருந்து நம் கவனம் சிதறிவிடும். ஆனால் இப்போது வந்திருப்பது சேர்மனிடம், அதனால் எடுத்தே ஆக வேண்டிய சூழல். அவசரம் இல்லாவிட்டால் அவர் அழைக்க மாட்டார். அதனால் ஒரு 'எக்ஸ்மீ சர்ஸ்' சொல்லிவிட்டு போனை எடுத்துக்கொண்டு மீட்டிங் ஹாலைவிட்டு வெளியே வந்தேன்.
"உலக்ஸ், நீ உடனே புறப்பட்டு சென்னைக்கு வா. முக்கியமான விசயம் பற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டும்''
"சார், நான் இப்போ வந்து கோலாலம்பூரல..." நான் முடிப்பத்ற்குள்,
"தெரியும். எப்படியாவது வந்துவிடு"
இதற்கு மேல் அவரிடம் எதுவும் பேசமுடியாது. போய்த்தான் ஆக வேண்டும். மீண்டும் வீட்டிற்கு சென்று, கோலாலம்பூர் வந்து சென்னை செல்ல நேரம் கிடையாது. இங்கே இருந்து உடனே இன்று இரவு புறப்பட வேண்டியதுதான். உடனே அருகில் உள்ள எங்கள் ஏஜண்டை தொடர்பு கொண்டேன். எப்படியோ டிக்கட் கிடைத்தது. வீட்டிற்கு போன் செய்து ஊருக்கு போய் வருகிறேன் என்றதற்கு அப்படி ஒன்றும் சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அவர்களை விட்டு செல்வதால் அவர்களுக்கு கோபம்.என்ன செயவது? அலுவலக விசயமாக போகும் போது எப்படி அவர்களையும்....?
ஒருவழியாக அவர்களிடம் இரண்டு நாளில் வந்துவிடுவேன் என்று கூறிவிட்டு, கோலாலம்பூரிலிருந்து ஏர்போர்ட்டுக்கு கிளம்ப மாலை ஆறு கிவிட்டது. கோலாலம்பூரிலிருந்து KLIA விமான நிலைஇயம் செல்ல ஒரு மணி நேரம் ஆகும். அந்த சமயத்தில் ஏதாவது படிப்பது வழக்கம். கொண்டு வந்த புத்தகம் துப்பறியும் கதை போல் இருந்ததால் சிறிது தூங்கி, ஏற்போர்ட் வந்து சேர இரவு 7 ஆனது. இரவு 9.35க்குத்தான் விமானம். அதுவரை அங்கே இங்கே சுற்றிவிட்டு போர்டிங் பாஸ் வாங்கி விமானத்தில் அமர்ந்தபோது மணி 9. அப்போதுதான் 'அவன்' ஏறினான். அவனை பார்த்தவுடன் என் மனதை என்னவோ செய்தது.
பார்ப்பதற்கு 28 வயது இருக்கலாம். நல்ல உயரம். தலை கலைந்து இருந்தது. கண்கள் சிவந்து இருந்தன. ஒரு ஜீன்ஸ் அதுவும் முழங்காலில் கிழிந்து இருந்தது. ஒரு பழைய டி ஷர்ட். அவன் என்னையே வேறு பார்த்துக்கொண்டு இருந்தான். அவனை தவிர்க்க எவ்வளவோ முயற்சித்தும் என்னால் முடியவில்லை. நான் பார்க்கும் போது எல்லாம் அவனும் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
நான் எப்போது எந்த விமானத்தில் போனாலும் என்னுடைய சீட்டை முன்பே ரிசர்வ் செய்துவிடுவேன். அதாவது பிஸினஸ் கிளாஸ் அருகில் வருவது போல் பார்த்துக்கொள்வேன். அப்போதுதான் சென்னை வந்ததும் உடனே இறங்கிவிடலாம். ஆனால் இன்று அவசரமாக கடைசி நிமிடத்தில் புக் செய்ததால் அந்த சீட் கிடைக்க வில்லை. அதனால் இப்படிப்பட்ட சூழ்நிலை.
என்னவோ அவனை பார்த்தாலே பயமாக இருந்தது. இன்று ஏதோ நடக்கப்போவதாக என் மனம் கூறியது. நமக்கு யாரும் மலேசியாவில் எதிரிகள் இல்லையே என்று பலவாறு சிந்தித்துக்கொண்டிருக்கையில், விமானம் கிளம்புவதற்கான அறிவிப்பு வந்தது. பல நூறு முறை விமானம்பயணம் மேற்கொண்டிருந்தாலும், விமானம் மேலே ஏறும்போதும், கீழே இறங்கும்போதும் என்னை அறியாமல் என் கண்கள் மூடிக்கொள்ளும். மனம் கடவுளை பிரார்த்திக்க ஆரம்பித்துவிடும். அதுவும் தனியாக பயணம் மேற்கொள்ளும்போது மனைவியின் முகமும், பிள்ளைகளின் முகமும் வந்து போகும். இன்றும் அப்படித்தான்.
விமானம் ஏறி சரியான நிலைக்கு வந்தவுடன்தான் மீண்டும் விளக்குகளை போடுவார்கள். ஆனால் புத்தகம் படிக்க விரும்புவர்கள் சிறு விளக்குகளை போட்டுக்கொள்ளலாம். அப்போதுதான் அவனை கவனித்தேன். அவன் என்னை பார்த்துக்கொண்டே பையில் என்னத்தையோ எடுப்பதும் வைப்பதுமாக இருந்தான்.
எனக்கு புதுவிதமான ஒரு பயம் தொற்றிக்கொண்டது. ஒரு வேளை அவன் எடுத்து வைத்தது துப்பாக்கியாக இருக்குமோ? விமானத்தை கடத்த போகிறானோ? இல்லை என்னை கொல்ல எங்கள் கமபனியின் காம்படிட்டர்கள் அனுப்பிய கூலிப்படையின் ஆளாக இருப்பானோ? பலவிதமாக குழம்பி போய் இருந்தேன்.
பொதுவாக விமான பயணத்தின்போது நான் தூங்குவது கிடையாது. ஒருவேளை நான் தூங்கிவிட்டால் விமானி சரியாக ஓட்டமாட்டோரோ என்பது மாதிரியான பயம் எனக்கு எப்போதும் இருக்கும். அப்போது பணிப்பெண் ஒரு குளிர்ந்த டிஷ்யூ பேப்பர் அனைவருக்கும் கொடுத்தார். முதலில் முகத்தில் நன்றாக துடைத்தபின் ஓரளவு பிரஷ் ஆன பின் நிமிர்ந்து பார்த்தால் அவன் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான். கஷ்டப்பட்டு தலையை திருப்பிக்கொண்டேன்.
ஒரு வழியாக டிரிங்ஸ் வந்தது. நான் எப்பவும்போல் ஜூஸ் எடுத்துக்கொண்டேன். அவன் விஸ்கியோ பிராந்தியோ எதையோ எடுப்பதை கவனித்தேன். பயம் அதிகமானது. அவன் ஒரு ரவுண்டு டிரிங்ஸ் முடித்து அடுத்த ரவுண்டுக்காக எழுந்து பின்னால் செல்வதை கவனித்தேன்.
சரி அவனை கவனிக்காமல் ஏதாவது வேலை செய்யலாம் என நினைத்து, என்னுடைய இமிக்ரேஷன் பாரத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன். அதில் ஒரு 15 நிமிடத்தை செலவழித்தேன். ஒரு வழியாக சாப்பாடு வந்தது,
என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை. இன்று ஏதோ நடக்கப்போகிறது. அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது. திடீரேன மனைவியின் முகமும், பிள்ளைகளின் முகமும் நினைவுக்கு வந்தது. "எனக்கு ஏதாவது ஆனால் அவர்களால் தனியே கிளம்பி இந்தியா செல்ல முடியுமா? நான் இல்லாமல் எப்படி வாழ்வார்கள்? இன்னும் எந்த சொத்தையும் அவர்கள் பெயருக்கு மாற்றவில்லையே? பயம் ரொமப அதிகமாக, பாத்ரூம் செல்லலாம் என எழுந்தேன். அவனும் எழுந்து இருக்கவே, அடக்கிக்கொண்டு உட்கார்ந்து கொண்டேன்.
அவன் அங்கே இங்கே என்று போவதும் வருவதுமாக இருந்தான். அவனுடைய செயல்பாடுகள் வித்தியாசமாக எனக்குத்தெரிந்தது. அந்த நேரத்தில் கொஞ்ச நேரம் தூங்குவதற்காக விமானத்தின் அனைத்து விளக்குகளையும் அணைத்தார்கள்.
எனக்கு மட்டும் சந்தேகம், 'அவன் எப்போது விமானத்தை கடத்தப் போகிறான். ஒரு வேளை இப்போ கடத்துவானோ இல்லை இறங்கும்போது மிரட்டி சிலோனுக்கொ இல்லை வேறு எங்காவது கூட்டிச்செல்வானோ' என்று பயந்து கொண்டிருந்தவன் என்னையறியாமல் எப்போது கண்ணை மூடினேன் என்று தெரியவில்லை.
விமானம் தரை இறங்கிக்கொண்டிருந்தது. திரும்பவும் அவன் நினைவு வந்து அவனை பார்த்தேன். அவனும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒரு வழியாக விமானம் சென்னையை அடைந்து, ஊரில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் அர்ச்சனை செய்வதாக வேண்டிக்கொண்டு இமிக்ரேஷன் முடிந்து கஸ்டம்ஸ் முடிந்து என் கம்பனி காருக்காக வெயிட் செய்து கொண்டிருந்தபோதுதான் பக்கத்தில் இருவர் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தேன். யார் என்று கவனித்ததில், என்னுடன் வந்தவன் என்று தெரியவே என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கவனித்தேன்,
அவனை வரவேற்க வந்தவன், "ரமேஷ் என்னடா இப்படி இருக்க. ஏன் சரியா தூங்கலையா"
"அதை ஏண்டா கேட்கற. விமானத்துல என் சீட்டுக்கு அருகில் ஒருத்தன் தீவிரவாதி மாதிரியே இருந்தான். ஒரே பயமா போச்சு. அதனால அவனை வாட்ச் பண்ணிட்டே வந்தேன். அதனால தூங்க முடியாம போச்சு. அவனின் கிழிஞ்ச ஜீன்ஸும், டி ஷ்ர்ட்டும், கலைந்த தலையும்.... அய்யோ பயந்து போய்ட்டேன். முதல்ல போய் சித்தி விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைக்கணும்"
அப்போதுதான் நான் என் உடைகளை கவனித்தேன்.
11 comments:
நன்றாக பதிவு செய்துள்ளீர்கள்
//நன்றாக பதிவு செய்துள்ளீர்கள்//
வருகைக்கு நன்றி சுரேஷ் குமார்.
hahaaa செம பல்பு போல?
//hahaaa செம பல்பு போல?//
வருகைக்கு நன்றி ரமேஷ்
சுவாரசியமாக இருந்தது வாழ்த்துக்கள்
//சுவாரசியமாக இருந்தது வாழ்த்துக்கள்//
வருகைக்கு நன்றி பாலாஜி சங்கர்
"அதுவும் தனியாக பயணம் மேற்கொள்ளும்போது மனைவியின் முகமும், பிள்ளைகளின் முகமும் வந்து போகும். இன்றும் அப்படித்தான்."
Nice
//பொதுவாக விமான பயணத்தின்போது நான் தூங்குவது கிடையாது. ஒருவேளை நான் தூங்கிவிட்டால் விமானி சரியாக ஓட்டமாட்டோரோ என்பது மாதிரியான பயம் எனக்கு எப்போதும் இருக்கும்///
Nambiki than valzhiyppa...
he.. hee.. Kadaici varai nalla irrundhathu
//Nice//
நன்றி நண்பா!
//he.. hee.. Kadaici varai nalla irrundhathu//
வருகைக்கு நன்றி ஆனந்த்.
என்ன உலக்ஸ் மலேசியாவில்,முக்கியமான மீட்டிங்குக்கு கிளிஞ்ச ஜீன்சும் சுமாரான சட்டையுடன் தான் போவீர்களாக்கும்.
Post a Comment