எப்படியாவது கவிஞனாக
ஆசைப்பட்டு
வார்த்தைகளை தேடுகிறேன்
எந்த வார்த்தைகளை எடுத்து
எப்படி கோர்ப்பது? எந்த வார்த்தைகளை
விட்டு விடுவது என்று குழம்பித் தவிக்கிறேன்
வார்த்தைகளும் என்னிடம் குழம்பி
தவிக்கின்றன.
பேப்பரை போல வார்த்தைகளையும்
கிழித்து போடுகிறேன் குப்பையில்
எதேச்சையாக பார்க்கிறேன்
குப்பை கூடையே ஒரு கவிதையாய்
தெரிகிறது.
கவிதைக்கு என்னை பிடிக்கிறதோ
இல்லையோ
என்னை கவிதைக்கு
பிடித்திருக்கிறது போலும்.
******************************
மழைக்கால இரவு
மலைமேல் நானும் அவளும்
மற்றும்
கொஞ்சம் மழையும் காற்றும்
நேரம் ஆக ஆக
மழையையும் காற்றையும்
உரசக்கூட விடவில்லை
நாங்கள்
காலை வரை
அங்கே இருந்தபோதும்
அவளும் நானும்
எங்களின் குடும்பத்தைப் பற்றி
கேட்டுக்கொள்ளவேயில்லை.
******************************
காலங்களில் நீ வசந்தம்
கலைகளிலே நீ ஓவியம்
என்று என்னைப் பார்த்து
பாடிய கோடி வீட்டு கோபாலை
அடித்து துவைத்தனர் என் வீட்டினர்.
காரணம் கோபால் ஒரு ஏழையோ
அல்லது வேறு ஜாதியோ
என்ன எழவோ? எனக்குத்
தெரியாது
கோபால் பிள்ளை குட்டியுடன்
சுகமாக இருக்கிறானாம் இப்போ?
நான்
நாற்பது வயதில் கல்யாணம் ஆகாமல்
உணர்ச்சியற்ற ஜடமாய்.
கோபாலுக்காவது கட்டி வைத்திருக்கலாம்
என்கிறார் அப்பா, கல்யாணம்
பண்ணி வைக்க துப்பில்லாமல்
இப்போது!
******************************
பெண்களை
நேருக்கு நேர் பார்க்கக்கூடாது
என ஒவ்வொரு முறையும்
நினைக்கிறேன் ஆனால் மறக்கிறேன்
ஒவ்வொரு முறையும்.
ஓவ்வொரு ஜோடிக்கண்களும்
ஓவ்வொரு கதை சொல்கின்றன
எனக்கு!
அன்பு, பாசம், காதல்
துரோகம் என!
சில நேரங்களில் சில பெண்கள்
என் கண்களை பார்க்க தவிர்ப்பதை
வியப்புடன் கடந்திருக்கிறேன்.
ஒரு வேளை அவர்களுக்கும்
என் கண்கள் பல விரும்பாத
செய்திகள் சொல்லி இருக்கலாம்.
******************************
16 comments:
காலங்களில் நீ வசந்தம் நல்லாயிருக்கு..
தமிழ் திரட்டி உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
http://tamilthirati.corank.com/
வரிகள் அனைத்தும் அருமையா இருக்கு...
கவிதை எழுத ஆசை என்று தலைப்பை பார்த்தா.. உள்ளே கவிதை மழையாய் பொழிகிறது..
வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
கவிதையும் பிரமாதமாக கைவருகிறது ...
வாருங்கள் சார் ...
உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
கவிதையாக்கம் நன்றாக இருக்கிறது.
மூன்றாவது கவிதையின் தொடர்ச்சியாக நிறைய யோசிக்க தோன்றுகிறது.
மூன்றும் அருமை.
//மிக பிடித்த வரிகள்.//
கவிதைக்கு என்னை பிடிக்கிறதோ
இல்லையோ
என்னை கவிதைக்கு
பிடித்திருக்கிறது போலும்.
Third only is nice!:)
//காலங்களில் நீ வசந்தம் நல்லாயிருக்கு..//
வருகைக்கு ந்ன்றி அமுதா மேடம்
//தமிழ் திரட்டி உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்//
நன்றி தமிழ்திரட்டி
//வரிகள் அனைத்தும் அருமையா இருக்கு...
கவிதை எழுத ஆசை என்று தலைப்பை பார்த்தா.. உள்ளே கவிதை மழையாய் பொழிகிறது//
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி தமிழ்தோட்டம்
//கவிதையும் பிரமாதமாக கைவருகிறது ...//
ரொம்ப நன்றி செந்தில். மோதிரக்கையால் பாராட்டு.
//வாருங்கள் சார் ...
உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்//
வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி அரசன்
//கவிதையாக்கம் நன்றாக இருக்கிறது.
மூன்றாவது கவிதையின் தொடர்ச்சியாக நிறைய யோசிக்க தோன்றுகிறது.
மூன்றும் அருமை.//
வருகைக்கு நன்றி பாரதி
//மிக பிடித்த வரிகள்.//
மீண்டும் நன்றி பாரத் பாரதி
//Third only is nice!:)//
நன்றி சமுத்ரா
Post a Comment