என் நெருங்கிய நண்பன். முப்பது வருட பழக்கம். பார்க்க பொன்னம்பலம் போல் நல்ல உடம்பை கொண்டவன். பழக மென்மையானவன். அனைவருக்கும் உதவும் மனம் கொண்டவன். நல்லவன். குடிக்க தோன்றும் அந்த காலக் கட்டத்தில் அவனும் குடிக்க ஆரம்பித்தான். நான் குடித்து பார்த்துவிட்டு, பிடிக்காமல் உடனே விட்டுவிட்டேன்.
சில நண்பர்கள் தொடர்ந்தார்கள். சிலர் அவ்வப்போது குடிக்க ஆரம்பித்தார்கள். எத்தனை பார்ட்டிகளில் கலந்துகொண்டாலும் ஒரு சொட்டு டிரிங்ஸை கூட நான் குடிக்க நினைத்ததில்லை.
நண்பன் சில காலம் வெளிநாட்டில் வேலை புரிந்தான். திடீரென பிடிக்காமல் இந்தியா வந்தான். என் பழைய கம்பனியில் வேலையில் சேர்த்துவிட்டேன். பிடிக்காமல் வேலையை விட்டான்.
நான் ஓவ்வொரு முறை இந்தியா போகும் போதும் என்னை பூங்கொத்து கொடுத்து ஏர்போர்ட்டில் வரவேற்பான். அந்த அளவிற்கு என்னுடன் நெருக்கமாக இருந்தான்.
என்னை யாரும் எதுவும் சொல்லிவிடக்கூடாது, உடனே அவர்களை அடிக்க போய்விடுவான். அந்த அளவிற்கு என் மேலே பாசமாக இருப்பான். அவனை நான் அடிக்கடி "என் தளபதி" என்பேன். அவன் பழகிய அனைவருடனும் அதே அளவு நெருக்கத்துடன் இருப்பான்.
என் வளர்ச்சியை பார்த்து சந்தோசப்படுபவன். நான் எழுதும் கதைகளுக்கு முதல் வாசகானாய் இருந்தான்.
அரசியலில் சேர்ந்தான். 7 வருடங்களுக்கு முன் கல்யாணம் செய்து கொண்டான். ஒரே வருடத்தில் குழந்தை பெற்றான். அவன் கல்யாணத்தை ஊருக்கே லைவாக ஒளிபரப்பினார்கள். அந்த அளவிற்கு ஊரில் பிரபலமாக இருந்தான். ரொம்ப வேகமாக முன்னேறினான்.
எப்போதுமே ஒருவித பரபரப்புடனும், ஒருவித சுறுசுறுப்புடன் இருப்பான். நான் ஊருக்கு வந்தது தெரிந்தால் உடனே வீட்டுக்கு ஓடி வருவான். அவன் குடும்ப பிரச்சனைகளை கூட என்னிடம் அதிகம் பகிர்ந்து கொள்வான்.
அனைத்துவிதமான நண்பர்கள் இருந்தாலும் என்னிடம் மட்டும் ரொம்ப அதிக உரிமையுடனும் மரியாதையுடன் பழகுவான்.
இவ்வளவு நல்ல பழக்கமும், நல்லவனுமாக இருந்த அவனிடம் இருந்த ஒரே கெட்ட பழக்கம், குடி. சாதாரணமாக குடிக்க ஆரம்பித்தவன், அதிகமாக குடிக்க ஆரம்பித்தான்.
நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும், அந்த பழக்கத்தை மட்டும் அவனால் விட முடியவில்லை. சில காலம் அவனாக நினைத்து குடிக்காமல் இருப்பான். பிறகு திரும்பவும் ஆரம்பிப்பான்.
நான் எத்தனையோ முறை அவனுக்கு அறிவுரை சொன்னதுண்டு. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் நான் சொன்ன அறிவுரைதான் என்னை போட்டு வாட்டி எடுக்கிறது. மனம் குழம்பி தவிக்கிறது. வேதனையில் மனம் தடுமாறுகிறது.
"டேய், அதிகம் குடிக்காதடா! செத்து கித்து போயிடப்போற"
ஆம். அவன் என்னை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்ற வாரம் இறைவன் திருவடியை அடைந்து விட்டான். அவனுக்கு வயது வெறும் 39 தான்.
சில காலம் குடிப்பதை நிறுத்திவிட்டு நன்றாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தவன், இன்னொரு நண்பனின் மகள் தற்கொலை செய்து கொண்டதை நினைத்து வருந்தி, எல்லா காரியங்களையும் முன்னின்று நடத்தியவன், அந்த பெண் இறந்த ஐந்தே நாளில் இவனும் இறந்துவிட்டான்.
சில காலம் குடிப்பதை நிறுத்திவிட்டு நன்றாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தவன், இன்னொரு நண்பனின் மகள் தற்கொலை செய்து கொண்டதை நினைத்து வருந்தி, எல்லா காரியங்களையும் முன்னின்று நடத்தியவன், அந்த பெண் இறந்த ஐந்தே நாளில் இவனும் இறந்துவிட்டான்.
இரவு நிறைய குடித்துவிட்டு சாப்பிடாமல் படுத்து இருக்கிறான். காலையில் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்து சென்றவன், இருதயம் வெடித்து அந்த நொடியே இறந்துவிட்டான்.
என் குடும்பத்தில் ஒருவனாக பழகியவனின் மரணம் என்னை வாட்டி எடுக்கிறது. அதுவும் நான் கடைசியில் அவனிடம் பேசியதை நினைத்தால் வேதனையாக உள்ளது.
நானும் அவனுக்கு நிறைய முறை டிரிங்க்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறேன் என நினக்கும்போது, குற்ற உணர்ச்சியால் இன்னும் என் மனம் அதிகமாக வேதனைப்படுகிறது.
எனக்கு என் வாழ் நாளில் அவன் எவ்வளவோ உதவி செய்திருக்கிறான். ஆனால் என்னால் கடைசியில் அவன் உடலை கூட பார்க்க முடியாமல் போய்விட்டது.
அவனின் ஐந்து வயது மகளின் எதிர்காலத்தை பற்றி நினைக்கையில் பயமாக இருக்கிறது.
இறந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் என் நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். கடைசி வரை என்னால் அவனை மறக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன்.
இதை படிக்கும் நண்பர்கள், குடிப்பவர்களாக இருந்தால், உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்,
- முடிந்தால் குடிப்பதை நிறுத்தப் பாருங்கள்
- அல்லது குடிப்பதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்
- குடிக்கும் போது உங்கள் குடும்பத்தை பற்றி நினைத்துக்கொள்ளுங்கள்.
11 comments:
காபி, பேப்பர், வடை .... பதிவு அருமை
நான் விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். மிலிட்டரி சரக்கு தாராளமாய் கிடைக்கும். குடிச்சே அழிஞ்சவன் கதைகள் நிறைய உண்டு. குடி 'குடி'-ஐ கெடுக்கும் என்பது நிதர்சன உண்மை...
என மூத்த சகோதரன் குடியால் அழிந்துகொண்டு இருப்பவன் ,...
//காபி, பேப்பர், வடை .... பதிவு அருமை//
வருகைக்கு நன்றி அன்கித வர்மா!
//நான் விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். மிலிட்டரி சரக்கு தாராளமாய் கிடைக்கும். குடிச்சே அழிஞ்சவன் கதைகள் நிறைய உண்டு. குடி 'குடி'-ஐ கெடுக்கும் என்பது நிதர்சன உண்மை...//
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி பொன்சந்தர்.
//என மூத்த சகோதரன் குடியால் அழிந்துகொண்டு இருப்பவன் ,...//
செந்தில், எப்படியாவது அவரை அந்த பழக்கத்திலிருந்து காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்.
very sad to hear. My deep condolence.
Karthik.
//very sad to hear. My deep condolence.
Karthik.//
வருகைக்கு நன்றி கார்த்திக்
ஆம் நண்பரே.. மிகவும் வருத்தமாகிவிட்டது.. கடந்த ஆண்டு என் திருமணதிற்கு அவர் வந்து உங்கள் சார்பில் உங்கள் வாழ்த்துக்களை கூறியது இன்னுமும் கண்களில் நிற்கிறது :(
//ஆம் நண்பரே.. மிகவும் வருத்தமாகிவிட்டது.. கடந்த ஆண்டு என் திருமணதிற்கு அவர் வந்து உங்கள் சார்பில் உங்கள் வாழ்த்துக்களை கூறியது இன்னுமும் கண்களில் நிற்கிறது :(//
ஆம். எனக்கும்தான்.
வருகைக்கு நன்றி நண்பா!
very good one .
brought tears while reading.like to have more on our Good friend senthil he may not be alive but always in our hearts.thanks ulags
Post a Comment