ஒரே முறைதான் கனவில்
வந்து போனாய் நீ!
பகல் எல்லாம் தூங்கிக்
கொண்டிருக்கிறேன்
நான்
*************************************
அறை முழுக்க உன்
முத்தங்கள்
ஜன்னல்களையும்
கதவுகளையும்
திறப்பதே இல்லை நான்
*************************************
நிச்சயத்திற்கு முதல் நாள்
அவளிடம் கேட்டேன்
சென்னை வர சம்மதமா?
அடுக்குமாடி வீடுதான்
பிடிக்கும்ல?
இந்த கலர் பட்டுப்புடவை
பிடிச்சுருக்கா?
இந்த நகை, அது, இது
என எல்லாவற்றையும் பிடிச்சிருக்கா?
எனக்கேட்ட நான்
கடைசிவரை
என்னை உனக்கு பிடிச்சிருக்கா என
மட்டும் கேட்கவே இல்லை
*************************************
5 comments:
nice
அற்புதம் அசத்துங்க, ;..
//nice//
நன்றி வேலு.
//அற்புதம் அசத்துங்க, ;..//
வருகைக்கு நன்றி அரசன்.
நடைமுறை வாழ்கையை அப்படியே மிக அழகாக சிந்தித்து வடித்த கவிதைவரிகள் அருமை வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ............
Post a Comment