Jan 1, 2011

நண்பர்களுக்கு!

என் அன்பு நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

2010:

சென்ற வருடத்தைப் பொருத்தவரை எனக்கு நல்ல வருடமாகவே கழிந்தது. சில சின்ன மனக்கஷ்டங்கள் வந்து போனாலும் அது எல்லாம் எல்லோருக்கும் வந்து போகும் சாதாரண விசயங்களாகவே எடுத்துக்கொண்டேன். சென்ற வருட சாதனை என்றால் எங்கள் கம்பனியை மிகப்பெரிய கஷ்டத்திலிருந்து காப்பாற்றியதில் என் பங்கும் இருந்திருக்கிறது என்பதுதான். சென்ற வருடத்தில்தான் நான் CFO ஆக பதவி உயர்வு பெற்றேன். பணத்தின் மேல் உள்ள ஆசையை ஓரளவுக்கு குறைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்ததும் சென்ற வருடம்தான். உடல்நிலையை பொருத்தவரை எல்லா வருடங்கள் போலும், சென்ற வருடமும் தவறாமல் வாக்கிங், யோகா மற்றும் ஜிம் சென்றதால் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக நினைக்கிறேன். அதனால் என் அன்பு நண்பர்களாகிய நீங்களும் நல்ல விதமாக உடல்பயிற்சி செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நாம் நல்ல உடல் நலத்துடன் இருந்தால்தான் நம் குடும்பத்தை காப்பாற்ற முடியும். நான் உங்களுக்கு அநாவசியமாக அறிவுரை சொல்வதாக எண்ண வேண்டாம். இதை என்னுடைய கடமையாக கருதுகிறேன். குடி, சிகரட்டை கொஞ்சம் குறைத்துக்கொள்ளும்படியும் உங்கள் கால்களில் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன்.

நான் எப்போதும் ஒரே கொண்டாட்ட மனநிலையில் வாழ்வதால் மற்ற கஷ்டங்களை எல்லாம் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனால் பாதித்த விஷயங்கள் என்றால், என் நண்பனின் மரணமும், என் உறவினர் ஒருவரின் வாழ்க்கை என் கண்முன்னாலே வீணாகிப்போய்க் கொண்டிருப்பதும்தான்.

2011:

2011 ஆம் ஆண்டுக்கு என்று ஒன்றும் புதிதாக எந்த சபதமும் எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது வாழ்வது போலே கடைசிவரை வாழ வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், இந்த வருடத்தில் இருந்து சில நல்ல காரியங்களில் ஈடுபடலாம் என நினைக்கிறேன். மற்றபடி நாட்டிற்கும், குடும்பத்திற்கும், வீட்டிற்கும் மற்றும் எல்லோருக்கும் நல்லவனாக வாழ எல்லாம் வல்ல என் குல தெய்வம் கொப்பாட்டி அம்மனையும், ஏழுமலையானையும் வேண்டிக்கொள்கிறேன். அதே போல் நண்பர்களும் வாழ பிரார்த்திக்கிறேன்.

"கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்ப மில்லாத வாழ்வும்
துய்ய! நின்பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட ஊரின் வாழ்வே!
அமூதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள் வாமி அபிராமியே!"

தமிழ்மணம்:

நான் மார்ச் மாதம் 2009ல் பதிவுலக்த்துக்கு வந்தேன். 10 மாதங்களில் 230 இடுகைகள் எழுதினேன். நிறைய பின்னூட்டங்களும், ஓட்டுகளும், ஹிட்ஸ்களும் பெற்ற வருடம் அது. ஆனால், 2010ல் என்னால் அப்படி செயல்பட முடியவில்லை. மொத்தமே 108 இடுகைகள்தான் எழுதினேன். நிறைய சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். என்னால் இடுகை எழுதி போஸ்ட் செய்வதற்கே நேரம் இல்லாமல் போனதால், என்னால் மற்றவர்களின் பதிவுகளுக்கு படித்து பின்னூட்டம் இட நேரம் கிடைத்ததில்லை.

அதனால் எனக்கு ஒரு இரண்டு அல்லது மூன்று பின்னூட்டங்கள் வரும். ஓட்டுகளும் அவ்வளவு கிடைக்காது. என் ஓட்டை சேர்த்து ஒரு இரண்டு ஓட்டுகள்தான் கிடைக்கும் . மொத்தம் 113 நண்பர்கள் பின் தொடர்கிறார்கள். ஹிட்ஸ் மட்டும் ஓரளவு அவ்வப்போது கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு 200 பேர் படித்தால் பெரிய விசயம். இவர்களுக்காக இத்தனை மணி நேரம் செலவழித்து எழுத வேண்டுமா? என்று நினைத்ததுண்டு. பின்பு இவர்களுக்காகவாவது எழுத வேண்டும் என்றும் நினைத்ததும் உண்டு. ஆனாலும், ஏதோ ஒன்று என்னை தொடர்ந்து எழுத வைத்துக்கொண்டுதான் உள்ளது.

வாராவாரம் தமிழ்மணத்தில் வெளியாகும் முதல் 20 வலைப்பதிவுகளின் பட்டியலை நான் பார்ப்பதே இல்லை. ஏன் என்றால் பின்னூட்டத்தினாலும், ஹிட்ஸினாலும் தேர்வு செய்கிறார்கள் என்பது தெரியும். அதனால் நான் பார்ப்பதில்லை. அதனால் இன்று தமிழ்மணத்தின் சிறந்த 100 வலைப்பதிவுகள் பட்டியலையும் நான் பார்க்கவில்லை. ஆனால், தமிழ்மண முகப்பில் ஒவ்வொரு பதிவரின் பதிவின் கடைசியில் 'Traffic Rank' என்ற இடத்தினை கிளிக் செய்து பார்த்தேன். கடைசி பகுதியில் ஒரு வேளை 5000ம் ஆவது ரேங்கில் இருக்கிறதா? எனப்பார்த்தேன். ஒவ்வோரு பக்கமாக பார்க்க விருப்பம் இல்லாம் பக்கத்தை மூடப்போகையில்தான் கவனித்தேன், நம் வலைப்பதிவின் பெயரை வைத்தும் தேடலாம் என்று. பார்த்தேன். என்ன ஆச்சர்யம், என் வலைப்பூவின் ரேங்க் 170.

5000 ரேங்கை எதிர்பார்த்த எனக்கு 170 ரேங்க் சந்தோசம்தான். நன்றி நண்பர்களே!

2011 ம் வருடத்தைப் பற்றி வந்த மெயில் ஒன்று;

1.1.11

11.1.11

1.11.11

11.11.11

இது போல தேதிகள் ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறைதான் வருமாம்!

மீண்டும் நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

7 comments:

Unknown said...

உலக நாதன் அவர்களுக்கு, ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அடுத்த ஆண்டில் தமிழ்மணத்தில் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

தமிழ்மணம் ரேங்கிங்கில் 170வது இடத்திற்கு வாழ்த்துகள்.

மேன் மேலும் உயர்வீர்கள்.

iniyavan said...

//உலக நாதன் அவர்களுக்கு, ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அடுத்த ஆண்டில் தமிழ்மணத்தில் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.//

புத்தாண்டு வாழ்த்துகள் பாரத் பாரதி. வாழ்த்திற்கு நன்றி.

iniyavan said...

//தமிழ்மணம் ரேங்கிங்கில் 170வது இடத்திற்கு வாழ்த்துகள்.

மேன் மேலும் உயர்வீர்கள்.//

நன்றி இராகவன் சார்.

karthik said...

happy new year sir.

karthik.
usa.

iniyavan said...

//happy new year sir.

karthik.
usa.//

Wish You the Same Karthik

Anonymous said...

Happy new year nanba... i read your blog regularly and it is really interesting ... Happy new year and keep blogging... Inigo