வேகமாக ஓடி வந்து பல்லவனில் ஏறி அமர்ந்தேன். அவசர அலுவல் காரணமாக சென்னை செல்ல வேண்டியிருந்தது. எப்பொழுதும் டிக்கட் ரிசர்வ் செய்துவிடுவேன். இந்த முறை திடீர் என்று கிளம்ப வேண்டியிருந்ததால், அன்ரிசர்வ்டில் செல்லும்படி ஆகிவிட்டது. பொதுவாக கிளம்பும் போது ஏதேனும் கதை புத்தகம் எடுத்து செல்வது வழக்கம். இந்த முறை கிளம்பும் முன் என் மனைவி தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் புத்தகம் எடுத்துவர மறந்துவிட்டேன்.
கொஞ்சம் மூட் அவுட்டில் இருந்தேன். சிறிது நேரம் கழித்துத்தான் கவனித்தேன். என் எதிர் சீட்டில் உட்கார்ந்து இருந்தவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நானும் பார்க்கவே, சிறு புன்னைகயுடன்,
"ஹலோ, ஐயம் ராமநாதன், நீங்க?"
"ரவி"
பார்ப்பதற்கு ஒரு 50 வயது இருக்கலாம். காஸ்ட்லி பேண்ட் ஷர்ட் அணிந்திருந்தார். டை கட்டியிருந்தார். கோட்டை கையில் மடித்து வைத்திருந்தார். பார்ப்பதற்கு ஒரு கம்பனியின் MD போல் இருந்தார். இவர் எதற்காக அன் ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் வருகிறார் என்பது மட்டும் எனக்கு புரியவே இல்லை.
மீண்டும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். நான் எழுதிக்கொண்டிருப்பது தமிழ் கதை என்பதால் நான் தமிழிலேயே உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
"ஆபிஸ் வேலையா போறீங்களா?''
"ஆமாம்" என்றேன். பொதுவாக அறிமுகம் அதிகம் இல்லாத நபர்களுடன் உரையாட நான் விரும்புவதில்லை. அதுவும் பிராயணங்களின் போது மிகுந்த கவனத்துடன் இருப்பேன். ஆனால் அவர் என்னை விடுவதாக இல்லை.
"என்ன வேலையில் இருக்கீங்க?"
சொன்னேன்.
"வெரி குட். நானும் உங்களைப்போல சார்ட்டட் அக்கவுண்ட்ஸ்தான் படித்தேன். என் அப்பா என்னை வெளியே வேலைக்கு செல்ல அனுப்பாததால் எங்கள் நிறுவனத்திலேயே வேலையில் சேர்ந்துவிட்டேன்"
"ம்ம்" என்றேன் சுவாரஸ்யம் இல்லாமல்.
"என்ன வேலை என்று கேட்க மாட்டீர்களா?"
"சொல்லுங்க சார்"
"நான் தான் எங்கள் நிறுவனத்தின் MD"
நிமிர்ந்து உட்கார்ந்தேன். எந்த நிறுவனம் என்று தெரிந்து கொள்ள நான் விரும்பவில்லை.
"பின் ஏன் இப்படி இந்த டிரெயினில் வருகிறேன், என்று நினைக்கின்றீர்களா?" என்றவர், நான் ஒன்றும் பதில் பேசாமல் இருக்கவே, தொடர்ந்தார்,
"எனக்கு எதிலும் அதிகம் ஆசை இல்லை. எல்லா விதத்திலும் வாழ்க்கையை வாழ ஆசைப்ப்டுகிறென். இப்போ பாருங்க, இதுல வந்ததுனால தானே உங்களை பார்க்க முடிந்தது"
என்று சொன்னவர், சற்றே தன் பேச்சை நிறுத்தி, "ரொம்ப போர் அடிக்கிறேனா சார்?" என்றார்.
"அதெல்லாம் இல்லை சொல்லுங்கள்" என்றேன்.
பிறகு அவர் கம்பனியை பற்றி, லாபத்தை பற்றி, அமெரிக்காவைப் பற்றி, காஷ்மீரைப் பற்றி, இந்திய பொருளாதாரத்தைப் பற்றி, சினிமா உலகத்தைப் பற்றி, எப்போது இந்தியா வல்லரசாகும் என்பதைப் பற்றி, இப்படி பற்றி பற்றி நிறைய பேசினார். அவர் பேசாத விசயமே இல்லை.
அவரின் உரையாடல்கள் மூலம் அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டேன். மிகப்பெரிய புத்திசாலி என்று தெரிந்து கொண்டேன். அப்படி எல்லா விசயத்தையும் பற்றி பேசிக்கொண்டே வந்தவர் கடைசியில் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்,
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தார். என்ன ஆயிற்று இவருக்கு?
திடீரென அவரே ஆரம்பித்தார். முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. சந்தோசம் தெரிந்தது.
"என்னோட அனைத்து சந்தோசத்துக்கும் காரணம் என் மனைவிதான் சார்?"
"அப்படியா! அதுக்கு ஏன் சார் அழறீங்க?"
"இது ஒருவகையில ஆனந்த கண்ணீர் சார். எனக்கு எத்தனை வயசுல கல்யாணம் ஆகி இருக்கும்னு நினைக்கறீங்க?"
"தெரியலை சார்! சொல்லுங்க.?"
"45 வயசுல"
"அவ்வளவு லேட்டாவா? ஏன் சார், ஏதாவது கமிட்மெண்ட் இல்லை வேற காரணங்கள்?"
"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ஐ ஜஸ்ட் லவ் மை கம்பனி. அவ்வளவுதான். அதே லவ்வுடன் கல்யாணத்தைப் பற்றி சிந்திக்காம கம்பனியைப் பற்றி சிந்தித்தே காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த சமயத்தில்தான், எங்கள் கம்பனியில் புதிதாக வேலைக்கு சேர்ந்த அருணாவை பார்த்தேன். நல்ல அழகு. அவளைப்பார்த்த மாத்திரத்திலேயே அவளுடன் சேர்ந்து வாழ ஆசை பட்டேன்"
"ம் அப்புறம்" என்றேன் சற்றே சுவாரஸ்யத்துடன்.
"அருணாவை கல்யாணம் செய்வது ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக இல்லை. உடனே அவளை என் செக்ரெட்டரியாக ஆக்கிக்கொண்டேன். ஒரு மாதத்தில் அவளிடம் என் ஆசையை சொன்னேன். என்ன ஆச்சர்யம், உடனே சரி என்று சொல்லிவிட்டாள். ஆனால், மற்றவர்களுக்கு என் திருமணம் கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது"
"ஏன் சார்?"
"எனக்கு அப்போ 45. அவளுக்கு 22"
"அவ்வளவு வயசு வித்தியாசமா?"
"கல்யாணத்துக்கு முக்கியம் வயசா? இல்லை மனசா சார்" என்றவர் என் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்தார்,
"கல்யாணம் நல்லடியாக நடந்தது. என் பெயரில் உள்ள எல்லா சொத்துகளையும் அவள் பெயரில் எழுதி வைத்தேன். சந்தோசமாக வாழ்க்கை இருந்தது" என்றவர் மீண்டும் அழ ஆரம்பித்தார்.
"சொல்லுங்க சார்! அழாதீங்க?"
கண்களை துடைத்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தார்,
"நேற்று இரவு. டெல்லியிலிருந்து திரும்பினேன். நேர அலுவலகம் செல்லாமல் வீட்டிற்கு சென்றேன். கதவு வழக்கத்துக்கு மாறாக திறந்திருந்தது. நேரே மாடிக்கு சென்றேன். அங்கே என் பெட் ரூம் கதவு திறந்திருக்க உள்ளே பார்த்தேன். என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் குமார்..." அதிர்ச்சியுடன் ஓடி வந்த என் மனைவி, குமார் செக்ல கை எழுத்து வாங்க வந்தாருங்க. அதான்" என்றாள்.
வந்த கோபத்தில் கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டேன்.
நான் அதிர்ச்சி அடைந்து, "ஐயையோ யாரை?" என்றேன்
"குமாரை" என்று அவர் சொல்லி முடிக்கவும், சென்னை எக்மோர் ஸ்டேஷன் வரவும் உடனே போலிஸ் வரவும் சரியாக இருந்தது.
ஏனோ என் மனைவியிடம் உடனே பேச வேண்டும் போல் இருந்தது.
"அழாதா கண்ணம்மா! நாம ஒண்ணும் செய்ய வேண்டியது இல்லை. செக் புக்ல கையெழுத்து வாங்க போன உன் தம்பியை, சந்தேகப்பட்டு சுட்டுக்கொன்ன அந்த கிறுக்கனை போலிஸ் அரெஸ்ட் செஞ்சிடுச்சு. முதல்ல அழுகைய நிறுத்து"
7 comments:
நல்ல ட்விஸ்ட் உலக்ஸ்
அடுத்த புத்தகம் உங்களுடையதாக வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
கடைசியில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
Indli Service to me
show details 3:21 PM (1 minute ago)
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'என். உலகநாதன்: நம்பிக்கை துரோகம்! (சிறுகதை)' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 6th January 2011 07:21:02 AM GMT
Here is the link to the story: http://ta.indli.com/story/399367
Thanks for using Indli
Regards,
-Indli
இன்ட்லி வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
//நல்ல ட்விஸ்ட் உலக்ஸ்
அடுத்த புத்தகம் உங்களுடையதாக வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
நன்றி ஸ்ரீராம்.
உங்களால்தான் அதிகம் கதை எழுத ஆரம்பித்தேன் ஸ்ரீராம்.
//கடைசியில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!//
வருகைக்கு நன்றி மேடம்.
till now the best is "nilaavea vaa"
http://www.iniyavan.com/2009/07/1.html
maarvalous; i loved it; and i meant it
//till now the best is "nilaavea vaa"
http://www.iniyavan.com/2009/07/1.html
maarvalous; i loved it; and i meant it//
உங்கள் தொடர்வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி வினு.
Post a Comment