Feb 28, 2011

நான் கெட்டவன்! - பாகம் -2


நினைத்தது போலவே எல்லாம் நடந்தது. பத்திரிகைகளில் எல்லாம் என்னைப் பற்றி எழுத ஆரம்பித்தார்கள். ஏகப்பட்ட மெயில்களும், லெட்டர்களும் வந்து குவிய ஆரம்பித்தன. என் எழுத்தாளர் நண்பர்களும் என்னைக் குறை கூறினார்கள். பொதுவில் அவ்வாறு ஒத்துக்கொண்டது என் தவறு என்றார்கள். என் மனைவியும்,

"நீங்கள் அது போல் பேசியது தவறு" என்றாள்.

"உண்மையைத்தானே சொன்னேன்" என்றேன்.

"அப்போ நீங்கள் கெட்டவரா?" என்றாள்.

"யார் இந்த உலகத்தில் நல்லவர்கள்? அனைவருமே ஒரு விதத்தில் கெட்டவர்கள் தானே?" என்றேன்.

என் பதிலில் கடுப்பாகி, "உங்க கிட்ட யார் வாயைக்கொடுப்பது" என்று அவள் வேலையைப் பார்க்க போய்விட்டாள்.

யோசனையுடன் சோபாவில் அமர்ந்தவனை என் வீட்டு டெலிபோன் மணி கூப்பிட்டது.

"ஹலோ"

"இனியவன் சாரா?"

"ஆமாம். இனியவன்தான் பேசறேன். நீங்க யாரு?"

"சார், நான் அனு பேசறேன். அன்னைக்கு கலந்துரையாடல்ல மீட் பண்ணினோமே?"

'மறக்க முடியாமா உன்னை' மனதினுல் நினைத்துக்கொண்டே,

"ம்ம் சொல்லும்மா"

"சாரி சார். நான் அந்த மாதிரி கேட்டிருக்கக்கூடாது. என்னாலதான் உங்களுக்கு கெட்ட பெயர்"

"அதல்லாம் ஒண்ணும் இல்லைம்மா"

"சார், உங்களை பார்த்து பேசனும் போல இருக்கு. எப்போ வரட்டும்"

"எப்போ வேண்டுமானாலும் வரலாம்" என்று சொல்லி போனை வைத்துவிட்டு குளிக்க சென்றேன். பதினைந்து நிமிடம் இருக்கும். என் மனைவியின் குரல் கேட்டது,

"ஏங்க, உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்கு"

"யாருன்னு கேட்டியா"

"கேட்டேன், அனுவாம்"

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்போதுதானே பேசினோம். அதற்குள்ளாக வந்துவிட்டாளே!

"உட்காரச்சொல்லும்மா. இதோ வந்துடுறேன்" என்றவன் வேகவேகமாக குளிக்க ஆரம்பித்தேன். என் ரூமிற்கு சென்று உடை அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தேன். ஒரு சோபாவில் அவள் உட்கார்ந்து இருந்தாள்.

டிராக்சூட்டும், டி சர்ட்டும் போட்டு இருந்தாள். தலை கலைந்திருந்தது. முகமெல்லாம் வேர்வை. பார்க்க மிக அழகாக தெரிந்தாள்.

"என்னம்மா, இப்போத்தான் போன்ல பேசின?"

"இந்த பக்கமா ஜாகிங் போனேன் சார். அப்போத்தான் உங்க கிட்ட பேசினேன். உடனே உங்களைப்பார்க்க வேண்டும் போல் இருந்ததால், வந்துவிட்டேன். நான் அன்று அந்த கேள்வியைக்கேட்டு உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் சார்"

"அதான் ஏற்கனவே சொல்லிட்டியேம்மா" என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போது என் மனைவி காபி கோப்பையுடன் வந்தாள். மனைவியிடம் அவளைப்பற்றியும், அவள் வந்ததற்கான காரணத்தையும் கூறினேன். அவளும் ஒரு புன்னைகையுடன்,

"ஏம்மா வருத்தப்படறே? ஏதோ கேட்கணும் நினைச்சு கேட்டுட்ட. பரவாயில்லை விடு" என்றவள் உள்ளே சென்றாள்.

அனு பேச ஆரம்பித்தாள். கொஞ்ச நேரத்திலேயே அவள் மிகப்பெரிய புத்திசாலி என்று தெரிந்து கொண்டேன். எல்லா விசயங்களைப் பற்றியும் பேசினாள். நான் அவள் பேசியதைக்கேட்டேனோ இல்லையோ அவளையே, அவள் பேசும் அழகையே, அவள் தலையை ஆட்டி ஆட்டி பேசும்போது, அவள் காதில் ஆடும் தொங்கட்டான் அழகையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"சார், என்ன நான் பாட்டுக்கும் பேசிட்டே இருக்கேன். நீங்க என்னையே பார்த்துட்டு இருக்கீங்க" என்று ஓப்பனாக கேட்க ஆரம்பித்தாள்.

"நீ ரொம்ப அழகா இருக்க அனு?"

"பொய் சொல்லாதீங்க"

"உண்மைதான்"

"இந்த டிரெஸ்லயா?"

"இந்த டிரெஸ்லயே" என்றேன்.

விலகி இருந்த டி ஷர்ட்டை மேலே இழுத்துவிட்டுக்கொண்டாள். தலை முடியை கைகளால் கோதிவிட்டுக்கொண்டாள்.

அவள் வீட்டைச் சுற்றி ஒரு முறைப் பார்த்தாள். அருகில் என் மனைவியைத் தேடினாள். இல்லை என்றதும் கேட்டாள்,

"உண்மையைச் சொல்லுங்க. நீங்க ஏன் அன்னைக்கு கெட்டவருன்னு சொன்னீங்க? பொய்தானே?"

"இல்லையே?"

"அப்படீன்னா?"

"நான் கெட்டவன் தான்"

"என்னால நம்ப முடியலை சார். நீங்க கெட்டவராக இருக்கவே முடியாது"

"ஏன் அப்படி சொல்லற அனு?"

"நீங்க என்னம்மா எழுதறீங்க. எவ்வளவோ நல்ல விசயம் சொல்லறீங்க"

"எழுதுனா, சொன்னா, நான் நல்லவன்னு ஆயிடுமா?"

"இவ்வளவு நல்ல விசயங்களை எழுதறவங்க கெட்டவனாக இருக்க முடியாது"

"புரிந்து கொள் பெண்ணே! நான் என்னவெல்லாம் தவறுகள் சிறு வயதிலிருந்து செய்திருக்கிறேன், கேள்" என்று சொல்ல ஆரம்பித்தேன்.

ஆர்வத்துடன்  கேட்க ஆரம்பித்தாள்.


-தொடரும்

Feb 25, 2011

நான் கெட்டவன்! - பாகம் -1


என்னுடைய 100வது புத்தக வெளியீட்டு  விழாவில்தான் அவளைச் சந்தித்தேன். புத்தக வெளியீடு விழா முடிந்ததும் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏறக்குறைய ஆண்களும் பெண்களுமாய் நூறு பேர் அந்த ஹாலில் அமர்ந்து இருந்தார்கள். சாதாரணமாக எழுத ஆரம்பித்த நான் ஒரு 15 வருடங்களில் நூறு புத்தகங்கள் எழுதுவேன் என்றும், இத்தனை ஆயிரம் வாசகர்களை பெறுவேன் என்றும் கனவிலும் நினைக்கவில்லை.

நான் சாதரணமாக எழுதிய அத்தனை கதைகளையும் மக்கள் மிகவும் ரசிக்க ஆரம்பித்தார்கள். விருதுகள் குவிய ஆரம்பித்தன. 'இனியவன்' என்கிற என் பெயர் வராத பத்திரிகைகளே இல்லை. சராசரி மக்களின் உறவுகளை வைத்துத்தான் பெரும்பாலும் எழுதினேன்.

கலந்துரையாடல் ஆரம்பித்தது. வழக்கம் போல எல்லோரும்,

"அந்த கதையில ஏன் ரவி கோகிலாவை கல்யாணம் பண்ணிக்கலை?"

"ஏன் ஒரு கதையில நண்பனோட அம்மாவை பத்தி தப்பா எழுதுனீங்க?"

'ஏன் உங்க கதைகள்ல பெரும்பாலும் கதாநாயன் பெயர் ரவின்னும், நாயகி பேர் கீதானும் வருது?"

"அக்கா"ன்னு ஒரு கதை எழுதுனீங்களே அது உண்மை கதையா? அது உண்மையா இருந்தா, அந்த லெட்டரை ஏன் உங்க அக்காகிட்ட தகுந்த சமயத்துல கொடுக்கல?"

"நீங்க எழுதுன முதல் கதையில, நாயகன் காதலியை விட்டுவிட்டு அவள் விதவை அக்காவை கல்யாணம் செய்வதாய் முடித்திருந்தீர்களே? நீங்கள் ஏன் அவ்வாறு கல்யாணம் செய்து கொள்ளவில்லை?"

என்று சரமாரியாக கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள். நானும் பதில்கள் சொல்லிக்கொண்டே வந்தேன்.

கடைசியில்தான் அவள் கேள்வி கேட்க எழுந்தாள். தன் பெயர் அனு என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள். வயது ஒரு 20 இருக்கலாம். சின்ன வயது ரேவதி போல துறு துறு என்று இருந்தாள். பார்க்க லட்சணமாக இருந்தாள். அவள் உடுத்தியிருந்த உடை மூலமே அவளைப் பற்றிய ஒரு நல்ல இமேஜ் என் மனதில் ஏற்பட்டது. அங்கே வந்த பெண்கள் பெரும்பாலானோர் ஸ்கர்ட், ஜீன்ஸ் என்று அணிந்து வந்திருக்க, இவள் மட்டும் புடவையில் ரொம்ப அடக்கமாக இருந்தாள். பார்க்க மிக அழகாக இருந்தாள்.

"சார்! தப்பா எடுத்துக் கொள்ளவில்லை என்றாள் உங்களிடம் ஒரு கேள்வி" என்று என் அனுமதியை எதிர்பார்த்து என் கண்களைப் பார்த்தாள்.

நான் தலை ஆட்டவே,

"சார், உங்கள் கதைகள் பெரும்பாலும் ஒரு வித நல்லத்தன்மை உடைய ஷாப்ட் கதைகளாகவே உள்ளன. கதாநாயகன் பெரும்பாலும் நல்லவனாகவே காட்டப்படுகிறானே. நீங்கள் அந்த அளவு நல்லவரா?"

ஒரு எழுத்தாளனின் பிரச்சனை என்னவென்றால், அவன் எழுத்து தான் அவன் வாழ்க்கை என்று வாசகர்கள் நினைத்துவிகிறார்கள். சில சமயம் அவனின் நிஜ பிம்பம் தெரியும்போது வருத்தப்படுகிறார்கள்.

திடீரென இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் அவன் நல்லவனா இல்லை கெட்டவனா? என்று. அதுவும் இல்லாமல் நல்லவன் என்றால் யார்? கெட்டவன் என்றால் யார்? யார் அதற்குறிய வரைமுறையை தீர்மானித்தது? ஒருத்தருக்கு ஒருவரின் செயல் நல்லவையாக படலாம். ஆனால் அதே செயல் இன்னொருவருக்கு கெட்டவையாக படலாம்.

என்னைப் பொறுத்தவரை கொலை செய்பவன், கற்பழிப்பவன், துரோகம் செய்பவன், திருடுபவன், அடுத்தவன் சொத்தை அபகரிப்பவன் மட்டும்தான் கெட்டவர்கள் என்று சொல்ல மாட்டேன். ஒருவரின் மனதை நோகடித்து அதனால் அவர்கள் வருந்த நேர்ந்தால், அப்படி ஒரு செயலை செய்தவனும் என்னைப் பொறுத்தவரை கெட்டவன்தான். அப்படி பார்க்கப் போனால், இங்கே யார் நல்லவர்? என் அகராதிப்படி அனைவரும் கெட்டவர்களா? அப்போ மகாத்மா காந்தி மட்டும்தான் நல்லவரா?

என் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருந்தது. சபையில் ஒரு சிறு சல சலப்பு ஏற்பட்டது. எல்லோரும் என் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

"நல்லவனா? கெட்டவனா?"

"தெரியலயேமா? தெரியலையேமா?" என்று நாயகன் கமல் போல தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை.

அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரு மடக்கு குடித்தேன். தெளிவாக அந்த பெண்ணைப் பார்த்து சொன்னேன்,

"நான் ரொம்ப கெட்டவனம்மா?"

யாரும் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை என்று அங்கு ஏற்பட்ட கூச்சலில் இருந்தே தெரிந்தது. அந்த பெண்ணும் இந்த பதிலை எதிர்பார்த்திருக்கமாட்டாள். நாளை எல்லா பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தி இதுதான்,

"இனியவன் கெட்டவர். அவரே ஒப்புக்கொண்டார்"

அந்தப் பெண் அனுவின் கேள்வியும், என் பதிலும் என் வாழ்க்கையை புரட்டிப்போட போகிறது என்று அன்று நான் அறிந்திருக்கவில்லை.

-தொடரும்
Feb 23, 2011

ரவியின் காதல் கதை -5 (பாகம் 2)

சந்தோசத்துடன் படம் பார்க்க ஆரம்பித்தேன். நாங்கள் இருவரும் அவ்வளவு நெருக்கமாவோம் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை. சில சில்மிஷங்களுடன் படம் பார்த்து முடித்தோம். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், படம் முடியும் வரை நாங்கள் இருவரும் ஒரு வார்த்தைக்கூட பேசிக்கொள்ளவில்லை. ஒரு வேளை என் கைகள் அவளுடன் பேசியிருந்திருக்கலாம். சரியாக நினைவில்லை.

இப்படியே சில நாட்கள் போனது. நான் அவள் மேல் தீவிர காதலில் மூழ்கிப்போனேன். அவளும் காதலிப்பதாகத்தான் நினைத்தேன். தினமும் பஸ்ஸில் அவளின் அருகாமை எனக்கு போதையை தந்தது. ஒரு நாள் பார்க்கவில்லை என்றால் கூட மனம் கிடந்து அலைய ஆரம்பித்தது.

தினமும் நான் அவளைப் பார்த்து சிரிப்பேன். அவளும் என்னைப் பார்த்து சிரிப்பாள். இவ்வளவுதான் எங்களுக்கு உள்ளே நடந்தது. மேற்கொண்டு லவ் லெட்டர் கொடுக்கவோ, 'ஐ லவ் யூ' என்று சொல்லவோ என் மனம் விரும்பவில்லை. காரணம், அவளின் பதில் வேறு மாதிரி இருந்தால், என் மனம் தாங்காது. அதனால், கிடைக்கிற சந்தோசமே போதும் என்று மேற்கொண்டு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தேன்.

யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்த என் காதலை ஒரு நாள் என் நண்பன் சாமுவிடம் சொன்னேன்.

"யாருடா அது? இன்னொரு காதலா? உருப்படவே மாட்டியா?" எந்த தெருடா அவ? என்றான்.

நான் தெருவின் பெயரை சொன்னவுடன், "எனக்கு யார் என்று காமி" என்றான்.

அவனைக்கூட்டிக்கொண்டு அவள் இருக்கும் தெருவுக்கு சென்றேன். அது ஒரு பெரிய நகர். பெரிய பெரிய தெருக்கள் மொத்தம் பத்து இருக்கும். அங்கே யார் புதிதாக நுழைந்தாலும், அங்கே இருக்கும் பையன்கள் ஆயிரத்து எட்டு கேள்விகள் கேட்பார்கள். அங்கே தாதா போல் ஒருவன் இருந்தான். அவனின் நண்பன் குமார் எனக்கும் நண்பன். அவனிடம் விசயத்தை சொன்னேன்.

"மாப்பிள்ளை! ஜாக்கிரதை. நம்ம பசங்க எல்லாம் ஒரு மாதிரி. உண்மையான காதல்னா என் கிட்ட சொல்லு. சும்மா ஒருதலைக்காதல்னா விட்டுட்டு ஓடிப் போயிடு. ஏன்னா, இங்க இருக்க பசங்க சும்மா விட மாட்டாங்க" என்று பயமுறுத்தினான்.

"இல்லை குமார். உண்மையான காதல்தான்" என்று பொய் சொன்னவன், கடைசி வரையில் அவனிடம் 'இன்னும் அவள் என்னிடம் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை' என்ற உண்மையை சொல்லவில்லை.

கடைசியாக அவள் இருந்த தெருவை கண்டுபிடித்து, நண்பன் சாமுவிடம் அவளை காண்பித்தேன். அவள் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து அவள் தம்பியுடன் பேசிக்கொண்டு இருந்தாள். என்னை பார்த்தவள் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்து, உடனே உள்ளே போய் விட்டாள்.

உடனே சாமு, "வேண்டாம்டா. பிரச்சனை வரும். அவளை பின் தொடராதே"

"ஏன்?"

"காரணம் அப்புறம் சொல்றேன். வேண்டாம்னா வேண்டாம். அவ்வளவுதான்" என்றான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அடுத்த நாள். பஸ்ஸில் நல்ல கூட்டம். மெல்ல நகர்ந்து என் அருகில் வந்து நின்றாள். மிக நெருக்கமாக நின்றாள். உடலோடு உடல் உரசியது. என் உடல் வேதனை அடைய ஆரம்பித்தது. முதல் முறையாக என்னிடம் காயத்ரி பேசினாள்.

"எதுக்கு எங்க தெருவுக்கு வந்தீங்க?"

"உங்களை பார்க்கத்தான்"

"இனிமே வராதீங்க"

"ஏன்?"

"வராதீங்கன்னா வராதீங்க. அவ்வளவுதான்" என்று நகரப்போனவளை இடுப்புடன் அணைத்து பின் முதுகில் சின்னதாக ஒரு முத்தமிட்டேன். திரும்பி கண்களால் என்னை சுட்டெரித்தவள், உடனே கும்பலில் நகர்ந்து பஸ்ஸின் கடைசிக்கு சென்றாள்.

எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. தப்பு பண்ணிவிட்டோமே? என தவித்தேன். அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை.

அடுத்த நாள் காலை. அவளிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று சீக்கிரமே பஸ் ஸ்டாண்டு சென்றேன். அங்கே அவள் அருகில் நின்றவர்களைப் பார்த்து என் இருதயமே வெடித்து விடுவது போல் இருந்தது.

அவள் இருக்கும் அந்த நகரத்தின் தாதாவும், குமாரும் இருந்தார்கள். ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று என் உள்ளுணர்வு சொல்லியது. என்னை டின் கட்டப்போகிறார்கள் என்ற நினைப்பே என்னை தள்ளாட வைத்து.

என்னைப் பார்த்த குமார், "ரவி, யாரோ காயதிரிகிட்டே பஸ்ஸல் தினமும் தொந்தரவு பண்ணறாங்களாம். யாருன்னு உனக்குத் தெரியுமா? நீயும் டெய்லி இந்த பஸ்லதானே போற?"

எனக்கு ஒரு கணம் இதயமே துடிப்பை நிறுத்திவிட்டது போல ஆனது. நான் காயதிரியைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்தாள்.

"தெரியலையே?" என்றேன்.

"ரவி! இவளை நான் காதலிக்கிறேன். நான்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். எவனாவது கிண்டல் பண்ணினான்னா, நீ கொஞ்சம் கண்டிச்சு வை அவனை. எதாவது பிர்ச்சனையினா, என் கிட்டயோ அண்ணன் கிட்டயோ சொல்லு" என்று அந்த தாதாவைக் காட்டினான் குமார்.

எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியவில்லை.

உடனே காயத்ரி பக்கம் திரும்பியவன்,

"இங்க பாரு காயத்ரி, ரவி என் நண்பன். எவனாலயாவது பிரச்சனைனா இவன் கிட்ட சொல்லு" என்றவன் பஸ் ஸ்டாண்டை விட்டு உடனே கிளம்பினான்.

போன உயிர் திரும்பி வந்தது. என்னைக் காட்டிக்கொடுக்காதத்துக்கு பார்வையாலேயே நன்றி சொன்னேன். அன்றிலிருந்து அந்த பஸ்ஸில் செல்வதை நிறுத்தினேன். பிறகு அப்பாவிற்கு மாற்றலாகவே குடும்பத்துடன் வேறு ஊருக்கு சென்று விட்டேன்.

எனக்கு சில விசயங்கள் மட்டும் அன்று புரியவே இல்லை.

"அவள் ஏன் என்னை காட்டிக்கொடுக்கவில்லை?"

"அவள் குமாரை காதலிக்கும் பட்சத்தில் என்னுடன் ஏன் நெருக்கமாக பழகினாள்?"

அதற்கான விடை இருபது வருடங்கள் கழித்து சென்ற மாதம் கிடைத்தது.

பல வருடங்களுக்குப் பிறகு என் பூர்வீக நிலம் சம்பந்தமாக என் ஊருக்கு சென்றேன். நான் ஊரில் இருந்த போது காயத்ரியையும், அவள் குழந்தையையும் கோயிலில் சந்தித்தேன்.

என்னைப்பார்த்தவள், சந்தோசத்துடன்,

"எப்படி இருக்கீங்க?" என்றாள்.

"நல்லா இருக்கேன்" என்றவன், "எங்கே உன் ஹஸ்பெண்ட்?" என்றேன்.

பூக்கடையில் பூ வாங்கிக்கொண்டிருந்த ஒருவனை காண்பித்தாள். அது குமார் இல்லை. வேறு யாரோ ஒருவன். அவள் அழகுக்கு சம்பந்தம் இல்லாதவன்.

"என்ன காயத்ரி, அப்போ நீ குமாரை காதலிக்கலையா?"

"இல்லை"

"அவன் உன் முன்னாலே என்கிட்ட சொன்னானே உன்னைக் காதலிப்பதாய்?"

"அவன் தானே சொன்னான். நான் சொல்லலியே?" என்றாள்.Feb 22, 2011

ரவியின் காதல் கதை -5 (பாகம் 1)

நன்றாக நினைவில் உள்ளது. நான் காதல் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் மிக மிக குறைவு. அப்படி நான் காதல் இல்லாமல் இருந்த ஒரு நாளின் காலையில்தான் அவளை பஸ்ஸில் பார்த்தேன். அன்று நான் செல்ல வேண்டிய டிரெயினை மிஸ் செய்துவிட்டதால், பஸ்ஸில் செல்ல வேண்டியதாகிவிட்டது. பின்பு தினமும் சில காலங்கள் நான் பஸ்ஸில்தான் செல்வேன் என்று அன்று நான் நினைக்கவில்லை.

அவள் பெயர் காயத்ரி. அவள் ரொம்ப அழகு என்று திருப்பி திருப்பி சொன்ன பல்லவியையே சொல்லிச் சொல்லி உங்களை போரடிக்க விரும்பவில்லை. சாமி படம் பார்த்தீர்களா? அதில் திரிஷா பிராமணா ஆத்து பொண் போல வருவாளே? அவள் போல்தான் நம் கதையின் நாயகி இருப்பாள். பார்த்த மாத்திரத்தில் நான் அவளை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். அன்றிலிருந்து காயத்ரி என் கனவில் வர ஆரம்பித்தாள்.

தினமும் சரியாக அதே நேரத்தில் பஸ் ஸ்டாண்டு செல்ல ஆரம்பித்தேன். அவள் போகும் பஸ்ஸிலேயே போக ஆரம்பித்தேன். கூடுமான வரை அவள் அருகில் நிற்க முயற்சித்தேன். அவளிடம் எப்படி பேச ஆரம்பிப்பது என்று தெரியாமல் குழம்பிப்போனேன். அப்பொழுதுதான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் அவள் பஸ்ஸில் ஏறுகையில் ஒரு புத்தகம் கீழே விழுந்தது. பஸ்ஸில் நல்ல கூட்டம் வேறு. அந்த புத்தகத்தை நான் எடுத்து அவளிடம் கொடுப்பதற்காக திரும்பினேன். அதற்குள் அவள் கூட்டத்தின் உள்ளே சென்று விட்டாள்.

மெயின்கார்ட் கேட் வந்ததும் அவசர அவசரமாக இறங்கி அவளுக்காக காத்திருந்தேன். அவள் இறங்கியவுடன் அவளை நெருங்கினேன். இருதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. ஒரு வித பதட்டத்துடன் அவளை நெருங்கி,

"ஹலோ" என்றேன்.

என்ன? என்பதுபோல் என்னைப் பார்த்தவளை நெருங்கி,

"இந்தாங்க உங்க புக். நீங்க பஸ்ல ஏறும்போது கீழே விழுந்துடுச்சு" என்று சொல்லி அவளிடம் புத்தகத்தை நீட்டினேன்.

வாங்கி பார்த்தவள், "சாரிங்க! இது என் புத்தகம் இல்லை" என்று கொடுத்துவிட்டு, என்னை திரும்பி பார்க்காமல் அவள் கல்லூரியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அசடு வழிய நின்று கொண்டிருந்தவன் புத்தகத்தை பிரித்து பார்த்தேன். அதில் வேறு யாரோ பெயர் இருந்தது. வந்த கடுப்பில் அந்த புத்தகத்தை தூக்கி எரிந்து விட்டு நான் என் கல்லூரிக்கு சென்றேன்.

ஆனால் மனம் முழுவதும் ஒருவித சந்தோசம் ஒட்டிக்கொண்டது. ஏனென்றால் என்னிடம் அவள் பேசினாளே? அவள் மட்டும்தான் அழகு என்று நினைத்திருந்த எனக்கு அவள் குரலும் அழகு என்ற விசயம் அன்றுதான் தெரிந்தது.

அன்று மாலையிலிருந்து ஒரு சிறு மாறுதல் அவளிடம் ஏற்பட்டு இருந்ததை கவனித்தேன். மெல்ல என்னைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தாள். அது போதாதா? எனக்கு. உடனே சுவிட்சர்லாந்து சென்று சில டூயட்கள் பாட ஆரம்பித்தேன்.

நாளாக நாளாக பஸ்ஸில் அவள் அருகில் சென்று நிற்க ஆரம்பித்தேன். சில முறை அவளின் கால்கள் என் கால்களின் மேல் பட்டது. அப்போது ஏற்பட்ட மின் காந்த அதிர்வினால் என் உடல் டயர்டானது. அப்படியே நாட்கள் சில சென்றன. அவள் என்னிடம் நேரடியாக பேசவில்லையே தவிர அவள் தோழியிடம் பேசுவது போல் என்னிடம் பேசலானாள்.

அவளை நினைத்து நினைத்து உருக ஆரம்பித்தேன். அவளும் அப்படித்தான் என்று நம்பினேன். ஒரு நாள் நண்பர்களுடன் சினிமா சென்றேன். அங்கே அவள் தோழிகளுடன் நிற்பதை பார்த்தேன். நான் பார்த்துக்கொண்டிருந்த போதே அவள் என்னை நோக்கி வருவது தெரிந்தது.

நண்பர்கள் என்னை ஒருவிதமாக பார்ப்பது தெரிந்தது. அன்று அவள் எனக்குப் பிடித்த நீலக் கலர் தாவணியும், வெள்ளைக் கலர் பாவடையும் அணிந்து மிக கவர்ச்சியாக இருந்தாள்.

நேராக என்னிடம் வந்தவள்,

"ஒரு நான்கு டிக்கட் வாங்கித்தர முடியுமா?" எனக்கேட்டாள்.

அதை விட வேறு எனக்கு என்ன வேலை?

உடனே எனக்குத்தெரிந்த நண்பர் மூலம் டிக்கட் வாங்கினேன். அவர்கள் அனைவரும் எங்கள் சீட் அருகில் அமர்கின்ற வகையில் டிக்கெட் வாங்கினேன்.

நினைத்து போலே என் அருகில் அம்ர்ந்தாள். படம் துவங்கியது. சிறிது நேர டென்ஷனுக்கு பிறகு மெல்ல பேச்சுக் கொடுத்தேன். அவளும் பேச துவங்கினாள். என் கையை எடுத்து சேரின் கைப்பிடியில் வைத்தேன்.

என்ன ஆச்சர்யம்! என் கையின் மேல் அவள் கையை வைத்தாள்.

-தொடரும்


Feb 19, 2011

சாரிங்க, எனக்கு வேற வழி தெரியலை! (சிறுகதை)

நேற்று அடித்த சரக்கின் ஹேங் ஓவர் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது. இனி சரக்கில் எதையும் கலக்கக்கூடாது. ராவாக அடிக்க வேண்டியதுதான். சரி, ஒரு இரண்டு இட்லி சாப்பிட்டு வரலாம் என நினைத்து பக்கத்தில் உள்ளே மெஸ்ஸுக்கு சென்றேன். இன்னும் குளிக்கவேறு இல்லை. சாப்பிட்டு வந்து குளிக்கலாம் என நினைத்து, இரவு கட்டியிருந்தே அதே லுங்கியுடன், அதே பழைய சட்டையுடன் இருந்த என்னைப் பார்க்க எனக்கே என்னவோ போல் இருந்தது. இட்லியை வாயில் வைக்கும் போது அண்ணாச்சியிடம் இருந்து போன். உடனே எடுத்து பேசாவிட்டால் கோபப்படுவார். அதனால் சாப்பிடுவதை பாதியில் விட்டு விட்டு போனை எடுத்தேன்,

"கோபாலு, எங்கடா இருக்க?"

"மெஸ்ல இருக்கேண்ணா"

"சாப்பிட்டுவிட்டு வீட்டு பக்கம் வா. உனக்கு ஒரு வேலை இருக்கு"

"என்னை வேலைண்ணே?"

"முதல்ல வாடா. அப்புறம் சொல்றேன்"

அண்ணாச்சி. பெரிய பிஸினஸ்மேன். நல்லவர்தான். ஆனால், அவர் தொழிலில் யாராவது குறுக்கிட்டால் கெட்டவர் ஆகிவிடுவார். எனக்கு மாதா மாதாம் படி அளக்கும் உத்தமர். அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, துணைக்கு குமாரையும் கூட்டிக்கொண்டு அண்ணாச்சி வீட்டிற்கு போனேன். மிகப்பெரிய வீடு. பெரிய காம்பவுண்ட் சுவர்கள். வீடு முழுவதும் செக்யுரிட்டி ஆட்கள். அதைத்தவிர கன்னுக்குட்டி போல நாய்கள் வேறு காவலுக்கு. எல்லாவற்றையும் கடந்து, குமாரை வெளியே நிற்க வைத்து விட்டு, நான் மட்டும் உள்ளே போனேன்.

"வாடா கோபாலு"

"என்ன அண்ணாச்சி, அவசரமா வரச்சொன்னீங்க?"

"நம்ம ரமேஷ் இல்லை, ரொம்ப துள்ளுராண்டா. நானும் சின்னை பையன் போனாப்போகுதுனு பார்த்தா, நேற்று நான் சாராயக்கடைய ஏலம் எடுக்கப்போனா அவனும் போட்டி போடுறான். இனிமே இப்படியே விட முடியாது. அதனால், அவனை எப்படியாவது தூக்கிட்டு நம்ம ஹஸ்ட் ஹவுஸுக்கு வந்துடு. நாலு தட்டு தட்டி, கொஞ்சம் மெரட்டி வைக்கலாம். அப்பத்தான் சரிப்படுவான்"

"சரி அண்ணாச்சி, கவலைய விடுங்க சாயந்தரம் தூக்கிட்டு வந்துடறேன்"

அண்ணாச்சி குடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு, குமாரையும் கூட்டிக்கொண்டு, ரமேஷ் அலுவலகம் இருக்கும் அந்த காம்ப்ளக்ஸுக்கு போனேன். அது சென்னையின் மிகப்பெரிய காம்ப்ளக்ஸ். கீழே கடைகள், ஹோட்டல்கள். மூன்றாவது மாடியில் அலுவலகங்கள். ரமேஷ் மதியம் சாப்பிடுவதற்கு இரண்டாவது மாடியில் உள்ள ஹோட்டலுக்கு வருவது வழக்கம். அவன் சாப்பிடும் ஹோட்டல் அருகேதான் லிப்ட் உள்ளது. அதனால் அவன் சாப்பிட்டு விட்டு வரும்போது, அவனை லிப்ட்டில் மடக்கி, மயக்க மருந்து தடவிய துணியால் அவன் முகத்தை மூடி, கிழே இருக்கும் கார் பார்க்கிங் இடத்திற்கு சென்றால், அங்கே குமார் காருடன் காத்திருப்பான். அப்படியே அவனை ஹஸ்ட் ஹவுஸுக்கு கொண்டு செல்வதாக திட்டம்.

குமாரிடம் திட்டத்தை விளக்கிவிட்டு, நான் ரமேஷுக்காக காத்திருந்தேன். அப்போதுதான் ஒரு மின்னல் என்னை கடந்து சென்றது. யாரென்று திரும்பி பார்த்தேன். ஒரு அழகான இளம் பெண். இப்படி ஒரு இளமையான பெண்ணை நான் பார்த்ததே இல்லை. டைட்டான ஜீன்ஸ், மேலே டைட்டான டாப்ஸ். கேரளாக்காரி போல இருந்தாள். ஷாம்பு போட்ட முடியை அப்படியே வாராமல் விட்டிருந்தாள். அளவான மேக்கப். உதடுகளில் லிப்ஸ்டிக். மிகப்பெரிய பணக்கார வீட்டுப் பெண் போல இருந்தாள். ஷமீரா ரெட்டி போல் இருந்தாள். எனக்கு எப்படி ஷமீரா ரெட்டி தெரியும்னு கேக்கறீங்களா? நம்ம தல நடிச்ச அசல் படம் பார்த்து இருக்கேனே? அதுல இருக்காங்களே. அதுல இருந்து அவங்க மேல ஒரு இதுதான். அதான் அதே மாதிரி ஒரு பொண்ண பார்த்தோன, திடீரென என் உடல் எங்கும் ஒரு ரசாயன மாற்றம் நிகழ ஆரம்பித்தது.

நான் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் வீக். கொஞ்சம் என்ன நிறையவே. எனக்கு தினமும் வேண்டும். தினமும் யாரிடமாவது செல்வதுண்டு. ஆனால், தினமும் செல்லுவது தொழில்காரிகளிடம். வரவர அவர்களிடத்தில் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. எனக்கு எல்லாம் எப்படி ஆகும்? தினமும் அந்த மாதிரி பெண்களைப் பார்த்தே பழக்கப்பட்ட எனக்கு, இப்படிப்பட்ட பெண்ணை பார்த்தவுடன், உடம்பு துடிக்க ஆரம்பித்துவிட்டது. எனக்கும் ஆசை இருக்காதா என்ன? ஒரு ஹைகிளாஸ் பெண்ணுடன் அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று? ஆசைகள் அதிகமாக, அந்த எண்ணம் மனதில் தோன்ற ஆரம்பித்தது.

'இன்றைக்கு ஒரு நாள் அந்த தப்பை செய்தால் என்ன? இவளை கடத்தி கொண்டு சென்றாள் என்ன? அண்ணாச்சி மாலையில்தான் ஹஸ்ட் ஹவுஸ் வருவார். அதற்குள் இவளை கடத்தி சென்று ஹஸ்ட் ஹவுஸில், ஏர்கண்டிஷனில் வைத்து..." நினைக்கவே உடம்பெல்லாம் அதிர, திடீரென திட்டத்தை மாற்றிவிட்டு, அவள் சாப்பிட்டு முடித்து லிப்ட் அருகே வரும் வரை காத்திருந்தேன்.

ஒரு அரை மணி நேரம் கழித்து அவள் மட்டும் லிப்ட் நோக்கி செல்ல, நான் துரிதமாக செயல்பட்டு, நானும் உள்ளே சென்றேன். நல்ல வேளை யாரும் இல்லை. உடனே துணியால் முகத்தினை மூடினேன். அதிகம் சிரமம் வைக்காமல் உடனே மயக்கமானாள். லிப்ட் கிரவுண்ட் ப்ளோரை அடைந்தது. அவளை கைத்தாங்கலாக காரை நோக்கி அழைத்துப்போனேன். ஒரே ஒருவர் மட்டும், "என்ன ஆச்சு?' என்று விசாரித்தார். அவரிடம், "கொஞ்சம் மயக்கமாயிடாங்க. ஆஸ்பத்திரி கூட்டி போறேன்" என்று பொய் சொல்லிவிட்டு காரை நெருங்கினேன்.

ரமேஷுக்கு பதில் யாரோ ஒரு பெண்ணை நான் கூட்டி வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குமாரிடம், "முதல்ல காரை எடுடா. அப்புறம் எல்லாம் சொல்லுறேன்" என்றேன். காரில் புறப்பட்டவுடன் குமாரிடம் விளக்கினேன்.

"வேண்டாம்ண்ண. தப்புண்ணே"

"போடா, எத்தனை நாளைக்குத்தான் அப்படிப்பட்ட பொண்ணுங்கள்ட்டயே போறது? இன்னைக்கு ஒரு நாள் மட்டும்"

"மாட்டிக்கப்போறோம். பயமா இருக்குண்ணே"

"எல்லாம் நான் பார்த்துக்குறேன். உனக்கு வேணுமா? வேணாமா?"

"வேணும்ண்ணன்"

"அப்ப பேசாம வா"

அடுத்த அரை மணி நேரத்தில் ஹஸ்ட் ஹவுஸை நெருங்கினோம். குமாரை வெளியில் காத்திருக்க சொல்லிவிட்டு, முதலாளியின் பெட் ரூமிற்குள் போனேன். ஏர் கண்டிஷனை ஆன் செய்தேன். நல்ல ஸ்பிரிங் மெத்தை உள்ள கட்டில். அவளை படுக்க வைத்தேன். மெதுவாக அசைந்தாள். விரைவாக காரியத்தில் இறங்கினேன்.

கிட்டத்தட்ட ஒரு நாற்பது நிமிடம், நன்றாக ஆசைத்தீர....... முடிந்தவுடன் அசதியுடன் எழுந்தேன்.

அவள் முழித்துக்கொண்டாள். அவளை எதிர்க்கொள்ள தயாரானேன். முழித்தவள், சுற்றும் முற்றும் பார்த்தாள். நடந்ததை புரிந்து கொண்டாள். எழுந்தாள், என்னை நோக்கி கோபமாக வந்தாள், படபடப்புடன், அவளை நோக்கினேன், என்னைப் பார்த்தவள் கோபமாக,

"ஏண்டா பண்ணாடை, கூப்பிட்டிருந்தா வந்திருக்க மாட்டேன். எதுக்காக இப்படி மயக்க மருந்து குடுத்து கூட்டி வந்த?" என்றாள்.


Feb 17, 2011

கதிர்..? (சிறுகதை)


"மாப்பிள்ள மெட்ராஸ் போக டிக்கட் கிடைச்சுடுச்சுடா. ராக்போர்ட்ல கிடைக்கலை, பல்லவன்லதான் கிடைச்சது" என்று சந்தோசமாக கத்திக்கொண்டே என்னிடம் வந்தவனைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவன் கதிர். என் பால்ய நண்பன்.

அவனைப் பற்றி சொல்வதற்கு முன் என்னைப் பற்றி கொஞ்சம் செல்லியாகணும். என் பெயர் ராமன். ஊரில் உள்ள ஒரு பெரிய பணக்காரரின் ஒரே மகன். நிறைய சொத்து. இன்னும் நான்கு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். அதனால்தானோ என்னவோ எனக்கு படிப்பு அவ்வளவு சரியாக ஏறவில்லை. அதற்காக என்னை முட்டாள் என்று நினைத்துவிடாதீர்கள். நானும் இன்ஜினியரிங் முடித்துவிட்டேன். இன்னும் வேலைக்கு போகாமல் அப்பா கவனித்து வரும் பிஸினஸ்களை வெறுப்புடன் கவனித்து வருகிறேன். எனக்கு ஒன்றும் அவ்வளவு கெட்ட பழக்கங்கள் இல்லை, ஆனால் அவ்வப்போது பீர் அடிப்பேன், அவ்வளவுதான்.

கதிர் எனக்கு நேர் எதிர். மிக ஏழை குடும்பம் அவனுடையது. அம்மா ஒரு துப்புறவு தொழிலாளி. அப்பா வாட்ச்மேன். ஒரு அக்கா, இரண்டு தங்கைகள் என சற்றே பெரிய குடும்பம். ஆனால், எல்லாருமே நன்றாக படிக்க கூடியவர்கள். அவன் அப்பா மிகவும் கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைத்தார். நானும் அவ்வப்போது உதவுவதுண்டு. என் உதவிகளை கதிர் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. தன்மானம் அதிகம் உடையவன். அவன் அப்பா கஷ்டப்பட்டு அவன் அக்காவை ஒரு வழியாக ஒரு டிகிரிவரை படிக்க வைத்தார். ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் அவன் அக்காவிற்கு பம்பாயில் வேலை கிடைத்ததாக சொன்னான். அவன் அக்கா மாதாமாதம் அனுப்பும் சம்பளத்தில் ஒரளவு வசதியாக இப்போது இருக்கின்றார்கள்.

கதிரும் ஒரு வழியாக டிப்ளமோ முடித்துவிட்டான். அவனுடைய வேலை விசயமாகத்தான் இப்போது சென்னை செல்லப்போகிறோம். சென்னையில் அப்பாவுக்கு தெரிந்த ஒருவர் ஒரு சின்ன பேக்டரி வைத்திருக்கிறார். அங்கே அவனை வேலையில் சேர்த்துவிடலாம் என்று இருக்கிறேன். எனக்கு இருக்கும் வசதிக்கு காரிலேயே போகலாம்தான். கதிர்தான் இல்லை, டிரெயினில் போகலாம், அப்போதுதான் 'சைட்' அடித்துக்கொண்டே செல்ல வசதியாக இருக்கும் என்று சொல்லி டிரெயினில் டிக்கட் புக் செய்துவிட்டான்.

ஆம். அவன் அப்படித்தான். எப்போதும் பெண்களைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பான். எனக்கு அவ்வளவு வசதியிருந்தாலும், அவன் அளவுக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால், அவனோ 24 மணி நேரமும் பெண்களைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பான். அதிகம் மலையாளப்படம் பார்ப்பான். கண்ட கண்ட புத்தகங்களைப் படித்து, இரவில் உடம்பை கெடுத்துக்கொண்டு, அதைப்பற்றி கதை கதையாக என்னிடம் சொல்லி, என்னையும் மாற்ற முயற்சிப்பான். என்னவோ அவன் அப்படி. ஆனால் நல்லவன். அதனால்தான் இன்னும் அவனுடன் நட்பு தொடர்கிறது.

அடுத்த நாள் காலை. பல்லவனில் ஏறினோம். ஒரு ஐந்து மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை வந்தடைந்தோம். அப்பாவின் நண்பர் அடுத்த நாள் காலை வந்து பார்க்க சொன்னதால், எங்களுக்கு சொந்தமான ஹஸ்ட் ஹவுஸில் தங்கினோம். கதிர் பக்கத்து தெரு வரை போய் வந்தவன் என்னிடம்,

"ராம், நான் ஒரு இடத்துக்கு கூப்பிடுறேன். வறியா?" என்றான்.

"எங்கடா?"

"நீ முதல்ல வறேன்னு சொல்லு"

"சரி"

"பக்கத்து தெரு முனையில ஒரு மஜாஜ் பார்லர் இருக்கு. வாடா அங்க போய்ட்டு வரலாம்?"

"டேய், எனக்கு அதுல எல்லாம் விருப்பம் இல்லைனு உனக்குத் தெரியுமில்ல?"

"சும்மா, ஒரு தடவைதானே, ப்ளீஸ்டா"

"ஏண்டா, உன் குடும்ப நிலைமை என்ன? நீ வந்து இருப்பது வேலைக்காக! எப்படிடா உனக்கு இப்படி தோணுது"

"டேய் குடும்ப நிலமைக்கும், இந்த மாதிரி ஆசை வருவதற்கும் என்னடா சம்மந்தம். நான் என்ன மாஜாஜுக்குத்தானே கூப்பிடுறேன். வேற எதுக்குமா?"

அவன் அதிகம் வற்புறுத்தவே, சரி நாமும் போய்தான் பார்க்கலாமே என்று கிளம்பினேன்.

அந்த இடம் சென்னையின் ஒரு ஒதுக்குபுறமான ஏரியா. கிழே ஒரு ஹோட்டல் இருந்தது. மாடியில் தான் அவன் சொன்ன மஜாஜ் பார்லர். ரிசப்ஷனில் ஒரு அழகான பெண் உட்கார்ந்து இருந்தாள். மஜாஜ் போவதற்கு பதில் அவளையே பார்த்துக்கொண்டிருக்கலாமா? என நினைக்கும் அளவிற்கு அழகு. காரணம் அவளின் செக்ஸியான உடையாக கூட இருக்கலாம். அழகான டி ஷ்ர்ட் அணிந்திருந்தாள். அது அநியாயத்திற்கு கீழே இறங்கியிருந்தது.

கதிர்தான் பேசினான். அவள், "சார், எல்லோரும் பிஸியா இருக்காங்க. ஒரு பெண்தான் ஃபிரி. அதனால ஒருத்தர் வெயிட் பண்ணனும்" என்றாள்.

நான் கதிரை போக சொல்ல, அவன், "நீ தான் ஒண்ணும் தெரியாத ஞானி போல இருக்க. அதனால முதல்ல நீ போ" என்று கட்டாயப்படுத்தி என்னை அனுப்பி வைத்தான். அரை மனதுடன் உள்ளே சென்றேன்.

ரூம் முழுவதும் இருட்டாக இருந்தது. ஏற்கனவே ரிசப்ஷனில் ஒரு டவல் கொடுத்து இருந்ததால், நுழந்தவுடன் பேண்ட், ஷர்ட்டை அவிழ்த்து விட்டு, ஒரு துண்டு மட்டும் கட்டிக்கொண்டு அங்கே இருந்த டேபிளில் குப்புற படுத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் யாரோ வருவது போல் இருந்தது. வெட்கத்துடன் திரும்பி பார்க்கவில்லை. முதல் அனுபவம் வேறு. மசாஜ் ஆயிலை முதுகில் தடவுவது தெரிந்தது.

"சார், உங்களுக்கு மசாஜ் மட்டுமா? இல்லை வேற ஏதாவது வேணுமா? வேற ஏதும்னா அதாவது, புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், கூட ஆயிரம் ரூபா ஆகும்" என்று சொன்னவளின் குரல் எங்கோ கேட்டது போல் இருக்கவே, சற்றே திரும்பி அந்த முகத்தைப் பார்த்தேன்.........

வேக வேகமாக ரூமைவிட்டு ஓடி வந்த என்னை அதிர்ச்சியுடனும், ஆச்சர்யத்துடன் பார்த்த கதிர்,

"ஏண்டா? என்ன ஆச்சு?"

நான் எப்படி சொல்வேன், உள்ளே இருப்பது அவன் அக்கா என்று????


Feb 14, 2011

எப்படியும் வாழலாம்?


1997 ஆம் வருடம். எங்கள் கம்பனிக்கு நிறைய ISO container கள் தேவைப்பட்டது. அப்போது ஒரு நண்பரின் மூலம் ஒரு மிகப்பெரிய கம்பனியின் அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு ஒருவரை சந்தித்தேன். அவர்தான் எங்கள் ஊருக்கான ஏஜென்ஸியை எடுத்து இருந்தார். பார்க்க நல்ல உயரம். டை எல்லாம் கட்டி ஒரு மிகப்பெரிய மேனஜருக்கான தகுதியுடன் இருந்தார். பிறகு அவர் மூலம் எங்கள் கம்பனிக்கு தேவையான கண்டெயினர்கள் தடையில்லாமல் கிடைத்தன. Frieght விலை ஏறும்போது எல்லாம் அவரிடம் என்று முறையிடுவேன். அவரும் அவரின் தலைமை அலுவலகத்துக்கு பேசி ஓரளவு விலையை எப்போது குறைத்து தருவார்.

இப்படியாக எங்களுடைய தொடர்பு ஒரு மூன்று நான்கு வருடங்கள் இருந்தது. அப்போது எல்லாம் அடிக்கடி நாங்கள் சந்தித்து உரையாடுவோம். அப்படியே ஒரு நல்ல நட்பும் உருவாகி இருந்தது. எங்கள் கம்பனியின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு எல்லாம் அவர் வந்ததுண்டு. காலப்போக்கில் எங்கள் கம்பனியின் தேவைகள் மாற, அவருடன் ஆன என்னுடைய தொடர்பு விட்டுப்போய் விட்டது.

அதற்கு பிறகு அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. நானும் அவரை சுத்தமாக மறந்துபோனேன்.

சென்ற வாரம், பிள்ளைகள் பீச் போகலாம் என்றார்கள். பீச் போய் பல மாதங்கள் ஆகி இருந்ததால், உடனே கிளம்பினோம். எனக்கு பீச் சென்றால் முதலில் மணலில் நடக்கத்தான் ஆசையாக இருக்கும். நான் மனைவியையும், குழந்தைகளையும் ஒரு இடத்தில் அமர செய்துவிட்டு நிறைய தூரம் நடக்க ஆரம்பித்தேன். பிள்ளைகள் மணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு இரண்டு மணி நேரம் கழித்து, பையன் 'ஏதேனும் சாப்பிடலாம்ப்பா' என்று சொன்னதால், அருகே இருக்கும் கடைக்கு சென்றோம்.

கடை என்றால் மிகப்பெரிய கடை இல்லை. அங்கு இருந்த எல்லா கடைகளுமே ஒரு டெண்ட் உள்ளே மிக சிறிய கடைகளாக இருந்தன. சிறிய கடைகளாக இருந்தாலும், அங்கே எல்லாவிதமான கூல் டிரிங்ஸ், பர்கர்,சில வகையான மலேசியின் உணவுவகைகள் மற்றும் பாஸ்ட் புட் உணவு வகைகள் கிடைத்தன.

ஒரு கடையில் சென்று எல்லோருக்கும் பர்கர் ஆர்டர், 100+ ஆர்டர் செய்தேன். அப்போது அந்த கடையின் ஓனர் போல இருந்தவர் என்னைப் பார்த்து மலாய் மொழியில்,

"உங்கள் பெயர் என்ன?" என்றார்.

நான் பொதுவாக தெரியாத நபர்களிடம் என் உண்மையான பெயரை சொல்வதில்லை.

"ரவி" என்றேன்.

"நீங்கள் எங்கு வேலை செய்கின்றீர்கள்?" என்றார்.

கம்பனியின் பெயரை சொன்னேன்.

உடனே அவர், "அப்படியா? அங்கு வேலை செய்த ஒரு நபரை எனக்கு நன்றாக தெரியுமே?" என்று ஒரு கணம் யோசித்தவர,

"நீங்கள் உலக்ஸ்தானே?" என்றார்.

"ஆமாம்" என்றவன் ஆச்சர்யத்துடன், "நீங்கள்?" என்றேன்.

"நான் தான்...." அவரின் உண்மையான பெயரை சொன்னார். நான் ஆடிப்போய் விட்டேன். அவர் வேறு யாரும் அல்ல. நான் முதல் பாராவில் குறிப்பிட்டிருந்த நபர்தான்.

நம்ப முடியாமல், "நீங்கள் எப்படி இங்கே?" என்றேன். ஏனென்றால் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் ஒரு கிளையில் மேனேஜராக வேலை பார்த்த ஒரு நபர், ஒரு பீச்சின் ஓரத்தில் ஒரு டெண்ட் கடையில் பர்கர் விற்றுக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்!

"இல்லை உலக்ஸ். நான் சில காரணங்களால் அந்த கம்பனியை விட்டு விலக வேண்டியது ஆகிவிட்டது. என் மனைவியும் இறந்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் தவிர்த்தேன். அப்போதுதான்" என்றவர் சற்று நிறுத்தி அவர் அருகில் நின்றவர்களை பார்த்தார்.

அருகில் ஒரு நடுத்தர வயது பெண், இரண்டு நன்கு வளர்ந்த பெண் பிள்ளைகள், 18, 20 இருக்கலாம், இரண்டு பெரிய பையன்கள்.

"அப்போதுதான் இவர்களை சந்தித்தேன். இந்த பெண்ணை மணந்து கொண்டேன். இப்போது இந்த தொழில் செய்கிறேன்"

"கடைக்கு வாடகை"

"இல்லை. வாடகை எதுவும் இல்லை"

"வீடு எங்கே?" என்றேன்.

பக்கத்தில் உள்ள ஒரு டெண்டை காண்பித்தார்.

"இதுவா?" என்றேன் அதிர்ச்சியுடன்.

"ஆமாம். நான்கு பேர் தாரளமாக படுக்கலாம். நாங்கள் ஆறு பேர் தங்குகிறோம்"

அந்த பெண்ணின் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாகத்தான் என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு அவரிடம் இருந்து விடைப்பெற்றேன்.

பீச் இருப்பது ஊரை விட்டு விலகி சில கிலோ மீட்டர் தொலைவில். இரவில் ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். என்னதான் டூர்ஸ்ட் பகுதியாக இருந்தாலும் இரவு 11 மணிக்கும் மேல் ஆட்கள் இருப்பது அரிது.

எப்படிப்பட்ட மனிதன் பாருங்கள்! என்ன மாதிரி வேலையில் இருந்தவர், வேலை போய், மனைவி போய், தாடி வைத்துக்கொண்டு அலையாமல், ஏதோ வருகையில் நல்ல படியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரின் தற்போதைய நிலமையை நினைத்து நான் வருத்தப்பட்டாலும், 'என்ன தொழில் செய்தால் என்ன? யாரிடமும் கை ஏந்தாமல், சொந்தமாக தொழில் செய்கிறேன் பார்' என்ற அவரின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.

அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.


Feb 12, 2011

குழந்தை (சிறுகதை) - பாகம் 2

நீண்ட யோசனைக்கு பின் சம்மதித்தவளை கட்டி அணைத்து நெற்றியில் ஒரு முத்தமிட்டு அவளை ஆதரவாக அணைத்து படுக்க வைத்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆம்! அவள் சொல்வதும் நியாயம்தான். நாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம்? நமக்கு மட்டும் ஏன் இப்படி? தூங்க முயற்சி செய்து, முடியாமல் கொஞ்சம் காற்றாவது வாங்கலாம் என்று பால்கனிக்கு வந்தேன். விடியும் வரை தூங்கவே இல்லை. ஒரே தலைவலி. யாரோ அம்மி குழவியால் அடிப்பது போல் உள்ளது

இரண்டு நாட்கள் கழித்து நண்பன் ஒருவன் முயற்சியால் பல்லவனில் டிக்கெட் கிடைத்தது. அன்று மதியம் சென்னையை அடைந்து கலாவின் அக்கா வீட்டுக்குச் சென்றோம். டாக்டரிடன் அப்பாயிண்ட்மெண்ட் மாலை 6 மணிக்குத்தான். கலாவை கொஞ்சம் ஓய்வெடுக்க சொல்லி விட்டு, நான் என் நண்பனை பார்க்க சென்றேன். அவனும் ஒரு டாக்டர்தான். அவனின் ஏற்பாட்டின் பேரில்தான் எனக்கு அந்த லேடி டாக்டரின் அப்பாயிண்மெண்டே கிடைத்தது. அவனிடம் கொஞ்சம் மனம்விட்டு பேசிவிட்டு வரலாம் என நினைத்து கிளம்பினேன்.

அவனின் கிளினிக்கை நெருங்கினேன். அப்போது ஒரு பெண் என்னை கிராஸ் செய்யவே, எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே? என்று திரும்ப பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. ராகிணி! என் நினைவுகள் 15 வருடம் பின்னோக்கி சென்றது.

அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். ராகிணியின் குடும்பம் எங்கள் வீட்டு ஓனரின் ஹஸ்ட் ஹவுஸில் தங்கி இருந்தது. அவர்களின் குடும்பமே அவர்கள் வீட்டு பண்ணையில் வேலை பார்த்தது. எங்கள் வீட்டு வேலைக்கும் ஆள் தேவைப்படவே, அவர்கள் வீட்டிலிருந்து ராகிணியை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

ராகிணி அழகு என்றால் அப்படி ஒரு அழகு. எப்போதும் வெறும் பாவாடை சட்டையில்தான் உலா வருவாள். அப்போது அவளுக்கு 19 வயது இருக்கும். ஏழையாய் இருந்தாலும் கொஞ்சம் அதிக செழிப்புடனே இருந்தாள். எல்லாமே அவளுக்கு அதிகமாகவே இருந்தது. எங்கள் தெருவில் அத்தனை பெண்கள் இருந்தாலும், என் கவனம் எப்போதும் ராகிணி மேலேயே இருந்து வந்தது. அப்போது எனக்கு ஏற்பட்டிருந்த அந்த உணர்வு காதல் என்று எல்லாம் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. அது ஒரு இனக்கவர்ச்சி அவ்வளவுதான். ஆனால், அந்த வயதுக்கே உரிய திமிர், ஆணவம், ஆண் என்கிற அகம்பாவம் எல்லாம் எனக்கு இருந்தது. அந்த வயது நண்பர்களும் 24 மணி நேரமும் பெண்களைப் பற்றி பேசுபவர்களாகவே இருந்தனர். இப்போது நினைத்துப்பார்த்தால் தவறாக தெரிந்தாலும், அப்போது தெரியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அவளை நெருங்க ஆரம்பித்தேன். அவளும் என்னிடம் எந்த ஒரு விகல்பமும் இல்லாமல் பழக ஆரம்பித்தாள். ஆனால் என்னுடைய குறிக்கோள் வேறு மாதிரி இருந்தது. இப்படியே ஒரு ஆறு மாதம் போனது. ஒரு நாள் எங்கள் வீட்டில் அனைவரும் உறவினர் வீட்டின் திருமணத்திற்கு சென்றிருந்தார்கள். எனக்கு செமெஸ்டர் எக்ஸாம் என்றதால் நான் செல்லவில்லை. பரிட்சை முடிந்து வீட்டிற்கு வந்த போது மதியம் 3 மணி. ராகிணியிடம் சாவி இருந்ததால், அவள் என் வீட்டிற்கு வந்து காத்திருந்தாள். வீட்டின் உள் நுழைந்தவன், அவளையும் உள்ளே கூப்பிட்டேன்.

பேசிக்கொண்டே இருந்தோம். வீட்டில் யாரும் இல்லை. தனிமை. கல்லூரியில் படிக்கும் இளைஞனான என் அருகில் 19 வயது நிரம்பிய ஒரு அழகிய பெண். அவளின் ஏழ்மை. எல்லாமுமாக சேர்ந்து நான் அந்த தப்பை....... அப்படியே அடுத்த ஒரு வாரமும் தொடர்ந்தது. என்ன ஆனது? என்று சரியாக எனக்கு நினைவில்லை. யாரோ தூரத்து மாமா ஒருவர் ராகிணியை திருமணம் செய்து கொள்வதாக சொல்வதாகவும், இனி அவள் நார்த் இந்தியாவிலேயே இருக்கப் போவதாகவும் சொல்லி அவளை அனுப்பி வைத்து விட்டனர். எங்கள் உறவு அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைகிறேன். பின் சில நாட்கள் அவளின் நினைவாக இருந்தேன். பின்பு காலப்போக்கில் நான் அவளை மறந்து போய்விட்டேன்.

இத்தனை வருடங்கள் கழித்து இன்றுதான் அவளைப் பார்க்கிறேன். அதே அழகு. என்ன! கொஞ்சம் சதை போட்டிருந்தாள்.

"எப்படி இருக்கீங்க?" ராகிணியின் குரல் கேட்டுத்தான் பழைய நினைவுகளிலிருந்து விடுப்பட்டேன்.

"நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?"

"எனக்கு என்ன! நல்லாத்தான் இருக்கேன்"

"நீ எப்படி இந்த ஊருல?"

"அவருக்கு சென்னையில ஒரு வேலை. அதான் வந்தோம். இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவோம். மனைவி எப்படி இருக்காங்க. எத்தனை குழந்தைங்க?" என்று சாதாரணமாக விசாரித்துக்கொண்டிருந்தாள்.

நான் அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அவளைப் பார்த்து "நீ ஏன் ஆஸ்பத்திரிக்கு? உடம்பு சரியில்லையா?"என்றேன்.

"எனக்கு ஒண்ணும் இல்லை. பையனுக்குத்தான் லேசா காய்ச்சல். மெடிக்கல்ல மருந்து வாங்கிட்டு இருக்கான்"

"உனக்கு எத்தனை குழந்தைங்க?" என்றேன்

"ஒரு பையன்" என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"எங்க அம்மா போயிட்ட" என்று ஒரு 14 வயது பையன் ராகிணியை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

ஏதோ ஒன்று உறுத்தவே நன்றாக அவனை உற்றுப்பார்த்தேன்.

அவன் காதுகள் ரெண்டும் ரொம்ப பெருசாய் இருந்தது.

எனக்கு குழந்தை பிறக்காததன் காரணமும் தெரிந்து விட திரும்பி பார்க்காமல் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தேன்.

Feb 11, 2011

குழந்தை (சிறுகதை) - பாகம் 1

நேற்றிலிருந்து ஒரே தலைவலி. தலை பாரமாக இருக்கிறது. சாதாரண தலைவலி என்றால் ஒரு மாத்திரை போட்டு வலியை தடுத்துவிடலாம். ஆனால் தலை முழுவதும் யாரோ அம்மி குழவியால் அடிப்பது போல் உள்ளது. இதற்கு ஒரு மாத்திரை அல்ல, நூறு மாத்திரை போட்டால் கூட வலி போகாது. வலி போக எனக்குத் தேவை, மன நிம்மதி. அது இப்போது எனக்கு கிடைக்கும் என தோன்றவில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் கலா. என் தர்மபத்தினி. எனக்கு அவள் மேல் கோபம் வருவதற்கு பதில் வருத்தம்தான் வருகிறது. நடக்குமா? நடக்காதா? என்று தெரியாத விசயத்தைப் பற்றியே இருபத்து நான்கு மணி நேரமும் பேசிக்கொண்டு இருக்கிறாள். ஆனால், அவளைச் சொல்லியும் குற்றம் இல்லை. கல்யாணம் ஆன எல்லா பெண்களுக்கும் ஏற்படும் அதே கவலைதான்.

எங்களுக்கு கல்யாணம் ஆகி 10 வருடம் ஆகிறது. எங்கள் கல்யாணம் பெற்றோர்களாய் பார்த்து பேசி முடிவு செய்த கல்யாணம். நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறேன். கை நிறைய சம்பளம் வாங்குகிறேன். கலாவும் மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவள்தான். எங்கள் இருவரின் குடும்பமுமே நல்ல பணக்கார குடும்பம். கல்யாணம் மிக விமர்சையாக நடந்தது. ஊரே எங்கள் கல்யாணத்தை பார்த்து பொறாமை பட்டது. எல்லோரும் எங்களை "மேட் ஃபார் ஈச் அதர்" என்றார்கள். கல்யாணம் ஆன புதிதில் நாங்கள் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஹனிமூனுக்கு காஷ்மீர் போனோம். தாஜ்மஹால் போனோம். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண் பிள்ளைகளுக்கும் இரண்டு காதுகளும் கொஞ்சம் பெரிதாக இருக்கும். என்ன காரணம்? என்று தெரியவில்லை. முதலில் எனக்கு அது குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தாலும், கலா என்னை 'காந்தி காது' என்று சொல்லி கிண்டலடிக்க ஆரம்பித்தவுடன், அந்த வருத்தமும் போய்விட்டது.

இப்படி சந்தோசமாகத்தான் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை. பின் என்ன கவலை என்கின்றீர்களா? கல்யாணம் ஆகி இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. முதல் இரண்டு வருடம் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை நாங்கள். ஆனால் வருடங்கள் செல்ல செல்ல கவலை அதிகமாய்விட்டது. இத்தனைக்கும் ஜாதகம் எல்லாம் பொருந்தித்தான் கல்யாணம் செய்து கொண்டோம். ஜாதகப்பிரகாரம் எனக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறது. அதனால் நான் நம்பிக்கையுடன் தான் இருக்கிறேன். ஆனால் கலாதான் ரொம்ப வருத்தப்படுகிறாள்?

பார்க்காத ஜோசியர்கள் இல்லை. போகாத கோயில்கள் இல்லை. சுத்தாத அரசமரங்கள் இல்லை. இருந்தும் ஒரு பிரயோஜனும் இல்லை.

பார்க்கும் டாக்டர்கள் எல்லாம் சொல்லும் ஒரே விசயம். இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. 'குழந்தை பிறக்கும்' கொஞ்சம் பொறுத்திருங்கள். நானும் எத்தனையோ முறை கலாவிடம் சொல்லி பார்த்துவிட்டேன், கொஞ்சம் காத்திருக்கலாம் என்று. அவள் கேட்டால்தானே? நேற்றும் அப்படித்தான்:

"ஏங்க பக்கத்து வீட்டு மாலினி ஏதோ ஒரு நாட்டு வைத்தியர்கிட்ட போய்ட்டு வந்தாளாம். மூணு மாசம் டிரீட்மெண்ட் முடிந்து இப்போ முழுகாம இருக்கலாம்"

"என்ன டிரீட்மெண்டாம்?"

"ஏதோ மூலிகை மருந்தாம், பத்திய சாப்பாடாம், அதுவும் மண்பானையிலத்தான் சாப்பிடனுமாம்"

"கலா, நீ ஏன் போட்டு குழப்பிக்கிற?. அதான் டாக்டர் நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லைனு சொல்லிட்டாருல்ல. கொஞ்சம் வெயிட் பண்ணா குழந்தை பிறக்கும்னு சொல்லுறாருல்ல. அப்புறம் ஏன் கவலைப்படுற?"

"எப்படிங்க கவலைப்படாம இருக்க முடியும்? உங்க வீட்டுல எல்லோருக்கும் குழந்தைகள் இருக்கு. எங்க வீட்டுலயும் எல்லோருக்கும் குழந்தைகள் இருக்கு. நமக்கு மட்டும் இல்லைனா, வருத்தப்படமா, சந்தோசப்படவா முடியும்? வெளிய தலை காட்ட முடியலை. ஒரு நல்ல காரியத்துக்கு போக முடியலை. எனக்கு மட்டும் ஏன் இப்படி? ஆண்டவன் ஏன் நம்மை சோதிக்கிறான்?" என்று அழ ஆரம்பித்தவளை கொஞ்சம் ஆதரவாக அணைத்து ஆறுதல் சொல்ல ஆரம்பித்தேன்.

"கலா, எனக்கு மட்டும் வருத்தம் இல்லைனு நினைக்கிறீயா? இருக்கு. ஆனா நான் உள்ளுக்குள்ளயே வைச்சு குமுறிக்கிட்டு இருக்கேன். நீ என் கிட்ட சொல்லுற அவ்வளவுதான். நான் தான் ஒரு குழந்தைய தத்து எடுத்து வளர்க்கலாம்னு சொல்றேன். அதையும் ஒத்துக்க மாட்டேங்கறே?"

"அது எப்படிங்க? நமக்கே நமக்குன்னு நம்ம குழந்தை வேண்டும்ங்க. அடுத்தவங்க குழந்தையை என்னால எடுத்து வளர்க்க முடியாதுங்க"

"அப்படி இல்ல கலா. இப்படியே எல்லோரும் நினைச்சா, அனாதை குழந்தைகளோட கதி"

"அவங்களை பாதுக்காக்க நிறைய பேர் இருக்காங்க" என்று சொன்னவளிடம் இதற்கு மேல் அந்த சப்ஜக்ட்டை பற்றி பேச விரும்பாமல், பேச்சை திசை மாற்றினேன்.

"கலா, ஒண்ணு வேணா பண்ணலாம். சென்னையில என் நண்பனுக்கு நல்லா தெரிஞ்ச ஒரு டாக்டர் இருக்காங்க. அவங்களை வேணா போய் ஒரு தடவை பார்த்துட்டு வரலாமா?"

- தொடரும்

Feb 7, 2011

250 வது இடுகை - விவேகானந்தர்

250 வது இடுகை ஏதாவது ஒரு நல்ல விசயத்தைப் பற்றி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் இன்று நான் விவேகானந்தரைப் பற்றி கேட்ட சில நிகழ்வுகளை உங்களுடன் பகிரலாம் என நினைத்து இந்த இடுகையை எழுதுகிறேன். நான் சுவாமியைப் பற்றி எழுதுவது அனைவரும் ஏற்கனவே அறிந்த ஒன்றாக இருக்கலாம். இன்னொரு முறை ஒரு மகானைப் பற்றி படிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே!

நான் பல முறை யோசிப்பதுண்டு, மகாத்மா காந்திஜி, சுவாமி விவேகானந்தர் மற்றும் ரமண மகரிஷி போல் ஏன் நம்மால் வாழ முடியவில்லை என்று. எப்படிப்பட்ட வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது மிக ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களைப் போல ஒரு சதவிகதம் வாழ்ந்தால் கூட என் வாழ்விற்கு ஒரு அர்த்தம் ஏற்படாதா என்று எண்ணுகிறேன்.

ஒரு முறை நான் சிங்கப்பூரில் தங்கி இருந்த போது மிக அழகான ஒரு பெண்ணை சந்தித்தேன். அப்போது நான் பிரம்மச்சாரி. ஒரு நாள் முழுவதும் அவளுடன் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அன்று இரவு 1 மணி வரை பேசிக்கொண்டு இருந்துவிட்டு, அவளை வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். அப்போது ஒரு என் மனதில் ஒரு ஆசை இருந்தது. ஏன் ஏதும் நடக்கவில்லை? என ஏங்கினேன். பின் நண்பர்களிடம் அதைப்பற்றி குறிப்பிட்டபோது அவர்கள் சொன்னது:

"அப்போ வடை போச்சா?"

விவேகானந்தர் சிக்காகோவில் உலக புகழ் பெற்ற அவரின் உரையை முடித்து கீழே இறங்குகிறார், அப்போது ஒரு அழகிய பெண்மணி சுவாமியை நெருங்கி,

"சுவாமி, உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்" என நேரடியாக கேட்கிறார். உடனே சுவாமி விவேகனந்தர் அந்தப் பெண்ணைப் பார்த்து,

"ஏனம்மா, இந்த முடிவு? என்னைக் கேட்க என்ன காரணம்?"

"உங்களைப் போல அறிவும், தெளிவான சிந்தனையும் கொண்ட ஒரு ஆண்மகனை உங்கள் மூலமாக பெற விரும்புகிறேன்" என்கிறார். அதற்கு சுவாமிஜி சொன்னாராம்.

"அதற்கு எதற்கு அம்மா என்னை நீங்கள் திருமணம் செய்ய வேண்டும். என்னையே நீங்கள் உங்கள் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுங்களேன்"

அவர் எங்கே? நான் எங்கே?

ஒரு முறை எங்கள் ஊரில் ஒரு நண்பரின் வீட்டிற்கு சாப்பிடக்கூப்பிட்டார்கள். பொதுவாக அவரின் வீட்டிற்கு எங்கள் தெருவைச் சேர்ந்த யாரும் சாப்பிட செல்ல மாட்டார்கள். ஏன் என்று சொல்ல விரும்பவில்லை. நீங்களே புரிந்து கொள்ளுங்கள். ஆனால் நான் சாப்பிட போனேன். என்னதான் சாப்பிட போனாலும், என்னால் முழுமையாக சாப்பிட முடியவில்லை. பேருக்கு சாப்பிட்டுவிட்டு உடனே வீடு திரும்பினேன். நண்பரின் மனம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என பின்னாளில் என் ச்ய்கையை நினைத்து மிகவும் வருந்தினேன்.

ஒரு முறை சுவாமி விவேகானந்தர் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மக்களுக்கு சொற்பொழிவும், விளக்கங்களும் சொல்லிக்கொண்டிருந்தார். இரண்டாம் நாள் இரவு ஒரு மரத்தடியில் படுத்து உறங்க ஆரம்பித்தார். அப்போது யாரோ நிற்பது போல் தெரியவே, யார் என்று பார்த்தார்.

ஒரு வயதான பெரியவர் நின்றிருந்தார். சுவாமிஜி அவரை உற்று நோக்கினார்.

அந்த பெரியவர், "சுவாமி, நீங்க ரெண்டு நாட்களா மக்கள்கிட்ட நிறைய பேசினீங்க. அது எல்லாம் என்ன என்று எனக்குப்புரியவில்லை. ஆனால் ஒரு விசயம் மட்டும் எனக்கு புரிந்தது. நீங்கள் இரண்டு நாட்களா ஏதும் சாப்பிடலை. நான் சமைச்சு கொடுத்தா சாப்பிடுவீங்களானு எனக்குத்தெரியலை. அப்படியே சாப்பிட்டாலும், நான் சமைச்சதை சாப்பிட்டதற்காக இந்த மக்கள் உங்களைப் பற்றி தப்பா நினைப்பாங்களேன்னு கவலையா இருக்கு. ஆனா நீங்க பசியா இருக்கீங்கன்னு தெரியுது. அதனால, கோதுமை, அடுப்பு, மற்ற பொருட்கள் எல்லாம் தனித்தனியா கொண்டு வந்திருக்கேன். நீங்களே சமைச்சு சாப்பிடுங்க" என்று சொன்னாராம்.

அதற்கு சுவாமிகள், "பெரியவரே, என்னை பசிக்குதா சாப்பிடுறீயானு கேட்டது எங்க அம்மா மட்டும்தான். அதன் பிறகு நீங்கதான் கேட்டு இருக்கீங்க. அதனால் நீங்க என் தாய் மாதிரி. என் தாய் சமைச்சு கொடுப்பதை நான் வேண்டாம்னு சொல்வேனா? நீங்களே சமைச்சு கொடுங்க. நீங்கள் கொடுக்கப்போகும் உணவை காசி கோயிலின் பிரசாதத்தை விட உயர்வாக நினைக்கிறேன்" என்றாராம்.

ஒரு முறை கோலாலம்பூரில் ஒரு 5ஸ்டார் ஹோட்டலில் ரூம் எடுத்து இருந்தேன். ரூமில் நுழைந்த எனக்கு அங்கே இருந்த ஸ்மெல் பிடிக்கவில்லை. புகார் சொன்னதும் வேறு ரூம் மாற்றிக்கொடுத்தார்கள். புது ரூமில் கீழே உள்ள மேட்டில் ஏதோ சிந்தி அழுக்காக இருந்தது. மீண்டும் புகார் செய்யவே, மீண்டும் வேறு ரூம் கொடுத்தார்கள். "நாம் இவ்வளவு பணம் தருகிறோம். நல்ல ரூம் கொடுத்தால் என்ன என நினைத்தேன்"

ஒரு முறை சுவாமி அமெரிக்காவில் இருந்த போது, மெத்தையில் படுக்காமல், தரையில் துண்டு விரித்து படுத்தாராம். அங்கே இருந்தவர்கள்,

"சுவாமி, நீங்கள் ஏன் தரையில்?" என்று கேட்டார்களாம்.

சுவாமிஜி பதில் இப்படி சொன்னாராம்,

"எங்கள் இந்தியாவில் கோடிக்கான மக்கள் இருக்க இடம் இல்லாமல் தெருவோரத்திலும், பிளாட்பாரத்திலும் படுத்து தூங்குகையில், நான் எப்படி இங்கே மெத்தையில் தூங்க முடியும்"

இதுதான் மகான்களின் குணம். இது போல் பல விசயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த மாதிரி விசயங்களை கேள்வி பட்டு, இப்போது நான் நினைப்பது, சிந்திப்பது எல்லாம் ஒரே ஒரு விசயம்தான்,

"என்னால் அவர்களைப்போல மகான்களாக வாழ முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒரு நல்ல மனித நேயமிக்க மனிதனாகவாவது வாழ வேண்டும் என எண்ணுகிறேன். முயற்சிக்கிறேன்"

பார்ப்போம்!


Feb 4, 2011

பேய்கள்???

சிறு வயதில் நிறைய பேய்க் கதைகள் கேட்டிருக்கிறேன். கல்லூரிக் காலக்கட்டத்திலும் நண்பர்கள் மூலம் நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அப்போது எல்லாம் ஒரு சிறிதளவு பயம் மனதில் இருந்தாலும் அதிகம் பயந்தது இல்லை. பிறகு பயம் என்பதே இல்லாமல் போய்விட்டது. நான் இப்போது இருக்கும் ஊரின் மக்கள் ஆவிகள், பேய்கள் உண்மை என்று நம்புகிறார்கள். எங்கள் ஊரைச்சுற்றி நிறைய பேய்க்கதைகள் சுற்றி வருகின்றன. எங்கள் அலுவலக்தில் பணிபுரிந்த ஒருவர் சொன்ன கதை இது:

அவரின் நண்பர் ஒருநாள் ஹைவேயில் போய்க்கொண்டிருந்தாராம். ஒரு அழகான பெண் லிப்ட் கேட்டாளாம். இவரும் காரில் ஏற்றிக்கொண்டாராம். மிகவும் செக்ஸியாக இருந்தாளாம். பேசிக்கொண்டே வந்தாளாம். திடீரெனெ திரும்பி பார்த்தாராம். அழகான பெண்ணுக்கு பதில் ஒரு எலும்புக்கூடுதான் இருந்ததாம். நண்பர் ஷாக்காகி அவரின் வண்டி இன்னொரு வண்டியின் மீது மோதி, ஸ்பாட்டிலேயே ஆள் காலியாம்.

நானும் ஒரு 500 தடவையாவது அந்த ஹைவேயில் போய்க்கொண்டிருக்கிறேன். ஒரு முறை கூட அந்த அழகிய பேய் என்னிடம் லிப்ட் கேட்கவே இல்லை.

ஒரு நாள் அதிகாலை 4.15க்கு எங்கள் ஊரில் இருந்து கோலாலம்பூருக்கு அலுவலக வேலை விசயமாக காரில் கிளம்பினேன். நானும் அந்த நண்பரும், இன்னும் சில நண்பர்களும். 120 கிலோ மீட்டர் ஸீபிடில் காரை ஓட்டிக்கொண்டிருந்தேன். நண்பர் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், "பொதுவாக இந்த இடத்தில்தான் பேய்கள் அமர்ந்திருக்கும். அவைகளின் இருப்பிடம் ஹைவேயும், ஆளில்லாத வீடும் தான்" என்றார். எனக்கு பேய்கள் பற்றிய பயம் சிறிதும் இல்லை என்றாலும், நண்பர் கூறியவுடன் என் காரின் ஸ்பீட் ஆட்டோமேட்டிக்காக 80க்கு வந்தது. பின்பு சுதாரித்து வேகமாக செல்ல அடுத்த அரைமணி நேரம் ஆனது.

திருச்சியில் ஒரு ஆஸ்பத்திரி. உறவினர் ஒருவர் ஆப்பரேஷன் ஆகி மரணப்படுக்கையில் இருந்தார். அவருக்கு துணையாக இருந்தவர், அவர் அருகே இருக்கும் கட்டிலில் படுத்து இருந்தார். அவரால் சரியாக தூங்க முடியவில்லை. யாரோ அவரை அமுக்குவது போல் இருந்திருக்கிறது. உடனே அங்கே இருந்த நர்ஸ்களை கூப்பிட்டு கேட்டுள்ளார். அவர்கள் சொன்னார்களாம்:

"இங்கே அப்படித்தான் இருக்கும். இந்த அறையில் அகால மரணமடைந்தவர்கள் நிறைய பேர். அவர்கள் ஆவி இங்குதான் சுற்றிக்கொண்டிருக்கும். அதான் இப்படி. நீங்கள் அங்கே படுக்காதீர்கள்"

அதன் பிறகு அவர் அங்கே படுத்திருப்பார் என்று நினைக்கின்றீர்களா?

எங்கள் கம்பனியிலும் ETP ஏரியாவில் பேய்கள் உலாவுவதாக நைட் ஷிப்ட்டில் வேலை பார்க்கும் நண்பர்கள் சொல்கிறார்கள். நானும் பல நாட்கள் இரவில் வேலை பார்த்ததுண்டு. ஆனால் நான் பேயை பார்த்தது இல்லை. அதற்கு இன்னொரு நண்பர் சொல்லும் காரணம்:

"எல்லோர் கண்களுக்கும் பேய்கள் தெரியாது. குறிப்பிட்ட சிலரால்தான் பார்க்க முடியும்"

என் அலுவலகத்தில் ஒருவரின் அண்ணன் மூன்று வருடங்களுக்கு முன்னே அகால மரணமடைந்தார். அவர் ஒரு பெரிய வீடு கட்டியிருந்தார். அந்த புதிய வீட்டிற்கு இதுவரை யாரும் குடி போகவில்லை. காரணம் கேட்டால், அந்த வீட்டில் பேய்கள் உலாவுகிறதாம். உண்மையா? என்று நண்பரிடம் கேட்டேன்.

"ஆமாம் சார், நானே கண்ணால் பார்த்தேன்"

"ஆண் பேயா? பெண் பேயா?" இது நான்.

"பெண் பேய் சார்"

"என்ன வயசு இருக்கும்?"

"20 வயசு இருக்கும்"

"அழகா இருக்குமா?"

"நல்ல அழகு"

"பேசாம ஒரு நாள் அந்த அழகிய பேயை என் வீட்டிற்கு வரச்சொல்லேன்"

"அது வீட்டுக்கு எல்லாம் வராது சார். இந்த வீட்டுலத்தான் இருக்கும்"

"ஏன் அந்த பேய்க்கு என் வீட்டிற்கு வர பயமா?"

கடுப்பான நண்பர்,

"இவ்வளவு பேசும் நீங்கள், தைரியமானவராய் இருந்தால் ஒரு இரவு அந்த வீட்டில் தங்கி இருங்கள். காலையில் உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால், அந்த வீட்டை உங்கள் பெயருக்கு எழுதி தருகிறேன்"

பதில் சொல்லவில்லை நான்.

காரணம் எனக்கு இந்தியாவிலேயே வீடு இருப்பதால், மலேசியாவில் இன்னொரு வீடு தேவையா? என யோசிக்கிறேன்.


Feb 2, 2011

சில நம்பிக்கைகள்!

நான் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன். அப்பா அவரின் இளமை காலத்தில் தந்தை பெரியாருடன் மிக நெருக்கமாக இருந்தவர். ஏகப்பட்ட கடவுள் எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறார். தந்தை பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்தவர். அதனால், அப்பாவின் கல்யாண ஊர்வலத்தை பிராமணர்கள் வாழும் தெருவில் நுழையவிடாமல் தடுத்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அப்பா தீவிரமாக தி.க வில் இருந்துள்ளார். அதே அப்பாத்தான் தீவிர கடவுள் பக்தராக மாறிப்போனார். எதனால் இந்த மாற்றம்? தெரியவில்லை. ஆனால் நான் அப்படி இல்லை. ஆரம்பகாலத்திலிருந்தே கடவுள் நம்பிக்கை உள்ளவான வளர்க்கப்பட்டேன். அப்படியே வாழ்கிறேன். இதைச் சொல்ல பெருமைப்படுகிறேன். எங்கள் ஊர் முழுவதும் கோயில். அதனால் எங்கள் ஊர் இளைஞர்கள் தீவிர கடவுள் பக்தர்களாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. உருவம் படைத்த கடவுள் உண்மையா? ஏன் இத்தனை கடவுள்கள் என்கிற சர்ச்சைக்கெல்லாம் நான் போக விரும்பவில்லை.

கோயில் சென்று வழிப்பட்டால் மனதிற்கு நிம்மதி ஏற்படுகிறது. நிம்மதியைத் தவிர வேறு என்ன வேண்டும் நமக்கு!

கவிஞர் கண்ணதாசன் தீவிர கடவுள் எதிர்ப்பாளராக இருந்தவர். பின் கடவுள் மதிப்பாளராக மாறிப்போனார். அவர் எப்படி மாறிபோனார் என்பதை தெரிந்துகொள்ள அவரின் "வனவாசம்" படியுங்கள்.

************************************************************

என் அப்பா எங்கள் குல தெய்வம் கோயிலை கட்டினார். 150 வருடமாக ஒரு பானையில் இருந்த எங்கள் குல தெய்வம் என் அப்பாவின் முயற்சியால் கோயிலில் குடியேறியது. நான் ஒவ்வொரு முறை இந்தியா செல்லும்போதும் நான் செய்யும் முதல் வேலை எங்கள் குல தெயவம் குடியிருக்கும் சந்நிதிக்கு செல்வதுதான். பின்புதான் மற்ற வேலைகளை ஆரம்பிப்பேன். எங்கள் கோவிலுக்கு காம்பவுண்ட் சுவர் எழுப்பி, தளம் அமைத்து பாத்ரூம், ஒரு ரூம் மற்றும் வாட்டர் சப்ளை போன்ற வசதிகளை ஏற்படுத்த ஆசை. குலதெய்வம் கோவில்களைப் பொறுத்தவரை ஒருவரே செலவு செய்யக்கூடாது. அனைத்து பங்காளிகளும் சேர்ந்துதான் செய்ய வேண்டும். அதற்கான முதல் முயற்சியாக இந்த முறை எங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் ஒரு பஸ் வைத்து அழைத்துச்சென்றேன். திருச்சி வழியாக சென்றால், ஒரு மணி நேரம் முப்பது நிமிடம் ஆகும். லால்குடியில் இருந்து செங்கரையூர் புதிய பாலம் வழியாக சென்றால் ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், டிரைவரிடம் புதிய பாலம் வழியாக போகச்சொன்னேன். ராகு காலம் கழித்து கிளம்பினோம். கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதாக ஏற்பாடு. ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும், டிரைவர்,

"சார், இந்த வழியாக சென்றால் ஒரே மேடு பள்ளமாக  இருக்கும். வேறு வழியாக செல்லவா?" என்றார்.

நானும் வயதானவர்கள் பஸ்ஸில் இருந்ததால் ஒப்புக்கொண்டேன். ஒரு மணி நேரம் ஆகியும் குறிப்பிட்ட சாலையை அடையாததால் குழப்பமானேன். எந்த இடம் என்று பார்த்தால் அவர் தஞ்சாவூர் தாண்டி வேளாங்கண்ணி ரோட்டில் போய்க்கொண்டிருந்தார். எங்கள் கோவில் இருப்பதோ திருச்சி செங்கிப்பட்டி தாண்டி தச்சங்குறிச்சி என்னும் கிராமத்தில். அவர் திருக்காட்டுப்பள்ளியில் நுழைந்திருக்க வேண்டும். டிரைவர் புதியவர் போல. எல்லோரும் கடுப்பாகிவிட்டார்கள். நான் கோபத்தில் இருந்தாலும், அவரிடம் காட்டிக்கொள்ளாமல், திரும்ப அவரிடம் விளக்கமாக எடுத்துச்சொல்லி, தஞ்சாவூர் வரவைத்து, பின்பு திருச்சி ரூட்டில் போய் கோவிலை அடைந்தோம். ஒரு மணி நேர பயணத்திற்கு பதில் இரண்டு அரை மணி நேரம் ஆனது. ஒண்ணரை மணி நேரம் லேட்.

கோவிலை அடைந்தோம். அங்கே இருந்தவர்களிடம் தாமதத்திற்கான காரணத்தை சொன்னேன். உடனே அவர்கள் என்னிடம் இப்படி சொன்னார்கள்:

"நல்ல வேளை இப்போ வந்தீர்கள். இல்லை என்றால் நீங்கள் எமகண்டத்தில் பொங்கல் வைப்பது போல் ஆகி இருக்கும். அம்பாளாக பார்த்து உங்களை எமகண்டம் தாண்டி இங்கே வர வழைத்து விட்டாள்"

அப்போதுதான் வாட்சைப் பார்த்தேன். அவர்கள் சொன்னது சரிதான்.

அதுதான் தெய்வ நம்பிக்கை என்பது. நம்பாதவர்களை குறை சொல்லவில்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் சொல்லும் விசயம் புரியும்.

************************************************************

1992லிருந்து ஏழுமலையானின் தீவிர பக்தனாக ஆனேன். ஏன் என்று சொல்ல ஒரு புத்தகமே எழுத வேண்டும். எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் எங்கள் குலதெய்வத்தையும், ஏழுமலையானை மட்டுமே வேண்டுவேன். உடனே அந்த காரியம் நடக்கும். பையன் உருவாவதற்கு முன்பே பையன் பிறந்தால் அவன் பெயர் "வெங்கடேஷ்" என்று பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து அனைவரிடமும் சொன்னேன். அது போலவே, பிறந்தவுடன் அவனுக்கு அதே பெயர் வைத்தேன். ஏழுமலையானை நம்புபவர்களுக்குத்தான் அவரின் பவர் தெரியும்.

ஒருமுறை திருப்பதியில் வாங்கிய கயிர் ஒன்றை கையில் கட்டியிருந்தேன். 1998 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு தங்க பிரேஸ்லெட் வாங்கினேன். கையில் அணிந்தவுடன், திருப்பதி கயிர் இருந்ததால், இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொண்டு பார்க்க ஒரு மாதிரி இருந்தது. நண்பர்கள் அனைவரும் ஒரு ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நண்பர்களிடம் சொன்னேன்,

"இந்த திருப்பதி கயிர் கையில் இல்லாமல் இருந்தால் பிரேஸ்லெட் அழகாக தெரியும் இல்ல"

நம்ப மாட்டீர்கள். அடுத்த அரை மணி நேரத்தில் என் கையில் இருந்த பிரேஸ்லெட் மாயமாய் மறைந்து போனது. உடனே அதை நான் கவனிக்கவில்லை. ஒரு மணி நேர அரட்டைக்கு பின் கவனித்தேன். நண்பர்கள் அனைவரும் வீடு முழுக்கத்தேடினோம். கிடைக்கவில்லை. நான் சோபாவை விட்டு எங்கும் எழுந்து செல்லவில்லை. மனம் வேதனை ஆனது.

மனம் உருக ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டேன். அடுத்த நாள் நண்பர் ஒருவர் வாஷின் மெஷினில் கிடந்ததாக எடுத்துக்கொடுத்தார். அது எப்படி அங்கு போனது என்று எங்கள் யாருக்குமே தெரியவில்லை. அப்போதில் இருந்து கையில் கயிரை கட்டி இருக்கிறேன்.

அந்த சம்பவத்தில் இருந்து எங்கள் ஹஸ்ட் ஹவுஸில் இருந்த எல்லோருமே தீவிர ஏழுமலையான் பக்தர்களாக மாறிபோனார்கள்.

நண்பர்களுக்கு இந்த சம்பவங்களை நம்புவது கஷ்டமாக இருக்கலாம்.

ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

நம்பிக்கைத்தானே வாழ்க்கை!