Mar 28, 2011

முனுசாமி சிரித்தான்! (சிறுகதை) - பாகம் 2

அங்கே....

படுக்கையில் படுத்து இருந்தாள் பிருந்தா. இவன் கதவைத் தட்டி விட்டுத்தான் உள்ளே சென்றான். அவள் இப்படி படுத்து இருப்பாள் என்று தெரிந்திருந்தால், அவன் போயிருக்கவே மாட்டான். மெல்லிய நைட்டியில் இருந்தாள். நைட்டியின் மேல் பட்டன்கள் திறந்திருந்தன. அவளின் நைட்டி அவளின் தொடைவரை மேலே ஏறி இருந்தது. முனுசாமி உள்ளே சென்றதும், அவள் தன்னை சரிபடித்துக்கொள்வாள் என்று நினைத்தான். ஆனால் அவள் கண்டு கொள்ளவே இல்லை. என்னதான் எஜமானனின் பெண் என்றாலும், ஒரே வயது என்பாதாலும், இவனும் இளமையின் ஆரம்பத்தில் இருப்பதாலும், தன்னை அடக்கிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டான்.

ஆனால், அவளோ சிறிது கவலைப்படாமல், அவனை அருகே அழைத்து காபியை வைக்கச் சொன்னாள். அருகில் சென்றவனின் இதயம் துடிக்க ஆரம்பித்தது. காபியை வைத்தவன்,

"வரேன்" என்று சொல்லி கிளம்பினான்.

"இரு, யாரு காபி கப்பை எடுத்து போறது?. நான் குடிக்கும் வரை இங்கே இரு" என்றவள் எழுந்து உட்கார்ந்தாள். அலட்சியமாக உட்கார்ந்ததால், அவளின் நைட்டி விலகி, முற்றிலுமாக தொடையின் மேல் சென்றுவிட்டது. ஏறக்குறைய அரை நிர்வாணத்தில் இருந்தாள் அவள். முள்ளின் மேல் நிற்பது போல் நின்று கொண்டிருந்தான் முனுசாமி.

காபி குடித்து முடித்ததும் எழுந்தாள். அப்போதும் நைட்டியின் மேல் உள்ள பட்டனை போடவில்லை. துடியாய் துடித்தான். அவள் குடித்து முடிக்கும் வரை பொருமையாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். உடனே அவள்,

"என்னடா, கண்ணு எங்கெல்லாமோ போகுது. ஏன் ஒழுங்கா இருக்க முடியலையா? அப்பாட்ட சொல்லணுமா? ஒழுங்கா இரு.உன் பார்வையே சரியில்லை" என்று அலட்சியமாக சொல்லிவிட்டு அவள் ரூமில் உள்ள பாத்ரூமுக்கு சென்றாள்.

இவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.

'என்ன திமிர் இருக்க வேண்டும். பணக்காரத்திமிர். தன் அழகை காண்பித்து என்னை என் ஆண்மையை கேவலப்படுத்தும் செயல். நான் ஏதாவது தவறு செய்ய மாட்டேனா? என ஏங்கும் வக்ர குணம். எப்படி இவளிடம் தப்பிப்பது? நான் என்ன துரோகம் செய்தேன் அவளுக்கு! ஏன் என்னை இப்படி வதைக்கிறாள்'

அன்று இரவு அம்மாவிடம் மெதுவாக பிருந்தாவைப் பற்றி சொன்னான். ஆனால், முழுவதும் அவனால் சொல்ல முடியவில்லை.

"அம்மா, வரவர பிருந்தாவோட போக்கே சரியில்லைம்மா? அவளைப் பார்த்தா பயமா இருக்கும்மா? நான் இனிமே அவங்க வீட்டுக்கு வேலைக்கு வரலைம்மா"

"டேய், உங்களுக்குள்ள இன்னைக்கு நேத்தா இந்த பிரச்சனை. ஆரம்பத்துல இருந்து அப்படித்தானே இருக்கீங்க. அவளோட அப்பா அம்மா எவ்வளவு நல்ல டைப்பு. எவ்வளவு உதவி செய்யுறாங்க நமக்கு. பாரு உனக்கு இரண்டு தங்கச்சிங்க. ஒண்ணு ஏற்கனவே ரெடியாயிடுச்சு. இன்னொன்னு இன்னைக்கொ நாளைக்கோன்னு இருக்கு. நாம எல்லாம் ஏழைங்கப்பா. நாம இப்படித்தான் வாழணும். வழியில்லை. நம்மளை நம்ம பார்த்துப்போம். அவங்களை கடவுள் நல்வழி படுத்துவார். எதையும் போட்டு குழப்பிக்காம படுத்து தூங்கு"

ஆனால், முனுசாமி தூங்கவே இல்லை. அழுதான். தன் ஆண்மை கேவலப்பட்டதை நினைத்து அழுதான். ஆண்டவன் மேல் கோபம் கோபமாக வந்தது.

"நாங்கள் என்ன பாவம் செய்தோம்? ஏன் எங்களை இப்படி ஏழையாக படைத்தாய்?" என ஆண்டவனுடன் சண்டைப்போட்டுக்கொண்டே தூங்க முயற்சித்தான்.

அடுத்த நாள் மாலை. பிருந்தா வீட்டில் வேலையில் இருந்தான். வழக்கம் போல தாயம்மா முனுசாமியை அழைத்து, எல்லோருக்கும் காபி கொண்டு போய் கொடுக்கச் சொன்னாள்.

"அம்மா, வேண்டாம்மா. நீ குடும்மா?"

"ராசா, எனக்கு வேலை அதிகமா இருக்குடா. இட்லிக்கு மாவாட்டி வைக்கணும். சமைக்கணும் காய்ந்த துணிமணிகளை எடுத்து வந்து அயர்ன் பண்ணி வைக்கணும். நீ போய் குடுடா?"

"அம்மா, பிருந்தாவுக்காவது நீ குடும்மா?"

"எதையும் குழப்பிக்காம நீயே போய் கொடு"

விதியை நினைத்துக்கொண்டு பிருந்தா ரூமின் கதவைத் தட்டினான்.

"கம் இன்" என்று குரல் கேட்கவே, கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான்.

-தொடரும்


1 comment:

Anonymous said...

கதை அருமை. தொடருங்கள்.

- இளங்கோ