Mar 29, 2011

முனுசாமி சிரித்தான்! (சிறுகதை) - பாகம் 3

அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். இன்னும் உடைகள் அணிய ஆரம்பிக்கவில்லை. ஒரே ஒரு டவல் மட்டும் அணிந்திருந்தாள். டவல் அவளின் உடலின் ஒரு பாதியைத் தான் மறைத்திருந்தது. அவள் உடலின் வளைவுகள் எல்லாம் நன்றாக தெரிய ஆரம்பித்தது. ரூம் எங்கும் ஷேம்பு வாசனை. முனுசாமியின் உடல் சூடாக ஆரம்பித்தது.

காபியை அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு,

"நான் வரேன்" என்று கிளம்ப போனவனை,

"இருடா" என்று சொல்லி அவனை கட்டிப் பிடித்தாள். முகம் முழுவதும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். முனுசாமி திமிறினான். ஆனால் அவனால் முடியவில்லை. டவலை அவிழ்த்தவள், டவலோடு அவனைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்துக்கொண்டே அவனை கட்டிலில் தள்ளினாள்.

சமையல் கட்டில் இருந்த தாயம்மாவுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது. 'எங்கே காபி கொடுக்கப் போன பிள்ளையை இன்னும் காணவில்லை? ஏதேனும் விபரீதமாக.....'

உடனே கிளம்பி பிருந்தா ரூமுக்கு சென்றாள். தாயம்மாவை அங்கே எதிர்பார்க்காத பிருந்தா உடனே முனுசாமியை தள்ளிவிட்டு எழுந்து,

"இங்க பாரு, தாயம்மா உன் பிள்ளை பண்ற வேலையை. நல்ல வேள நீ வந்த. இல்லைன்னா நான் அவ்வளவுதான்" என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

முனுசாமி செய்வதறியாது நின்றான். அருகில் இருந்த துடப்பக்கட்டையை எடுத்த தாயம்மா, முனுசாமியை அடிக்க ஆரம்பித்தாள்.

"சனியன. இந்த வயசுலயே அதெல்லாம் கேட்குதோ" முனுசாமியை பேசவே விடவில்லை.

பிருந்தா குறும்பாக அவனைப்பார்ப்பது தெரிந்தது. முனுசாமி மீண்டும் அழுதான்.

அன்று இரவு தூங்கும் முன் யாரோ அழும் சத்தம் கேட்கவே திரும்பி பார்த்தான். அம்மா அழுது கொண்டிருந்தாள். இந்த முறை அவன் அம்மாவிடம் ஏதும் கேட்கவில்லை. அவளும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அடுத்த நாளையிலிருந்து வேலைக்கு செல்லக்கூடாது என்று முடிவு எடுத்தான்.

ஆனால் நடந்ததோ வேறு. அவனின் கடைசி தங்கையும் பெரியவளாகிவிட்ட விசயம் அம்மா பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டான்.

தாயம்மா முனுசாமியைக் கூப்பிட்டு,

"ராசா, இன்னைக்கு அம்மாவால வர முடியாதுடா. அதனால நீ மட்டும் போய் முடிஞ்ச அவரை வேலை செஞ்சிட்டு வாடா. அப்படியே முதலாளி அம்மாட்ட கேட்டு ஒரு 500 ரூபாய் கடன் வாங்கிட்டு வாடா. நிறைய செலவு இருக்கு"

நிலமையை உணர்ந்த முனுசாமி, தன் முடிவை மாற்றிக்கொண்டு பிருந்தா வீட்டிற்கு சென்றான். பயத்துடனே சென்றான். பிருந்தா ஒரு வேளை எல்லாவற்றையும் அவர்கள் பெற்றோரிடம் சொல்லி இருந்தால்.. நினைக்கவே பயமாக இருந்தது.

வீட்டிற்குள் நுழைந்தான். பிருந்தாவின் அம்மா உடனே,

"என்னப்பா, தாயம்மா போன் பண்ணினா. உன்னால முடிஞ்ச வேலையை செய். போகும்போது 500 ரூபாய் பணம் வாங்கிட்டு போ. அப்படி சப்பாத்தி, குருமா மட்டும் செஞ்சு வைச்சிடு" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

நல்ல வேளை! பிருந்தா எதுவும் சொல்லவில்லை. தாயம்மா இவனுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து இருந்தாள். அதனால் இவனால் நன்றாக சமைக்க முடிந்தது.

சமைத்துக்கொண்டிருக்கையில் பிருந்தா உள்ளே வந்தாள்.

"என்னடா, என் மேல ரொம்ப ஆசையா இருக்கா? இது கொஞ்சம் ஓவரா தெரியலை உனக்கு. நீ எல்லாம் எனக்கு ஆசைப்படலாமா? அதுக்கு எல்லாம் ஒரு தகுதி வேணும்டா" என்று சொல்லி அவள் அம்மா கூப்பிடவே அங்கிருந்து நகர்ந்தாள்.

இவனுக்கு மீண்டும் அழுகையாக வந்தது. அவனை கட்டிப் பிடித்து கட்டிலில் தள்ளியவள் அவள். ஏதோ நான் அவளை பலாத்காரம் பண்ணியது போல பேசுகிறாளே? அவளை எதிர்த்து பேசாமல் என்னைத் தடுப்பது எது? என் ஏழ்மையா? இப்படிப்பட்ட வாழ்க்கை தேவையா? என்று பலவாறு சிந்தித்துக்கொண்டே சமைத்து முடித்தான்.

எல்லோரையும் சாப்பிட அழைத்தவன் டைனிங் டேபிளை சுத்தம் செய்து சப்பாத்தி குருமா மற்றும் தண்ணீர் கிளாசையும் வைத்தான். பிருந்தா, அவள் அப்பா, அம்மா சாப்பிட ஆரம்பித்தார்கள்.

"முனுசாமி, போய் எனக்கு ஒரு ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வா" என்று அதிகாரத்தோரணையில் கேட்டாள் பிருந்தா.

நேராக சமையல் அறைக்கு சென்றான். ஆரஞ்சு ஜூஸ் தயாரித்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். பிருந்தா சிறு வயதிலிருந்து அவனை அவமானப்படுத்தியது, நேற்றைய சம்பவம் எல்லாம் நினைவு வந்தது. அப்படியே ஜூஸ் கிளாஸை எடுத்தவன் அதில் காறி தன் எச்சிலைத் துப்பினான். பின் நன்றாக கலந்தான். நேராக சென்று பிருந்தாவிடம் கொடுத்தான்.

அவள் குடிக்கும் வரை காத்திருந்தான். பிறகு சிரிக்க ஆரம்பித்தான்.

சிரிக்க ஆரம்பித்த முனுசாமி சிரித்துக்கொண்டே இருந்தான். கண்களில் தண்ணீர் வர வர சிரித்தான்.

ஆம், வாழ்க்கையில் முதல் முறையாக முனுசாமி சிரித்தான்.

முற்றும்

2 comments:

Anonymous said...

கதை அருமை சார்!

Anonymous said...

"கதை அருமை சார்!" !!!!!