Mar 15, 2011

நான் கெட்டவன்! - பாகம் -9

அங்கே... நின்றவளைப் பார்த்தேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. அனுதான். மோசமான உடையில் இருந்தாள். மிக மிகச் சின்ன ஸ்கர்ட். மேலே ஒரு சின்ன டாப்ஸ். நல்ல மேக்கப். எப்பவும் போல தலை முடியை வாராமல் விட்டிருந்தாள். உதட்டில் ரோஸ் கலர் லிப்ஸ்டிக்ஸ். பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது.

"வாங்க சார். உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்றவள் என் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு சென்றாள். கச்சிதமான வீடு. மிகப்பெரிய ஹால். நல்ல கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஹாலின் நடுவே உள்ள டேபிளில் கேக்கும், மெழுகுவத்தியும் இருந்தது. அருகே உள்ள ஷோபாவில் அமர்ந்தேன். அவள் என் எதிரே உள்ள ஷோபாவில் அமர்ந்தாள். அவள் அமர்ந்த கோலம் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், என் உடலுக்கும் மனதிற்கும் பிடித்திருந்தது.

ஆனால் ஒரு விசயம்தான் எனக்குப் புரியவில்லை. பிறந்தநாள் பார்ட்டி என்றாள். ஆனால், வீட்டில் யாருமே இல்லை. காரணம் புரியவில்லை. கேட்கலாமா? வேண்டாமா? என்று நினைத்துக்கொண்டிருந்த போது அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள்,

"என்ன சார், யாரையும் காணமேனு பார்க்கறீங்களா? பார்ட்டி இரவு 7.30க்குத்தான். எல்லோரும் அப்புறமாத்தான் வருவாங்க. நான் என் நண்பர்களுடன் தங்கி இருக்கேன். அவங்க எல்லாம் சில பொருட்கள் வாங்க வெளியில போயிருக்காங்க. நான் ஏன் உங்களை ஆறு மணிக்கு வரச்சொன்னேன்னா, ஒரு ஒண்ணரை மணி நேரம் உங்க கிட்ட பேசிட்டு இருக்கலாமே, அப்படிங்கற ஆசையினாலதான். நான் பாருங்க பேசிட்டெ, உங்களுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்கவே இல்லை" என்றவள், அருகில் உள்ள கிளாஸில் இருந்த ஆரஞ்சு ஜூஸை என்னிடம் நீட்டினாள்.

நான் உடனே கையிலிருந்த குத்துவிளக்கை அவளிடம் கொடுத்து,

"Wish You Many More Happy Returns of the Day" என்றேன்.

"அதான் காலையிலெயே சொல்லீட்டிங்களே சார்" என்றவள், என்னைப்பார்த்து, "சார், எல்லோரும் இருக்கும் போது உங்க பரிசை தாங்க. முதல்ல ஜூஸை குடிங்க" என்றாள்.

ஜூஸை குடிக்க ஆரம்பித்தவன், மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். அவள் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாள். ஸ்கர்ட் மேலே ரொம்ப மேலே விலகி இருந்தது. ஓரளவு ரகசியங்கள் புலப்பட ஆரம்பித்தன. அவளிடம் சொல்லி சரியாக அமரச்சொல்லலாமா? என நினைத்தவன், என் முடிவை மாற்றிக்கொண்டு என்னையறியாமல் அவளைப் பார்த்து ரசிக்கலானேன்.

அவளே மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள்,

"சார், அன்னைக்கு நீங்க பேசிட்டு இருக்கும்போது சொன்னீங்கள்ள, ஏதோ நீங்க காலேஜ் படிக்கும்போது, முக்கம்பு போனதாகவும், தனியா ஒரு பொண்ண பார்த்ததாகவும்.... அதைப்பற்றி சொல்லுங்க சார்"

"நான் அந்த விசயத்தைப் பற்றி சொன்னேன்னா, அதுக்கப்புறம் என்ன நல்லவன்னு சொல்ல மாட்ட? ஏன் என் கூட பேசக்கூட மாட்ட"

"பரவாயில்லை சொல்லுங்க சார்"

நான் சொல்ல ஆரம்பித்தேன்.

"ஒரு முறை காலேஜ் படிக்கையில் நண்பர்கள் அனைவரும், வகுப்பை கட் அடித்துவிட்டு முக்கொம்பு போனோம். அங்கே மாலை வரை இருந்தோம். என்னுடன் வந்த அனைவரும் பணக்கார நண்பர்கள். ஒருவனின் காரில் போயிருந்தோம். கிளம்பலாம் என்று நினைத்திருந்த வேளையில் அங்கே ஒரு அழகான இளம்பெண்ணைத் தனியாக பார்த்தோம். அப்போது ஒரு நண்பன் காரை நிறுத்தச்சொன்னான். நான் ஆச்சர்யமாக பார்த்தேன்.

அவன் அந்தப் பெண்ணின் அருகே சென்றான். அந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தான். அவள் பயப்படுவது தெரிந்தது. பார்க்க மிக அழகாக இருந்தாள். கவர்ச்சியாகவும் இருந்தாள். பார்க்க நல்ல குடும்பத்து பெண் போல இருந்தாள். ஆனால் இந்த நேரத்தில் அவள் ஏன் இங்கே நிற்கிறாள், என்று எனக்கு ஒரே சந்தேகம். அந்தப் பகுதியில் இருட்டும் வேலையில் கொஞ்சம் மோசமான பெண்கள் வருவது வழக்கம். நான் இவளும் அப்படியோ? என்ற குழப்பத்தில் பார்த்த போது, என் இன்னொரு நண்பன், என்னைக்கூப்பிட்டு,

"மாப்பிள்ள, சிகரட் தீர்ந்து போச்சு. இரண்டு பாக்கட் சிகரட் வாங்கி வா. நாங்கள் பக்கத்தில் உள்ளே பூங்கா (பேரைச் சொல்லி) அருகே இருக்கிறோம்" என்று அனுப்பினான். நல்ல இருட்டும் நேரம். நானும் அவர்களுக்காக சிகரட் வாங்க போன அவசரத்தில், அந்த பெண்ணைப்பற்றி மறந்து போனேன்.

பக்கத்தில் கடைகளே இல்லை. நீண்ட தூரம் நடந்து கடைக்கு செல்ல வேண்டி இருந்தது. கடையை கண்டுபிடித்து, சிகரட் வாங்கிக்கொண்டு அவர்கள் சொன்ன பகுதிக்குப் போக ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஏறக்குறைய இருட்டி விட்டது.

நான் போய் அவர்களிடம் சிகரட்டை கொடுத்தேன். அவர்கள் இருவரும் மிகவும் வியர்த்து இருந்தார்கள். என்னைப்பார்த்து, "காரில் உனக்காக சாப்பிட ஒன்னு வைச்சுருக்கோம். போய் சாப்பிடு' என்று என்னை அனுப்பினார்கள். எனக்கும் நல்ல பசி.

நானும் ஆசையோடு சாப்பிடுவதற்காக கார் கதவைத் திறந்தேன்.

உள்ளே......

-தொடரும்

1 comment:

Anonymous said...

சார்,

கதை நல்லா சூடு பிடிக்குது.

-இளங்கோ