''அப்பாடா! ஒரு வழியாக என் ஆசை நிறைவேறப்போகிறது. என் எழுத்துக்கள் எல்லாம் புத்தகமாக வருமா? என நான் ஏங்கிய நாட்கள் பல உண்டு. இதோ இப்போது என் புத்தகங்களும் வெளிவருகிறது"
இப்படி எல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை. நான் நீண்ட நாட்கள் கழித்து வலைப்பூவில் எழுத ஆரம்பித்த போதே நாமும் புத்தகம் போட வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் எழுத ஆரம்பித்தேன். எப்பொழுதுமே ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டு அதை நோக்கி பயணப்படுவதுதான் என் பழக்கம். அந்த வகையில்தான் என் புத்தகங்கள் இப்போது வெளி வரப்போகின்றன.
இப்படி நான் சொல்வது சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் அதுதான் உண்மை. நம்மால் முடியும் என்று நினைத்து எந்த காரியத்தை தொடங்கினாலும் நமக்கு வெற்றிதான் கிடைக்கும். இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.
மற்றபடி புத்தகம் நன்றாக இருக்குமா? இல்லை குப்பையா? என்ற விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. நான் இரண்டு புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். அதன் தரத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன்.
ஆனால், என்னதான் குறிக்கோளுடன் நான் எழுத ஆரம்பித்தாலும், முதலில் நான் எழுதியவைகள் பிரசுரிக்க தகுதியானவைகளா? என்பதில் பெரும் குழப்பம் இருந்தது. அதனால் முதலில் பல நண்பர்களிடம் அவர்களின் அபிப்ராயங்களை கேட்டேன். எல்லோரும் நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். பின் அன்பு நண்பர்கள் கே ஆர் பி செந்திலையும், கேபிள் சங்கரையும் கலந்து ஆலோசித்தேன். அவர்கள் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவிக்கவே, என் எழுத்துக்கள் புத்தகங்கள் ஆக வெளிவருவதற்கு சம்மதித்தேன்.
என் புத்தகங்களை வெளியிடும் "ழ" பதிப்பகத்திற்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். என் எழுத்துக்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில், உங்களின் ஆதரவு எனக்கு இருக்கும் என்பதில் எனக்கு எந்த வித ஐயமும் இல்லை.
என் புத்தகங்கள் பதிவுலக சூப்பர் ஸ்டார் கேபிளின் புத்தகத்துடனும், வளர்ந்து வரும் தொழில் அதிபர் கே ஆர் பி செந்திலின் புத்தகத்துடனும் வெளிவருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இது சம்பந்தமாக "ழ" பதிப்பகம் வெளியிட்டுள்ள இடுகையினை கீழே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:
ழ பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்
ழ பதிப்பகத்தில் இருந்து வரும் வாரம் நான்கு புதிய புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன என்பதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்..
1. "சாமானியனின் கதை", ஆசிரியர் திரு.என். உலகநாதன் அவர்கள்.
2. "வீணையடி நீ எனக்கு", ஆசிரியர் திரு.என். உலகநாதன் அவர்கள்.
3. "பணம்'', ஆசிரியர், திரு.கே.ஆர்.பி.செந்தில்
4. "கொத்து பரோட்டா", திரு.சங்கர் நாரயண் (கேபிள் சங்கர்)
21 comments:
மிக்க நன்றி தலைவரே...
வாழ்த்துக்கள் :-)
புத்தகம் பற்றிய முன்னுரை (outline) இருந்தால் நன்றாக இருக்கும்;
வாழ்த்துக்கள் உலகநாதன்.
வாழ்த்துகள் உலகநாதன்.
வாழ்த்துக்கள் உலகநாதன் சார் !
உண்மைவிரும்பி
மும்பை.
மகிழ்ச்சி..வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
Congrats Sir!!!
Anu
//கே.ஆர்.பி.செந்தில் said...
மிக்க நன்றி தலைவரே...//
வருகைக்கிற்கு நன்றி தலைவரே!
//Killivalavan said...
வாழ்த்துக்கள் :-)//
நன்றி கிள்ளிவளவன்
//புத்தகம் பற்றிய முன்னுரை (outline) இருந்தால் நன்றாக இருக்கும்;//
விரைவில்!
//shortfilmindia.com said...
வாழ்த்துக்கள் உலகநாதன்.//
நன்றிண்ணா!
//Kanchana Radhakrishnan said...
வாழ்த்துகள் உலகநாதன்.//
வாழ்த்திற்கு நன்றி சார்.
//எனது கவிதைகள்... said...
வாழ்த்துக்கள் உலகநாதன் சார் !
உண்மைவிரும்பி
மும்பை//
வாழ்த்திற்கு நன்றி உண்மைவிரும்பி!
// மோகன் குமார் said...
மகிழ்ச்சி..வாழ்த்துக்கள்//
நன்றி மோகன்
//அமுதா கிருஷ்ணா said...
வாழ்த்துக்கள்.//
நன்றி மேடம்.
உலக்ஸ் நீங்க எழுதிய புத்தகங்கள் நம்ம ஊரு ஹிக்கின் பாதம்ச்ளையும் அகஸ்தியர்ளையும் பார்க்கபோறம் ( வாங்கவும் போறோம்):) மிக்க மகிழ்ச்சி
எழுத்தாளரே வாழ்த்துக்கள்.
மேலும் பல புத்தகங்கள் நீங்க எழுதி வெளிவர வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//Congrats Sir!!!
Anu//
நன்றி அனு.
//உலக்ஸ் நீங்க எழுதிய புத்தகங்கள் நம்ம ஊரு ஹிக்கின் பாதம்ச்ளையும் அகஸ்தியர்ளையும் பார்க்கபோறம் ( வாங்கவும் போறோம்):) மிக்க மகிழ்ச்சி//
நன்றி நண்பா!
//எழுத்தாளரே வாழ்த்துக்கள்.
மேலும் பல புத்தகங்கள் நீங்க எழுதி வெளிவர வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
வாழ்த்திற்கு நன்றி ஸ்ரீராம்
Congrats ulaganathan
Wishing you all success
one day u r going to overtake
our LOVE OF writer SUJATHA.
Post a Comment