நான் எட்டாவது படிக்கும் போது கட்டுரைப் போட்டி ஒன்றில் பரிசு வாங்கினேன். பரிசு கொடுக்கும் நாள் அன்று என்னால் சென்று வாங்க முடியவில்லை. காய்ச்சலோ என்ன காரணமோ நினைவு இல்லை.
பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது அனைத்து பள்ளிகள் சார்பாக நடந்த ஒரு பாட்டு போட்டியில் ஆறுதல் பரிசு வாங்கும் போதும் அதே நிலை.
கல்லூரியில் நடந்த சிறுகதைப் போட்டியில் பரிசு வாங்கியபோதும் என்னால் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை. காரணம் ஏதோ விடுமுறை நாளில் அந்த நிகழ்ச்சி நடந்ததாக நினைவு. பிரின்ஸ்பால் ரூம் சென்று பின்னொரு நாளில் சர்ட்டிபிகெட்டைப் பெற்றுக்கொண்டேன்.
M.COM முதல் ஆண்டில் அனைத்து பாடங்களிலும் முதலாக வந்த போது சர்ட்டிபிகெட்டும், புத்தகமும் பரிசாக வழங்கினார்கள். அந்த பரிசளிப்பு விழாவிற்கும் செல்ல முடியவில்லை. காரணம் அன்று கோவாவில் சுற்றுலாவில் இருந்தோம். அதே போல் பிரின்ஸ்பாலிடம் பின்னாளில் பெற்றுக்கொண்டேன்.
M.COMல் முடித்து யுனிவர்சிட்டி ரேங்க் வாங்கியபோதும் அதே நிலைதான்.
ஏன் நான் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று இன்றுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதெல்லாம் கூட பரவாயில்லை. பெண் பார்த்து வந்து, பிடித்துள்ளது என்று அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு மலேசியா வந்துவிட்டேன். பிறகு வீட்டில் கலந்து பேசி, நிச்சயதார்த்தம் தேதி குறித்து என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால் பாருங்கள்! என்னுடைய நிச்சயத்தார்த்தத்திற்கே என்னால் செல்ல முடியவில்லை.
என் கல்யாணத்திற்கு நான் செல்ல வேண்டியது ரொம்ப முக்கியம் என்பதால் கல்யாணத்திற்கு சென்றேன் என்று நினைக்கிறேன்!
நான் சில சமயம் நினைத்துக்கொள்வதுண்டு. வேறு ஏதாவது முக்கியமான நிகழ்ச்சிக்கு நாம் நிச்சயம் செல்வோம், முதல் அமைச்சர் கையிலோ அல்லது பிரதமர் கையிலோ........ வேண்டாம் விடுங்கள். விசயத்திற்கு வருகிறேன்.
இதே வரிசையில் இன்னும் ஒரு நிகழ்வு. நாளை என்னுடைய முதல் இரண்டு புத்தகங்கள் வெளிவருகிறது. ஆனால் என்னால் செல்ல முடியாத சூழல். என்ன செய்வது? என் ராசி அப்படி!
அதனால் வாசகர்கள், பதிவர்கள், நண்பர்கள், தமிழ் நாட்டில் வசிக்கும் அனைவரும், ஏன் இந்தியாவில் வசிக்கும் அனைத்து தமிழரும், ஏன் முடிந்தால் உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழரும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று சிறப்பிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
14 comments:
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் உலக நாதன். விழா சிறப்பாக நடக்கும்.
வாழ்த்துகள் இனியவன்.
congrats..
வாழ்த்துக்கள் நன்பரே,
தங்களது அனைத்து இடுகைகளையும் தவராமல் படிப்பவன் நான்!
புத்தகம் மும்பையில் எங்கு கிடைக்கும் என்று தெறிந்தால் போய் வாங்கிகொள்வேன்.
உண்மைவிரும்பி.
மும்பை.
//யோவ் said...
வாழ்த்துக்கள்//
நன்றி யோவ்
//காவேரிகணேஷ் said...
வாழ்த்துக்கள் உலக நாதன். விழா சிறப்பாக நடக்கும்.//
வாழ்த்துக்கு நன்றி கணேஷ். நீங்கள் புகைப்படங்கள் எடுப்பீர்கள் தானே?
//பாலராஜன்கீதா said...
வாழ்த்துகள் இனியவன்.//
நன்றி பாலராஜன் கீதா.
அமுதா கிருஷ்ணா said...
congrats..
நன்றி அமுதா மேடம்.
//எனது கவிதைகள்... said...
வாழ்த்துக்கள் நன்பரே,
தங்களது அனைத்து இடுகைகளையும் தவராமல் படிப்பவன் நான்!
புத்தகம் மும்பையில் எங்கு கிடைக்கும் என்று தெறிந்தால் போய் வாங்கிகொள்வேன்.
உண்மைவிரும்பி.
மும்பை.//
நண்பரே,
வாழ்த்திற்கு நன்றி.
விரைவில் ஆன் லைனில் வாங்குவதைப் பற்றி அறிவிப்பார்கள்.
உங்கள் வாழ்வின் அற்புதமான தருணங்களில் ஒன்றான இந்த புத்தக வெளியீட்டு விழாவை நாங்கள் நடத்துவது எங்களுக்குப் பெருமை...
All the best Thiru. Ulaganthan. We expect many more books from you.
பூங்கொத்து!
இந்தியா வர்றப்ப வந்து புக் குடுத்துட்டுப் போகணும்..! சரியா?
Post a Comment